குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆனி(இரட்டை) 22 ம் திகதி சனிக் கிழமை .

இணையத்தளத்தின் வரலாறு, இணையம்:

இணையம்: 07.04.2023....இணையம் என்பதற்கு வித்திட்டவர் ய(ஜ)தன் பாசு(ஸ்)டல் என்னும் அமெரிக்கர் ஆவார். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது.ஒரே நேரத்தில் பல இணைப்புகளை தொடர்புபடுத்தி இணையாக, இயல்பாக பார்க்க தொகுக்கப்படுவதால் இணையம் என்ற சொல் அமைந்து உள்ளது.

உலகெங்கும் வலையமாக அமைவதால் உலகில் அகண்ட வலையக் கற்றைகளில் மூலம் காணலாம்.

இலக்கியம், அறிவியல், புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகள் அறிய முடிகிறது.

கடந்த இருபதாண்டுக் கணினிப் பயன்பாட்டில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது.

இந்த உலகம் முழுமையான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர் 1989ஆம் ஆண்டு இணையத்தளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப் பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம்.

இவ்வையக வலைப்பின்னல் பல செய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.

இணையத்தளத்தின் வரலாறு

கணினியுடன் இணைத்தள இணைப்பு படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960ஆம் ஆண்டில் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற

மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர்.

இது மிகுந்த காலச்செலவை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க தூய வெளி வலை (ஈதர் நெட்) அட்டை என்னும் சிறு பலகைப் பொருத்திப் பயன்படுத்தினர்.

இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது.

இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது.

முழுமையான இணைப்பைப் பெறச் செயற்கைக் கோள் வழியாகப் பயன்படுத்திப்

புவியைச் சுற்றி நாடுகளின் மீது வலம்வரும் விண்வெளிக்கலன்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமையானவலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.