குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இலங்கை சிங்கள நாடல்ல:சி.வி.விக்கினேஸ்வரன்! 02,12.2021 இலங்கை, தூயவன்

03.12.2021 ...தி.ஆ 2052.......இலங்கை பாராளுமன்றத்தில் “தமிழர் தாயகம்” என்ற சொற்றொடருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு அரச பாராளுமன்றப் பிரதிநிதி கள் அவற்றை கன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரியி ருந்தனர். அப்பொழுது மன்றுக்குத் தலைமை வகித்த கௌரவ வேலு குமார் பா.உ அதனை சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். தமிழிலிருந்தே சிங்களம் உருவானது 4000 மேற்பட்ட தமிழ் ச் சொற்களைகொண்டுள்ள மொழி சிங்களம். உள் ளது போகாது இல்லது வராது என்கின்றார் திரு. விக்கினேசு வரன் அவர்கள்.!

கிளப்பப்பட்ட எதிர்ப்புகள் பற்றி அவர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. இந்த நாடு ஒரு சிங்கள நாடு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என்ற கேள்வின்கு  இல்லை. நான் அவ்வாறு ஏற்கவில்லையென தெரிவித்துள்ளார் நா.உ சி.வி.விக்கினேஸ்வரன்.

 

முதலில் இது ஒரு சிங்கள நாடல்ல. சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடே இது. ஆனால் வடக்குக் கிழக்கில் உள்ள பெரும்பான்மையானோர் தமிழ்ப் பேசுபவர்கள். பிரித்தானியர் நிர்வாக நோக்கங்களுக்காக  இந் நாட்டை 1833ம் ஆண்டில் ஒன்றாக்கிய பொழுது யாழ்ப்பாண இராச்சியம் ஒன்று வடக்கில் இருந்தது. மேலும் கிழக்கின் தமிழ் சிற்றரசர்கள் கண்டிய மன்னனுக்கு திரை கட்டி வந்தனர். உங்களுக்குத் தெரியும் இறுதிக் கண்டிய மன்னன் தமிழனாக இருந்தது மட்டுமன்றி 1815ல் பிரித்தானியருடன் செய்த ஒப்பந்தத்தில் தமிழிலேயே கையொப்பம் இட்டிருந்தார். அதே போல கண்டிய சிங்களத் தலைவர்கள் சிலரும் அவ்வாறே செய்தனர்.

எந்தவிதத்திலும் உங்களால் இலங்கையை ஒரு சிங்கள அல்லது பௌத்த சிங்கள நாடாக அழைக்க முடியாது. இந் நாடு சிங்களம் பேசும் ஆண்டுகளுக்கு முன்னர் இந் நாட்டில் வாழ்ந்த பூர்வீக வாசிகள் தமிழையே பேசினர். அப்பொழுது சிங்கள மொழி என்ற ஒரு மொழி பிறந்திருக்கவில்லை. ஆகையால் அப்பொழுது சிங்களவர்கள் இருந்திருக்கவில்லை. சிங்கள மொழியானது தமிழையும் பாளியையும் கொண்ட ஒரு கலப்பு மொழியாகும். தமிழ் மொழி மூலமாக சில சமசுகிருத சொற்கள் சிங்கள மொழியைச் சென்றடைந்தன. முதலாவது சிங்கள இலக்கண நூலான “சிதத் சங்கரய” கி.பி.13ம் நூற்றாண்டளவில்த் தான் எழுதப்பட்டது. சிங்கள மொழியானது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருப்பின் அம் மொழி ஒரு இலக்கண நூலைப் பிறப்பிப்பதற்கு ஏன் 1700 ஆண்டுகள் எடுத்தது?

சிங்கள மக்கள் மகாவம்சத்தைத் தழுவிய பிழையான சரித்திர தகவல்களால் ஊட்டப்பட்டிருக்கின்றார்கள். மகாவம்சம் எழுதப்பட்ட பொழுது சிங்கள மொழியென ஒன்று உதித்திருக்கவில்லை. ஆகையால்த் தான் மகாவம்சம் பாளி மொழியில் எழுதப்பட்டது. “அத்தகதா” வும் கூட பாளி மொழியிலேயே எழுதப்பட்டது. கி.பி 5ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மொழி நூல்களோ சிங்களக் கல்வெட்டுச் சான்றுகளோ எவையும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாம ஒவ்வொரு செய்யுளின் முடிவிலும் அதன் இறுதிப் பாடல் வரிகள் ஒவ்வொன்றிலும் பௌத்த சமயத்தின் பெருமையை வெளிப்படுத்துவதற்காகவே தம் நூலை எழுதியுள்ளதாக கூறியிருக்கின்றார். ஆகவே மகாவம்சம் ஒரு சரித்திர வலுக் கொண்ட நூல் அல்ல.

கடந்த 73 ஆண்டு காலமாக சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள புத்தியீவிகளும் சிங்கள மொழியைப் பற்றியும் சிங்களவர் சரித்திரத்தைப் பற்றியும் திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களைத் தந்திரமாக வெளியிட்டு வந்துள்ளார்கள்.

கடந்த நூற்றாண்டின் அரை இறுதியில் உத்தியோக பூர்வமாக வடக்குக் கிழக்கில் காலங்காலமாக வழங்கி வரப்பட்ட தமிழ் இடங்களின் பெயர்கள் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. உதாரணமாக, பல நூற்றாண்டுகாலமாக மணலாறு எனத் தமிழில் இருந்த பெயரானது வெலிஓயா என சுதந்திரத்தின் பின்னர் மாற்றப்பட்டது. (மணல் - வெலி – ளுயனெஃ ஆறு – ஓய – சுiஎநச). இம் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு சிறிது காலத்திற்குப் பின்னர் பௌத்த துறவிகளும் ஏனையோர்களும் வடகிழக்குப் பிரதேசங்களில் உள்ள பூர்வீகத் தமிழ்ப் பெயர்கள் ஆதியில் சிங்களப் பெயர்களாக இருந்தன எனவும் அவை பின்னர் தமிழுக்கு மாற்றப்பட்டன எனவும் கி.பி 10ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்திலேயே தமிழ் மொழிக்கு மாற்றப்பட்டன எனவும் கூறத் தொடங்கினர். அதாவது தாம் தமிழில் இருந்து மொழி பெயர்த்த சிங்களச் சொற்களை முதலில் இருந்த சொற்களெனவும் ஆதித் தமிழ்ச் சொற்களைப் பின்னர் வந்த மொழி பெயர்ப்புக்கள் என்றும் கூறத் தலைப்பட்டனர்.

சிங்கள மொழி கி.பி 5ம் 6ம் நூற்றாண்டுகளில் தான் உருவாகியதால் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி சிங்கள மொழி இருந்திருக்க முடியும்? சமீபகாலத்தைய மொழிபெயர்ப்புகளுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் சிங்களப் பெயர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் பௌத்தத்தை சிங்கள மொழியுடன் இணைத்து எங்கெங்கெல்லாம் பௌத்த சின்னங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் சிங்கள மக்கள் பூர்வீகமாகக் குடியிருந்த இடங்கள் என ஏமாற்றி வருகின்றனர்.

இது முற்றுமுழுதான ஒரு தவறு. பேராசிரியர் சுனில் ஆரியரட்ண என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் சிங்கள மொழியில் “தெமள பௌத்தயோ” (தமிழ் பௌத்தர்கள்) என ஒரு நூலை எழுதியுள்ளார். எங்களுடைய நாட்டின் சரித்திரத்தில் தமிழர்கள் ஒரு காலப்பகுதியில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அக் காலப்பகுதியில் சிங்கள மொழி இருந்திருக்கவில்லை. ஆகவே தமிழ் பௌத்தர்கள் பெருவாரியாக வாழ்ந்த காலப்பகுதியில் சிங்களவர்கள் எவரும் வட கிழக்கில் இருந்திருக்கவில்லை.

எனினும் சிங்கள இனவாத சரித்திர ஆசிரியர்களும் திட்டமிடும் பௌத்த துறவிகளும் கி.பி. 5ம் 6ம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து பின்னர் சிங்கள மொழிக்கு வந்த பாளிச் சொற்களைக் குறிப்பிட்டு அவற்றை சிங்கள மொழி எனக் கூற முற்பட்டனர். அவை சிங்கள மொழிச் சொற்கள் அல்ல் அவை பாளி மொழிச் சொற்கள்!

பிற்காலப் பகுதியில் பாளி மொழிச் சொற்கள் ஒரு புதிய மொழிக்குள் புகுந்து அதை சிங்கள மொழி ஆக்க உதவின. கல்வெட்டுகளிலும் வேறு சாதனங்களிலும் காணப்படும் பாளி மொழிச் சொற்களை அடையாளம் கண்ட சிங்கள சரித்திர ஆசிரியர்கள் அவற்றை சிங்கள மொழி எனக் கூற முற்பட்டனர். ஆனால் அவை பிற்காலப் பகுதிகளில் சிங்கள மொழிக்குள் வந்த பாளி மொழிச் சொற்களேயாவன.

3000 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மொழி இருந்ததாகச் சில சிங்கள புத்த பிக்குகள் கூறி வருவதானது எப்படி இருக்கின்றதென்றால் நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த எனது பாட்டனாரின் காலத்தில் நான் இருந்திருக்கின்றேன் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். நான் என் பாட்டனாரில் இருந்து வந்ததால் நான் என் பாட்டனார் காலத்தில் இருந்தேன் என்பது போன்றே இவர்கள் வாதம் இருக்கின்றது. அதாவது பாளியில் இருந்து சிங்களம் வந்தது. எனவே பாளி இருந்த போது சிங்களமும் இருந்தது என்பதே இவர்கள் வாதம்.

ஆனால் இலங்கையை ஒரு தமிழ் இந்து நாடு என குறிப்பிடுவதற்குரிய சாத்தியக்கூறுகள் பல உண்டு. சைவத் தமிழர்கள் தான் இந்தத் தீவின் பூர்வீகக் குடிகள். வடக்கில் கீரிமலையில் உள்ள நகுலேசுவரத்தில் உள்ள சிவலிங்கமும் வடமேற்கில் மன்னாரில் உள்ள திருக்கேதீசுவரமும் மேற்கில் சிலாபத்தில் உள்ள முன்னேசுவரமும் கிழக்கில் திருகோணமலையில் உள்ள கோணேசுவரமும் தெற்கில் தெய்வேந்திரமுனையில் உள்ள தொண்டீசுவரமும் சரித்திரத்திற்கு முந்திய காலம் முதல் இந் நாட்டைப் பாதுகாத்து வந்தன என்பது நம்பிக்கைழ(ஐதீகம்.) வரலாற்று ரீதியாக அவை சரித்திர காலத்திற்கு முன்பிருந்தவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பூர்வீகத் தமிழ் வாசிகளின் வழியிலேயே சிங்களவர்கள் வந்ததோடு தமிழில் இருந்து வந்த சிங்கள மொழியையும் கி.பி 5ம் 6ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஏற்றுக் கொண்;டார்கள். அவர்களுடைய மொழியானது தமிழோடு பாளியும் வேறு பேச்சு மொழிகளையும் உள்ளடக்கிய ஒரு கலவை.

இப்பொழுது எந்த உண்மையான வரலாற்று ஆசிரியரும் ஆரிய முற்றுகை இந்த நாட்டின் மேல் இருந்ததென்பதை நம்புவதில்லை. மேற்கத்திய நாட்டினர் எமது சரித்திரத்தைத் தவறாக விளங்கியிருந்தனர். ஆரியன் என்ற சொல்லானது ஒரு இனத்தைக் குறிப்பிடவில்லை. ஆகையால் சிங்களவர்கள் தங்களை ஆரிய இனத்தினர் எனக் குறிப்பிட முடியாது. அவர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புதிய மொழியை ஏற்றுக் கொண்ட உள்;ர் தமிழர்கள் ஆவர். சிங்களவர்களும் தமிழர்களும் ஒரு பொது உற்பத்தியில் இருந்து வந்தவர்கள் என்பது சமீபத்தில் நடத்திய உயிரணு ஆராய்ச்சியில் (னுNயு) இருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இப்பொழுது ஒரு புதிய மொழி தோன்றியுள்ளது. இன்னும் 25 தொடக்கம் 50 ஆண்டுகளில் அது தமிழி என தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலம் ஒரு கலப்பு மொழியாக உருவாகும்.

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகள் தமிழரின் தாயகமாக 3000 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்துள்ளது. இதனை 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்றுள்ளது. ஆகவே “தமிழர் தாயகம்” என்று பெரும்பான்மை தமிழர் வசிக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கை அழைப்பதில் எந்தப் பிழையும் இல்லை எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.