குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

லிபியாவில் களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்களால் ஆபத்து இரசுசியா வலியுறுத்தியது.

01.11.ர் 2011  மோதல்களின் போது பாரியளவு ஆயுதங்கள் ..லிபியாவில் காணப்படும் பாரியளவிலான ஆயுதங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கொலை செய்யப்பட்ட லிபிய அதிபர் முஹம்மர் கடாபியின் ஆட்சிக் காலத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
 
கிளர்ச்சிப் படையினருக்கும் கடாபி இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களின் போது பாரியளவு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்த ஆயுதங்களில் பெருந்தொகையானவை களவாடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு களவாடப்பட்ட ஆயுதங்களை கண்டு பிடிக்க வேண்டியது லிபியாவின் புதிய ஆட்சியாளர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
 
நேட்டோ கூட்டுப்படையினர் பெருமளவிலான ஆயுதங்களை அழித்துள்ளனர். எவ்வாறெனினும், எவ்வளவு தொகை ஆயுதங்கள் இன்னமும் புழக்கத்தில் காணப்படுகின்றது என்பது இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.
 
விமானங்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
புதிய அரசாங்கம் சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து இரசாயன ஆயுதங்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் ரஸ்யா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் ஏகமானதாக உறுப்பு நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஆயுதங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அல் கய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் எனவும், இவ்வாறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் பாரியளவில் அழிவுகள் ஏற்படக் கூடு;ம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.