குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்தியாவின் பல இசை வடிவங்களுக்கு ஆதி தமிழிசையே சான்று என நிறுவிய ஆபிரகாம் பண்டிதர் பி.பி.சி

கட்டுரை தகவல் எழுதியவர்,சிராச் , பிபிசி தமிழுக்காக2 ஆகசுட் 2023,புதுப்பிக்கப்பட்டது 2 ஆகசுட் 2023, இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிறுவிய தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.

பண்டிதர் என்ற பெயருக்கு ஏற்ப தமிழிசை, இயற்கை பயிர்த்தொழில்(விவசாயம்), சித்த மருத்துவம், புகைப்படத்துறை என பல்வேறு துறைகளில் வல்லவராக திகழ்ந்தவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசையை மீட்டெடுக்க 1910ம் ஆண்டு முதல் 1914ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தஞ்சையில் ஏழு தமிழிசை மாநாடுகளை நடத்தியவர். தஞ்சையில் இவரது பெயரில் ஒரு பிரதான சாலை உள்ளது.

பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் அழிந்து போன தமிழிசை தான், கர்நாடக இசையாகத் திரிந்து வந்துள்ளது என்பதை பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்தவர் ஆபிரகாம் பண்டிதர். தனது ஆராய்ச்சிகளை தொகுத்து “கர்ணாமிர்த சாகரம்” எனும் 1400 பக்கங்கள் கொண்ட நூலை 1917-இல் வெளியிட்டார் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை தொடர்பான ஆய்வுகளுக்கு இந்த நூல் ஒரு கலைக்களஞ்சியமாக விளங்கி வருகிறது.

இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிநிறுவியவர் தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.

பட மூலாதாரம்,குட்டி ரேவதி

படக்குறிப்பு,

தனது தமிழிசை குறித்த ஆராய்ச்சிகளை தொகுத்து “கர்ணாமிர்த சாகரம்” எனும் 1400 பக்கங்கள் கொண்ட நூலை 1917-இல் வெளியிட்டார் ஆபிரகாம் பண்டிதர்.


ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கையையும், அவரது ஆகச்சிறந்த நூலான “கர்ணாமிர்த சாகரத்தின்” சிறப்பையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் கவிஞர், திரைப்பட இயக்குனர் குட்டி ரேவதி. இசையமைப்பாளர் ஏ.ஆர்.இரகுமான் ஃபவுண்டேஷன் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஆபிரஹாம் பண்டிதர் குறித்த ஒரு ஆவணபடத்தையும் இயக்கியுள்ளார்.இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.


இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.

பட மூலாதாரம்,குட்டி ரேவதி

படக்குறிப்பு,

பண்டிதர் என்ற பெயருக்கு ஏற்ப தமிழிசை, இயற்கை விவசாயம், சித்த மருத்துவம், புகைப்படத்துறை என பல்வேறு துறைகளில் வல்லவராக திகழ்ந்தவர் ஆபிரகாம் பண்டிதர்.


சித்த மருத்துவத்திலும் நிபுணத்துவம்

ஆகஸ்ட் 2, 1859 ஆம் ஆண்டில் தென்காசிக்கு அருகில் உள்ள சாம்பவர் வடகரையில் பிறந்தார். இவரது பெற்றோர் முத்துச்சாமி மற்றும் அன்னம்மாள். திண்டுக்கல்லில் ஆசிரியர் படிப்பு முடித்து அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார்.


“நண்பர் ஒருவர், சுருளி மலையில் வாழ்ந்து வந்த கருணானந்த சித்தரிடம் பண்டிதரை அறிமுகப்படுத்துகினார். இந்த சந்திப்பே பண்டிதரின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது” எனக் கூறுகிறார் குட்டி இரேவதி.


கருணானந்த சித்தரிடமிருந்து பல்வேறு சித்த மருத்துவ முறைகளையும், நுணுக்கங்களையும் கற்று சித்த மருத்துவத்தில் ஒரு நிபுணராக மாறுகிறார் ஆபிரகாம் பண்டிதர். அக்காலத்தில் உலகை அச்சுறுத்திய பிளேக் போன்ற கொள்ளை நோய்களுக்கு சித்த மருந்துகளை தயாரித்து, அதை தபால் மூலமாக பிரிட்டிஷ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பியுள்ளார்.

"தமிழிசையில் இருந்து வந்தவையே இந்தியாவின் பல இசை வடிவங்கள்"

இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.


இறந்ததாக எண்ணியிருந்த தாயை 35 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மகன் -பஞ்சாபில் நெகிழ்ச்சி

 

"தமிழிசையில் இருந்து வந்தவையே இந்தியாவின் பல இசை வடிவங்கள்"

இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.

பட மூலாதாரம்,குட்டி ரேவதி

படக்குறிப்பு,

ஆபிரகாம் பண்டிதரின் 95 தமிழிசைப் பாடல்களை 'தமிழிசையை எளிதாக கற்றுக் கொள்ளுங்கள்' எனும் நூலாக ஏ.ஆர்.இரகுமான் வெளியிட்டுள்ளார்.இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.


கருணானந்த சித்தரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழிசை குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார் ஆபிரகாம் பண்டிதர். தனது இறுதி காலத்தின் பெரும்பகுதியை இதற்காக செலவிட்டு, தமிழிசையில் இருந்து வந்தவையே கர்நாடக இசை, இந்துஸ்தானி போன்ற இந்தியாவின் பிற இசை வடிவங்கள் என கண்டுபிடிக்கிறார். இதற்கான ஆதாரங்களாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களை முன்வைக்கிறார். 15 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பின் தன் ஆராய்ச்சிகளை தொகுத்து “கர்ணாமிர்த சாகரம்” எனும் நூலை வெளியிடுகிறார்”.


ஆபிரகாம் பண்டிதரின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ எனும் 95 தமிழிசைப் பாடல்கள் கொண்ட நூலை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில், ‘தமிழிசையை எளிதாக கற்றுக்கொள்ளுங்கள்’ எனும் புத்தகத்தை ஏ.ஆர்.இரகுமான் வெளியிட்டுள்ளார். இந்த 95 தமிழிசைப் பாடல்களையும் எழுதி இசையமைத்தவர் ஆபிரகாம் பண்டிதர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சையின் 'பண்டிதர் தோட்டம்'

இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.


இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.

பட மூலாதாரம்,குட்டி ரேவதி

படக்குறிப்பு,

1400 பக்கங்கள் கொண்ட பண்டிதரின் நூலை ஆவணப்படுத்த வேண்டுமென இசையமைப்பாளர் ஏ.ஆர்.இரகுமான் விரும்பியதால், அவரது தயாரிப்பில் ஆபிரகாம் பண்டிதர் குறித்த ஆவணப்படத்தை தான் இயக்கியுள்ளதாக குட்டி ரேவதி கூறுகிறார்.


1400 பக்கங்கள் கொண்ட இந்த நூலை ஆவணப்படுத்த வேண்டுமென இசையமைப்பாளர் ஏ.ஆர்.இரகுமான் விரும்பியதால், அவரது தயாரிப்பில் ஆபிரகாம் பண்டிதர் குறித்த ஆவணப்படத்தை தான் இயக்கியுள்ளதாக குட்டி ரேவதி கூறுகிறார்.


“சாதி, மதத் தீண்டாமைகளால் மறைக்கப்பட்ட தமிழர்களின் பெருமைகளை மீட்டெடுத்தவர்களில் முதன்மையானவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை குறித்து ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாது, நாதசுவரம், வீணை, ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகளையும் வாசிப்பதில் வித்தகர்.” என்கிறார் குட்டி ரேவதி.


தஞ்சையின் 'பண்டிதர் தோட்டம்'

இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.

பட மூலாதாரம்,குட்டி ரேவதி

படக்குறிப்பு,

தமிழிசையை மீட்டெடுக்க 1910ம் ஆண்டு முதல் 1914ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தஞ்சையில் ஏழு தமிழிசை மாநாடுகளை அபிரகாம் பண்டிதர் நடத்தினார்.


சித்த மருத்துவத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தஞ்சையில் 100 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய தோட்டத்தை உருவாக்கி அங்கு பல சித்த மருத்துவ பயிர்களையும், அழிந்து போன நெல், கரும்பு இரகங்களையும் பயிர் செய்துள்ளார். கருணானந்தபுரம் என பெயரிடப்பட்ட அந்த தோட்டத்தை 'பண்டிதர் தோட்டம்' என்றே மக்கள் அழைத்தனர். பயிர்செய்கையில் இவர் செய்த சாதனைகளுக்காக இங்கிலாந்து(பிரிட்டிச்) அரசாங்கம் ராவ் பகதூர் என்ற பட்டத்தை அளித்தது.


தமிழிசை,பயிர்ச்சசெய்கை( விவசாயம்), சித்த மருத்துவம், என பல துறைகளில் சிறந்து விளங்கிய ஆபிரகாம் பண்டிதர் ஆகத்து 31, 1919 ஆம் ஆண்டு தனது 60-வது வயதில் மறைந்தார்.


“தமிழிசையின் தந்தையான ஆபிரகாம் பண்டிதர் குறித்து உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே எங்கள் ஆசை. அவர் பிறந்த, இறந்த ஆகத்து மாதத்தை தமிழிசை மாதமாக கொண்டாட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்று தெரிவித்தார் குட்டி ரேவதி.


"இசைக்கு அறிவியல் அடிப்படை மிகவும் முக்கியம்"

 

இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.

இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.

பட மூலாதாரம்,அமுதா பாண்டியன்

படக்குறிப்பு,

தமிழிசை குறித்த பண்டிதரின் ஆய்வுகளை படித்தால் அவை ஒரு விஞ்ஞானியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது போல இருக்கும்” எனக் கூறுகிறார் அமுதா பாண்டியன்.


“எந்தவொரு இசை வடிவத்திற்கும் அறிவியல் அடிப்படை மிகவும் முக்கியமானது என ஆபிரகாம் பண்டிதர் உறுதியாக நம்பினார். தமிழிசை குறித்த அவரது ஆய்வுகளை படித்தால் அவை ஒரு விஞ்ஞானியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது போல இருக்கும்” எனக் கூறுகிறார் அமுதா பாண்டியன். ஆபிரகாம் பண்டிதரின் குடும்பத்தை சேர்ந்த இவர், நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


அவர் தொடர்ந்து பேசுகையில் “தமிழிசையில்‌ ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்ற நான்கு இசைமுறைகள்‌ இருந்தன என்பதை வகைப்படுத்தி சூத்திரங்களின்‌ ஆதாரத்தோடு முதன்முதலாக நிலை நிறுத்திய பெருமை தஞ்சை ஆபிரகாம்‌ பண்டிதர்‌ அவர்களையே சாரும்‌” என்கிறார் அமுதா பாண்டியன்.


தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் குழுமம் ரூ.1,600 கோடி முதலீடு செய்வதில் சர்ச்சை ஏன்? உண்மை என்ன?

8 மணி நேரங்களுக்கு முன்னர்

சிலப்பதிகாரம் கூறும் வட்டப்பாலை முறையில் ஏழ்பெரும் பாலைகளை அமைத்து, அதை நிறுவினார் பண்டிதர். தமிழிசை குறித்த தனது ஆய்வின் மூலமாக சுத்த மத்திம ராகங்கள் 16, பிரதி மத்திம ராகங்கள் 16, எனவே 32 ராகங்கள் தான் தகுதி படைத்த ராகங்கள் எனவும், ஏழு சுவரங்கள் 12 சுரத் தாளங்களுள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வீதம் சுருதிகளின் எண்ணிக்கை 22 அல்ல மொத்தம் 24, எனவே மொத்தம் 24 சுர முறைகள் என நிறுவினார்.


அந்நிய மொழிகளில் பொருள் புரியாமல் நாம் கேட்கும் இசையை, தமிழில் பொருள் அறிந்து இசையை ரசிக்க வேண்டுமென விரும்பியவர் பண்டிதர் . ஆபிரகாம் பண்டிதர் செய்த ஆய்வுகளும் அவரது சாதனைகளையும் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதால் பள்ளி பாடத்திட்டங்களில் ஆபிரகாம் பண்டிதர் குறித்த தகவல்களை இடம்பெறச் செய்ய வேண்டுமென அமுதா பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.