குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆனி(இரட்டை) 22 ம் திகதி சனிக் கிழமை .

தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்!

07.04.2023.....தமிழ் மொழி வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்க வழி வகை செய்யப்ட்டு உள்ளது.

வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும். தொலை தூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினி வழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.

இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் பெறவியலும். மொழியின் அடிப்படைத்திறன்களானக் கேட்டல், பேசுதல், எழுதுதல், படித்தல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களானக் கதை, கட்டுரை, செய்யுள், பாடல், கடிதம் சுருக்கி வரைதல் விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதித் தேடல் என அனைத்தையும் இணையம் வாயிலாகக் கற்க இயலும். உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் தமிழ் அறிய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.

உலகளாவிய இணைய வலையின் ஒரு சிறு பகுதி

யே(ஜே).சி.ஆர். லிக்லைடர் இணையத் தந்தையாக அறியப்படுகிறார். இணையம் என்பதன் தமிழ்ச்சொல்லாகும் இணையம் எனப்படுவது பல கணினிகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதாகும்.

தமிழும் இணையமும்

தமிழும் இணையமும்:

பல உள்ளடக்கங்களைக் இணையச் செயல்பாடுகளைக் கொண்டு உள்ளது.

இணையம் ஒர்அறிமுகம், இணையத்தின் வரலாறு, கணினியில் இணையத்தில் தமிழ்

தமிழ் இணையம்,மாநாடு, கருத்தரங்கம், இணையத்தின் தமிழின் பயன்பாடு

இணையத்தின் தமிழ்க்கல்வி, தமிழ் மின் இதழ்கள், இணைத்தில் தமிழ் மின் நூலகம்

இணையம் கணினி வழி ஆய்வுகள், இணையம் அகராதி, இணையத் தமிழ் இதழ்களின் முகவரி உலகில் நடைபெற்றத் தமிழ் இணையம் தொடர்பான நடைபெற்ற மாநாடுகள் கருத்தரங்குகள் குறித்த தகவல்கள் தரப்பட்டு உள்ளன.


ஏன் தமிழ் இணையம் தேவை?


‘தகவல் அறிவது அறிவின் வளர்ச்சி’.


‘உலகம் இணையத்தால் இணைக்கப்படுகிறது.’


ஆங்காங்கு ஆங்கில மொழி அறிவு அணித்திரட்டாக ஒருங்கிணைந்து உள்ளது.


தமிழ் தரவு இணைப்பு தாராளமாக இணைக்க,தரணி எங்கும் தமிழ் மொழிச் சொற்கள்

சரளமாக பரவ தமிழ் மொழி இணையத்திலும் நமது பங்கை தரமாக,

வழங்குவோமே.


செய்திதாள்கள் இணைய வெளியீடு, கற்றல் கல்விநிலைய இணையத்தில்,

வியாபாரத்தில்,விசாலாமாக வணிகப் பெருக்கம்,அலைப் பேசியும் அனைவரின் கையிலும்,நூலகமும் கையடக்கத்தில்,பொழுது போக்கும் போகும் இடமெல்லாம்

பரவி வருகிறது.


கடலுக்கு அடியில் இருந்த கண்டம் கண்ணெதிரே,

நாற்சுவர் நாகரிகமும்

நாண்மாடக்கூடல் நகரத்தில்,நாகரிகத்தில் கீழே தள்ளப்பட்ட கால வரிசை,

கீழடியில் காண்கையில் மேலும் தமிழ் மொழி உலக மொழிகளுக்குள் தரமான

மொழியாகிறது.

தமிழ் இலக்கிய மொழி இலக்கியங்களில்,தன்னிகரற்ற மொழியாகிறது.

‘உலக வரைப்படத்தில்,தென்னக பாரதமும் தெளிவுள்ள மனித தடத்தை பதிந்திருக்கிறது’ என மனித இன வரலாற்று இணையும் கோடுகள்காணொலியில் கண்ணார காண்கிறோம்.

கணினியும், இணையமும் இயற்கை பகுப்பு மொழி ஆய்வில் ஆட்களின் தேவையும் அறிகின்றோம்.

கறையான் அரித்த ஏட்டுச் சுவடுகளும்,காகிதத்தில் ஏறாமல் கணினி,எணினியில் வலம்

வர முயற்சிப்போமே!

‘தமிழோடு தொடர்பு கொள்ள பல்வேறு இணையத்தளங்கள் தொழில் நுட்ப அறிவுச் செறிவைநோக்கி சாதிக்க முடியும் ‘என தமிழ் தரவுச் சொற்கள் பல வலையத்திலும் இணைகின்றன.


மதுரையிலே மதுரைத்திட்டம், இலக்கியத் தொகுப்பை மின் பதிப்பாகிறது.

தஞ்சையிலே ஒலைச்சுவடிகள் பல,இணையத்தின் தொழில் நுட்ப வரவுக்காக

காத்திருக்கிறது.

தமிழ் இணையக் கல்விக்கழகம், இணையநூல்களும் இணைந்து

செயல்பட இணைவுக்கு காத்து உள்ளது. www.tamilvu.org.

இலக்கியச் சொற்கள் பல தமிழ்சொற்குவைக் கூட்டஇணைய இணைவிற்கு

இணைந்து இருக்கிறது.

தேடு பொறியில் திருக்குறளில் ஏதாவதுஒரு சொல் கொடுத்தால் அந்த சொல் எந்தெந்த இடங்களில் வரும் என அறியும் இணையதளம் காண்போம்,

இணையதளங்களில்.சொற்கள் குவியல்,குவியலாக சொற்குவை

இணையத்தளத்தில் அறிவோம்.

www.sorkuvai.com எணினி நூலகத் தளத்தில்

சிறுகதைகள், நாவல்களைப் படிக்க முடியும்.

பழைய இலக்கிய நூல்களை இத்தளத்தில் படிக்க முடியும்.தமிழ் மரபுகளை அறியஓரு இணையத்தளம்ஓலைச்சுவடிகளைமின்வடிவில் தர முயற்சி நடைபெறுகிறது.

பல இணைய இதழ்களும் தமிழ் மொழியிலும் காணலாம்.

வலைத் தமிழ் இணையம்,பி.பி.சி தமிழ் இணைய இதழ் கவிதைகளை வழங்குகின்றது.

செய்திகளை மட்டும் வழங்கும் தமிழ் இணையத்தளங்களும் உள்ளன.

தமிழ்.காம், எம்.எஸ்.என். தமிழ்.காம் முதலானவை இதில் அடங்கும்.

தமிழ் இணையப்பரப்பில் வலைப் பூக்கள் பிளாக்கர்களும் மிகச் சிறந்த இடத்தைப் பெறுகிறது.


தமிழ் இலக்கியப் பாடல்களும் இன்னிசையோடு தரும் இணையத்தளங்களும் உள்ளன.

தமிழ், ஆங்கிலப் பேச்சு மாறி ஒலித்து அந்தந்த மொழிக்கு ஏற்ப மாற்றி அமைக்க உதவுகிறது.

தருவோம் தரமான படைப்புகளை,தமிழ் மொழியிலும் இணையத்தில் இணைவோம்.


முடிவுரை:

தமிழ் இரு எழுத்துக்களில் இரு அடிப்படை சொற்களை உருவாக்கி, அந்த எழுத்துக்களில் கணினி, எணினி, இணையம் போன்ற தற்கால தொழில்நுட்ப செயலாக்கத்திற்கேற்ப பல சொற்களை இந்த கட்டுரையில் பதிந்து உள்ளது.


உசாத்துணை :


1. தமிழ் இணைய கல்வி கழகம்


2. தமிழ் பல்கலை கழகம், தஞ்சாவூர்,


3. உலக தமிழ் இணைய கருத்தரங்க மாநாடு


4. பல தற்கால, அக்கால இணைய பதிவேடுகள்.


5. சொற்குவை இணையம்.