குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2054

இன்று 2023, புரட்டாசி(கன்னி) 30 ம் திகதி சனிக் கிழமை .

பழந்தமிழ் இலக்கியங்களில் யாழ்ப்பாணத்து பேச்சு தமிழ்

03.08.2023 ............பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்க விற் பல யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வழக்குகள் யாழ்ப்பாணத்தவர் பண்டைத் தமிழின் சிறப் பியல்புகளைப் பேணி வந்தமைக்குச் சான்று பகருகின்றன. 

திரு. இலக்குமணன் செட்டியார் அவர்கள் 'வளருந் தமிழ்' என்னும் நூலில் 'தமிழ் மொழியின் தாய்மை உச்சரிப்பு இவைபற்றி யாழ்ப்பாணத்தார் அக்கறை கொண்டுள்ளனர்.

தாமாக மொழிக்கு மிகுதியாகப் பணி செய்யாவிட்டாலும், அவர்கள் பழமையைப் பாதுகாத்து வத்திருக்கின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார். யாழ்ப் பாணத் தமிழில் வழங்குஞ் செந்தமிழ்ச் சொற்களை ஆராய்வோம்.

பொழுது

'பொழுது' என்னும் பெயர்ச்சொல் 'நேரம், ஞாயிறு முத லிய பொருள்களில் வழங்குகிறது. குறுந்தொகையில் (161) 'பொழுதும் எல் இன்று' என்ற சொற்ருெடர் 'சூரியனும் விளக்கம் இலனாயின்ன் எனப் பொருள்படுகிறது. யாழ்ப்பாண மக்கள் ஞாயிறு மறைந்த நேரத்தினைப் 'பொழுதுபட்ட நேரம்' என்கின்றனர். மலைளத்தில் படிஞ்ஞாயிறு (படுஞாயிறு) என இக்கருத்து உணர்த்த்ப்படுகிறது

கொள்ளை

'கொள்ளை' என்னும் பெயர்ச்சொல் 'மிகுதி, கூட்டம், நோய், விலை, பயன்' எனப் பல கருத்துக்களை உணர்த்துகிறது.

நற்றி ப்ை பாடலொன்று முதிய நரி பசிய ஊனை மிகுதியாகத்தின்றதணை வருமாறு வருணிக்கிறது.

'முதுநீரி பச்சூன் கொள்ளை மாந்தி' (நற்றிணை: 352, 5-6)

நாம் பொருளொன்றனை விற்றுக் கூடிய இலாபத்தினைப் பெறுவதை 'கொள்ளை லாபம்' அடைவதாகக் கூறுகிறோம்.

பொருளொன்றனை மிகக் குறைந்த விலைக்குப் பெறுவதைக் கொள்ளை மலிவு' ஆகப் பெற்றது என்கிறோம்.

கொள்ளை மலிவு என்பதற்குப் பதிலாகக் 'குப்பை மலிவு' என்று சொல்வதும் உண்டு.

இந்த அரிசியிக்க ஒரு கொள்ளை கல்லுக் கிடக்கு போன்ற வழக்குகளிலும் 'கொள்ளை' *என்னும் பழந்தமிழ்ச் சொல் மிகுதிப் பொருளினை உணர்த்துவதைத் காணலாம்.

பையவியலிப் பாவையன்ன வென்னாய் தொடி மடந்தை (389,2-3) என வருணிக்கப்பட்டிருக்கிறது.

நாம் ஒருவர் உயரமான ஏணியிலிருந்தோ, படிக்கட்டிலிருந்தோ, வண்டியிலிருந்தோ இறங்கும் பொழுது பைய' (மெதுவாக) என அவர் நலங் கருதிக் கூறுகிறோம்

. இச்சொல் இரட்டித்து 'பையப்பைய' என வழங்குவதும் உண்டு. 'இப்ப என்ன அவசரம். பையப்பையப் பார்க்கலாம்' போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்கிறோம். '

ஆறுதல், மெது முத லிய சொற்கள் ‘ஆக. ஆய்" என்பவற்றுடன் கூட்டி 'ஆறுதலாக, மெதுவாக' என இப்பொருளில் வழங்கப்படுகிறது.

வாங்கல்

என்னுந் தொழிற் பெயர் 'வாங்கு' என்னும் வினையடியாகப் பிறக்கிறது. இது 'வளைத்தல், இழத்தல், ஏற்றல், விலைக்குக் கொள்ளுதல், ஒதுக்குதல்' எனப் பல பொருள்களில் வழங்கும்.

பெரும்பாணாற்றுப் படையில் ‘புலி குரல் மந்தம் ஒலிப்ப வாங்கி' (156) என வருகிறது.

நச்சினார்க்கினியர் இச்சொற்றொடர்க்குப் 'புலியினது முழக்கம் போலும் முழக்கத்தையுடைய மத்தை ஆரவாரிக்கும் படி அயிற்றை வலித்து' என உரை எழுதியுள்ளார்.

நாம் உறங்கும்பொழுது தலையினைப் பக்கம் மாறது உறங்குவோமாயின் நம் கழுத்து ஒரு பக்கத்திற்கு இழபட்டு வலிப்பு ஏற்படும். இவ்வாறு கழுத்து ஒரு பக்கம் இழக்கப்படுவதைக் 'கழுத்து வாங்கல்' என்கிறோம்

. திருவிழாக் காலங்களில் கோயில் தேர் வடத்தினைப் பற்றி இழப்பதையும் 'வடம் வாங்கல்' என' வழங்கு கிறோம்.

எனவே 'இழுத்தல்' என்னும் பொருளில் 'வாங்கல்' (வாங்கு +அல்) என் னுஞ் சொல் யாழ்ப்பாணத்தில் இன்றும் வழங்குகிறது.

'கிடக்கை' என்னுந் தொழிற் பெயர் 'கிட' என்னும் வினை யடியாகப் பிறக்கும். அது 'படுத்திருத்தல்' எனப் பொருள்படும்.

ஐங்குறு நூற்றில் இனிது மன்றவர் கிடக்கை * (409.3) என்ற சொற் றொடரில் 'கிடந்கை' என்னுஞ் சொல் 'கிடத்தல்' என்னும் பொரு ளில் வழங்க ப்பட்டிருக்கிறது.

நாம் ஒருவன் நோயினால் வருந்திக் கட்டிலிற் கிடந்து அல்லலுறுவதை 'ஒரே கிடங்கையாய். அல்லது கிடையாகிக் கிடக்கிறான்' என்று குறிப்பிடுகி.

முடை

'ஒருகால்' என்னும் வழக்கு 'ஒரு முறை, ஒரு வேளை, சில வேளை' ஆகிய பொருள்களில் வழங்கும்.

நாலடியார்ப் பாடலொன் றில் சென்றே எறிப ஒருகால்' (24) என வருகிறது.

இவ்வழக்கு யாழ்ப்பாணப் பேச்சில் 'ஒருக்கா என இடையில் ககரவொற்றுக் கூடியும் ஈற்றில் லகரவொற்றுக் கெட்டும் வழங்குகிறது. 'அவனை ஒருக்கா கூப்பிடு' போன்ற வழக்குகளை நோக்குக.

வெறுங்கை

யாழ்ப்பாணத்தவர் ஒருவர் இடருறின் அவர் இடரினைப் போக்கத் தம்மால் இயன்ற உதவியினைச் செய்வர்.

வெறுங்கையாக (ஒன்றும் இல்லாத கையுடன்) நோயாளி முதலியோரைப் பார்க்கச் செல்லமாட்டார். '

வெறுங்கை முழமிடுமா' என்னும் ஆழ்பொருள் பொதிந்த வாக்கியமும் அவரால் வழங்கப்படுகிறது. 'வெறுங்கை' என்பது 'வெறுமை +கை' என்பவற்றிலிருந்து பெறப்படுகிறது.

'வெறுமை' என்னும் பெயர் 'வறுமை' என்னும் பெயருடன் பொருளில் ஒத்திருக்கிறது

.

வெறுமையுடைய கையெனினும் வறுமை யுடைய கையெனினும் ஒக்கும். கோப்பெருஞ் சோழன் சிறுபறவை வேட்டையாடச் சென்று வறிய கையுடன் திரும்பும் வேட்டுவனைப் பற்றிப் பாடியுள்ளான்..

'குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே"

(புறநானூறு: 214, 5)

யாழ்ப்பாண வழக்காகிய 'வெறுங்கை' என்பது பண்டைய வழக்காகிய 'வறுங்கை' என்பதன் பொருளிலேயே வழங்குகிறது.

'வடிவு' என்னுஞ் சொல் 'அழகு' என்னும் பொருளில் 'வடிவுடை மலைமகள்' போன்ற தேவாரச் சொற்றொடர்களில் வழங் குகிறது.

யாழ்ப்பாணத்தில் இன்றும் இச்சொல் இப்பொருளில் வழங்கப்படுகிறது.

மிடறு

செந்தமிழ்ச் சொற்களுங் காலப்போக்கில் பொருள் மாற்றமடைவது உண்டு.

இம்மாற்றம் எழுத்து வழக்கைவிடப் பேச்சு வழக்கிற்றான் அதிகம் காணப்படுகிறது.

'மிடறு' என்னும் பெயர் 'கழுத்து, ஒலியெழும் கண்டவுறுப்பு, தொண்டை, கீழ்வாய்' முதலி கருத்துக்களை உணர்த்தும்

. ஆனால் அச்சொல் யாழ்ப்பாணத்தமி ழில் புதுப்பொருளினை உணர்த்துகிறது.

அத்மிழ்ப் பேச்சின் சொல் ஒரு வாய் கொண்ட திரவப் பொருளினைக் குறிக்கும்.

'நான்' ஒரு மிடறு கோப்பிகூடக் குடிக்கயில்லை' என்ற வழக்கில் '

மிடறு என்னும் பெயர் சிற்றளவு கொண்ட கோப்பியினைக் குறிக்கிறது.

ஞான்று கொண்டிருத்தல்:

'ஞான்று கொண்டிருத்தல்' அல்லது 'நான்று கொண்டிருத் தல்' என்றும் தொழிற் பெயர்.கழுத்தில் சுருக்கிட்டுக் கொள்ளுதலை குறிக்கும். 'ஞான்று கொள்வேனன்றி யாது செய்வேன்' என அருட் பாவில் இச்சொல் இப்பொருளில் வழங்குகிறது.

இச்சொல்லின் வினையடி 'ஞால்' அல்லது 'நால்' என்று கொள்வோம். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் 'ஞான்று கொண்டிருத்தல்' என்னும் வழக்கு 'நாண்டு கொண்டிருத்தல்' என ஒலியில் மாறி வழங்குகிறது.

னகர றசுரங்கள் மயங்கிவரின் ணகர டகரங்களாக மாறும் என்பதற்கு ஒன்று - ஒண்டு போன்றவை சான்றாகும்.

ஆனால் 'நாண்டுகொண்டுருத்தல்  என்னும் சொல் யாழ்ப்பாணத்தவரால்

' விடாப் பிடியாக ஒரு செயலைச் செய்யத் துணியும் நிலையினை வருணிப்பதற் குப் பயன்படுகிறது

. கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலையோ, கொலையோ பண்ணுதல் என்னும் பொருளில் அச்சொல் வழங்க வில்லை.

இதனை 'அந்தப் பொடியன் அவளைத்தான் கட்டுவனெண்டு நாண்டுகொண்டிருக்கிறான்' போன்ற வார்த்தைகளால் அறியலாம்.

இவ்வாறு செந்தமிழ்ச் சொற்களில் சில பேச்சுத் தமிழிற் புதுப் பொருளினை உணர்த்துகின்றன.

யாழ்ப்பாணத் தமிழில் மேலே காட்டிய சொற்களைவிட இன்னும் பல செந்தமிழ்ச் சொற்கள் வழங்கி வருகின்றன. அவற்றுட் பல தென்னிந்தியப் பேச்சுத் தமிழில் இல்லாமையை நாம் அறி வோம்.

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் பழந்தமிழின் சிறப்பியல்புகளை எவரும் பரக்கக் காணலாம்.

பல தென்னிந்தியப் பேச்சுத் தமிழில் இல்லாமையை நாம் அறிவோம்.

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் பழந்தமிழின் சிறப்பியல் புகளை எவரும் பரக்கக் காணவாம்.

ஒருபுடைச் சார்ந்து, நடுநிலையில் நின்று நோக்காதோரே அவ்வுண்மையை மறுப்பவர்.