குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர்.

07.04.2023....தமிழ் மொழி இயல்பாக எண்ணற்ற மென் பொருள்களை உருவாக்கி வருகின்றனர் எடுத்துக்காட் டாக தரவுகளைக் சேகரித்து அத்தரவுகளின் மூலம் மொழிப் பெயர்ப்பு செய்யவும், இலக்கணத்தை உட்புகுத்தி எழுத்து, சொல், பொருள், வாக்கியம் போன்றவை கண்டறிவதற்கும் கணினித் தமிழ் ஆய்வுகள் ஆராய்ந்து வருகின்றனர்.

தொன்மைக் கால ஆவணங்களைக் கணினியின் துணைக்கொண்டு முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் மொழி ஆய்வு வளர்ச்சியில் சொல்லுருபு பிழைத்திருத்தி,

வாக்கிய அமைப்பு பிழைத்திருத்தி, இலக்கணப்பிழைத்திருத்தி போன்ற மென்பொருள்கள் வெளிவந்துள்ளன.

மக்கள் பேசும் மொழிக்கும் கணினித் தெரிந்து கொள்ளும் மொழிக்கும் வேறுபாடு உண்டு.

கணினிக்கு தெரிந்த மொழி சுழியம்(பூச்சியம்(0)), ஒன்று (1)

இந்த இரண்டைத் தவிர வேறொன்றும் அதற்கு தெரியாது.


எந்த ஒரு மொழியில் எழுத்துக்கள் குறைந்துள்ளதோ அம்மொழி கணினியில்

முதன்மை இடமாக வகிக்கின்றது.


தமிழ் எழுத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு தேவைப்படுகிறது.

ஆங்கில எழுத்துகளைவிட குறைவானதாக நம் தமிழ் மொழி இருக்கிறது.

ஆனாலும் நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர்.

அதனால்தான் தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம் பின்தங்கியே கிடக்கிறோம்.

கணினி பயன்பாட்டிற்கு தமிழ் எழுத்தான உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, ஆய்த எழுத்து 1 எண்கள் 10 எழுத்துகள் குறியீடு 30 ஆக மொத்தம் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு நிரல்நிரை செய்வதற்குத் தேவைப்படுகிறது.