குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதா?கலைஞர் கடிதம் சோவிற்கு முதலமைச்சரா? தமிழகத்திற்கு முதலமைச்சரா?

05.11.2011-- பண்பாட்டுச் சின்னங்களை ஒவ்வொன்றாக முதல் அமைச்சர்யெயலலிதா அழித்து வருகிறார் என்று தி.மு.க. தலைவர் கலைஞர்அவர்கள் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் வருமாறு:உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை எந்தவொரு அரசுக் கட்டடத்திற்கும் சூட்டக் கூடாது என்பது எம்.யி.ஆர். அரசின் கொள்கையாக இருந்தாலும்  அவருடைய ஆட்சிக் காலத்திலேயே  மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அதன் தொடக்க விழா நடைபெற்ற நேரத்தில் எம்.யி.ஆர். மறைந்துவிட்டார். அதன் பிறகு ஜானகி அம்மையார் ஆட்சியிலும், ஆளுநர் ஆட்சியிலும் அந்தப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு நல்ல இடம்கூட ஒதுக்கப்படவில்லை. தரமணி என்ற இடத்திலே ஒரு சிறிய வாடகை வீட்டில் அது அனாதையாக இயங்கி வந்தது.

ஆனால் 24.6.1989இல் சென்னை பிரசிடெண்ட் ஓட்டலில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் மருத்துவப் பல்கலைக் கழகம், மருத்துவப் பல்கலைக்கழகம் என்று குறிப்பிட்டார்களே அல்லாமல், எம்.யி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று யாருமே குறிப்பிடவில்லை.

அதனைச் சுட்டிக்காட்டி நான் பேசும்போது, டாக்டர் எம்.யி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மிக விரைவில் நல்ல உயர்ந்த மாட மாளிகை போன்ற கட்டடங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக்கூடிய அளவிற்கு அமையும் என்று அறிவித்தேன். நான் உரையாற்றும்போது சாதி மத பேதங்கள் நீங்கிடவும், அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் சுமூகமாக வாழ்ந்திடவும் கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமத்துவ புரம் திட்டத்திற்கு பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம் என்று பெயர் சூட்டியதோடு, ஒவ்வொரு சமத்துவ புரத்திலும் அவரது சிலையினை அமைக்கச் செய்தேன். மேலும் பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை பெரியார் நினைவைப் போற்றிடும் வகையில் கழக ஆட்சியில் நிறைவேற்றினோம்.

ஓமந்தூரார் வளாகம்

சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில்  முதலமைச்சராகப் பொறுப்பேற்று தாடியில்லாத பெரியார் என்று போற்றப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பெயரால், சென்னை அரசினர் தோட்டம், ஓமந்தூரார் வளாகம் என்று என்னால் பெயர் சூட்டப்பட்டதோடு,  ஓமந்தூரில் அவருக்கு நினைவகம் ஒன்று எழுப்பப்பட்டு, சென்னையில் அமைச்சர்கள் வாழும் சாலைக்கு ஓமந்தூரார் சாலை என்றும்  என்னால் பெயர் சூட்டப்பட்டது.

சென்னையில் செயின்ட் யாச்சர்  கோட்டைக்கு அருகில் கழக ஆட்சியில் கட்டப்பட்ட 10 மாடிக் கட்டடத்திற்கு  தேசியக் கவிஞர்  நாமக்கல்லார் பெயரைச் சூட்டி,  நாமக்கல் கவிஞர் மாளிகை என்று அழைக்கச் செய்ததோடு, அந்த மாளிகையின் உச்சியில்  அவர் எழுதிய  உணர்ச்சி வரிகளான தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதை எழுதி ஒளியூட்டச் செய்தேன். குமரி முனையில் வள்ளுவருக்கு  133 அடி உயரத்தில் அழகிய சிலை ஒன்றும், பூம்புகாரில் எழுநிலை மாடத்துடன் கூடிய சிலப்பதிகாரக் கலைக் கூடம் என்று ஒன்றும் எழுப்பி தமிழக வரலாற்றோடு வளர்த்தெடுக்கப்பட்ட கலைகளில் ஒன்றான சிற்பக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்ட என்னால் இயன்ற பணியாற்றினேன்.   1990ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அப்போது பிரதமராக இருந்த சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் வந்தபோது, விழா மேடையிலேயே சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானத் தளத்திற்கு காமராஜர் பெயரும் பன்னாட்டு விமானத் தளத்திற்கு அண்ணா பெயரும் சூட்டிடச் செய்தேன். அவரது நினைவைப் போற்றும் வகையில் அண்ணா நூற்றாண்டு  நினைவு நூலகம் ஒன்றை ஆசியாவிலேயே  முதன்மையானதாக ரூ.172 கோடியில் சென்னையில்  அமைத்தேன்.

காழ்ப்புணர்வு

அண்ணா மரணப் படுக்கையில் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் இருந்தபோது அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் அழைத்த நேரத்தில், தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலே ஒரு சில பக்கங்கள் மீதமுள்ளன என்றும், அதை படித்து முடித்துவிட்டு வருவதாகவும் தெரிவித்தார். அந்த அளவிற்கு புத்தகங்களைப் படிப்பதிலே அவருக்கு ஆர்வம் இருந்ததை நேரடியாக அறிந்த நான், அவரது நூற்றாண்டு நிறைவினையொட்டி எழுப்பிய நினைவுச் சின்னமாக நூலகம் ஒன்றே அமைய வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் அந்த நூலகத்தை காழ்ப்புணர்வு காரணமாக மருத்துவ மனையாக மாற்றுவேன் என்று இன்றைய முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் என்றால், எந்த அளவிற்கு அவரிடம் குரோதம் குடி கொண்டி ருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஆறு மாத காலத்தில் தொடர்ந்து கழக ஆட்சியில்  தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம், புதிய தலைமைச் செயலகக் கட்டடம், பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம், அண்ணா பல்கலைக் கழகங்கள் ஒழிப்பு, தொல்காப்பியப் பூங்கா முடக்கம்,  சென்னை புறநகர் காவல் துறை ஆணையரகம் ரத்து, செம்மொழிப் பூங்காவின் பெயர்ப் பலகை மறைப்பு போன்ற பல திட்டங்களுக்கு மூடுவிழாக்களை தொடர்ந்து நடத்தி தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக அழித்து வருகிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. ஆனால் அண்ணனே அந்த இதயம் இதையும் தாங்குமோ? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

யெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஆறு மாத காலத்தில் தொடர்ந்து பல திட்டங்களுக்கு மூடு விழாக்களை தொடர்ந்து நடத்தி தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களையெல்லாம் ஒவ் வொன்றாக அழித்து வருகிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. ஆனால் அண்ணனே அந்த இதயம் இதையும் தாங்குமோ? -இவ்வாறு கலைஞர் எழுதியுள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.