குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆடி(கடகம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

சம்பந்தனின் நிலைப்பாடும், அண்மைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் ! - யோதிகுமார் - 28 மே 2024

30.05.2024.........“தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது” என்பது சம்பந்தனின் நிலைப்பாடானது. முள்ளிவாய்க்காலின் பதினைந்தாவது வருட “நினைவேந்தலின் போது”, அதே நாளில் இது, வெளியிடப்பட்டுள்ளமை, பல்வேறு சிந்தனைகளை தூண்டுவதாயுள்ளது.  இது ஒருபுறம் நடந்தேற, இம்முறை, பதினைந்தாவது வருட நினைவேந்தலின் போது, சர்வதேசம், தான் இருப்பதைக் வழமைப்போல்,  காட்டிக்கொள்ள முண்டி அடித்திருந்தாலும், இத்தடவை, அது சற்று தீவிரமாகவே தனது முண்டியடிப்பை வெளிபடுத்தியதை, காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்க தூதுவரின் வடக்கு யாத்திரையும், அமெரிக்க காங்கிரசில் முதல் முறையாக (அம்மாடி – கடைசியாக) தமிழர்களின் சுயநிர்ணயம் தொடர்பிலான மனு ஒன்றை, சமர்ப்பணம் செய்தது, என்பதுபோக, சர்வதேச மன்னிப்பு சபையின் செயலரும் இம்முறை நேரடியாகப் பங்கேற்றமை என நிகழ்ச்சி நிரலை அமர்க்களப்பத்தி விட்டனர்.

முள்ளிவாய்க்கால் கொலைகளைத்தடுக்க சுட்டுவிரலைக்கூட அசைக்காத சர்வதேசம், இன்று இப்படி பங்குபற்றுவது அலுப்பைத்தான் தருகின்றது. காரணம், சில நெஞ்சங்களிலிருந்தும், வடுக்கள் இன்னமும் அகலாதிருப்பது இருக்கவே செய்வதினாலேயே. ஒரு பதினைந்து ஆண்டுகள், கழிந்து போன நிலையில், இப்போதாவது ஒரு மனு, அமெரிக்கா காங்கிரசில் மிக கடைசியாக? சமர்ப்பிக்கப்பட்டுள்ளது - அதுவும் ஒரு தேர்தலை ஒட்டி, என்ற விடயம் மலைப்பை தருவதாக உள்ளது. இருந்தும் கார்வண்ணன் தனது வீரகேசரி பத்தியில் குறித்துள்ளார் குறிப்பிட வேண்டும் : அமெரிக்க காங்கிரசில் இருந்து,  இலங்கை தொடர்பான தீர்மானம் வெளியுறவு குழுவுக்கு அனுப்பப்படும். அங்கு அது கிடப்பில் போடப்படும். அடுத்த ஆண்டு வந்ததும் அது கைவிடப்படும். இதுதான கடந்த பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது (வீரகேசரி : 26.05.2024)

ஆக, இவையாவும் அரங்கேறும் பின்னணி,  இலங்கையின் தேர்தல் என்பதை மறப்பதற்கில்லை. இம்மூன்று நிகழ்வுகளுமே, அதாவது, அமெரிக்க தூதுவரின் யாழ் பயணமும், அமெரிக்க காங்கிரஸில் மனு சமர்பிக்கப்படல், சர்வதேச மன்னிப்பு சபை ‘நினைவேந்தலில் பங்கேற்றமை’ - இவையாவும் மேலே, குறிப்பிட்டவாறு, நடக்கவிருக்கும்  இலங்கை தேர்தல் சூழலில் அரங்கேறுகின்றது. இதனை விட, தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தாக்கம் என்பது களமிறக்கப்பட்டதன் மத்தியில் இவை நடந்தேறுகின்றது என்பதும் எமது கருத்தைக் கவரக்கூடிய ஒன்றே. சம்பந்தனின் அறிவிப்பு - பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது – என்பதே.

இக்குரலானது (பொது வேட்பாளர் எனும் குரலுக்கு ) தமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம், இறைமை, ஐக்கியம் என்பவற்றோடு, இணைந்த ஒன்று என்று கூறப்படுகின்றது. (கணேசலிங்கன்) ஆனால் இந்த ஐந்தும், காலம் காலமாய் தமிழ் அரசியலில் இதைவிட தீவிரமாக, உலவி வந்தனைவதாம் என்பதனை மறப்பதற்கில்லை. செல்வநாயகம் காலம் தொட்டு;, பிரபாகரன் காலம் வரை - இவை வெவ்வேறு வடிவங்களில், இதனை விட அழுத்தமாக, கடந்த காலங்களில், தமிழ் அரசியலில் தூக்கி பிடிக்கப்பட்டே வந்திருக்கின்றன. (வேறு வார்த்தையில் கூறுவதானால், பொது வேட்பாளர் என்பதில் உள்ளடங்கும் அரசியலும், தென்னிலங்கைக்கு, வாக்களிக்கும் மனோபாவமும் - இரண்டுமே – புதியவை அல்ல – காலம் காலமாய் எமது அரசியல் தளத்தில் பரிசோதிக்கப்பட்டு வந்தவையே ஆகின்றது.)

இருந்தும் சம்பந்தன்-சுமந்திரனின், மேற்படி அறிவிப்பில், முள்ளிவாய்காலின் படுகொலைகள் தவிர, புவிசார் அரசியலும், காசா படுகொலைகளும் (சராசரியாக, நாளொன்றுக்கு 50-100 பேரளவில், படுகொலை செய்யப்படுகிறார்கள்), சர்வதேசத்தின் மௌனமும், உலகின் இரட்டை வேடங்களும் சுட்டிக்காட்டப்பட்டே இருந்தன. (வீரகேசரி : 19.05.2024).

வேறுவார்த்தையில் கூறினால், ஒரு பதினைந்து ஆண்டுகாலத்தின் பின்னர், அரங்கேற்றப்படும் இந்நிகழ்வுகள், ஒரு காசா கொலைகளத்தின் பின்னணியிலும், சனாதிபதி தேர்தல் காலகட்டத்தின் பின்னணியிலும், “மக்கள் நுணுக்கமாய் உசுப்பேத்துகிறார்கள்” மையமாகக் கொண்டு நடாத்தபடுகின்றது, என்பதுவும், மக்கள் இதில் அடிப்பட்டு போகாமல் சிந்தித்தாக வேண்டும் என்பதுமே சம்பந்தன்-சுமந்திரனின் அறிக்கையின் சாரமாகின்றது.

இவ்விடத்திலேயே, அல்லது இப்புள்ளியிலேயே, புவிசார் அரசியல்-அல்லது காஸா போன்ற சொற்றொடர்கள், எமது சிந்தனைக்கு நெருக்கமாக நகர்வதாயுள்ளன. புவிசார் அரசியல் பின்னணியில், நின்றுபார்க்கும் போது, சர்வதேசத்தில் இன்று முக்கியத்துவப்படும் செய்திகள் இரண்டு : ஒன்று, சொலாவாக் அதிபதி சுடப்பட்ட செய்தி (16.05.2024), இரண்டாவது, ஈரானிய சனாதிபதியின் உலங்கு விமானம் விபத்துக்குள்ளானமை. (20.05.2024). இதே தினங்களில்தான், புட்டீனின், சீன பயணமும் நடந்தேறுகின்றது (16.05.2024). இதற்கு கிட்டத்தட்;ட, இரு தினங்களின் முன்பாக பிளிங்கனின் உக்ரேனிய யாத்திரையும் நடந்தேறுகின்றது. (16.05.2024).  பிளிங்கனின், உக்ரேனிய யாத்திரை குறித்து  இரசியா கதைக்கும் போது ஓர் பீட்சா துண்டை கவ்வி, கிட்டாருடன் ஓர் பாடலை பாடியது தவிர வேறெதையும் அவர் உருப்படியாக செய்தாரில்லை என அலட்சியமாக கூறியிருந்தாலும், உலகம் தனது ஆழ்ந்த நெருக்கடி நிலையை அண்மித்து விட்டது என்பதனை, அது, உணரத்தொடங்கிவிட்டது எனலாம்.

அமெரிக்கா, அண்மையில் நடாத்திய நிலத்தடிக்கீழ் அணுகுண்டு சோதனையும் (1000 அடிகள்: 16.05.2024). இதற்கு மறுமொழியாக ரஷ்யா தான், தீர்மானித்துக்கொள்ளும், நாளிலும் காலத்திலும், நேரத்திலும் தனது அணுகுண்டை சோதித்துப்பார்க்க போவதாக கூறுவதும், வடகொரியா இவ் அணுகுண்டு சோதனையின் பின்னர், புதிய ஏவகணைகளைவிட்டு, பரீட்சிப்பதும் நடந்தேறுகின்றது. இந்நடவடிக்கைகள் இடம்பெற்ற தினங்களிலேயே, நேட்டோ ஒரு 90,000 துருப்புகளை, ரஷ்ய எல்லையில் படை பயிற்சியில் இறக்கியதும், பதிலுக்கு, ரஷ்யா, தனது தந்திரோபாய அணு ஏவுகனை சோதனைகளை, உக்ரேன் எல்லையில் நடத்தியதும் நடந்தேறியது (21.05.2024).

உலங்குவானூர்தி விபத்தினை அடுத்து, ஈரான், தனது ஆயத உற்பத்தியை பல மடங்காக அதிகரிக்க உத்தரவிட்டது என்றும் சில முக்கிய ஏவுகணைகளை அது, சு(ஸ்)புல்லா, கெளதி வீரர்களுக்கும் வழங்கி வைத்தது என்பனவும் முக்கியப்படுவதாகின. கூடவே, ஈரானிய சனாதிபதியின் விபத்துக்குறித்து விசாரிக்கவென்று ரஷ்யா தனது ஐம்பது ஆய்வாளர்களை ஈரானுக்கு அனுப்ப தயார்நிலையிலுள்ளதாக வேறு அறிவித்தது.

இது இப்படி இருக்க, இதற்கு முன்னதாக இடம்பெற்ற சீன, விஜயத்தின் போது புட்டீன் ஆற்றிய பிரகடனமானது முக்கியத்துவ படுவதாய் இருந்தது. பல்முனை நோக்கிய உலகத்தை நோக்கி, உலகமானது ஓர் புதிய சகாப்தத்தில் பிரவேசித்துவிட்டது, எனவும், இதனால் அதன் முகம் தீவிரமாக மாறுதலடைந்துள்ளது எனவும் - தனது இராணுவ, தொழிநுட்ப, பொருளாதார, கலாச்சார, வர்த்தக நடவடிக்கைகளில் சீனாவுடன், தான், மேலும் ஐக்கியமுற்று கைகோர்த்துள்ளதாகவும், புட்டீன் அறிவித்த அதேவேளை, இவ் ஐக்கியமானது இனி எந்தவொரு நாட்டினாலும் அல்லது எந்தவொரு சக்தியினாலும் ஈடுகொடுக்கபட முடியாதது எனவும் கூறியிருந்தது, கவனிக்கத்தக்கது.

இதேவேளை, இரசிய வெளிவிவகார அமைச்சரான லவ்ரோவின் கூற்றான, “இனியும் இரசியா, மேற்கின் வார்த்தைகளை அல்லது அதன் செயற்பாடுகளை நம்பத் தயாராக இல்லை” என்பது போலான கூற்றுகள் இவ்விரு முரண்படும்; சக்திகளின் நிரந்தர பிரிப்பையும், இனி வரவிருக்கும் புதிய வெடிப்புக்களை எமக்கு சுட்டிக்காட்டுவதாக அமைந்துபோகிறது. இருந்தும், உண்மை விடய நிலையை மறைத்து, முடிந்தமட்டில் தமது கோரைப்பற்களை ஒரு கையால், மூடிக்கொண்டு, சர்வதேச அரசியல் என்பது, என்றை விடவும் இன்று அழுத்தமாக நகருவது நடைமுறையாகின்றது. இத்தகைய ஓர் பின்னணியிலேயே,  இலங்கையின் ரஷ்ய தூதுவர் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையும் முக்கியத்துவப்படுகின்றது (20.05.2024).

இலங்கையில் மனித உரிமைகள் பொறுத்து, வாய்கிழிய கதறி அழும் மேற்கேத்தய நாடுகள் ஏன் காஸா படுகொலைகளை தடுக்க முனைவதில்லை என்பது போன்ற விடயங்களை கேள்விக்குப்படுத்தும் மேற்படி அறிக்கை, ஒரு வழியில்  இலங்கையின் போர்வீரர்கள் இரசியா-உக்ரேனிய போர் முனைக்கு அனுப்பப்படுவது தொடர்பிலும், இலங்கையானது, இரட்டை வேட நிகழ்ச்சி நிரலிலும் பங்கேற்கின்றதோ என்ற சந்தேகம் எழும் விதத்திலேயே, கட்;டமைக்கப்பட்டிருந்தது.

மேற்படி இரட்டை வேடங்கள் போடுவது தொடர்பில், சம்பந்தன்-சுமந்திரனின் அறிக்கையிலும் ஆழமாக சுட்டிக்காட்டப்பட்டே உள்ளது என்றாலும், இரட்டை வேடம் போடுதல் என்பது,  இலங்கையை பொறுத்தமட்டில், அதன கைவந்த கலையாகவே இன்று பரிணமித்துள்ளது.  உதாரணமாக, மிக அண்மையில், இலங்கை-இந்திய உறவுகள் குறித்து விளக்கமளித்த யெய்சங்கர் அவர்கள், இலங்கை-இந்திய உறவுகள் மிக நல்ல நிலையிலேயே இருக்கின்றன எனவும், தற்போது இரு நாடுகளுக்கிடையே தரைவழி மார்க்கம் தொடர்பிலும், மின்சக்தி தொடர்பிலும், எண்ணெய் குழாய்களை இந்தியாவிலிருந்து  இலங்கைக்கு நிர்மாணிப்பது தொடர்பிலும் இந்தியா, இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடாத்திவருகின்றது என கூறி நின்றார். ஆனால், இவர் இப்படி கூறி சில நாட்கள் கழியும் முன்னரே, தாய்லாந்து தூதுகோஷ்டி  இலங்கை வந்து, மின்சார சக்தி வழங்குதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தியது (21.05.2024).

இது போக, நாகப்பட்டின கப்பல் சேவையானது, குறித்த திகதி குறிப்பிடப்படாமல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதும், இந்திய ரூபாவின்  இலங்கை அறிமுகமானது ஏற்றுக்கொள்ளப்பட்டப்படி, இன்றும் நடந்தேற முடியாத ஒரு முட்டுகட்டில் காணக்கிட்டுகின்றது – என்ற அனைத்தையும் சீர்த்தூக்கி பார்க்குமிடத்து  இலங்கையின் நம்பகத்தன்மை, பல ஆய்வாளர்கள் கூறியிருப்பதுப்போல, கேள்விக்குரிய ஒன்றாக இருந்து வருகின்றது. சுருக்கமாக கூறுவோமானால் ஒப்பந்தங்களை ஒருதலைப்பட்சமாக கிழித்தெறிவதும், “பேச்சுவார்த்தைகள்” என்ற கோதாவில் நிலைகளை இழுத்தடிப்பதும், பொய் வாக்குறதிகளை அள்ளி வீசுவதும் இலங்கை, கட்டமைக்கும் நிரந்தர இராயதந்திர நகர்வுகளாகின்றன, என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அண்மையில், இரசிய-உக்ரைன் போரில், இரசியா பெற்றுள்ள வெற்றிகள் (முக்கியமாக, கார்விக் வெற்றிகள்) ரஷ்யா, அமெரிக்காவின் (எலன் மாஸ்க்கின்) ஸ்டார்லிங்க் வலையமைப்பை செயலிழக்க ஏற்பட்டுள்ளது என குறிப்பட்டுள்ளது.

ஆனால், ரணில், எலன் மாஸ்க்குடன், இந்தோனேசியாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஸ்டார்லிங்க் உடனான வலையமைப்புகளுடன், இலங்கையும் இணைக்கப்பட வேண்டிக்கொள்வதாக விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் (19.05.2024). இவ்வளவையும், செய்துமுடித்து விட்டு, (BRICS) அமைப்பில் சேர்வதற்கு, இந்தியாதான்,  இலங்கைக்கு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும், என ஒரு போடு போடவும் பின்வாங்கினார் இல்லை.

சுருக்கமாகக் கூறினால், மேற்கத்திய நாடுகளில், தமது ஆணிவேரை, நன்கு பதித்துக்கொண்டிருக்கும் இலங்கையானது, ஒரு சீன-இந்திய-மேற்கின் மோதலை தனக்கு சாதகமாக பாவித்துக்கொண்டு, தனதும், மேற்கினதும் ஆணிவேர்களை மேலும், மேலும் பதிய வைத்தலில், வெற்றியை உறுதி செய்தலே,  இலங்கை அரசின், தற்போதைய நகர்வுகளின், அடித்தளமாகின்றது.  இலங்கையின் இத்தகைய “இழுத்தடிப்புகள்” இந்தியாவுக்கு தெரியாதா என்றால் “தெரியும்” என்பதே பதிலாகின்றது.  இப்படி, இந்தியாவுக்கு தெரியும் என்பது  இலங்கைக்கு தெரியுமா என்றால், அதற்கும், பதில், “தெரியும்” என்பதே, பதிலாகின்றது. அதாவது, சக்கரத்தினுள் சக்கரம். அதாவது, ஒரு இராயிவு காந்தியின் கொலையை அடுத்து ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலையும் அரங்கேறப்போகின்றது என்பதுவே அரசியல் எதார்த்தமாகின்றது. இது அண்மையில் வெளியான, மணிசங்கரின், நூலிலும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இராயிவ் காந்தி முற்றும் முழுதாய் பிரபாகரனை நம்பினார் என்றும், IPKF இற்கு அழைப்பு விடுத்தது யே.ஆர் என்பதும், இதனை இந்திய வெளிநாட்டு அலுவலகர்கள் அன்று எதிர்த்தே இருந்தனர் என்பதும் நூல் கதைக்கும் விடயங்களாகின்றது. இத்தகைய, ஓர் இக்கட்டான,  இலங்கை சூழலிலேயே, சர்வதேசத்தின், முக்கியமாக, சர்வதேச நிதி நிறுவனத்தின், ஆதரவைப்பெற்று, தனது வெற்றியை நிச்சயித்துக் கொள்ளலாம் என்ற எண்ணப்பாடும் இரணிலிடம் காணக்கிட்டுகின்றது.

இதன் காரணத்திலேயே, “பொது வேட்பாளர்” என்ற கோசமும் தனது அரசியல் முக்கியத்துவத்தை ஏந்துவதாக இருக்கின்றது. இந்நடைமுறை, வடகிழக்கு வாக்குகளை பிசுப்பிசுத்துப் போகச்செய்யும் என நம்பப்படுகின்றது. இதனாலேயே இதற்கு ரணில் மாத்திரமல்லாமல், சர்வதேசமும், புலம்பெயர் தமிழரின் தீவிர முகமும் ஒன்றுக்கொன்று, ஒத்தாசையாக நேரடியாக அல்லது மறைமுகமாக, இருப்பதும் தெரிகின்றது. உதாரணமாக, இரணில், விக்னேசுவரனை சந்தித்த போது, “பொது வேட்பாளரை தீர்மானிக்கத் தமிழருக்கு தகுதியில்லை” என்று கூறி பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரை உசுப்பேத்துவதுப்போலவே (26.05.2024), புலம்பெயர் நாடுகளின் தீவர முகத்தைக்காட்டி வரும் அருஸ், “தமிழ் பொது வேட்பாளரை கேள்வியுற்று ஆட்டம் காணுகின்றது” என்று கூறுவதும் இடம்பெறத்தான் செய்கின்றது. (28.05.2024). இதன் காரணத்தினாலேயே, ஆரம்பத்தில் சுமந்திரன் மாத்திரம் வாங்கிய அடி இன்று சம்பந்தனுக்கும் விஸ்தரிக்கப்படுவதாய் உள்ளது.

இக்காரணத்தினாலேயே, சம்பந்தன் அறிக்கை வந்த மறுதினமே, “பொது வேட்பாளர்” குறித்து இன்னமும், தமிழரசுக்கட்சி முடிவேதும் எடுக்கவில்லை என மத்திய குழு தீர்மானித்துவிட்டது என்று அவசர அவசரமாக ஓர் அறிக்கை விடப்பட்டதாகியது. இம்முரண்கள், பதிலுக்கு, சராசரி வடகிழக்கு மக்களை குழப்பதில் ஆழ்த்தி, எதை நோக்கி நெட்டித்தள்ள முற்படும் என்ற கேள்வி ஒருபுறமிருக்க நினைவேந்தலின் போது சர்வதேசத்தின் பங்கேற்பு புதிதாய் இன்று யோலித்தது போல், தேர்தலை நோக்கியும் ஜொலிக்க வேண்டிய தேவைப்பாடும் இன்று எழுவதாயுள்ளது. இதன் மத்தியிலேயே, தேசியம் பேசும் முன்னர், இருக்க தேசம் என்ற ஒன்று மிச்சப்பட  வேண்டுமே என்ற கருத்தும் உலவ தொடங்கிவிட்டது.

இச்சூழ்நிலையிலேயே, சர்வதேசத்து கொலைகளும், காஸாவின் முள்ளிவாய்க்கால்களும் தத்தமது தொடர்பாடல்களை  இலங்கை அரசியலில் தமது செல்வாக்கினை காட்டி வருவதாகவும் உள்ளது. இது தொடர்பில், சொலவாக்கியாவின், முன்னை நாள் பிரதமர் அளித்த பேட்டி முக்கியத்துவப்படுகின்றது. அதில், அவர் சில விடயங்களை அம்பலமாக்கியிருந்தார். அவரது பேட்டி சுட்டிக்காட்டிருந்த முக்கிய விடயங்கள்; :

1. உலக நாடுகள் அனைத்திலும் இன்று அழுத்தங்கள் (Tensions) மேலும், மேலும் உக்கிரப்பட்டு வருகின்றன.

2. இவ் அழுத்தங்கள் அவ்வவ் நாடுகளில் கொலைகளில் கூட சென்று முடிவதாய் உள்ளன.

3. இவ் அழுத்தங்கள் ஏதோ ஒரு வழியில், “துருவமயமாக்களை” ஊக்குவிக்கின்றன. அல்லது, “துருவமயமாக்களின்” விளைவுகளால் இந்நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

4. இவ் துருவமயமாக்களை ஊக்குவிப்பது, வெகுசன ஊடக அமைப்புகளே.

5. இவ்ஊடக அமைப்புகளின் நேரடி சொந்தக்காரர்களாய் இருப்பதும், மேற்கத்திய நாடுகளின் செல்வந்த கூட்டங்களே.

6. இவ் அழுத்தங்களை அல்லது துருவப்படுத்தலை, மேலும் ஊக்குவிப்பது பொருளாதார தடைகளே.

7. இப்பொருளாதார தடைகள் உட்பட, அனைத்தையும், இன்று ஊக்குவிப்பது, உக்ரேனிய போர் நிகழ்வுகள் போன்றவையே.

8. இந்நிகழ்வுகள், இன்று கட்டுவிக்கப்படுவது, ஆழ் அரசுகளினாலேயே (Deep States).

9. ஆழ் அரசின் இருப்பை இன்று அம்பலமாக்குவது, ஜோபைடன் போன்ற தள்ளாத வயோதிப முதியவர்களின் இருப்பே.


சுருக்கமாக கூறினால் இன்று, அமெரிக்க சனநாயக கட்சி போன்ற ஒரு மாபெரும் கட்சி தனது  சனாதிபதி வேட்பாளராய், இளையவர் ஒருவரை, தேறமுடியாமல் போய்விட்டதா என்பது ஆழ் அரசுகளின் இருப்பை சுட்டி காட்டும் ஒன்று  என அவர் அடையாளம் கண்டிருந்தார். (இதனையே, சிலகாலத்தின் முன்னர் நாம் செயற்கை புலமையுடன் தொடர்புபடுத்தி வாதிட்டிருந்தோம்.)


“(எலன்மசு(ஸ்)க், தன்னை ஒரு வேற்றுலக ஜந்து என, மிக அண்மையில், வர்ணித்துள்ளார.; (25.05.2024) என்பதும், தலையில் ஒரு ‘சிப்’ (Chip) ஏற்றுவதற்கான அனுமதிகளை, அமெரிக்க அரசிடம் இருந்து, லைசென்சு பெற்றவர என்பதும் உண்டு. இவற்றின் உண்மை பொருள் நாமறியாதது. ஆனால், அண்மை நிகழ்வுகள், மக்கள் சாரிகளிடமிருந்து அந்நியபடுத்தப்பட்டு, வேற்றுலக ஜந்துகளின் பிடிக்குள் உலகம் சிக்கி தவிப்பது போலவே விடயங்கள் உள்ளன). இந்நிலைமையினை, ஆழ் அரசின், செயற்பாடுகளின் விளைவுகள் என வர்ணிப்போரும் உண்டு. ஆக, “பொது வேட்பாளர்” என்ற இன்றைய கோசம் உண்மையில் “துருவப்படுத்தலை” ஏற்படுத்த கூடியதா என்பது கேள்வியாகின்றது.

அப்படி எனில், இத்துருவமாக்கலின் நுணுகிய திட்டமானது, உக்ரேனிய போர் முனையில் மாத்திரமல்லாது, அதனையும் கடந்து மேற்கின் ஆழ்அரசின் நலன்களை, அனைத்து நாடுகளிலும் முன்னெடுப்பதாக இருக்ககூடும் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகின்றது. இதுவே இப்பேட்டியின் சாரமாகின்றது. வேறுவார்த்தையில் கூறுவதானால் உலகம் இன்று மாறிவருகின்றது – பொருளாதார தடைகள் வெற்றிபெறாமல் போயிருக்கின்றன – சீன இரசியா போன்ற நாடுகளுடன் இந்தியா, ஈரான், வடகொரியா, ஆபிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் கூட்டு சேர்ந்து, பல்முனைக்கான எழுச்சியை காட்டுவதாய் இருக்கின்றன. அதாவது, ஒருமுனை அரசியல் என்பது இன்று பல்முனை அரசியலுக்கான போராட்டமாகின்றது. இது நாளும் நாளம் தீவிரப்படுவதாய் இருக்கின்றது. உதாரணமாக, உலகில், மிக அண்மையில் நடந்தேறிய மூன்று நிகழ்வுகள் முக்கியத்துவப்படுகின்றன :

1. இரசியாவிடமிருந்து தான் சிறைபிடித்த (கைபற்றிய), 300 பில்லியன்டாலர் பணத்தை அமெரிக்காவானது, பாவிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பு7 நிதி அமைச்சர்கள், இத்தாலியில் கூடிவிட்டனர் (25.05.2024).

2. பதிலடியாக, இரசியா, இதே நாட்களில், தனது நாட்டில், பல்வேறு வடிவங்களில் வைப்பு செய்யப்பட்டிருந்த அல்லது முதலீடு செய்யப்பட்டிருந்த 290 பில்லியன் அமெரிக்க டாலர்களை சிறைபிடித்து விட்டது (24.05.2024).

3. இவ்வருட சனவரியில், ஆரம்பித்த, 90,000 நேட்டோ படையினரின், படைபயிற்சியானது, இனிவரும், ஓர் உடனடி இரசிய போருக்கான, ஒத்திகை என்று கூறப்படுகின்றது. இதனை விட, பிரான்சு போன்ற நாட்டு தலைவரின் (போலாந்து உட்பட) தமது படையை உக்ரேன் போரில், இரசியாவுக்கு எதிராக களமிறக்க போவதாக இருக்கின்றனர். 4. இதற்கு பதிலடியாக, இரசுயா தனது இரண்டாம் கட்ட அணு ஆயுதபடை பயிற்சியை களமிறக்கிவிட்டது (23.05.2024). கூடவே, பால்டிக் கடலில், தனது எல்லைகளை மாற்றி அமைக்கும் முகமாக, கடலில் இடப்பட்டிருந்த தனது, அடையாளங்களை, ஒருதலை பட்சமாக அப்புறப்படுத்திவிட்டது (25.05.2024). ஆனால், இதைவிட முக்கியமானது தான் இந்த போரை, முடிவற்று நடாத்த தயாராக இல்லை என ரஷ்யா கூறி இருப்பதாகும்.

இவை அனைத்தும், இன்று மேன் மேலும் கூர்மை பெற்றுவரும், உலக நிலவரங்களை எமக்கு சுட்டுவதாய் இருக்கின்றன.

இவ்வெடிப்பு நிலைகளை ஒட்டியதாகவே, இரணில் இன்று, எலன் மாஸ்க்குடன் கதைப்பதும், தேர்தலில் பொது வேட்பாளரின் முக்கியத்துவத்தை  இலங்கையில் களமிறக்குவதும் நடந்தேறுகின்றன.  அதாவது, இதனுடன் கூட்டு சேர்ந்ததாகவே,  இலங்கையில், துருவப்படுத்தல்களும், தேர்தல்களும், ஊடகங்களின் பங்கேற்பும் நடந்தேறுவதாய் உள்ளன என்பதுவே சாரமாகின்றது. அதாவது, சொலவாஸ்கியாவின் முன்னைநாள் அதிபர் கூறியுள்ளதுபடி, இவ் அழுத்தங்கள், இனி உலகம் முழுவதும் இறங்கி வரபோகலாம் என்றாகிறது. (தகுந்த எதிர் நடவடிக்கைகள் இல்லாதவிடத்து). உதாரணமாக, சீனா நேற்று,  62 விமானங்களாலும் 27 கப்பல்களாலும் தாய்வானை சுற்றி வளைத்து படை பயிற்சியை செய்கின்றது எனும் செய்தி, முரண்பாடுகள் உலகம் முழுவதும் மெல்ல, பரவுவதை காட்டுவதாயுள்ளது. இச்சூழலில், மோடி, கச்சதீவை, புதிய அர்த்ததில் பார்த்தாலும் பார்க்கலாம். (25.05.2024). இதுபோல, இலங்கையிலும் நிலவரங்கள் மகிழ்ச்சி தருவதாக இல்லை. இவ்அடிப்படையிலேயே, பொது வேட்பாளர் என்ற எமது கோஷத்தை நாம் உரசிப்பார்ப்பது விரும்பத்தக்கது. ஏனெனில், முக்கியமாக, குரலினை எழுப்பி, மக்களை உசுப்பேத்தும் முன், இருக்க அவர்களுக்கு நிற்க ஓர் இடம் இருக்க வேண்டும் என்பது நியதியாகின்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.