குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பிரித்தானியா பாராளுமன்றத்தில் (இலண்டன்) தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் நாளன்று 15.01.2024 (01.01.தி.

ஆ. 2055) இராவணன் கதைசொல்லும் ஈழத்துநாட்டியம் அரங்கேறியது! .....அரங்கேற்றியவர்களுக்கு  வாழ்த்துகள். பரதநாட்டியம் இந்திய அடையாளத்ப்பெற்று விட்டது  அதிலிருக்கும் கிராமிய நடனங்கள், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம்,கரகம் என்பனவே எமது (தமிழர்) நடனக்கலைக்குரியவை ஏனையவை பிறமாநிலக் கலவைகளில் உருவானவையாகின்றன. இதனால்தான் மேனாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  காலஞ்சென்ற  அமமரர் வித்தியானந்தன்அவர்கள்  ஈழத்து நடனம் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்றார் . அது இன்று மேனாள் இலங்கைப்பேராசிரியர் பாலா.  சுகுமார் அவர்களால் இங்கிலாந்துப்பாராளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது.

 

மரபுத்திங்கள்  காலத்தில் தமிழர்மரபுகளை  மீட்கவேண்டும் என்ற தெளிந்த அறிவே உயரவேண்டும்.  பொங்கல் வகைகள் அல்ல மரபுத்திங்கள் கொண்டா புறப்பட்டதன் நோக்கம் பிறஇனத்தாரின் பண்பாட்டுக்கலவைகளில் இருந்து மீளலே மரபுத்திங்களின் நோக்கமாகும். தைப்பொங் கலைக் கொண்டாடுவதிலே பெரும்இடர்கள். அடுத்து பயிராளர்கள் இயல்பாகவே பட்டிப் பொங்கல் பொங்குவார்கள் இப்படியான நடைமுறைக் குரியன


தமிழினம் இழந்தவற்றை  அடையாளப்படுத்தல் திணிக்கப்படும் மொழிக்கலப்பு, பண்பாட்டுக்கலப்பு, கலைக்கலப்புகளை  இளையகுமுகாயம் அறிய ஏற்பாடுகள் நிகழ்தலே தமிழ்மரபுத் திங்களாகும்  ஐந்துநாள் (ஐந்துவகையான) பொங்கலை ஆரியமுறைகளை உள்வாங்கி இந்திய உடைப்பண்பாடு வெளிப்படுத்தி கொண்டாடுவது மரபுத்திங்களாகாது. தமிழ்ப்பெயர்கள் வைப்பதை ஊக்கப்டுத்தல் , தமிழ் ஊடகங்கள் கிரந்த எழுத்தின்றி  அச்சிடுதல்,சல்லிக்கட்டு என்று சரியான  தமழில் தலைப்பிடுதல் போன்றவற்றை  மீட்டல் கோவில்களில் தமிழ்மொழிவழிபாட்டை  ஏற்று நடைமுறைப்படுத்துதல்  தமிழர்கொண்டாட்டாட்ட நிகழ்வுகளில் ஆண்களும் பெண்கள் சேலை உடுத்தி தமிழ்உடைப்பண்பாட்டைப்பேணுவது போன்று வேட்டி,மேல்சட்டை அணிந்து  பங்குபற்றுதலை ஊக்குவித்தல் போன்றன தமிழ்மரபுத்திங்களின்  இலக்காக இருக்கவேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.