07.04.2023....கணிப்பான், கணிப்பொறி என்ற இந்த சிறு பொறி(இயந்திரம்) கணக்குகளை கச்சிதமாக கணக்கிடும் பொறி ஆகும்.கற்றலில் கணினி தற்பொழுது பெருவாரியாக பங்களிக்கிறது. கற்பித்தலுக்கு தேவையான கணினி சொற்றொடர்கள் பிற மொழி, குறிப்பாக, ஆங்கில மொழியில் பயன்பாட்டில் இருந்த போதும், தமிழ் மொழி சொல் ஆக்கமும் இன்றியமையாத ஒன்றாகிறது.
கணினி என்பது முறைப்படியான தரவுகளை கோர்வையாக செயல்படுத்தும் ஓர் கருவி ஆகும்.
கணினியில், பெருமுகக் கணினி, குறுமுக கணினி, நுண்கணினி, சொந்த கணினி, மீத்திறன் கணினி, மேசைக் கணினி, கையேட்டுக் கணினி, மடிக்கணினி,
வரைபட்டிகை கணினி, உள்ளங்கை கணினி என பயன்பாட்டிற்கு தக்கவாறு அமைந்து உள்ளது.
மென்பொருள்:
மென் பொருள் என்பது கணிப் பொறி நிரல்கள் மற்றும் கணிப் பொறிகளால் படிக்கவும், எழுதப்பட முடிகின்ற தரவுகளால் சேர்க்கப்படும் ஓர் சொல் ஆகும்.
மென்பொருள் இலக்க முறையில் நிரலாக்கப்பட்ட மொழிகளால், உரை ஆக்க மொழிகளால் பரந்த அளவிலான தயாரிப்புகளை உள்ளடக்கியது.
மென்பொருள், சாதன இயக்கிகள், இயங்கு தளம், சேவை இணைப்பு தளம், பயனீடுகள், பொறி செயல்முறையை உள்ளடக்கியதாக இருக்கும்.