குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

ஈழத்து வரலாறும் தொல்லியலும் , ஈழம் = பூநகரி ?

05.03.2023....மண்ணித்தலையிலே கிடைத்த இரண்டு மட்பாண்டச் சாசனங்கள் இப்பிராந்திய வரலாற்றாய்வில் மட்டுமன்றி ஈழத்தமிழர் வரலாறு பற் றிய ஆய்விலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது.இவ்விருசாசனங் களும் கிறிசு(ஸ்)துவுக்கு முற்பட்ட காலத்திற்குரியவை என்பதை இவற் றின் எழுத்தமைதி கொண்டு கணிப்பிட முடிகிறது. இவற்றுள் இரண்டு எழுத்துக்களை உடைய முதலாவது சாசனம் உடைந்த நிலையிலே காணப்பட்டாலும் இரு எழுத்துக்களுக்கும் இடையிலான இடைவெளியை நோக்கும் போது வேறு எழுத்துக்கள் இம்மட்பாண்டத்தில் இருந் திருக்கலாம் போலத் தெரியவில்லை. இதனால் இதையொரு முழுச்சானமாகக் கொள்ள முடிகிறது இதன் முதலாவது எழுத்திற்கு 'ஈ' என்ற ஒலிப்பெறுமானமும் இரண்டாவது எழுத்திற்கு 'ல' என்ற ஒலிப்பெறுமானமும் கொடுத்து 'ஈல' அல்லது 'ஈலெ' என வாசிக் கலாம்.48

இங்கு கிடைத்த இரண்டாவது சாசனத் தில் மூன்று எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதன் முதல் எழுத்திற்கு 'ஈ' என்ற ஒலிப்பெறு மானமும் என்ற இரண்டாவது எழுத்திற்கு 'ழ', ஒலிப்பெறுமானமும் கொடுத்து ஈழ என வாசிக்க லாம்போல் தெரிகின்றது. மூன்றாவது எழுத்து சிறு கோடு ஒன்றை மட்டும் கொண்டிருப்பதால் அவ்வெழுத்து என்ன என்பதைக் கூறமுடியாதி ருக்கிறது. இவ்விரு சாசனங்களில் வரும் பெயர் களை நோக்கும்போது இவை இலங்கையின் புராதன பெயரான ஈழத்தையே குறிப்பதாகத் கொள்ளலாம். அக்கால உள்நாட்டு, வெளி நாட்டு வர்த்தகத்திலே பொருட்களின் கொள் கலன்களாக மட்பாண்டங்கள் பயன்படுத்தப் பெற்றதால் அப்பொருட்களுக்குரிய நாடுகளின் பெயரைக் குறிக்கக் கொள்கலன்களில் நாடு களின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்,

ஈலா என்ற வாசகம் கொண்ட மட்பாண்ட பிராமிச் சாசனம்:

இதையே இங்கு கிடைத்த இரு சாசனங்களும் உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது.

ஆதிகாலத்தில் இலங்கை ஈழம் என அழைக கப்பட்டதற்கான சான்றுகள் தமிழ்நாடு திருப் பெருங்குன்றம் பிராமிக் கல்வெட்டிலும், 49 சங்க இலக்கியத்திலும் 50 காணப்படுகின்றன. இந்த ஈழம் சில இடங்களில் முழு இலங்கையை யும் பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் ஒரு பாகத்தையும் குறித்து நின்றது. ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய உதயணன் பெருங்கதையிலும், பிற்பட்ட நன்னூல் மயிலைநாதர் உரை யிலும் இந்நாடு ஈழம், சிங்களம், இலங்கை என வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளது.  அதாவது ஒரே வரலாற்று மூலத்தில் ஓரினத்தின் பெயராலே சிங்களநாடு கூறப்பட்டு அதே வரலாற்று மூலத் தில் ஈழம் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது பிற் பட்ட பாண்டிய கல்வெட்டில் இந்த ஈழம் வட இலங்கையையும். விஜயநகரக் கல்வெட்டில் யாழ்ப்பாணத்தையும் குறிக்கப் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களில் மட்டும் வரும் இந்த ஈழம் பற்றிய குறிப்பு பிற இலங்கை வரலாற்று மூலங்கள் எவற்றிலுமே காணப்படவில்லை. இலங்கை யைக் குறிக்க வெளிநாட்டு இலக்கியங்களில் வரும்மறுபெயர்களான லங்கா, தக்பன்னி இரத்தின தீரம் போன்ற பெயர்களை உறுதிப்படுத்தும் பாளி, சிங்கள இலக்கியங்கள் தமிழ்நாட்டு வர

படம்-34. வேள் என்ற வாசகம் கொண்ட மட்பாண்ட பிராமிச் சாசனம்

லாற்று மூலங்களில் வரும் ஈழம் பற்றிக் கூறா திருப்பது வியப்டாக உள்ளது. இது பண்பாட் டால் வேறு பிராந்தியமாக இருந்ததா என எண் ணத் தோன்றுகிறது. வரலாற்று அறிஞர்கள் ஈழம் என்ற சொல்லுக்கு 'கள்' என்ற பொருள் இருப்பதனால் இது பனைவளம் நிரம்பிய வட இலங்கையை ஆதியிலே குறித்திருக்கலாமெனக் கருதுகின்றனர். இந்நிலையிலே பூநகரியில் இது தொடர்பான சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட் டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ்வீழம் தொடர்பான சான்றுகள் பூநகரிப் பிராந்தியத்திலே பிற்காலத்திலே தொடர்ந்தும் இருப்பதற்கு மேலும் சில ஆதாரங்கள் உள் ளன. இன்று வேரவில் என அழைக்கப்படும் கிராமம் முன்பு ஈழவூர் எனவும், இதற்கு அருகிலே உள்ள கடற்கரைத்துறைமுகம் ஈழவன் குடா எனவும் அழைக்கப்பட்டு வந்ததை ஓலைச்சுவடி களில் இருந்து அறிய முடிகின்றது. 16 ஆம் நூற் றாண்டிலே போர்த்துக்கேயர் இந்த ஈழவூரில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் கட்டியதாக போலோரினிடாரோ தமது நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடங்களை அண்டியே சோழ ரோடு தொடர்புடைய பல்வராயன்சுட்டு. பாண்டியரோடு தொடர்புடைய வீரபாண்டி யன்முனை ஆகிய இடங்கள் உள்ளன. இந்த ஈழவூர் பாரம்பரியமான வரலாறு கொண்ட கிராமம் என்பதை முன்பு குறிப்பிட்ட ஆதிக் குடியிருப்புக்களுக்குரிய சான்றுகள் உறுதிப் படுத்துகின்றன. இச்சான்றுகளை நோக்கும் போது தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களிலே வரும் ஈழம் பற்றிய நாட்டுப்பெயர் அதற்கு எதிரே உள்ள பூநகரியிலே பெருமளவு புழக்கத் திலே இருந்ததெனக் கூறலாம். தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களில் ஈழத்தைச் சேர்ந்த வணிகர் சிலர் அங்குள்ள சமண, பௌத்தத் துற விகளுக்குத் தானம் அளித்தது பற்றிக் கூறப் படுகின்றது. அங்குள்ள சுருங்காலக்குடி பிரா மிச் சாசனம் ஒன்று ஏழையூரைச்சேர்ந்த அரி தன் பற்றிக் கூறுகிறது. இந்த ஏழையூரை ஈழையூராகவும் சிலர் கொள்வர். ஆனால் தமிழ் நாட்டில் ஏழையூர் அல்லது ஈழையூர் என்ற பெயரில் ஓரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் இவ்வூரைப் பூநகரி ஈழவூருடனும் தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு: சங்க காலப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதந் தேவனார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது வரலாற்று அறிஞர்கள் பலரால் ஏற்றுக்கொள் ளப்பட்ட உண்மையாகும். ஆனால் இவர் இலங் கையில் எவ்விடத்தைச் சேர்ந்தவர் என்பதை நிச்சயமாகக் கூறமுடியவில்லை. அண்மையில் வேலுப்பிள்ளை இவரின் சொந்த இடம் பண்டு வஸ்நுவரையாக (தென்னிலங்கை) இருக்கலாம். எனக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் பூநகரி யிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் மொழி உபயோகம் இருந்ததற்கான சான்று களும், ஈழம் பற்றிய ஆதாரங்களும் இருப்பத னால் இவரின் சொந்த இடமாகப் பூநகரியைச் கருதஇடமுண்டு. இக்கூற்றை எதிர்கால ஆய்வு கள் மேலும் வலுப்படுத்தலாம்.ப் பிராந்தியத்திலே பிற்காலத்திலே தொடர்ந்தும் இருப்பதற்கு மேலும் சில ஆதாரங்கள் உள் ளன. இன்று வேரவில் என அழைக்கப்படும் கிராமம் முன்பு ஈழவூர் எனவும், இதற்கு அருகிலே உள்ள கடற்கரைத்துறைமுகம் ஈழவன் குடா எனவும் அழைக்கப்பட்டு வந்ததை ஓலைச்சுவடி களில் இருந்து அறிய முடிகின்றது. 16 ஆம் நூற் றாண்டிலே போர்த்துக்கேயர் இந்த ஈழவூரில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் கட்டியதாக போலோரினிடாரோ தமது நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடங்களை அண்டியே சோழ ரோடு தொடர்புடைய பல்வராயன்சுட்டு. பாண்டியரோடு தொடர்புடைய வீரபாண்டி யன்முனை ஆகிய இடங்கள் உள்ளன. இந்த ஈழவூர் பாரம்பரியமான வரலாறு கொண்ட கிராமம் என்பதை முன்பு குறிப்பிட்ட ஆதிக் குடியிருப்புக்களுக்குரிய சான்றுகள் உறுதிப் படுத்துகின்றன. இச்சான்றுகளை நோக்கும் போது தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களிலே வரும் ஈழம் பற்றிய நாட்டுப்பெயர் அதற்கு எதிரே உள்ள பூநகரியிலே பெருமளவு புழக்கத் திலே இருந்ததெனக் கூறலாம். தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களில் ஈழத்தைச் சேர்ந்த வணிகர் சிலர் அங்குள்ள சமண, பௌத்தத் துற விகளுக்குத் தானம் அளித்தது பற்றிக் கூறப் படுகின்றது. அங்குள்ள சுருங்காலக்குடி பிரா மிச் சாசனம் ஒன்று ஏழையூரைச்சேர்ந்த அரி தன் பற்றிக் கூறுகிறது. இந்த ஏழையூரை ஈழையூராகவும் சிலர் கொள்வர். ஆனால் தமிழ் நாட்டில் ஏழையூர் அல்லது ஈழையூர் என்ற பெயரில் ஓரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் இவ்வூரைப் பூநகரி ஈழவூருடனும் தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு: சங்க காலப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதந் தேவனார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது வரலாற்று அறிஞர்கள் பலரால் ஏற்றுக்கொள் ளப்பட்ட உண்மையாகும். ஆனால் இவர் இலங் கையில் எவ்விடத்தைச் சேர்ந்தவர் என்பதை நிச்சயமாகக் கூறமுடியவில்லை. அண்மையில் வேலுப்பிள்ளை இவரின் சொந்த இடம் பண்டு வஸ்நுவரையாக (தென்னிலங்கை) இருக்கலாம். எனக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் பூநகரி யிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் மொழி உபயோகம் இருந்ததற்கான சான்று களும், ஈழம் பற்றிய ஆதாரங்களும் இருப்பத னால் இவரின் சொந்த இடமாகப் பூநகரியைச் கருதஇடமுண்டு. இக்கூற்றை எதிர்கால ஆய்வு கள் மேலும் வலுப்படுத்தலாம். நன்றி ஈழத்து வரலாறும் தொல்லியலும்  முகநுால்.