குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது நேரில் ஆய்வு நடத்திய பிறகு அப்துல் கலாம்

திங்கள், 07 நவம்பர் 2011   `கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்று அங்கு நேற்று நேரில் ஆய்வு நடத்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் குடியரசு தலைவரும், அணு விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூடங்குளத்துக்கு நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு வந்தார். பிறகு அங்கு அணு விஜய் நகரியத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்று அதிகாலை 4 மணி வரை அணு விஞ்ஞானிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். காலை 9 மணிக்கு அணு விஜய் நகரியத்தில் இருந்து அப்துல் கலாம் புறப்பட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குள் சென்றார். அங்கு நிறுவப்பட்டுள்ள அணு உலைகளை பார்வையிட்டார்.

மேலும் அணு உலையின் பாதுகாப்பு அம்சங்களையும் சுற்றிப்பார்த்தார். கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு சுவர், கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், தானியங்கி ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வு மதியம் 12.30 மணி வரை மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. அதன் பிறகு அவர் மீண்டும் அணுமின் நிலைய விஞ்ஞானி களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிறகு மதியம் ஒரு மணிக்கு அங்குள்ள கூட்ட அரங்கில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளத்துக்கு நான் 2ஆவது முறையாக தற்போது வந்துள்ளேன். இங்கு வந்ததற்கு காரணம் அணு விஞ்ஞானி என்பதாலும், நாட்டின் அறிவியல் வளர்ச்சி மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவும் தான். நான் இங்கு போராட்டக் காரர்களுடன் பேசி சமரசம் செய் வதற்காக வரவில்லை. அணு உலையை பார்வையிட்டு, அதில் உள்ள பாது காப்பு அம்சங்களை ஆய்வு செய்து விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தவே வந்து உள்ளேன்.

3 பாதுகாப்பு அம்சங்கள்

கூடங்குளம் அணு உலைகள் 3-ஆவது தலைமுறை பாதுகாப்பு அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அதை பார்க்கத்தான் வந்தேன். இதில் 3 முக்கியமான பாதுகாப்பு விஷயங்களை கூற வேண்டும். அணு உலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தடைபட்டால் எரி பொருளை சுற்றி குளிர்ந்த தண்ணீர் தானாகவே செல்லும் வகையில் தானியங்கி குளிர்விப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதே போல் அதிக வெப்பத்தால் எரி பொருள் உருகினால் அதனுடன் மற்றொரு பொருள் வினைபுரிந்து தானாகவே கதிர்வீச்சு தடுக்கப்பட்டு விடும். அணு உலை சுவர்கள் ஈரடுக்கு சுவர்களாக கட்டப்பட்டு உள்ளன.

இது அணு கதிர் வீச்சை தடுக்கும், மேலும் இயற்கை பேரிடர் மற்றும் சுற்றுச் சூழல் விளைவுகளால் ஏற்படும் விபத் துகளாலும் சேதம் அடையாது. இந்த பாதுகாப்பு அம்சங்களை பார்த்து எனக்கு முழு திருப்தி ஏற்பட்டு உள்ளது. நம்பிக்கையும் அடைந்து உள்ளேன். அதனை அனைவரிடமும் எடுத்துக் கூறுவேன்.

கூடங்குளம் அணுமின் நிலையத் தால் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது தவிர அணு உலை வளாகத்துக்குள் வேலை செய்பவர்களுக்கும், வெளியே வேலை செய்பவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் தேவையற்றது. இப்போ தையை காலகட்டத்தில் மின்சாரம் அவசியமானது. இந்தப் பகுதி மக்கள் அணு உலைகளை பற்றி பயப்பட வேண்டாம். போராட்டக்காரர்கள் வெளிநாட்டிடம் பணம் வாங்கிக் கொண்டு போராடுவதாக செய்தி யாளர்கள் கேட்ட கேள்விக்கு என்னு டைய பதில், எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் யாரையும் சந்தேகப் படக்கூடாது என்பது தான். அது தான் இதற்கு பதில்.

கூடங்குளத்தில் எவ் வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டாலும் அதில் 50 சதவிகிதம் தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைக்கும். அணு கதிர்வீச்சு, அணு கழிவு எந்த விதத்திலும் வெளியே வராது. அணுக் கழிவு மிகவும் குறைந்த அளவு தான் கிடைக்கும். அதையும் அப்புறப்படுத்த இங்கு ஏற்கெனவே திட்டம் உள்ளது. அணு மூலப்பொருளில் 75 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டு விடும். மீதம் 25 சதவீதம் கழிவு கிடைக்கும். அதை மறுசுழற்சி செய்து கதிர்வீச்சு இல்லாத வகையில் அகற்றப்படும். அணுக் கழிவை கடலில் கொட்டிவிட மாட் டார்கள்.

சோதனை ஓட்டத்தின்போது யுரேனியம் அணு மூலப்பொருள் வைக்கவில்லை. அதே போன்ற மாதிரி பொருளைத்தான் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி உள்ளனர். அப்போது அதிக சத்தம் ஏற்பட்டதாகவும், விபத்து நடந்ததாகவும் கூறுவது வெறும் வதந்தி, அதை யாரும் நம்ப வேண் டாம்.

ஜப்பான் நாட்டில் புகுஷிமா அணு உலைகள் பூகம்பம், சுனாமியால் பாதிக்கப்பட்டன. உலகில் இதுவரை 6 விபத்துகள் மட்டுமே நடந்துள்ளன. இந்தியாவில் விபத்து நடந்தது கிடை யாது. எத்தகைய விபத்துகள் நடந் தாலும் பாதிக்காத வகையில் கூடங் குளம் அணு உலைகள் நிறுவப் பட்டுள்ளன.

அதாவது கடல் மட்டத்தில் இருந்து 13.5 மீட்டர் உயரத்தில் அணு உலைகள் உள்ளன. இது இதுவரை வந்த சுனாமி அலைகளின் உயரத்தை விட அதிகமானது ஆகும். பூகோள வரைபடத்தில் கூடங்குளம் 2ஆவது வகைப்பாட்டில் உள்ளது. அதாவது பூகம்பமே ஏற்படாத பகுதி தான் கூடங்குளம் பகுதி. அதே போல் கூடங்குளத்தில் இருந்து 1,300 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

100 ஆண்டு வரலாற்று ஆய்வு

எந்த ஒரு அணு உலையும் நிறுவு வதற்கு முன்பு புவியியல் வல்லுநர்கள், வேளாண்மை, கட்டுமானம், அணு இயற்பியல் உள்பட பல்வேறு துறை வல்லுநர்கள் நூறு ஆண்டு வர லாற்றை ஆய்வு செய்து முடிவு எடுப் பார்கள். அவ்வாறு தான் கூடங் குளமும் அணு உலைகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. விஞ்ஞானிகள் ஒரு போதும் பொய் சொல்ல மாட்டார்கள். நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களுடைய கண்டு பிடிப்பை அர்ப்பணித்து செயல் படுவார்கள்.

நெல்லையில் நெல்லையப்பர் கோவில் உள்ளது. அது ஆயிரம் ஆண் டுகள் பழைமையானது. ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலை கட்டியுள்ளார். அவை இன்னும் உறுதியாக நிற்கவில்லையா? கரிகாலன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லணையை கட்டினான். காவிரித் தண்ணீர் அரித்துச் சென்று விடும் என்று நினைத்து இருந்தால் அணையை கட்டி இருப்பானா? அதே போல்தான் இங்குள்ள பிரச்சினையும்.

இன்று 17 கிராமங்களைச் சேர்ந்த 30, 40 பேரை சந்தித்தேன். அவர்களுக்கு மின்சாரம் மிக முக்கியமானது, அத னால் அணுமின் நிலையத்தை செயல் படுத்துங்கள் என்று கேட்டுக்கொண் டனர். இந்த பகுதி மக்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கருத்துள்ளது.

1979ஆம் ஆண்டு நான் ரோகிணி செயற்கைகோள் ராக்கெட் திட்ட இயக்குநராக இருந்தேன். அப்போது ஆசிட் தீ விபத்து ஏற்பட்டு 8 பேர் கடுமையாக காயம் அடைந்தனர். அவர்களில் ஒரு இளைஞர் அடுத்த ஆண்டு ரோகிணி செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என்று கூறினார். கடுமையான வலியையும் பொறுத்துக் கொண்டு அவர் அப்படி கூறினார். எனவே கூடங்குளம் பகுதி மக்களுக்கு நம்பிக்கை வேண்டும். அவர்கள் விரும் பினால் என்னை நேரில் சந்திக்கலாம். இது பற்றி உரிய விளக்கம் அளிப்பேன்.

அணு சக்தியால் அதிகமான மின்சாரம்

என்னை யாரும் கூடங்குளத்துக்கு வரச் சொல்லவில்லை. அணு சக்தியும், விஞ்ஞான தொழில் நுட்பமும் மக்களுக்கு பயன்படவேண்டும் என்ப தற்காகத்தான் நான் இங்கு வந்து உள்ளேன். மின்சாரம் அதிகமாக தேவைப்படுவதால் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சக்தி மூலம் மின் உற் பத்தி செய்வதை ஊக்கப்படுத்து கிறேன். அது தவிர மாசு இல்லாத அணுசக்திதான் அதிகமான மின்சா ரத்தை நமக்கு தரும் என்பதால் அதையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் தோரியம் அதிகமாக கிடைக்கிறது. எனவே யுரேனியம் அணு மூலப்பொருளுக்கு பதிலாக தோரி யத்தை பயன்படுத்த 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். அதற்கான ஆய்வுகளை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.

கூடங்குளம் வருங்காலத்தில் இந்தி யாவின் மிகப்பெரிய அணுசக்தி மய்யமாக உருவெடுக்கும். இந்த ஆண்டு இறுதியில் முதல் அணு உலை செயல்படத் தொடங்கினால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

அடுத்த 6 மாதங்களில் மேலும் ஒரு அணு உலை மூலம் ஆயிரம் மெகா வாட் மின்சாரமும், அடுத்த 10 ஆண்டு களில் மேலும் 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும். இவ்வாறு மொத்தம் 6 அணு உலைகள் மூலம் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்

வருங்கால சந்ததியை பாதுகாக்க போராட்டம் நடத்தப்படுவதாக கூறி உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் வருங்கால சந்ததியினர் மேலும் வளம் பெறுவார்கள். இந்த பகுதி மக்களின் பொருளாதாரம் வளரும். 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும். கூடங்குளம் இந்தியாவின் மிகப்பெரிய அணுசக்தி மய்யமாக வளர வேண்டும்.

இவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.


.சித்ரவதைக்கு அஞ்சுகிற இலங்கைத் தமிழரை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு நீதிமன்றம் துணைபோக முடியாது அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது
திங்கள், 07 நவம்பர் 2011

டில்லி, நவ. 7-இலங்கைக்குத் தான் திருப்பி அனுப்பப்பட்டால், சித்ர வதைப்படுத்தப்படுவோம் என்று அஞ்சும் ஓர் இலங்கைத் தமிழ் அகதியை இலங் கைக்குத் திருப்பி அனுப்ப அனுமதி கோரும் மத்திய அரசின் அநீதியான கோரிக்கைக்கு நீதிமன்றம் துணைபோக முடியாது என்று டில்லி, துவாரகாவில் உள்ள பெருநகர் குற்றவியல் இரண்டா வது நீதிமன்றத்தின் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அந்த இலங்கைத் தமிழர் கடந்த 20 ஆண்டு காலமாக இந்தியாவில் வாழ்ந்து வருபவர் ஆவார். தனது தீர்ப்பில் நீதிபதி மேலும் கூறியிருப்பதாவது: அயல் நாடுகளில் இருந்து வரும் அகதிகளை விரும்பி வரவேற்கும் மனநிறைவளிக்கும் ஒரு பாரம்பரியத்தை நாம் கொண்டி ருக்கும்போதும், இத்தகைய பிரிவு மக்களின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கான தேசிய அளவி லான சட்டம் எதுவும் இல்லை என்பது இழப்புக் கேடேயாகும்.

மேலும் நீதிபதி கூறியதாவது: தங்களின் சொந்த விருப்பத்தின்பேரில், ஒரு வாழ்வாதாரத்தைத் தேடியோ அல்லது உலகைச் சுற்றிப் பார்க்கவோ வேறொரு நாட்டிற்கு வருபவர்களுக்கும், கட்டாயத்தின் பேரில் துயருற்ற நிலையில் வேறொரு நாட்டில் அடைக்கலம் புகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இருக்கும் அகதிகளுக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான வேறுபாட்டைக் காணவேண்டும்.

அகதிகள் மகிழ்ச்சி அடையவோ அல்லது எந்தவித பொருளாதார லாபம் கருதியோ அயல்நாடுகளுக்கு வந்து சேர்வதில்லை. வேறு வழிகளே இல்லாத நிலையில்தான் அவர்கள் இவ்வாறு அயல்நாடுகளுக்கு வரும் முடிவை மேற்கொள்கின்றனர்.

அகதிகளின் பிரச்சினைகளை மட்டுமே கவனிக்க தனியாக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டிய தேவை நம் நாட்டில் நினைவு தெரிந்த காலத்திலிருந்து இருந்து வருகிறது.  தேசிய மாதிரி சட்டம்பற்றிய விரிவான விவாதத்தைத் தொடர்ந்து இறுதியில் 2006 அகதிகள் மற்றும் அடைக்கலம் தேடிவந்தவர்களின் பாதுகாப்பு மசோதா ஒன்று தயாரிக்கப் பட்டது. விரிவான விவாதத்துக்குப் பிறகும், முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி போன்ற புகழ் பெற்ற நீதிபதிகளின் கலந்தாலோசனைக்குப் பிறகும் தயாரிக்கப்பட்ட இந்த வரைவு மசோதா வெளிச்சத்துக்கே வரவில்லை என்று நீதிபதி கூறினார்.

நீதிமன்றம் கூறியிருப்பதாவது: தற்போதைய நிலையில் நம் நாட்டில் அகதிகளின் பிரச்சினைகள் 1946 ஆம் ஆண்டு அயல்நாட்டினர்  சட்டத்தின் கீழும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் படியும் கையாளப்படுகின்றன. அகதிகள் இந்த சட்டப்படி அயல்நாட்டினராகவே கருதப்படுகின்றனர். சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இதர அயல்நாட்டினர் என்ற அதே இடத்தில் அகதிகள் வைக்கப்படக்கூடாது என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

அகதிகளின் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க மனிதநேயமும், பரிவும் கொண்ட அணுகுமுறையை உருவாக்க இந்திய நீதிமன்றங்கள் முயற்சி மேற்கொண்ட பல நிகழ்வுகள் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளன. தேசிய அளவில் ஒரு சட்டத்தை இயற்றி ஒரு நீண்ட கால, தொடர்ந்த, ஒரே மாதிரியான தீர்வுகள் காணப்படாத வரை, அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகள் தனிப்பட்டவர் களின் கண்ணோட்டம், சமூகவிருப்பங் கள் மற்றும் துணை நீதிமன்றங்கள் பின்பற்ற இயலாத தனி மனிதப் போக்குகள் ஆகியவற்றைப் பொறுத்தே தற்போது கையாளப்பட்டு வருகின்றன. தனது மனிதநேய இலக்குகளை எட்டும் வகையில் இந்தியா செயல்பட வேண்டும்.

இந்த வழக்கில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் அகதிகள் முகாமில் சந்திரகுமார் 1990 ஆம் ஆண்டு முதல் தங்கி வந்திருக்கிறார். இத்தாலி நாட்டில் ஒரு மேம்பட்ட வாழ்வை மேற்கொள்ள அவர் விரும்பினார். ஆனால் இந்தியாவை விட்டுச் செல்லும்போது, அவரிடம் சரியான பயண ஆவணங்கள் இல்லாததால் இந்திய குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின் அவர்  மீது ஏமாற்று, ஆள் மாறாட்டம், மோசடி மற்றும் இதர குற்றங்கள் புரிந்ததாக 1946 இந்திய அயல்நாட்டினர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன. ஒரு சில குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கான மனுவை அவர் அளித்தார்.

அதன்மீது அப்போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். என்றாலும், அரசின் அறிவுரைகள்படி கூடுதல் பப்ளிக் பிராசிக்யூட்டர் அந்தத் தீர்ப்பில் அவரை நாடு கடத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று வாதாடினார்.

அவரை நாடு கடத்த உத்தரவிடவேண்டும் என்ற கோரிக் கையை நிராகரித்த நீதிமன்றம், பல உச்சநீதி மன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி, அரசமைப்பு சட்ட 21 ஆவது பிரிவைப் (வாழவும், சுதந்திரமாக இருக்கவுமான உரிமை) பொருத்தவரை, இந்தியர்களும், இந்திய குடி மக்கள் அல்லாதவர்களும் ஒன்று போலவே சமமாக நடத்தப்படவேண்டும்.

இந்த அகதியை அவர் எங்கிருந்து வந்தாரோ, எங்கு சென்றால், தான் சித்திரவதை செய்யப்படுவோம் என்று அவர் நியாயமாக அஞ்சுகிறாரோ,  அந்த இலங்கை நாட்டுக்கே அவரைத் திரும்ப நாடு கடத்துவது என்ற கருத்து இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு ஏற்புடைய தாக இல்லாதது ஆகும். ஒரு தனிப்பட்டவர் சித்தரவதை செய்யப்படு வதற்கு ஒரு நீதிமன்றம் எவ்வாறு உடந்தையாக முடியும்?

இந்த அகதி ஏற்கெனவே ஆறுமாத காலம் சிறையில்  இருந்து விட்டபடியால், அவர் ஏற்கெனவே அனுபவித்த தண்டனையே போதுமானது என்பதால், அவரை உடனடியாக கும்மிடிப்பூண்டி வட்டத்திலுள்ள சிறீலங்கா அகதிகள் முகாம் வட்டாட் சியரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.