குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

குவான்டாசு(ஸ்) விமானசேவைகள் அனைத்தும் நிறுத்தம் 13ஆயிரம் பயணிகள் பாதிப்பு! தனியார்முடிவு இதுதான்.

29.10.2011-தொழிற்பிணக்கு காரணமாக ஒசுரேலியாவின் பிரதான விமான சேவை நிறுவனமான குவான்டாசு தனது சர்வதேச மற்றும் உள்ளுர் சேவைகள் அனைத்தையும் இன்று யி.எம்.ரி.நேரம் 6மணியுடன் நிறுத்தி உள்ளது.அடுத்த 24 மணித்தியாலயங்களில் 13,305 பயணிகள் குவான்னடாசு விமானங்களில் பயணம் மேற்கொள்ள பதிவு செய்திருந்தனர். 1310 சர்வதேச பயணிகள் சர்வதேச விமான நிலையங்களில் தங்களின் பயணத்துக்கான குவான்டாசு விமானங்களை எதிர்பார்த்து தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் குவான்டாஸ் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருப்பது பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.  குவான்டாஸ் நிறுவன நிர்வாகத்தின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஒஸ்ரேலிய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

குவான்டா நிறுவனத்திடம்  64 விமானங்கள் சேவையில் உள்ளன. அவற்றில் 36 உள்ளுர் சேவைகளிலும் 28 சர்வதேச சேவைகளிலும் ஈடுபடுத்தப்பட்டன. தினசரி 7000 பயணிகளை ஏற்றி இறக்குவதில் இச்சேவைகள் ஈடுபட்டு இருந்தன. உலகம் முழுவதும் 22 விமான நிலையங்கள் ஊடாக இதன் சேவைகள் இடம்பெற்று வந்தன.

தொழிற்சங்க நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் திங்கட்கிழமை மாலையிலிருந்து வெளியில் நிறுத்தி வைக்கப்படுவார்கள் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயணத்தை மேற்கொண்டுள்ள விமானங்கள் அந்த பயணங்களை நிறைவு செய்து கொள்ளும். அதன் பின்னர். அவ்விமானங்கள் பயணங்களை மேற்கொள்ளாது என்று பிரதம நிறைவேற்று அதிகாரி இலன் ஜொய்ஸ் தெரிவித்தார்.

தொடர் வேலை நிறுத்தங்களினால் குவான்டாஸ் விமான சேவை பாதிப்படைந்துள்ளது. பொதிகளை கையாளுபவர்கள், பொறியியலாளர்கள், மற்றும் விமானம் ஓட்டிகள் சம்பந்தப்பட்டுள்ள இவ்வேலைநிறுதத்தினால் ஒரு வாரத்திற்கு 15 மில்லியன் ஒஸ்திரேலியன் டொலர்கள் (அமெரிக்க டொலர்கள் 16 மில்லியன்) இழப்பு ஏற்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது பயணத்தை முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் மறு அறிவித்தல் வரை விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு பணமும் திருப்பிக் கொடுக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஓகஸ்ட் மாதம் தொடக்கம் உறவுகள் சீரற்ற நிலையில் காணப்பட்டது. சேவைகளை மீள அமைப்புச்செய்வது மற்றும் சில சேவைகளை ஆசியாவிலிருந்து அகற்றுவது தொடர்பாகவே உறவு பாதிப்புக்குள்ளானது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.