16.05.2023....குமரிநாடு.கொம் இடைசெருகலாக ஒரு கருத்தை முன்மொழிகின்றது. சீக்கியர் தலப்பாகை, தலைமுடிதாடி,கத்தி உரிமை போன்று தமிழ்நாட்டுக்கு ஆளுனராக வருபவர் தமிழ்மொழியை மதிப்பவராகவும் தமிழ்மொழி பேசக்கூடியவராகவும் தமிழை வாசித்து அறியக்கூடியவராகவும் இருக்கவேண்டும் என்ற சிறப்புரிமையைப்பெறவேண்டும் சட்டரீதியாக.(தமிழ்நாடு என்று பெயர் பெற்றுக்கொண்டதுபோல்.)தமிழ் மொழியையும், சமசுகிருத மொழியையும் பழமையான மொழிகள் என்று கூறுவார்கள். தமிழ் மொழியில் இருந்து சமசுகிருதத்துக்கு பல சொற்கள் வந்துள்ளன.
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்கிற திட்டத்தின் கீழ் மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பீகார் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.இரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாரத நாடு என்பது கலாச்சாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் உருவானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது உருவாகி விட்டது. பாரதம் என்பது 1947-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக பலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அது தவறாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் உருவாகி விட்டது.
இதையும் படியுங்கள்: அ.தி.மு.க.வின் வலிமை பா.ய.க.விற்கு விரைவில் தெரியும்-மா.பா.பாண்டியராயன் தமிழ் மொழியையும், சமசுகிருத மொழியையும் பழமையான மொழிகள் என்று கூறுவார்கள். ஆனால் இதில் எது பழமையான மொழி என்பதற்கு தற்போது விடையும், முடிவும் கிடைக்காமலேயே உள்ளது. இதன் மூலம் பழமையான மொழி சமசுகிருதமா? இல்லை தமிழா? என்கிற விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராயாக்கள் ஆண்ட காலத்தில் இருந்தே யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம் என்கிற சூழல் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் தமிழ் மொழியில் இருந்து சமஸ்கிருதத்துக்கு பல சொற்கள் வந்துள்ளன. அதே போல சமசுகிருதத்தில் இருந்து தமிழுக்கும் பல்வேறு சொற்கள் வந்துள்ளன. இவ்வாறு கவர்னர் ஆர்.என்.இரவி பேசியுள்ளார். தமிழ்நாடு பற்றி கவர்னர் ஆர்.என்.இரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில்தான் இன்று கவர்னர் ஆர்.என்.இரவி பழமையான மொழி சமசுகிருதமா? தமிழா? என்கிற ரீதியில் கருத்துக்களை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.