குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2054

இன்று 2023, புரட்டாசி(கன்னி) 30 ம் திகதி சனிக் கிழமை .

ஈழமும் தமிழகத்தை போன்று பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மைக்குரியவை.

ஈழம் என்று வருகிற போது பல தமிழக ஆய்வாளர்கள் , தமிழறிஞர்கள் ஈழத் தமிழர்களை சோழர் ஆட்சியோடு குறுக்கிக் கொள்கின்றனர். இது படுமோசமான அபத்தம்.

ஈழமும் தமிழகத்தை போன்று பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மைக்குரியவை.

1200 களிற்கு பின்னரே ஈழத்தில் சோழர் ஆட்சி செலுத்துகின்றனர். சோழர்களின் படைகள் தங்கி இருந்த இடங்கள் பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம், குருநாகல், திருகோணமலை என்பனவாகும் இதில் பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம் என்பன முற்று முழுதாக சிங்கள மாவட்டங்களாக இருக்கின்றன. திருகோணமலை மாத்திரம் ஓரளவுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளாக உள்ளது.

ஆக சோழர்களின் குடியேற்றம் மூலம் தமிழர்கள் ஈழத்தில் உருவானார்கள் என்கிற சரட்டுக்கதையை இனி விட்டுவிடுங்கள்.

ஈழத்தில் சிங்களவர்களால் புனையப்பட்ட அதாவது அதிக கட்டுக்கதைகளை கொண்ட மகாவம்சத்தில் கூட இலங்கையில் இயக்கர், நாகர் என இருவம்சங்கள் இருந்ததாக குறிப்பிடுகிறது.

நாகர்கள் தான் ஆதித் தமிழர்கள் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து. எனவே ஈழத்தில் தமிழர்களின் பூர்வீகம் 3000 வருடங்களுக்கு முற்பட்டது.

இன்று ஆதிச்ச நல்லூர் கீழடி போன்ற இடங்களில் கண்டு எடுக்கப்படுகிற பானையில் எழுதப்பட்ட பண்டைய தமிழ் எழுத்துருக்கள் ஈழத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொம்மரிப்பு, சாட்டி, பூநகரி, போன்ற பிரதேசங்களில் முதுமக்கள் தாழி உள்ளது, தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இவற்றை எல்லாம் தாண்டி திருவள்ளுவர் எங்கே பிறந்தார்? அவர் தமிழகத்தில் பிறந்தாரா? அவர் தமிழகத்தில் பிறந்தால் அது எங்கே என குறிப்பிடுங்கள்?

திருவள்ளுவர் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் அல்வாய் எனும் கிராமத்தில் பிறந்தார் என இன்றுவரை வாய்மொழிக் கதை அந்த ஊர் மக்களிடம் இன்றும் நிலவுகிறது.

அதன் உண்மைத் தன்மை ஆய்வுக்குரியது.

இந்த அல்வாயக் கிராமத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட அரசர் ஆட்சி செய்த இடத்துக்குரிய எச்சங்களை காண முடிகிறது. அங்கு பழந் தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய பௌத்த பேரினவாத அரசு தமிழர்களின் பூர்வீகத்தை நிரூபிக்கும் ஆதாரங்களை அழிக்க முற்படுமே ஒழிய அவற்றை பாதுகாக்க முற்படாது. தமிழக தொல்லியல் துறை ஈழத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.