குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கனிமொழியின் யாமீன் மனு மீது தீர்ப்பு இன்று யாமீன் கிடைக்கவில்லையாம்...

கனிமொழியின் யாமீன் மனு மீது தீர்ப்பு இன்று :
03 நவம்பர் 2011   டில்லி பாட்டியாலாவில் இருக்கிற சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கனிமொழியின் யாமீன் மனுவை நிராகரித்து விட்டது. இதனால் பெரும் எதிர்ப்பார்ப்புடன் டில்லியில் திரண்டிருந்த கனிமொழியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். முன்னதாக கனிமொழியின் யாமீன் மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்று சிபிஐ தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு யாமீன் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் இன்று சிபிஐ நீதிமன்றம் யாமீன் வழங்க மறுத்து விட்டது.
 
2ஜி சுபெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் யாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்ப்விருந்ததையடுத்து அவர் இன்று காலை திகார் சிறையிலிருந்து டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
 
கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் நீதிமன்றம் சென்றிருந்தனர்.
 
இந்த யாமீன் மனு கடைசியாக கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி, உள்ளிட்ட 5 பேருக்கு யாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து இவர்களுக்கு யாமீன் கிடைக்கும்  என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனாலும் இந்த வழக்கில் தீர்ப்பை இன்றைக்கு  நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.
 
எனினும் இன்றும் கனிமொழிக்கு யாமீன் வழங்கப்படவில்லை. கனிமொழி கடந்த 5 மாதங்களாக சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவரது யாமீன் மனுக்கள் 3 முறை நிராகரிக்கப்பட்டுள்ளன.
 
 
சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழிக்கு யாமீன் கிடைக்குமா? :
 
2ஜி சுபெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் யாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி அவர் இன்று காலை திகார் சிறையிலிருந்து டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
 
கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
 
இந்தத் தீர்ப்பையொட்டி திமுக மத்திய அமைச்சரான அழகிரி, கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும் டெல்லி சென்றுள்ளனர். மேலும் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
 
இந்த யாமீன் மனு கடைசியாக கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி, உள்ளிட்ட 5 பேருக்கு யாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து இவர்களுக்கு யாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகின.
 
ஆனாலும் இந்த வழக்கில் தீர்ப்பை இன்றைக்கு  நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
 
இந் நிலையில் கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
 
இதற்கு சிபிஐ தந்த விளக்கத்தில், 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, யாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி இன்று விடுதலை ஆகிவிடுவார் என திமுக தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.
 
கனிமொழி கடந்த 5 மாதங்களாக சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது யாமீன் மனுக்கள் 3 முறை நிராகரிக்கப்பட்டுள்ளன.
 
கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி தரப்பட்ட விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.