குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆனி(இரட்டை) 22 ம் திகதி சனிக் கிழமை .

பூமி தோன்றி ஒரு கோடியே நாற்பது இலட்சம் ஆண்டுகள் வரை தண்ணீரே கிடையாது. மழை, புயல் எப்படி நிகழ்கிறது!

02.05.2024.....பூமி தோன்றி ஒரு கோடியே நாற்பது இலட்சம் ஆண்டுகள் வரை தண்ணீரே கிடையாது.கதிரவனிடமிருந்து தூக்கி எறியப்பட்ட இந்த கோளில் வெப்பம் தகித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் கைட்ரசனும் ஆக்சிசனும் இணைந்து நீராவியாக தோன்றி காற்றில் உள்ள தூசுகளின் மேல் ஒட்டிக்கொண்டு பூமியின் மிக உயர்மட்டத்தில் மேகமாக சுற்றி திரிந்தது.
போதிய அளவு பூமி குளிர்வடைந்த போது இந்த நீராவி துகள்கள் குளிர்வடைந்து மழையாக பொழிய துவங்கின. ஒரு நாள் இருநாள் இல்லை, நூறு ஆண்டுகளுக்கு மேல் மழை பொழிந்துகொண்டே இருந்தது. இந்த பூமி மொத்தமும் நீரில் மூழ்கி இருந்தது. இவை அவ்வளவும் உவர்ப்பில்லாத நல்ல நீராகும்.
பூமியின் உள்ளுக்குள்ளே கணன்று கொண்டிருந்த வெப்பமும் மேலே மூழ்கடிக்கும் நீரும் சந்தித்து பேரதிர்ச்சிகளை உருவாக்கி பூமியின் மேலோடுகளை அசைத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவிட்டது.
இதனால் பல இடங்களில் பள்ளமும், பல இடங்கள் மேடாகவும் மாறியது. மேடான இடங்களில் உள்ள கரையக்கூடிய பொருட்களை கரைத்துக்கொண்டு நீர் பள்ளமான இடத்தை வந்து சேர்ந்தது. இது அவ்வளவும் கரிக்கும் நீரால் ஆன கடலாக மாறியது.
மேட்டுப்பகுதியில் பூமிக்கு உள்ளிருந்து வந்த எரிகுழம்பால் மலைகள் தோன்றின. அவை மேலும் பூமியின் அடியிலிருந்து எரிகுழம்பு வெளிப்படாமலிருக்க இறுக்கமான மூடியாகியது. க கடலின் மேற்பரப்பில் சூரிய வெப்பத்தாலும், காற்றின் சக்தியாலும் நீர் ஆவியாகி மீண்டும் மேகம் உருவானது. நிலப்பரப்பில் சூடான காற்று மேல் நோக்கி நகர்ந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப கடல் மீதிருக்கும் காற்று மேகத்தை தள்ளிக்கொண்டு நிலப்பரப்பை நோக்கி புயலாக பாய்ந்து வருகிறது.
வந்த வேகத்தில் மேகம் நிலப்பரப்பை தாண்டி அடுத்த கடல் பரப்பிற்குள் சென்றுவிடாமல் மலைகள் தடுக்கிறது. அந்த நேரம் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மேகத்தை குளிர செய்து மழையாக்கி நிலத்தில் பொழிய செய்கிறது. நிலம் தன்னால் இயன்ற அளவில் நீரை உறிஞ்சிக்கொள்ளும். எஞ்சியவை ஆறுகளாக மாறி கடலையே சேரும். இவ்வாறு நிலத்தில் தக்க வைக்கப்பட்ட நீர் மட்டுமே நிலத்தில் வாழும் உயிர்களுக்கு வாழ்வாதாரம்.
இந்த சுழற்சி கோடிகணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஆனால் சமீப காலமாக, அவ்வாறு கடலிலிருந்து வந்த மேகத்தை தடுக்கும் மலைகள் தார் சாலைகளாகவும், கட்டிடங்களாகவும், மார்பில், கிரானைட் தளங்களாகவும், மாறிவிட்டதால் பெரும்பாலான மேகங்கள் நிலப்பரப்பை எளிதாக தாண்டி அடுத்த கடல்பரப்பை சென்று சேர்ந்துவிடுகிறது.
தடுக்கப்பட்ட கொஞ்சம் மேகங்களையும் குளிர்விக்க மரங்கள் போதுமான அளவு இல்லை. எனவே அம்மேகங்கள் செல்ல இடம் அறியாது நின்று பூமியின் வெப்ப கதிர்வீச்சை மீண்டும் பூமி மீதே பிரதிபலிக்கிறது. தற்போதைய உயிரினங்களை பாதித்துவிடாமலிருக்க பூமி ரகசியமாக ஒளித்து வைத்திருந்த பண்டைய உயிரினக்களின் படிமங்களை பூமியின் கட்டுப்பாட்டை மீறி துளையிட்டு எடுத்து நாம் எல்லா பயன்பாட்டிற்கும் எரிப்பதால் அவை கடும் நஞ்சுடன் கூடிய வெப்பத்தை வெளியிடுகிறது.
முன்னர் இருந்த வெப்ப அளவை குறைக்க அப்போதிருந்த கோடிகணக்கான மரங்கள் போதுமானதாக இருந்தன.. ஆ ஆனால் இப்போதோ செயற்கையாக உண்டாக்கப்பட்ட வெப்பத்தையும் சேர்த்து குறைக்க இன்னும் சில கோடி மரங்கள் தேவைப்படுகின்றன..
இத்தனைக்கும் மீறி நன்மக்களுக்காக பெய்யும் மழை நீரை சேகரித்தாலன்றி நமக்கு வேறு நீராதாரம் கிடையாது. ஆகையால் மழை நீரை சேகரிப்போம். உயிர் வாழ்வோம்..!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.