குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

கலோ பிறந்த கதை.. இடுகைநாள் 09.02.2024

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார்.

கலோ பிறந்த கதை...

22.11.2017

தொலைபேசியை கண்டு பிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பது மட்டும் நமக்கு தெரியும். அதை கண்டுபிடிக்க அவருக்கு ஊக்கமாக இருந்தது எது? என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் தந்தை மெல்வில்பில். இவர் பிறவியிலேயே வாய் பேசவும், காது கேட்கவும் இயலாதவர். அதனால் மற்றவர்கள் பேசும் வாய் அசைவுகளை வைத்து எப்படி கருத்துகளை புரிந்து கொள்ள முடியும், விளக்க முடியும் என்று ஒரு புத்தகம் எழுதி அதன் மூலம் பிரபலமானார். தந்தையின் காது கேளாத, வாய் பேசமுடியாத நிலைதான் அலெக்சாண்டர் கிரகாம்பெல்லை ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. 1871ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஒரு காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த கிரகாம்பெல், செவிட்டுத் தன்மையை நீக்கி ஒலியை உணர்வதற்கான கருவி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். காது கேட்காதவர்களுக்கு செயற்கை காது பொருத்த முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதனால் இறந்தவர்களின் காதுகளை அறுத்தும் ஆய்வு செய்தார்.

1874ம் ஆண்டில் தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் என்பவருடன் போஸ்டன் நகரில் தங்கி இருந்த போது கம்பி மூலம் ஒலியை அனுப்பி கேட்க முடியுமா என்றும் ஆய்வு செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அவர் கண்டுபிடித்த கருவி வேலை செய்யவில்லை. கோபத்தில் இருந்த அவர் வேகமாக எழுந்த போது அருகில் இருந்த அமிலம் அவர் மேல் கொட்டி விட்டது. அதனால் உதவிக்கு தனது வாட்சனை கத்தி அழைத்தார். அவர் அழைத்தது கீழ் அறையில் இருந்த வாட்சனுக்கு கேட்டது. எப்படி கேட்டது. அவர் கண்டுபிடித்த டிரான்ஸ் மிஷின் முன்பு நின்று கத்தியுள்ளார். அதனால் அது வேலை செய்வதாக உறுதிப் படுத்தினார்.

அதற்கு பிறகு பல முயற்சிகளின் அடிப்படையில் கம்பி மூலம் பேசும் தொலை பேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் அதை வர்த்தகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதை பலருக்கு செயல்விளக்கம் செய்து காட்டினார். குறிப்பாக விக்டோரியா ராணி முன்பு செய்து காட்டினார். அந்த செயல்விளக்கம் செய்யும் போது அவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘‘ஹலோ’’ என்ற வார்த்தைதான்.

இந்த ‘‘கலோ’’ என்ற சொல் ஒரு பெண்ணின் பெயர். யார் அந்த பெண் என்ற கேள்வி நமக்கு தோன்றும். அவர் வேறு யாருமல்ல. அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் காதலிதான். மார்கரெட் கலோ என்பது அவர் பெயர். அதை சுருக்கி கலோ என்று அழைத்தார் கிரகாம்பெல். டெலிபோன் பேசுவோர் எல்லோரும் அவரது காதலியின் பெயரை உச்சரிக்கும்படி செய்துவிட்டார். ஆனால், கப்பலில் உச்சரிக்கப்படும் ‘‘அகய்’’ எனப்படும் சொல்லைத்தான் கிரகாம்பெல் கலோ என்று மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1876ம் ஆண்டு முழுமையான தொலைபேசி முறையை வர்த்தகப்படுத்தினார். அப்போது தொலை பேசி இணைப்பு கேட்டு வெறும் 8 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்தனர். 1922ம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம்பெல் இறந்த போது, அமெரிக்கர்கள் ஒரு நிமிட நேரம் தொலைபேசிகளை இயங்காமல் வைத்து கிரகாம்பெல்லுக்கு  இறுதிவணக்கம் (அஞ்சலி) செலுத்தினர்.