குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

உலக புடைவைநாள் - உலகநடைமுறைநாட்காட்டியின்டிசம்பர் 21 /தமிழர்களின் உடைநாகரிய வரலாறு!

29.12.2023....திருவள்ளுவராண்டு 2054 ......2009 முதல் டிசம்பர் 21ம் நாள் உலக புடவை நாளாக கொண்டாடப்பட்டு= நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.(அனுசரிக்கப்பட்டு )வருகிறது. புடவையின் பாரம்பரியத்தை போற்றவும் அதன் முக்கியத்துவத்தை ஏற்றவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்திய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் எடுத்துக் கூறும் ஒரே ஆடை புடவை. பெண்களின் புடவைதான் இந்தியாவின் பண்பாடு(கலாச்சார) அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் ‘சாரி’ என்றழைக்கப்படும் சேலை = புடவை, மிகப்பழமையானது.

பல தெற்காசிய நாடுகளில் புடவை மீது மோகம் இருந்தாலும், புடவை அணியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எப்போதும் முதலிடத்தில் உள்ளது.

இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், fpந்தி, குaராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறை யே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாக இதன் நீளம் 4 – 5 யார் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும். மடிப்புகளுடன் உடலை சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுத்தப்படுகிறது.

பருத்திநூல், பட்டுநூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு.

சேலைகளைப் பட்டு நூலால் தயாரிக்கும் பாரம்பரியம் தென்னிந்தியாவிலேயே தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகின்றது. இந்தியாவிலே பட்டின் இராசதானிகளாக கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களுரும் மைசூரும் விளங்குகின்றன. பருத்தி கலக்கப்படாத துய்மையான சாறி  என்ற பட்டுநூல் சூரத்தில் மட்டுமே கிடைக்கின்றது. இந்தப் பெயரே ஆங்கிலத்தில் சேலைக்கு சாறி என்ற பெயர் வரக் காரணமாயிற்று.

புடவை என்பது தமிழ்ப் பெண்டிரின் உடையாகப் பன்னெடுங் காலமாக இருந்து வருகிறது. ஆதியில், இந்தியா முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் காலப் போக்கில் தெற்கில், புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்த போதும், அவர்கள் விட்டுச் சென்ற ஆடை நாகரிகம் இந்தியா முழுவதும் பரவியிருந்தது; இப்போதும் இருக்கிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ளவர்களின் இரசனைக்கு ஏற்ப அதை உடுத்தும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், புடவை என்பது மாறாமலேயே உள்ளது.

புடைவை - என்பது தூய தமிழ்ச்சொல்.

புடவை - என்பது பேச்சு வழக்கு.

புடைவை > புடவை. ( ஐகாரம் > அகரம்)

புடை - என்றால் 'சுற்று’ என்று பொருள்.

புடைவை - உடல் முழுவதும் சுற்றிக் கட்டப்படுவதால்' புடைவை' ஆனது.

எந்த விதமான இணைப்புகளும் தேவைப்படாத - உடலைச் சுற்றிக் கட்டுகின்ற - தைக்கப்படாத ஆடைகளையே பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உடுத்தி வந்தனர். அவை இன்றைக்கும் தொடர்ந்து பயனில் இருப்பதற்கு புடைவையும் ஒரு சான்று.

இதனை விட 'சேலை' அழகிய பெயர். 'சேலை', 'சீலை' என்பதிலிருந்து வந்தது. 'சீலை', 'சீலம்' என்னும் வேரிலிருந்து வந்தது. 'சீலம்' என்பதற்கு, ஒழுக்கம், 'ஒழுகுதல்' என்பது பொருள்.

தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர்.

ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதைச் சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் காணப்படும்ஆடைகள் உணர்த்துகின்றன.

வனப்பும் மென்மையும் மிகுந்த ஆடைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்ததுடன், அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டன.

ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

உறையூரில் முன்காலத்தில் நெசவுத் தொழிலுக்குச் சாயமிடும் தொட்டி காணப்பட்டதாகவும். உறையூரில் நெசவு செய்யப்பட சேலைகள் ஒரு தேங்காய் மூடியில் அடைக்கக் கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட கி.மு 3000ம் ஆண்டளவில் சிந்து சமவெளி நாகரீகப் பகுதியில் சேலை ஒரு ஆடையாகப் பயன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகமும், மெஸப்பொட்டோமியன் நாகரிகமும் தான் முதலில் நீளமான துணியை இடுப்பில் அணியும் வழக்கத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது. நீளமான துணியை இடுப்பில் சுற்றி நடுவில் உள்ள துணியை கொசுவமாக இரண்டு கால்களுக்கு இடையே பின்புறம் கொண்டு சென்று (பஞ்சகச்சம் போல) பின்புற இடுப்பில் செருகிக் கொள்வதே முதலில் இவர்களிடம் இருந்து வந்தது.

பழந்தமிழ் இலக்கியங்களில், மெல்லிய பட்டுப் புடவைகளை நேர்த்தியாகச் செய்யும் நெசவுக் கலைஞர்கள் இருந்தார்கள் என்றும், அச்சேலை ஒன்றை ஒரு கணையாழியின் வட்டத்திற்குள் நுழைத்து மறுபுறம் உருவி விடலாம், அவ்வளவு மென்மையான பட்டாடை என்பது போன்றும் குறிப்புகள் காணப்படுகின்றன.

நாகரிகம் வளரத் தொடங்கியபோது ஒரு சிறு துணியை மார்பை மூடும் வகையில் போர்த்தி மார்பின் நடுவில் முடிச்சு போட்டு அணியத் துவங்கினர். இதுவே கச்சை என்று அழைக்கப்பட்டு, கீழே அணியும் துணி நீவியென்று அழைக்கப்பட்டது.

உடலோடு ஒட்டி சோளி அணியப்பட்ட பிறகு கீழே அணியும் நீண்ட துணியின் ஒரு பகுதியையே இடுப்பை சுற்றி மேலே கொண்டு வந்து மேலே கொசுவம் செய்து தோளில் குத்திக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டு இன்றைய புடவை அணியும் முறை ஏற்பட்டது.

புடவைகளைப் பின் கொசுவம் வைத்து உடுத்திப் பெண்கள் தங்கள் பின்னழகை மறைத்த காலம் ஒன்றும் நூறாண்டுகட்கு முன்பு வரை இருந்தது. ஆனால், இப்போது காலம் வெகுவாக மாறிவிட்டது.

இந்தியாவில் சேலை ஒவ்வொரு பகுதிலும் வெவ்வேறு பெயர்களை கொண்டு உள்ளது. இந்த saree என்ற வார்த்தை “satika” சமசு(ஸ்)கிரத மற்றும் பாலி மொழியில் இடம்பெற்று உள்ளது. “satika” என்பது பெண்கள் அணியும் ஆடை என்று புத்த இலக்கியத்தில் யகர்தா கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின் இந்த பெயர் புழக்கத்திலிருந்து எளிமையாக “saree” என்று மாறியது.

புத்த துறவிகள் உடுத்தும் தைக்கபடாத ஆடையே தூய்மையின் அடையாளமாக கருதுகின்றனர். இந்த நாலரை முழம் முதல் எட்டு முழம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே இருந்தது வந்துது. ஊசிகளால் துளைக்கப்பட்ட ஆடைகள், அதாவது தைக்கப்பட்ட ஆடைகள் தூய்மை அற்றவை எனப் பண்டைக் கால மக்கள் கருதினர் இதனால் சேலைகளே அக்காலத்தில் துர்ய்மையான(புனிதமான) ஆடைகளாகக் கருதப்பட்டிருக்கக் கூடும். முசுலிம்களின் வருகையுடனேயே இந்தியாவில் தைக்கப்பட்ட ஆடைகளின் செல்வாக்கு ஏற்பட்டது.

கிரேக்கர்கள், பாரசீகர்கள் மேலே அணியும் துணியை கொசுவமாக செய்து தோள்பட்டையின் ஒருபுறம் போட்டுக்கொண்ட இடுப்பில் பெல்ட் அணிவர். இக்கலாசாரம் இந்திய பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கச்சையின் மேலே ஒரு மெல்லிய துணியை கொசுவி தோள்பட்டையின் ஒருபுறம் தொங்கவிட்டு, மறுபுறத்தை உடலை சுற்றிகொண்டு வந்து இடுப்பில் செருகிக் கொண்டனர்.

பாரசீகர்கள் தான் முதன்முதலில் துணிகளை தைத்து அணிவதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள். அதன் பின்னர் கச்சையை லூசாக தைத்து யாக்கெட்டாக அணியும் வழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் உடலோடு ஒட்டிய வகையில் சிறியதாக யாக்கெட்டை அணியும் முறையே சோளி என்று மாறியது.

பெர்சியர்களும் கிரேக்கர்களும் புடவைகளின் பாணியில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடிந்தது. கிரேக்கர்கள் துணி (கம்மர்பண்ட்) போன்ற பெல்ட்டை அணிந்தனர் மற்றும் பெர்சியர்கள் தோளில் ஒன்றாகப் பிடித்து இடுப்பில் பெல்ட் அணிந்த ஆடைகளை அணிந்தனர். இந்த வகையான ஆடைகள் இந்திய பெண்களை கவர்ந்தன, மேலும் அவர்களும் இந்த பாணியை தங்கள் நாகரீகத்துடன் கலக்க ஆரம்பித்தனர்.

தையல் மற்றும் தைத்த ஆடைகளை அணியும் கலை இந்தியாவில் தொடங்கியது. இந்தியாவில் முதன்முதலில் தையல் கலையை அறிமுகப்படுத்தியவர்கள் பாரசீகர்கள் என்று கூறப்படுகிறது.

இந்தக் காலக்கட்டத்தில், அப்போதைய புடவைகளுடன் முதன்முறையாக 'சோலிசு('ஸ்') எனப்படும் இறுக்கமான பிளவுசு(ஸ்) அணியும் பண்பாடு( கலாச்சாரம்) அறிமுகப்படுத்தப்பட்டது. பெர்சியர்கள் இந்தியாவில் முத்துக்கள் மற்றும் பிற விலையுயர்ந்த கற்களால் துணிகளை பொறிக்கும் நேர்த்தியான கலையை அறிமுகப்படுத்தினர். அக்கால அரச பெண்கள் நெசவு மற்றும் எம்பிராய்டரி ஆகியவற்றின் கலவையான இரத்தினம் பதிக்கப்பட்ட ஆடைகளை அணிந்தனர்.

முகலாயர்களின் வருகைக்குபின் சேலையில் கற்கள், ய(ஜ)மிக்கிகள் கொண்ட வேலைபாடுகளும், முந்தியில் அன்னம், மயில், யானை போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டும், புடவையின் ஓரங்களில் வேலைபாடுகளையும் கொண்டு வந்தனர். பிரிட்டிச்(ஷ்) வருகைக்குப் பின் நீண்ட தைக்கபடாத ஆடையையுடன் தைக்கப்பட்ட இரவிக்கை மற்றும் பாவாடை இணைக்கப்பட்டது. பின்னாட்களில் புடவையுடன் இந்த இரண்டும் இணைந்து கொண்டன.

முகலாயர் ஆட்சியின் போது, இந்தியா புடவைகளில் மற்றொரு பெரிய மாற்றத்தை எதிர்கொண்டது. முகலாயர்கள் ஆடம்பரமான உடைகள் மற்றும் நேர்த்தியான நாகரீகத்தை விரும்பினர். அவர்கள் தையல் கலையை முழுமையாக்கினர் மற்றும் பட்டு ஆடைகள் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்தனர். புடவைகளைக் கட்டும் நவீன பாணி இந்தக் காலகட்டத்தில் தான் உருவானது. இந்தியப் பெண்ணை அழகாய்க் காட்டும் இசு(ஸ்)டைல் இதுதான். இக்காலத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இயற்கை சாயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில்(தமிழகத்தில் )நடைபெற்ற விசயநகரப் பேரரசும் தெலுங்கு மக்களின் குடியேற்றமும் தமிழர்களின் வாழ்விலும் பண்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. அதன் விளைவுகளில் ஒன்றாக தமிழர் உடையிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இக்காலத்திற்கு முன்னர் புடைவை என்ற சொல் ஆண்களும் பெண்களும் மேலே அணியும் நீண்டதுணியை குறித்தது. துறவியாக சமண சமயத்தில் இருந்த திருநாவுக்கரசர் சமண மதத்தை விட்டு வெளியேறும்போது “வெண்புடவை மெய் சூழ்ந்து” வந்ததாக சேக்கிழார் குறிப்பிடுகிறார். இக்காலத்துப் பெண்கள் உடுத்தும் 14, 16, 18 முழச் சேலைகள் தெலுங்கு பேசும் மக்களின் உறவால் ஏற்பட்ட வழக்கமாகும்.

அரையாடையும் மேலாடையுமான பெண்களின் இரட்டை ஆடை ஓர் உடையானது. இச்சேலையும் முதலில் மஞ்சள் சிவப்பு எனும் இரண்டு வண்ணங்களை உடையதாய் ‘கண்டாங்கி’ என்று வழங்கப்பட்டது. பிராமணரல்லாத ஏனைய தமிழ் பெண்கள் அனைவரும் சேலையின் மேற்பகுதியை ‘மாராப்பு’ தோளின் இடதுபுறமாக பிராமணர்களும் சில தெலுங்குப் சாதியினரும் தோளின் வலது புறமாகவும் போர்த்திக் கொண்டனர். இன்று பெரும்பான்மையான மக்களின் வழக்கமாக இடதுபுறமாக தோள் சீலை அணியும் பழக்கம் வந்துவிட்டது.

தமிழகத்தின் சில பிரிவினரிடையே தோள்சீலை அணிவதில் போடப்பட்டிருந்த தடைகளை எதிர்த்து ‘தோள்சீலை போராட்டம்’ ஒன்று தீவிரமாக நடைபெற்று வெற்றி பெற்றது என்பது வரலாறு.

பழந்தமிழர் ஆடையின் சிறப்பான பகுதி ஆடைகளுக்கு கரையிடும் வழக்கமாகும். சேலை மட்டுமன்றி ஆண்களின் வேட்டியும் கரையால் மதிப்புப் பெறுகிறது. “கொட்டைக் கரைய பட்டுடை” என சங்க இலக்கியம் பட்டாடையின் கரையினை சிறப்பித்து பேசும். இன்றளவும் தமிழ்நாட்டு பட்டுச்சேலைகள் அவற்றின் கரையால் சிறப்பு பெறுகின்றன.

இந்திய சேலை ஆடைகளில் மிகவும் பல்துறை மற்றும் ஆற்றல் வாய்ந்தது. 5 முதல் 9 கெயம் வரையிலான துணி இன்னும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான ஆடைகளில் ஒன்றாகும்.

இரவீந்திர நாத் தாகூரின் அண்ணியான காதம்பரி தேவி, புடவை அணியும் கலாச்சாரத்தில் சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க மாறுபாட்டைக் கொண்டு வந்தார். சேலை கட்டும் புதிய முறையை சமுதாயத்திற்கு கற்றுக் கொடுத்தாள். முந்தைய நாட்களில், ஆறு கெய(ஜ)ம் துணியை ஒரே உறையில் அணிந்திருந்தார்கள். ப்ளீட்சுடன் புடவைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். அந்தக் காலத்துப் பெண்களை இப்படிச் சேலை அணியத் தூண்டும் வகையில் செய்தித்தாள்களில் கூட விளம்பரம் செய்ததாகவும், தேவைப்பட்டால் அந்தச் சேலை கட்டும் கலையைக் கற்றுக் கொள்ள தன்னிடம் வரலாம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறது. பெண்கள் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அப்படித்தான் இன்றும் சேலை கட்டும் போக்கு பின்பற்றப்படுகிறது.

புடவையில் முதன் முதலில் வந்தது நிவி சு(ஸ்)டைல். அதுதான் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகாராணி இந்திராதேவிதான் சிஃபான் புடவைக ளை அறிமுகம் செய்தார். இளம் வயதிலேயே விதவையான இவர், வெள்ளை புடவை மட்டுமே அணிந்து வந்தார்.

பிரான்சிலிருந்து இறக்கு மதியான இந்தப் புடவை அழகான டிசைன்களு டன் காட்சியளித்தது. சிஃபான் மிகவும் மெல்லிய துணி என்பதால், வெயில்காலத்தில் பெண்கள் அதை விரும்பி அணிய ஆரம்பித்தனர்.

திரைப்படங்கள் வெளி வர ஆரம்பித்ததும் டிசைன்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. எனவே  சிஃபேசன் டிசைனிங் துறையும் வளர்ந்தது.

இது புழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இது ஒரே உடையாகவே கருதப்பட்டு வந்தாலும், இதை, கட்டும் முறைகளில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. புடவையை அணிவதிலும் பல வகைகள் இருக்கிறது.

சாதாரணமாக எல்லா பெண்களும் கட்டுவது நிவி சு(ஸ்)டைல்.

பொதுவாக சேலை 5  1/2 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு இடுப்பில் வலதுபுறம் சொருகிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு விரலையும் சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்ல து 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்ப்கபடும். இதுவே நிவி பாணி (nivi) என்று அழைக்கப்படுகிறது.

புடவைகளை அவை கட்டப்படும் முறைகளையொட்டிப் பின்வரும் பாணிகளாகப் பிரிக்கப்படுகிறது.


1.வட இந்திய / குயராத்தி பாணி

2.மகாரச்டிரா / கச் பாணி

3.தமிழ்(திராவிடப்) பாணி

4.குடகு பாணி

5.கோண்டு பாணி


இரு துண்டுப் புடவை


இனக்குழுப் பாணிகள் (Tribal Styles)

இதிலேயே முந்தானையை வலது பக்கமாக முன்னால் கொண்டு வந்தால், அது குயராத்தி இசு()டைல்.

ஆண்களின் பஞ்சகச்சம் போல் கட்டப்படுவது கொங்கினி.

பிராமண சமுதாயத்தில் அணியும் இசு(ஸ்)டைல் மடிசார்.

பொதுவாக கொசுவம் முன்னால் வரும்.

அதையே பின்னால் வருவதுபோல் அணிந்து முந்தானையை குயராத்தி இசு(ஸ்)டைலில் கொண்டு வந்தால், அது குடகு சிஃபேசன்.


இப்படி மாநிலத்துக்கு மாநிலம் புடவை கட்டும்இசு(ஸ்)டைல் மாறுபடுகிறது.

இதையே கலந்துக் கட்டி புதிது புதிதாக இசு(ஸ்)டைல்களை உருவாக்கி வருகிறார்கள், சிஃபேசன் டிசைனர்கள்.

‘‘டெனிம் புடவை, பார்க்க டெனிம் துணி போலிருக்கும்.ஆனால், பட்டு துணியால் நெய்யப்பட்ட புடவை இது. இரவிவர்மனின் ஓவியங்களை வைத்து உருவானது கம்ச தமயந்தி புடவை.

இடுப்புப் பகுதியில் சின்ன பாக்கெட் கொண்டிருப்பது பாக்கெட் புடவை. எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கட்டுவது இரிவர்சபிள் புடவை. யாக்கெட்டிலும் புடவையிலுள்ள டிசைன்களை அமைத்தால், அது சர்ட் காம்போ. இதை கல்யாண கலெசன் என்றும் அழைக்கலாம். ஒரு புடவை, இரண்டு பிளவுஸ் பிட்ஸ் என்றிருப்பவை மா பேட்டி புடவை. அம்மா பெண் இருவரும் இதனை அணியலாம். இப்படி காலத்துக்கு ஏற்ப நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இதுவே, இந்தியாவில் பல இடங்களில், பல்வேறு விதமாகக் கட்டி, பல பெயர்களுடன் திகழ்கிறது.


வட இந்தியாவில் குறிப்பாக குயராத்தில் புடவையின் முந்தானை முன்பக்கமாக வருமாறு அணிவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் புடவை முந்தானை பின்பக்கம் வருமாறு பார்த்து அணிகின்றனர்.


காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, இ டசு(ஸ்)ச(ஸ)ர் சில்க் என சுமார் 80 வகையான புடவை வகைகளை கொண்டு உள்ளது.

மாநிலத்துக்கு மாநிலம் புடவையின் தரம், இரகம் மாறுபடும்.

கி.மு 3630 இல் சீனர்கள் முதன்முதலில் பட்டு உற்பத்தியைத் தொடங்கினர்.

சீனா, இந்தியா, பண்டைய எகிப்து, பெர்சியா, அரேபியா மற்றும் பண்டைய ரோம் ஆகிய நாகரிகங்களில் பட்டுப்பாதை ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தது.

கி.மு 2 ஆம் நூற்றாண்டில் இருந்து சீனர்கள் மேற்கு நாடுகளுக்கு பட்டு ஏற்றுமதி செய்யும் பட்டுப்பாதை வணிக வலையமைப்பை நிறுவினர் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

பட்டு பிரபலமான மற்றும் மிகவும் விவாதிக்கப்பட்ட, பட்டுப்பாதை வழியாக சீனாவிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தது. அக்பர், கி.பி.1572 இல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பெர்சியா, சிரியா, துருக்கி போன்ற வெளிநாடுகளிலிருந்தும் அரச பட்டறையில் திறமையான நெசவாளர்களை ஒன்றிணைத்தபோது, பட்டு நெசவுக் கலை நாட்டில் சிறந்த தரத்தை எட்டியது.


மற்றும் நிபுணத்துவம். பின்னர் அவர் இலாகூர், ஆக்ரா, முல்தான், ஃபதேபூர் சிக்ரி மற்றும் பல நகரங்களில் பிரபலமான நெசவு மையங்களை உருவாக்க கூடுதல் முயற்சி எடுத்தார்.

பஞ்சாபின் பட்டு அப்போது உலகப் புகழ் பெற்றது. லாகூர் மற்றும் முல்தான் பட்டுத் தொழிலின் மையமாக மாறியது, பாரம்பரியம் தொடர்கிறது.

இந்தியாவில், கர்நாடகா, யம்மு மற்றும் காசுமீர், மேற்கு வங்காளம், ஆந்திரப் பைதிரம்(பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 97% மூலப்பட்டு உற்பத்தி செய்கின்றன.


பண்டைய காலங்களில், அரச குடும்பங்கள் மற்றும் கோயில்களின் விலையுயர்ந்த துணிகளின் தேவைக்காக இராச்யத்தின் தலைநகரங்கள் மற்றும்  துாய(புனித) நகரங்களில் நெசவு மையங்கள் உருவாக்கப்பட்டன. அக்கால பணக்கார வணிகர்கள் இந்த துணிகளின் வளர்ச்சியில் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினர்.


பின்னர் பல்வேறு நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளின் சோதனைகள் பல்வேறு வகையான பட்டுகளை பெற்றெடுத்தன, அவற்றில் சில நகரத்தின் பெயரில் பிரபலமடைந்தன, அங்கு அது முதலில் தயாரிக்கப்பட்டது. சமீப காலங்களில் பிரபலமான சில பட்டுகள் கிச்சா, துசார், காதி, அர்னி, அசாம், சாந்தேரி மற்றும் பல.


பல இலட்சம் உரூபாய் பெறுமானமுள்ள பட்டு சேலைகள் முதல் சிலநூறு ரூபாய் உள்ள காட்டன் சேலைகள் வரை இந்தியாவில் தயாராகின்றன.


பட்டு என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவில் வருவது வாரணாசியும், காஞ்சிபுரமும்தான்.


பனாரசு சில்க் என்று அழைக்கப்படும் வாரணாசி பட்டு உயர்தரமான பட்டு நூலால் தயாரிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த தங்கத்தினால் செய்யப்பட்ட பல்வேறு விதமான புடவைகள்:

உத்தர பிரதேசத்திலிருந்து பனாரசி பட்டு புடவைகள்

இந்தப் புடவைகள் வாரணாசியில் தயார் செய்யப்படுபவை.


முன்னர் இதனை பனாசு(ஸ்) அல்லது பெனாரஸ்) என்று அழைப்பர். இந்த தனித்துவமான புடவைகள் அவற்றின் தங்க சரிகை(சருகை) மற்றும் அற்புதமான எம்பிராய்டரிக்கு பெயர் பெற்றவை. பொதுவாக இந்தப் புடவைகள் பட்டினால் நெய்யப்படுபவை. இவற்றில் வெளிப்படையான தங்க வேலைப்பாடுகள், உலோக விளைவுகள், வலைபின்னல் வடிவமைப்புகள், மீனாக்காரி வேலைப்பாடுகள் ஆகியவற்றுடன் பிரம்மாண்டமான புடவையாக நெய்யப்படுகிறது. மொகலாயர்கள் காலத்து வடிவங்களான பூக்கள், பூ தொடர்பான படங்கள், நிமிர்ந்து நிற்கும் இலைகள், சிறிய, விளக்கமான உருவங்கள் என்று பனாரஸ் புடவைகளில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.


தமிழ்நாட்டிலிருந்து காஞ்சிபுரம் பட்டுப் புடவை (மிகப்பிரபலமானது) 40 இலச்சம்வரை உரூபா விலையுள்ளது! உலகசாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


காஞ்சிபுரம் புடவைகள் என்று அழைக்கப்படும் இந்தப் புடவைகள் காஞ்சி நகரம் அல்லது காஞ்சிபுரத்திலிருந்து கிடைக்கின்றன. இந்த புடவைகள் மல்பெரி எனப்படும் பட்டுப்பூச்சிகளிலிருந்து கிடைக்கும் பட்டு நூலினால் நெய்யப்படுபவை. இதன் சரிகை வேலைப்பாடுகள் தங்க நூலினால் ஆனவை. காஞ்சிபுரம் புடவைகளின் முக்கிய அம்சம் இதுதான். பொதுவாக இதில் உடல் நிறத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டும் கரை (கான்ட்ராசுட் பார்டர்) இருக்கும். கட்டங்கள், நீளகோடுகள், பூக்களை அடிப்படையாக வைத்த ஓவியங்கள், பறவைகள், விலங்குகள் அல்லது கோவில் எல்லைப்புறங்கள் வடிவங்களாக நெய்யப்படும்.


தென்னிந்திய கோவில்களின் உருவங்கள், இராமாயணம் அல்லது மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்து இடம் பெறும் ஓவியங்கள், இராயா இரவி வர்மாவின் ஓவியங்கள் ஆகியவை சில புடவைகளில் வரையப்படும். இந்த கருத்துக்களை தங்க நூல்களினாலும் நெய்வார்கள்.


காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளின் முந்தானை அமைப்பு (டிசைன்) உலக அளவில் புகழ் பெற்றது. தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டு வரும் இந்த புடவைகள் கையால் நெய்யப்படுவதால் நல்ல தரமாக இருக்கும்.


உலகின் மிகவும் விலை அதிகமான புடவை என்று கின்னசு(ஸ்) உலகச்சாதனை புத்தகத்தில் ஒரு புடவை இடம்பெற்றுள்ளது. இந்த புடவை 8 கிலோ எடை கொண்டது. இதில் இராயா இரவி வர்மாவின் ஓவியங்களில் சிறந்த 11 ஓவியங்கள் நெய்யப்பெற்றுள்ளன. இதன் மதிப்புஉரூபா.40 இலட்சம் உரூபாயாகும்.


கேரளாவிலிருந்து கவசு


முண்டும் நெயிதும் என்று அழைக்கப்படும இந்தப் புடவை மிகவும் பழங்கால புடவையின் வடிவம். மகாபாரதத்தில் சகுந்தலை இந்தப் புடவையை நீவி பாணியில் அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. இராயா இரவி வர்மாவின் ஓவியங்களிலும் இந்தப் புடவையின் அமைப்பு தீட்டப்பட்டிருக்கிறது. இந்தப் புடவை காட்டனால் (பருத்தியால்) ஆனது. கையால் நெய்யப்படுவது. அசல் தங்கத்தினால் ஆன அகலமான சருகை பார்டர் கொண்டது. இதில் எளிய யியோமெட்ரிக்கல் வடிவங்கள் உள்ளன. சில சமயங்களில் இதில் மயில் அல்லது கோவில் வடிவங்களும் உண்டு.


மகாராச்டிராவிலிருந்து பைதானி


அவுரங்காபாத்தில், பைத்தானில் அசல் தங்க சருகையினால் நெய்யப்படும் இந்தப் புடவை, நாட்டிலேயே அதிகம் விலை கொண்ட புடவை என்று கூறப்படுகிறது.

இதில் ஒரு சதுர வடிவம், புள்ளியடப்பட்ட அல்லது தெளிவான பார்டர் இருக்கும். இதன் முந்தானைப் பகுதியில் (தோளுக்கு மேல் அணியப்படும் புடவையின் லேசான முனை) ஒரு மயில் வடிவமோ அல்லது கிளி வடிவமோ இருக்கும். இந்தப் புடவைகள் புத்தமத ஓவியங்களின் தாக்கம் பெற்றவை.


எனவே புத்தமத கலாச்சாரத்தில் உள்ள பல்வேறு குறியீடுகள் இந்தப் புடவைகளில் இடம்பெறும். சில சமயங்களில், பூக்கள் பூக்கும் செடி வைக்கப்பட்ட பூந்தொட்டி, பூக்கள் கருத்துக்கள், ஏணிப்படிகள், வடிகணித வடிவங்கள் ஆகியவை முந்தானையில் இடம்பெறும். இந்தப் புடவையில் பயன்படுத்தப்படும் தங்க நூல்கள் மிகவும் சிறந்த திறன் கொண்டவை. இது மிகவும் ஒளிமயமானது (பிரகாசமானது). எந்த அளவிற்கு என்றால் சமயத்தில் கண்ணாடியைப் போல் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.


அசாமிலிருந்து முகா


இந்தப் புடவையானது தங்க இழை என்று அழைக்கப்படும் முகாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இது ப்ளெயினாக இருக்கும். சில சமயங்களில் முந்தானையிலும் மற்ற பார்டர்களிலும் ஏதேனும் வடிவம் இடம்பெறும். இது மிகவும் நுட்பமான தெளிவான எம்பிராய்டர்ட் கொண்ட பூக்கள், இலைகள், அத்திப் பூக்கள், வடிகணித முறைகள், யானை வடிவங்கள் ஆகியவை கொண்டவை. இந்த பளபளக்கும் புடவைக்கு கண்ணாடி போன்ற தரம் உண்டு. ஒவ்வொரு முறை துவைக்கும்போதும் அது மின்னும். பண்டைய காலத்தில் முகா புடவைகள் இராஜ பரம்பரையினருக்குச் சொந்தமானவை என்று கருதப்படுகின்றன.


வங்காளத்திலிருந்து பாலுச்சாரி


பாலுச்சாரி புடவைகள் பட்டினால் ஆனவை. இதன் முந்தானையில் புராணக் கதைகள் வரையப்பட்டிருக்கும். மகாபாரதம் மற்றும் இராமாயணத்திலிருந்து பல்வேறு கதைகள் இதில் இடம்பெற்றிருக்கும். மொகலாயர் காலத்தின்போது, இதில் சதர வடிவங்கள் உள்ளன. இதில் பைசு(ஸ்)லி பூட்டா கருத்துக்கள் நெய்யப்பட்டுள்ளன. பெங்கால் நவாவின் வாழ்கை முறைகள் விவரிக்கப்பட்டிருக்கும். பிரிட்டிசாரின் காலத்தின்போது, கிழக்கிந்திய கம்பெனியில் பணி புரிந்த ஐரோப்பிய அதிகாரிகளின் படங்கள் கூட இந்தப் புடவைகளில் நெய்யப்பட்டது.

வரலாற்று ரீதியாக, ச(ய)மீந்தார் இல்லங்களில் வாழும் உயர்குடி பெண்கள் இந்தப் புடவையை அணிவார்கள். சு(ஸ்)வார்ணாசாரி என்ற வகையான பாலுச்சாரி புடவைகள் உண்டு.

இவை தங்க நூல்களால் நெய்யப்படுகின்றன. இதில் உள்ள தங்கமானது புடவையில் உள்ள வடிவங்களுக்கு வெளிச்சம் அளித்து அழகைக் கூட்டி காண்பிக்கின்றன.


ஒரிசாவின் `இக்கத்” சேலைகளில் அதிக கைவேலைபாடுகள் காணப்படுகின்றன. எம்ராய்டரி செய்யப்பட்ட இத்தகைய சேலைகள் பிரபலமானவை. இதில் ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டிருக்கும். காச்மீரின் மொசிதாபாத் சேலைகள், சைனா சில்க்கை போன்று இருக்கும். இதை `பெங்காலி சில்க்` என்றும் கூறுவர். காச்மீரின் பாரம்பரிய உடையான இதில் காச்மீர் டிசைன்கள் நிறை ந்திருக்கும்.


இராயசு(ஸ்)தான் மற்றும் குயராத்தில் `பாந்த்னி” சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் வெள்ளை நிற சேலைகளே அதிகமாக இருக்கும். அதில் நூல் வேலைபாடு செய்யபட்டிருக்கும். பாத்திக் வகை சேலைகளில் மெழுகு பயன்படுத்தபட்டிருக்கும். இந்த சேலைகளை அணிந்தால் வடஇந்தியத் தோற்றத்தைக் கொடுக்கும். குயராத் மாநிலத்தில் உள்ள சூரத் புடவைகளுக்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்கு கிடைக்கும் புடவைகள் சிறப்பு வாய்ந்தவை.


தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குயராத்தில் பாந்தினி, மகாராஷ்டா பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, பெங்காலில் பல்சுரி பட்டு என நகரத்திற்கு எற்றவாரு புடவைகள் இருக்கக்கூடும்.


கர்நாடகாவின் பன்கடி சேலைகள் விலை குறைவானவை. தினமும் பயன்படுத்தும் விதத்தில் இவை இருக்கும்.

ஆந்திராவின் போச்சம் பள்ளி சேலைகள் அதிக எடை கொண்டதாய் இருக்கும். அந்த அளவுக்கு கைவேலைப்பாடுகள் மிகுந்திருக்கும். மங்கல்கிரி சேலைகளும் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை சேலைகளில் பார்டர் டிசைனுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.


தமிழ்நாட்டில் கிடைக்கும் காஞ்சிபுரம் பட்டு போல கோயம்புத்தூர் காட்டன் சேலைகளும் பிரசித்தி பெற்றது. பினிஷிங் நன்றாக இருக்கும் சின்னாளம்பட்டி சுங்குடி புடவைகள் பெண் களின் தோற்றத்திற்கு தனி மதிப்பினை தரும்.


சக்கம்பட்டிச் சருகைச் சேலை


நூறு சதவீதம் பருத்தியினால் செய்த சேலை, பட்டுச்சேலை, ரேயான் சேலை, பாப்ளின் சேலை எனப்பலவிதத்தில் இன்று சேலை நெய்கின்றனர். இங்கு இவர்கள் நெய்யும் சுங்குடிச் சேலை மிகப்பிரபலம் ஆகும். சுங்குடிச் சேலையில் உள்ள சிறப்பு என்னவென்றால் மற்ற சேலைகள் கட்டும்போது மடிப்பு, கொசுவம் வைக்கச் சிரமப்படுகின்றனர். ஆனால் இங்கு நெய்யும் சுங்குடிச் சேலையை 8 மடக்கு மடக்கி கட்டினால் கூட அந்த மடிப்பு மடங்காமல் நிற்கும். அதை இடுப்பில் செருகவும் வசதியாக இருக்கும்.

இங்கும் நெய்யும் சேலையின் (பார்டர்) விளிம்பில் உள்ள பட்டை போன்ற பகுதியை எப்படிக் கசக்கினாலும் மடிப்புக் குலையாமல் இருக்கும்.


தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கைத்தறிப் புடைவகளும் அவைகள் தயாரிக்கப்படும் ஊர்களும்:-

காஞ்சிபுரம் - பட்டு புடவை

ஆரணி - பட்டு புடவை

சின்னாலம்பட்டி - சுங்குடி சேலை

நெகமம் - காட்டன் புடவைகள்

கோவை - காட்டன் புடவைகள்

சேலம் - கைத்தறி பட்டுப் புடவைகள் மற்றும் பட்டு வேஷ்டிகள்

இளம்பிள்ளை - கைத்தறி மற்றும் விசைத்தறி புடைவைகள்

சிறுமுகை - பட்டு புடவை

புஞ்சை புளியம்பட்டி, தொட்டம்பாளையம், அரசூர், சத்தியமங்கலம், சாவக்காட்டுபாளையம், ஆலாங்கொம்பு - கோரா காட்டன் மற்றும் சில்க் காட்டன் புடவைகள்

குத்தாம்பள்ளி - கேரளா - வேட்டிகள்

கொமாரபாளையம் - விசைத்தறி ஆடைகள்

பள்ளிபாளையம் - விசைத்தறி ஆடைகள்


சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு கைத்தறி (கோ-ஆஃப்டெக்ஸ்) தில்லையாடி வள்ளியம்மை நிறுவனம் புதியதாக மணமகன், மணமகள் உருவம் பொறிக்கப்பட்ட முகூர்த்த பட்டுச் சேலையை அறிமுகப்படுத்தியுள்ளது. நெசவாளி நெய்யக்கூடிய சேலை ஓவியம் போன்றது. பருத்தி சேலைகள், பட்டு சேலைகளில் "சரித்திரா'சேலைகள்” அதாவது தமிழ்நாட்டில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்களை காட்சிப்படுத்தி வடிவங்களை சேலைகளில் குறிப்பாக ஏழாம் நூற்றாண்டின் சித்தன்னவாசல் குகை ஓவியங்களை அடுத்து "இலக்கியா' என்று தமிழ் இலக்கியத்தில் சங்க கால இலக்கியங்கள் முதல் சமீபகால இலக்கியம் வரை காட்சிப்படுத்தி உருவாக்கி அதை போல் திருக்குறளையும் காட்சிப்படுத்தியுள்ளோம். இதில் குறளின் அடிகளுக்கு ஏற்ப உருவங்களை உருவாக்கி அதில் திருக்குறளையும் பொறித்து சமீபத்தில், "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்' போன்ற நாவல்களையும் காட்சிப்படுத்தி அடுத்து "கல்வியும்,காட்சியும்' என்று, விஞ்ஞானிகளும், அவர்களது கண்டுபிடிப்புகளும், அறிவியல் சார்ந்த விசயங்களும், வானில் உள்ள சூரிய குடும்பத்தின் கோள்களும் காட்சிப்படுத்தி இந்தவகையான கைத்தறி ஆடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.


உலகம் முழுவதும் சுமார் 108 வகையாக புடவையை உடுத்துகின்றனர்.

புடவை சற்று உடுத்த கடினமான உடை என்றாலும் அதன் மீது மக்களுக்கு அதீத ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் புடவையை பலவிதமாக இன்றைக்கு வடிவமைக்கின்றனர். புடவை உலக அரங்கில் சுமார் 38,000 கோடி வர்த்தக மதிப்பை கொண்டுள்ளது. இது இன்னும் 6 ஆண்டுகளில் 60,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சேலை மூன்று பகுதிகளை கொண்டது பாவாடை, இரவிக்கை அல்லது மாராப்பு, சீலை. இதை வடமேற்கில் லேஹெங்கா, காக்ரா மற்றும் சோலி என சொல்கின்றனர். சோலி அல்லது சீலையை வடமேற்கில் தலைக்கும் தெற்கில் தோளில் பல்லுவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிதான் 6-ம் நுற்றாண்டில் புடவையை வகைப்படுத்தி இருந்தனர்.


சேதுபதி விறலி விடு தூது (711 – 12) விரலி விடு தூது ஆடையான சேலை வகைகளைப் பற்றி அறிய துணை செய்கின்றது. கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது, அன்றைய பெண்கள் அணிந்த பல சேலைகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். இதில் விரிவாணம், வண்ணத்தார், முத்து வண்ணம், வர்ணம், உடை முழிச்சு, அருகுமணி, சல்லா, ஆள் எழுந்து, சந்திர காவி, கசு(ஸ்)தூரி, கொடி, சருகை, கம்பா, வரி கம்பி, சந்திரகாந்தம் ஆகிய பதினான்கு வகை சேலைகள் கூறப்பட்டுள்ளன. மேலும் பல வகை வண்ணச் சேலைகள் நெசவு அமைப்பு வகை உடைய சேலைகளும் கூறப்படுகின்றன. அவை ஆரஞ்சு, அரக்கு, பஞ்சவர்ணம், பாம்பு வர்ணம் ஆகிய வண்ணங்களில் சேலைகளை மகளிர் அணிந்துள்ளனர். நெசவு அமைப்பால் பட்டைக்கரை, அணக்குடி, சல்லா, அன்னக்கருக்கு, கெண்டை, சுற்றுக் கம்பி, கஞ்சத்துச் சல்லா, மயில் கண்ணு போன்ற பெயர்களில் சேலைகளும் இருந்துள்ளன என்பதையும் அறிய முடிகிறது.

உலகம் முழுவதும் பெண்களின் விருப்ப ஆடையாக இருந்து வருகிறது.


பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. புதியநாகரீகமாய் இருக்கும் பெண்கள்கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.


பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் புடவை தருகிறது.


இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சேலைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர்.

நாகரீக உடையை அணிவது போல ஐந்தரை மீட்டர் நீளமுள்ள புடவையை கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல.


ஒரு புடவை 84 விதங்களில் கட்டப்படலாம் என்று நிரூபிப்பதற்கு சிற்பக்கலை சான்றுகள் உள்ளன.


சேலையைப் போல உடல் முழுவதையும் சுற்றி அணியும் ஆடைபற்றிய முதல் குறிப்புகளை கி.மு 100 அளவில் காணமுடிகிறது.

சங்க ஆட்சிக் காலத்திற்குரிய (கி.மு 200- 50) ஒரு வட இந்திய சுடுமண்கலத்தில் ஒரு பெண் கச்சா பாணியில் உடல் முழுவதும் சேலையை இறுக்கமாகச் சுற்றியுள்ள காட்சி காணப்படுகிறது.

இந்திய காந்தார நாகரிகத்தில் (கி.மு 50 -கி.பி300) பல் வேறுபட்ட வகைகளில் சேலை சுற்றி அணியப்படும் முறை காணப்பட்டது.

கி.பி 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த மேற்கு மகாராச்ரத்தில் உள்ள அயந்தா குகை ஓவியங்களில் பெண் தெய்வங்களும் அசுரப் பெண்களும் உடல் முழுவதையும் சுற்றி சேலை அணிந்துள்ளதைக் காணலாம்.


கி .பி. 985-ல் தமிழகத்தில் இராசராச சோழன்காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்தது .தஞ்சைப் பெரியகோவிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில்மன்னர் இராயராயன் தன் மனைவியருடன் பட்டாடையில், நடராசரை வழிபடுவதான காட்சி இன்றளவும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.


நவீன தலைமுறையினருக்கு கூட சேலை இந்திய தேசிய அடையாளத்தின் ஒரு தனித்துவமான பகுதியாகும். குறிப்பாக, நிவி பாணி புடவை துணி உழைக்கும் பெண்கள் மத்தியில் சக்தி அலங்காரத்தின் ஒரு அடையாள அடையாளமாக மாறியுள்ளது. இது கடந்த காலத்தின் நிலையான பாரம்பரிய ஆடை மட்டுமல்ல, நவீன உடையாக உருவெடுத்துள்ளது. புடவை தொழில்முறை உலகில் ஒரு சக்திவாய்ந்த கருவியாக அணியப்படுகிறது.


இன்றைய இளைய தலைமுறையினர் இடையே எளிமை வசதி பாதுகாப்பு என்ற கண்ணோட்டங்களில் புடவையை தவிர மாற்று உடைகள் அணிவது பெரிய புடவை அணிவது அருகில் வருவது வருந்தத்தக்க செய்தி.

ஆயினும் உலக அரங்கில் புடவைகளுக்கு மிக உயரிய மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வருகிறது என்பதும் புடவைகளில் ஏராளமான வகைகள் புதிதாக தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் மறுக்க முடியாத வளர்ச்சியாகும்.


உலகபுடவைகள் நாள் உலகில் அறிமுகப்படுத்தியது ஓரு சிறந்த செயற்பாடு எனலாம் நன்றி.

பக்கம் · கல்லூரி & பல்கலைக்கழகம்

UTR ORGANIZ is a State & Central Govt. Registered but non-profitable Research Organization Which is

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.