குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

ஈரானைத்தாக்கின் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்- ரச்யா எச்சரிக்கை! மூன்றாம் உலகப்போரின் பாகம் 6 .

08.11.2011-ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை மிகவும் பாரதூரமான அச்சம் தரும் விளைவுகளை கொண்டு வரும் என்றும் எதிர்வுகூற முடியாத ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் ரச்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்யி லவ்ரோவ் எச்சரித்துள்ளார். ஈரானின் ஆயுத பிரச்சினைக்கு ராயதந்திரம் மூலமான தீர்வு காணப்படவேண்டுமே தவிர எறிகணைத்தாக்குல் மூலமான தீர்வைக் காணமுடியாது என்று ரச்ய வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஈரான் மீதான தாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று இஸ்ரேலின் சனாதிபதி சிமொன் பெறெஸ் தெரிவித்ததை அடுத்து ரச்யாவின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணுவாயுத் திறனை இரகசியமாகப் பெற்றுள்ளதா என்பது பற்றி ஐநாவின் அணுவாயுதக் கண்காணிப்புக்குழு இவ்வாரம் தனது அறிக்கையை வெளியிடவிருக்கிறது.

நாளை செவ்வாய்க்கிழமையோ அல்லது புதன்கிழமையோ சர்வதேச அணுசக்தி ஏஜன்சி வெளியிடவிருக்கும் அறிக்கையில் ஈரானினால் மறுக்கமுடியாத அளவு சாட்சியங்கள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களின் தேவைக்கான மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி செயற்றிட்டத்தை மட்டும் தான் செயற்படுத்தி வருவதாக ஈரான் வலியுறுத்தி வருகின்றது.

அணுவாயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தனது நாட்டுக்கு எதிராக பல்கோண அவமதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருவதாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.