ஆகவே இந்த ஆதி இரும்புக் கால மக்களே பௌத்தத்தை பின்பற்றினார்கள் அவர்களே தமிழர்களும் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை அந்தப் பண்பாட்டு மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தமிழ்ச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன என்கிறார்
யாழ் பல்கலைகழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துரை மூத்த பேராசிரியர் பரமு
புசுபரட்ணம் அவர்கள்
1.வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொல்லியல் ஆய்வுகள் பற்றி
தங்களின் கருத்து?
தொல்லியல் வரலாற்று ஆசிரியர் என்ற வகையில் சில உண்மைகளைக் கூற விரும்புகின்றேன் பொதுவாக இலங்கை தொல்லியல் சட்டத்தில் இலங்கையின்
அனைத்து பாகங்களிலும் மண்ணுக்குள் மறைந்திருக்கின்ற மண்ணுக்கு வெளியே
தெரிகின்ற வரலாற்றுப் பெறுமதியுடைய அனைத்து சின்னங்களும் மரபுச் சின்னங்களாக கருதப்பட வேண்டும் என்பது அதனுடைய கருத்தாகும்
அத்தகைய இடங்களில் கண்டறிந்து ஆய்வு செய்து ஆவணப்படுத்தி பாதுகாக்கின்ற பொறுப்பும் அதிகாரமும் தொல்லியல் திணைக்களத்திற்கு உண்டு ஆயினும் இலங்கை பல்லிணம் பல மதம் பண்பாடு கொண்ட ஒரு நாடு அது மல்டி கல்ச்சர் நேசன் ஆகவே
அந்த மக்களுடைய பண்பாட்டு அடையாளங்களும் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட வேண்டியது தொல்லியல் திணைக்களத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகவே காணப்படுகின்றது
இன்று உலகின் எந்த ஒரு நாடும் தனித்து வளர முடியாத நிலை உருவாகி உள்ளது அதனால் ஒரு நாட்டுக்குள் பல இன மக்கள் பல இன பண்பாடு கொண்ட மக்கள் வாழ்வதை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன வரவேற்று வருகின்றனர்
இலங்கையும் ஒரு பல்லின பண்பாடு கொண்ட நாடு என்ற வகையில் பல இன மக்களுடைய பண்பாடும் இலங்கை பண்பாடு என்ற வட்டத்துக்குள் சில ஒருமைத் தன்மை கொண்டிருந்தாலும் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு மொழி பேசுகின்ற மக்களுக்கம் ஒவ்வொரு மக்களின் மதங்களுக்கும் ஒரு தனித்துவமான அடையாளங்கள் உண்டு ஆகவே அந்த தனித்துவமான அடையாளங்களை கண்டறிந்து பாதுகாத்து
வளர்ப்பதையிட்டு அந்த மக்கள் பெருமையடைகிறார்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள் ஒரு நாட்டில் பண்டுதொட்டு வாழுகின்ற மக்கள் தங்களுடைய மரபுரிமை அடையாளங்களை நம்பிக்கை நாற்றாக கருதுகின்றார்கள் அதை சிறிதும் பிசகாமல் எதிர்கால சந்ததியிடம் கையளிப்பது அவர்களுக்குரிய
ஒரு கடமையாகும்
ஆகவே இன்று வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற தொல்லியல் ஆய்வு என்பது குறுகிய ஒரு பரப்புக்குள் இல்லாது அந்தப் பிரதேசத்திலே வாழுகின்ற பல்வேறு இனங்களின் பண்பாடுகளையும் கண்டறியும் வகையில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட
வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்
இன்று தொல்லியல் திணைக்களத்தால் வடக்கிலோ கிழக்கிலோ மேற்கொள்ளப்படுகின்ற
ஆய்வுகள் குறிப்பிட்ட ஒரு மதத்தை மையப்படுத்தி மட்டும் மேற்கொள்ளப்படுகின்றது என்பதையிட்டு மக்களிடையே ஒரு அதிருப்தி நிலை இருப்பதை நான் காணுகின்றேன் ஆனால் இலங்கை என்ற நாட்டில் பல இன மக்கள் மகிழ்ச்சியாக அமைதியாக வாழ்வதற்கு அந்த மக்களுக்கு உரிய மரபுரிமை அடையாளங்கள் அழிக்கப்படாது பாதுகாப்பாக கண்டறிந்து அவற்றை பாதுகாக்கப்பட வேண்டிய பொறுப்பும் தொல்லியல் திணைக்களத்திற்குரியதாகும்
எதிர்காலத்திலே தொல்லியல் திணைக்களம் மேற்கொள்கின்ற ஆய்வுகளில் அவற்றைக்
கருத்தில் கொள்வது இலங்கை மக்களிடையே ஐக்கியத்தையும் சினேகபூர்வத்தையும்
வளர்க்க உதவும் என்பது என்னுடைய கருத்தாகும்
2.இந்த தொல்லியல் ஆய்வுகளின் போது துறைசார் தமிழ் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனரா? இ்லலை எனில் அவர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை?
குருந்தூர்மலை அகழ்வாராச்சி ஆரம்ப நிகழ்வு நடைபெறும் வரைக்கும் அந்த இடத்திலே அகழ்வாய்வு நடைபெற இருப்பதாக எங்கள் எருவருக்குமே தெரியாது
ஆயினும் அந்த ஆய்வு தொடங்கியதன் பின்னர் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுரா மனதுங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுடைய ஆய்வில் என்னையும் பங்கு எடுக்குமாறு கேட்டுக்கொண்டார் பேராசிரியர் அநுரா மனதுங்கவுடன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நட்போடு பழகிய ஒருவர் எங்களுடைய
பல்கலைக்கழக தொல்லியல் பாடநெறி சம்பந்தமான உருவாக்கத்தில் அவருக்கு பங்குண்டுஇ நம்முடைய ஆசிரியர் சிலர் அவருக்கு கீழே முதுகலைமானிப்பட்டம்
கற்கையை மேற்கொண்டு வருகின்றார்கள் அந்த ஒரு நட்பின் அடிப்படையில் அவர் என்னை அழைத்திருந்திருந்தாலும் அந்த ஆய்விலே பங்கெடுக்க கூடிய சூழ்நிலை எனக்கு இருக்கவில்லை
ஒன்று என்னுடைய சுகயீனம் இரண்டாவது வருடத்தில் ஆய்வு செய்யப்படுகின்ற பொழுது எந்த இடத்தில் ஆய்வு செய்யப்படுகின்றது எதுவரை இந்த ஆய்வு
மேற்கொள்ளப்படுகிறது போன்ற விவரங்களை முன்கூட்டியே கலந்து ஆலோசித்த பின்னர் அவர்களோடு இணைந்து ஆய்வு செய்வதை நாங்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கருதுகிறோம்
ஆனால் ஒரு ஆய்வு தொடங்கியதன் பின்னர் ஒருசில தமிழர் தமிழ் அறிஞர்களையும் இணைத்துக் கொள்வது என்பது அவர்களுடைய ஆய்வுகளை நாங்கள் சந்தேகிப்பதாக அவர்கள் கருதுவதற்கும் வழிவகுக்கலாம் அங்கு செல்லுகின்ற எமக்கும் அது ஒரு
சங்கடமான நிலையாகவுமு இருக்கலாம் என்ற ஒரு கருத்து என்னிடத்தில் உண்டு இருப்பினும் அந்த ஆய்வு நடைபெறும் இடத்துக்கு செல்வதற்கு நான்
தீர்மானித்திருக்கிறேன் முழுமையாக அகழ்வாய்வில் பங்கெடுப்பேன் என்று சொல்ல முடியாது இருப்பினும் எமது பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பட்டம்
பெற்று இப்பொழுது தொழிலியல் திணைக்களத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரமான பதவிகளில் இருக்கிறார்கள் அவர்களிடையே நல்ல அனுபவங்கள் உண்டு ஏனென்றால் அவர்கள் தென்னிலங்கை
தொல்லியல் அறிஞர்களோடு ஒரு சில இடங்களிலே அகழ்வாய்வுகள் செய்தவர்கள் அதற்கப்பால் மேற்கத்தேய நாடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் அவர்கள் பங்கெடுத்தவர்கள் அதனடிப்படையில் நான்
பேராசிரியர் அநுரா மனதுங்க அவர்களிடம் எமது தொல்லியல் திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளையும் நீங்கள் நினைத்துக் கொள்ளலாம் என்று கேட்டத்திற்கு இணங்க தற்போது அங்கு மணிமாறன் என்பவர் அந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளார்.
அவர்கள் அங்கு வேலை செய்கின்ற தமிழ் அதிகாரிகள் மாறி மாறி அந்த இடத்தில் பங்கெடுக்க இருக்கின்றார்கள் ஆயினும் எதிர்காலத்தில் வடகிழக்குப் பகுதியிலும் சரி இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் சரி அகழ்வாய்வுகள்
நடக்கின்ற போது அவற்றில் தமிழ் ஆகழ்வாராச்சியாளர்களையும் இணைத்துக்
கொள்வதாக பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் உறுதிமொழி
வழங்கியுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளகின்ற அகழ்வாராச்சிகளின் போது தமிழ் அதிகாரிகள்இ
மற்றும் மாணவர்களை இணைத்துக்கொள்வார்களா என்பதனை
3 இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றியும் அதன் தோற்றம், பின்னர் அது எவ்வாறு
இல்லாமல் போனது பற்றியும் குறிப்பிடுங்கள்?
தமிழ் பௌத்தம் பற்றி இலங்கைக்கு பௌத்த மதம் அறிமுகமாகி பரவிய காலத்தில்
இருந்தே தமிழர்களும் பௌத்தர்களாக இருந்துள்ளார்கள்
பிற்காலத்தில் இந்த பௌத்த மத வரலாறு வளர்ச்சி பற்றி ஆராய்ந்த தென்னிலங்கை
அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் இலங்கையில் தமிழர்களும் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
1968, 1969 காலப்பகுதியில் பேராசிரியர் இந்திரபாலா தமிழ் பௌத்தம் பற்றி தொடராக சில கட்டுரைகள் எழுதியுள்ளார் ஏனைய சிங்கள தமிழ் அறிஞர்களும்
தமிழர்கள் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதை அவர்கள் நிராகரிக்கவில்லை ஆனால் இப்பொழுது வடக்கில் தமிழ் பௌத்தம் பற்றி பேசுவதற்கு தொல்லியல் திணைக்களத்தால் வடக்கில் உள்ள பௌத்த ஆலயங்கள் அடையாளப்படுத்துவது அல்லது
அகழ்வாய்வுக்கு உட்படுத்துவது அது தமிழர்களும் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை நினைவு படுத்துகின்றத ஒரு சம்பவமாகதான் நான் பார்க்கின்றேன்
இரண்டாவது எப்பொழுது வடக்கில் பௌத்த மதம் பரவிய தந்த ஒரு கேள்வி கேட்டீர்கள் பொதுவாக ஒரு நாட்டில் தோன்றி வளர்ந்த ஒரு மதம் இன்னொரு
நாட்டுக்குப் பரவுகின்ற போது அது குறிப்பிட்ட மொழி பேசிய குறிப்பிட்ட இனத்திற்குரிய மதமாக பரப்பப்படுவது இல்லை
வட இந்தியாவில் இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டப்பட்ட பௌத்த மகாநாட்டை தொடர்ந்து அந்த மதத்தை பரப்புகின்ற தூதுக் குழுக்கள் தென் ஆசிய நாடுகளுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன அந்த நாடுகளில் எல்லாம் பல நூற்றுக்கணக்கான மொழிகளில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான இனங்கள் இருந்தும் பௌத்ததை கணிசமான மக்கள்
பின்பற்றியதற்கு ஆதாரங்களும் உண்டு
குறிப்பாக தமிழகத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்னர் ஒரு செல்வாக்கு உடைய மதமாகவே தமிழ் பௌத்தம்
தமிழகத்தில் காணப்பட்டது தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற
பௌத்த ஸ்தூபி கண்டுபிடிக்கப்பட்டது ஆதாரங்கள் உண்டு
ஆகவே பௌத்தம் வட இந்தியாவில் இருந்து ஏனைய நாடுகளுக்கும் பரவிய போதும் இலங்கைக்கும் பரவியது அப்போது இலங்கையில் இருந்த பெருங்கற்கால மக்கள் அல்லது ஆதிகால மக்களில் ஒரு பிரிவினர் அம்மதத்தை ஏற்றுக் கொண்டனர்
அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆரம்பகால பௌத்த விகாரைகள் பௌத்தம் சம்பந்தமான கல்வெட்டுக்கள் ஆரம்பகால பௌத்தம் பற்றி கூறும் பாலி
இலக்கியங்கள் அடையாளப்படுத்துகின்ற இடங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களை அண்டியதாகவே காணப்படுகின்றன
ஆகவே இந்த ஆதி இரும்புக் கால மக்களே பௌத்தத்தில் பின்பற்றினார்கள் அவர்களே தமிழர்களும் பக்தர்களாக இருந்தார்கள் என்பதை அந்தப் பண்பாட்டு மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தமிழ்ச் சாசனங்கள்
உறுதிப்படுத்துகின்றன
இத்தகைய பௌத்த மையங்களை அண்டி ஏறத்தாழ ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன அந்த கல்வெட்டுக்களில்
தமிழ் மொழிக்கே சிறப்பான எழுத்து வடிவங்களும் தனி மனித தமிழ் பெயர்களும் தமிழ் உறவு முறைகளும் தமிழ் இடப் பெயர்களும் காணப்படுகின்றன அந்த
கல்வெட்டுக்கள் பௌத்த குருமாருக்க பௌத்த சங்கத்திற்கு தானம் வழங்கியது பற்றி கூறுவதிலிருந்து தமிழர்கள் பௌதத்தை ஆதரித்தார்கள் என்பதற்கு அந்த கல்வெட்டுக்களே சான்றாக காணப்படுகிறது
குறிப்பாக தென்னிலங்கை வரை ஆட்சி செய்த பரிந்தஇ குட்ட பரிந்த போன்ற தமிழ் மன்னர்கள் பௌத்தத்துக்கு தொண்டாற்றியதை அறகமம் கதிர்காமம்
அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன அந்த கல்வெட்டுகளை பரிந்தஇ குட்ட பரிந்த போன்ற மன்னர்கள் பௌதத்திற்கு
தொண்டாற்றியதற்காக புத்த்தாசஇ புத்த தேவ போன்ற பட்டங்கள் வழங்கியதாகவும்
அக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இலங்கையின் பௌத்த மத வரலாற்றில் முன்னிலைப்படுத்தி சிறப்பாக அதன் தோற்றம்
வளர்ச்சி பற்றி கூறும் மகாவம்சத்தில் கூட தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன குறிப்பாக கிறிஸ்தவ சகாப்தத்தின்
முதல் 200 ஆண்டுகாலம் அனுராதபுரத்தை 21 மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் அதில் 10 தமிழ் மன்னர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தார்கள்
வடக்கில் தமிழ் பௌத்தம் இருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் உண்டு
************************************************
இலங்கையின் பௌத்த மத வரலாற்றில் முன்னிலைப்படுத்தி சிறப்பாக அதன் தோற்றம்
வளர்ச்சி பற்றி கூறும் மகாவம்சத்தில் கூட தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன குறிப்பாக கிறிஸ்தவ சகாப்தத்தின்
முதல் 200 ஆண்டுகாலம் அனுராதபுரத்தை 21 மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் அதில் 10 தமிழ் மன்னர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தார்கள்
அவர்கள் பௌத்தத்துக்கு மாறான மதத்தை உடையவர்கள் என்று மகாவம்சம்கூறினாலும் தமிழ் மன்னர்கள் பௌத்தத்தை ஆதரித்த்தற்கும் வளர்ச்சிக்கு
உதவியதற்கும் பௌத்த விகாரைகள் அமைத்த்தற்கும் அந்த இலக்கியங்களில் ஆதாரங்கள் காணப்படுகின்றன
இந்த தமிழ் பௌத்தம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது அபயகிரி விகாரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாம் நூற்றாண்டு தமிழ் சாசனம் முக்கிய ஆதாரமாக காணப்படுகின்றது அதுமட்டுமல்லாமல் கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் வெல்கம் விகாரை அழைக்கப்படுவது சோழர் ஆட்சியில் ராஜராஜ
பெரும்பள்ளி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது அந்த விகாரையின் வளர்ச்சிக்காகவும் நிர்வாகச் செயற்பாடுகளுக்காகவும் சோழர்கள் தானம்
வழங்கியதை அங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன
இவ்வாறு தமிழ் பௌத்தம் பிற்காலத்திலும் தொடர்ந்தற்கு நீர்கொழும்பு குருநாகல் புத்தளம் போன்ற பகுதிகளில் 1970 களில் வாழ்ந்த தமிழ்
பௌத்தர்கள் அரச நியமனங்களுக்காக சிங்கள பௌத்தர்களாக மாறியதற்கும்
ஆதாரங்கள் உண்டு.
ஆகவே பௌத்தம் என்பது தமிழ் மக்களுக்கு ஒரு அந்நியமான மதமாக இருந்தது இல்லை தென்னாசியாவிலேயே இந்து மதம் என்ற பெயர் 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் இடப்பட்ட ஒரு பெயராகும். அதன் நோக்கம் வந்து இஸ்லாமிய
மதத்திலிருந்து ஏனைய மதங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்து மதம் என்ற பெயர் இடப்பட்டது அந்த இந்து மதத்திற்குள்லேயே பௌத்தமதம்
காணப்பட்டது
இலங்கையில் பௌத்த மதம் பரவுவதற்கு வட இந்திய தொடர்பு ஒரு காரணமாக இருந்தாலும் அது வளர்வதற்கு தென்னிந்திய குறிப்பாக தமிழக தொடர்புகளும் செல்வாக்குமே முக்கிய காரணமாகும் ஏனெனில் இலங்கை பௌத்த விகாரைகளில்
தங்கியிருந்து பாலி மொழி இலக்கியங்களுக்கு விளக்க உரை எழுதுவதில் தமிழ் பௌத்த குருமாரே முக்கிய பங்கு வகித்தார்கள் குறிப்பாக புத்தகத்த புத்த
தேரோ தர்மபால வச்சிரபோதி போன்ற பௌத்த துறவிகள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்து இங்கு தங்கியிருந்து விளக்க உரை எழுதியதாக பாலி
இலக்கியங்கள் கூறுகின்றன
கிபி நான்காம் நூற்றாண்டில் சோழ நாட்டைச் சேர்ந்த மஹிந்த இலங்கைக்கு வந்து மகாயான பௌத்தம் மகா சாயனன்காலத்தில் வளர்வதற்கு காரணமாக இருந்தார்
என பாலி இலக்கியங்கள் கூறுகின்றன அதிலும் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் போதிசத்துவர் சிலைகள் புடைப்புச் சிற்பங்கள் இலங்கையில்
காணப்படாத ஒரு வகை பளிங்கு கற்களால் செய்யப்பட்டவை ஆகும் அந்த பளிங்கு
கற்களை செய்யப்பட்ட சிலைகள் சிற்பங்கள் ஆந்திராவில் இருந்தும் தமிழகத்தில் இருந்து வட இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பேராசியர்
பரணவிதான உட்பட பல வரலாற்று ஆசிரியர்கள்
ஆகவே இலங்கையில் பௌத்த மதம் என்பது சிங்கள மக்களுக்கு மட்டுமன்றி தமிழர்களும் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதுதான்
உண்மையாகும் இன்று சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் பௌத்தர்களாக
இருப்பதை கொண்டும் தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாக இருப்பதை
கொண்டும் பண்டைய காலத்திலும் அவ்வாறே இருந்தது என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனெனில் பண்டைய காலத்தில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததற்கும் சிங்கள மன்னர்கள் மக்கள் இந்துக்களாக இருந்ததற்கும் பல ஆதாரங்கள்
காணப்படுகின்றன
குறிப்பாக நீங்கள் பொலன்னறுவை இராசதானி கால வரலாற்றை ஆராய்ந்தால் அதில் 50 வீதமான கால ஆட்சியில் இருந்த மன்னர்கள் இந்துக்களாகவே
இருந்திருக்கின்றார்கள் குறிப்பாக கஜபாகு இறுதிவரை ஒரு இந்து மன்னனாகவே இருந்து இறந்தான் என கோணேஸ்வர கல்வெட்டும் அவன் வெளியிட்ட தமிழ்
கல்வெட்டுக்ளும் கூறுகின்றன. ஆகவே எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாடாக பார்க்கலாமே ஒழிய அதிலும் ஆதிகால எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாடு
எச்சங்களாக பார்க்கலாமே தவிர ஒரு இனம் வாழ்ந்து மறைந்ததன் அடையாளமாக பார்ப்பதே இவ்வாறு முரண்பாடுகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகும்
மூன்றாவது கேள்வி வடக்கிலிருந்து பௌத்தம் மறைந்த மைக்கான காரணம் என்ன ?
இதையிட்டு அறிஞர்கள் மத்தியில் வேறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். ஒன்று ஏழாம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் செல்வாக்கு ஒரு முக்கிய காரணமாகும்
பேராசிரியர் கேம் டீ சில்வா அவர்கள் பக்தி இயக்கத்தின் செல்வாக்கு இலங்கையில் இந்து பௌத்தம் என்ற சமய முரண்பாடு தோன்றுவதற்கும் அது தமிழ் சிங்கள இன முரண்பாடு வளர்வதற்கும் காலப்போக்கில் தென்னிந்திய படையெடுப்பாளர்களுக்கு தமிழர்கள் வாழும் பிராந்தியங்கள் ஆதரவு வழங்கும் தளங்களாக மாறுவதற்கும் காரணம் என குறிப்பிடுகின்றார்.
பேராசிரியர் பத்மநாதன் போன்ற அறிஞர்கள் பக்தி இயக்கத்தின் செல்வாக்கு தொடர்ந்து இலங்கை தமிழ் சிங்கள மக்கள் தமது தனித்துவத்தை அரசியலிலும்
பொருளாதாரத்திலும் இராணுவத்திலும் காட்டுவதில் முனைப்பு பெற்றார்கள் என கூறுகின்றார்கள் இந்த பக்தி இயக்கத்தின் முரண்பாட்டால் இலங்கையில்
பரந்துபட்டு வாழ்ந்த தமிழர்கள் இனம் மொழி மதம் பண்பாடு என்பவற்றால் ஒன்றுபட்ட தமிழகத்துடன் ஒன்றுபட்ட வடக்கு கிழக்கு இலங்கையில்
தமிழகத்துக்கு அண்மையில் வடக்கு கிழக்கு இலங்கையில் வாழ்வது பாதுகாப்பாக
அமையும் என்று கருதியதாகவும் ஒரு கருத்தும் உண்டு. ஆகவே பௌத்தம் முற்றாக மறையாவிட்டாலும் கிபி ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் படிப்படியாக
தளர்ச்சி அடைந்தது என்று ஒரு கருத்தை சொல்லலாம்
இரண்டாவது 13 நூற்றாண்டுக்குப் பின்னர் வடக்கில் புல்லாக பௌத்த ஆலயங்கள் தொடங்குவதற்கு வாய்ப்புக்கள் இல்லை இருந்தால் 13ஆம் நூற்றாண்டு
பொலநறுவையில் ஆட்சி புரிந்த கலிங்கமாகன் தமிழ் கேரள படைகளையே தனக்குப் பாதுகாப்பாக கொண்டிருந்ததனால் அவனுடைய அரசியல் நடவடிக்கைகள் பௌத்த சிங்கள மக்களுக்கு எதிராகவே காணப்பட்டன
பல பௌத்த விகாரைகளை சிங்கள மக்களுடைய வயல்களை பறித்து தமிழ் படைவீரர்களுக்கு வழங்கினான் என்றக் குற்றச்சாட்டும் பாலி இலக்கியங்களில் காணப்படுகின்றது கலிங்கமாகனை ஒரு தமிழ் மன்னாவும் பல இடங்களில்
வர்ணிக்கப்படுகின்றது இந்த கொடூர ஆட்சியை விரும்பாமலே பொலனறுமை இராசதானியும் சிங்கள மக்களும் தெற்கு நோக்கி நகர்ந்த்தை காணமுடிகிறது.
இதைப் பாலி சிங்கள இலக்கியங்களில் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. அவ்வாறு நோக்கி நகர்ந்த சிங்கள ராஜதானியும் சிங்கள மக்களும் ஆரம்பத்தில்
தம்பதேனியா பின்னர் யாப்பகூவ குருநாகல் கம்பளை கோட்டை என காலத்துக்கு காலம் இடம் மாறியதற்கும் வரலாறு காணப்படுகின்றது
இவ்வாறு பொலநறுவை வீழ்ச்சி அடைந்து சிங்கள மக்களும் இராஜதானியின் தெற்கு நோக்கி நகர்ந்த பொழுது கலிங்கமாகன் தலைமையிலே வடக்கில் ஒரு பலமான என்று சொல்ல முடியாவிட்டாலும் அவனுடைய ஆதிக்க நிலவியதாக சூலவம்சம் கூறுகின்றது
அவ்வாறு சூலவம்சம் கூறுகின்ற இடங்கள் கிழக்கில் திருகோணமலை உள்ளிட்ட வட இலங்கை முழுவதுமே அவனுடைய ஆதிக்கம் நிலவி இருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன குறிப்பாக சோழ வம்சத்தில் கலிங்கமாகனின் படைகளின்
கோட்டைகள் இருந்த இடங்களாக திருகோணமலை கோணாமலை பதவியா மன்னார் மன்னார
பட்டனம் மாந்தை இலுப்பக்கடவை காக்தை தீவு வலிகாமம் போன்ற இடங்கள் குறிப்பிடுகின்றன
கலிங்கமாகனிற்கு பின்னர் சாகவவனுடைய ஆட்சி வட இலங்கையில் ஏற்பட்டது அவனுடைய படையெடுப்புகளும் கலிங்கமாகன் ஆதிக்கம் செலுத்திய இடங்களில் குறிப்பாக குறுந்தலூர் (குறுந்தூர்மலை) கலிங்கமாகன் சாகவன்ஆட்சியில்
முக்கிய ஒரு மையமாக இருந்த பாலி இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கே கலிங்கமாகனும்இ சாகவனும் பௌத்த்தை ஆதரிக்காத மன்னர்களாக இருந்த படியினால் வட இலங்கையில் புதிதாக பௌத்த ஆலயங்கள் தோன்றி இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை இதனால் பௌத்தமதம் வட இலங்கையில் செல்வாக்கு இழப்பதற்கு காரணம் என்று நான் கருதுகிறேன்
கலிங்கமாகன் சாகவன் ஆட்சியை தொடர்ந்து வடக்கிலே வன்னிப்பெரு நிலப்பரப்பில் ஏழு வன்னி மையங்களின் ஆட்சி உருவாக்கியது யாழ்ப்பாணத்தில்
நல்லூரை தலைமையாக கொண்டு ஆட்சி உருவாக்கியது ஆகவே இந்த காலகட்டத்தில்
அவர்கள் இந்துக்களாக இருந்தமையால் பௌத்த ஆலயங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் இல்லை
மேலும் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியில் சுதேச மதங்களுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிததனால் அவர்களுடைய ஆட்சியில் வன்னிப் பிரதேசத்தின் கரையோரங்களில் அல்லது குடாநாட்டின் கரையோரங்களிலும் இந்து ஆலயங்கள்
தோற்றம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே 1812 வரை வன்னிச் சிற்றரசர்களும் உடைய ஆட்சியும் வடக்கே யாழ்ப்பாணத்தில் நல்லூர் ராஜதானினுடைய ஆதிக்கமும் இருந்ததனால் அந்த காலகட்டத்திலே பௌத்தம் செல்வாக்கு இழந்த்து என்பது
என்னுடைய கருத்தாகும்
குருந்தலூரில் ( குருந்தூர்) 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு -
(தினகரன் நேர்காணலின் இறுதி பகுதி நேர்காணல் மு.தமிழ்ச்செல்வன்)
இப்பொழுதும் தமிழ் பௌத்த எச்சங்கள் மிச்சம் இருக்கின்றனவா?
இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதற்கு முன்னால் கி பி 14 நூற்றாண்டில் எழுந்த நம்பொத்த சிங்கள இலக்கியம் அநுராதபுரத்திற்கு வடக்கிலுள்ள பிராந்தியத்தை பட்டணம் என்று குறிப்பிட்டு அந்த தமிழ் பட்டணத்திற்குள் இருக்கக் கூடிய இடங்கள் பற்றிய ஒரு பட்டியலையும் அதிலே குறிப்பிடுகின்றது
அதிலே என தனந்ததீவு நெடுந்தீவு நயினாதீவு கந்தரோடை தெல்லிப்பளை மல்லாகம்
நாகர்கோயில் போன்ற இடங்களை குறிப்பிடுகின்றது
அந்த இலக்கியங்கள் குறிப்பிட்டதற்கு மேலதிகமாக சில பௌத்த எச்சங்கள் வட இலங்கையிலும் வன்னிப் பிரதேசத்திலும் காணப்படுகின்றன ஆகவே கிறிஸ்தவ
சகாப்த ஆதிக்கம் இலங்கையில் பரவலாக பௌத்தம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பௌத்த விகாரைகள் தோற்றம் பெற்றிருக்கலாம் இவற்றுள்
பெரும்பாலானவை இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் சொல்லப்படாதவையாக
இருக்கலாம் ஆகவே வட இலங்கையில் பரவலாக பல இடங்களில் பௌத்த எச்சங்கள்
இருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்தாகும்
குருந்தூர் மலை விடயம் தொடர்பில் தாங்கள் எண்ணப்பாடு என்ன?
என்னைப் பொறுத்தவரை வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்ற மையங்களில் குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி
இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது குருந்தலூர் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த குருந்தலூர் என்பதே தொன்மைமையான தமிழ்
இடப்பெயர் என்பது ஒரு தொன்மையான ஆதாரமாக காணப்படுகின்றது
இந்த குருந்தலூரில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் குருந்தலூர் (குருந்தூர்) அதன் சுற்றாடலிலும் ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு இருந்துள்ளது ஆகவே அந்தப் பண்பாட்டு மக்களில் ஒரு பிரிவினர் பௌத்த மதம் பரவிய பொழுது அந்த மதத்தையும் தழுவியிருப்பார்கள் என்பதில்
ஐயமில்லை
குருந்தலூரை ( குருந்தூர்) பொறுத்தவரை நான் 2010ஆம் ஆண்டு அந்த இடங்களைப் சென்று பார்வையிட்டவன் அந்த இடங்களில் மலைகளிலும் மலையின்
கரையோரங்களிலும் இடிந்த பல கட்டிடங்களின் சிதைவுகள் காணப்பட்டன.அந்த சிதைவுகளை வைத்து பார்க்கும் போது அங்கு பௌத்த ஆலயங்களும் இந்து
ஆலயங்களும் இருந்திருக்கலாம் என்பது தெரிய வருகின்றது
இந்த குருந்தலூர் ( குருந்தூர்) 13 ஆம் நூற்றாண்டில் கலிங்கமாகன் சாகவனுடைய ஆட்சியில் மிக முக்கிய ஒரு நகராக இருந்த்தை சூலவம்சமும்இஇராஜாவெலிய என்ற சிங்க இலக்கியமும் குறிப்பிடுகின்றது.
இந்த இடத்தில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட லூயிஸ் வன்னிக் கையேடு என்று நூலில் தான் அந்த இடத்துக்கு சென்ற பொழுது
அங்கே பௌத்த கட்டிட எச்சங்களோடு இந்து ஆலயத்தின் எச்சங்களையும் கண்டதாகக்
குறிப்பிடுகிறார் அதிலேயே நந்தியோடு உடைந்த நந்தியும் அதனோடு இணைந்த கட்டட அழிபாடுகளையும் தான் கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
1870 போல் என்பவர் தான் இந்த இடத்துக்கு சென்ற பொழுது பௌத்த கட்டிட எச்சங்களுடன் தமிழ் கல்வெட்டுடன் கூடிய இந்து ஆலயங்களின் வழிபாடுகளையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார்ஆகவே இந்த குருந்தலூர் ( குருந்தூர்) என்பது பௌத்த இந்து ஆலயங்கள் தோன்றி வளர்ந்த இடங்களாக இருக்கும் என்பது. என்பது என்னடைய கருத்தாகும் இதனைச் சுற்றி பௌத்தம் பற்றிய பல கல்வெட்டுக்கள்
காணப்படுகின்றன அதில் அண்மையிலுள்ள பெரியகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் தமிழ் வணிகனான விசாகன் பௌத்த
துறவிகளுக்கு புகை கற்படுக்கைகள் கொடுத்தது பற்றி கூறுகின்றது வன்னிப் பிரதேசத்தில் இதுவரை முப்பத்தொன்பது பிராமி கல்வெட்டுகள் இற்றைக்கு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முப்பத்தொன்பது கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது
பௌதத்திற்குரிய பிராகிருத மொழியில் தான் எழுதப்பட்டன அது இலங்கையில்
மட்டுமல்ல பௌத்தம் பரவிய எல்லா நாடுகளிலும் கல் வெட்டு மொழியாக
பிராகிருதமே இருந்தது
ஆயினும் இந்த வன்னிப் பிரதேசத்திலும் இலங்கையின் ஏனைய பகுதியிலும்
பிராகிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்தால் அவற்றில்
தமிழ் வரிவடிவம் தமிழ் மொழிக்கு என்று தனித்துமான வரி வடிவம் தமிழ்
பெயர்கள் தமிழ் உறவுமுறைகள் ராஜா என்ற அரச பட்டத்தை சமமான வேள் என்ற
பட்டம் கொண்ட பெயர்கள் தமிழ் இடப்பெயர்கள் காணப்படுகின்றன
இது ஒருவகையில் பண்டைய காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் தமிழ் பௌத்தம்
இருந்ததற்கு சான்றாக அமைகின்றன.ஆகவே இந்த குருந்தலூர் ( குருந்தூர்)
அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படுகின்ற பௌத்த இந்து ஆலயங்கள்
என்ன மொழி பேசிய மக்களுக்கு உரியவை என்பது அந்த கட்டட அழிபாடுகளோடு
கண்டுபிடிக்கப்படுகின்ற கல்வெட்டுக்களை கொண்டே உறுதிப்படுத்தக் கூடியதாக
இருக்கும்
இந்த குருந்தலூரில் ( குருந்தூர்) 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம்
உண்டு ஆகவே இந்த குருந்தலூர் ( குருந்தூர்) அகழ்வாய்வில் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளை வைத்துக்கொண்டுதான் அது பாலி சிங்கள் இலக்கியங்கள் கூறுகின்ற உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தலாம் என்பது என்னுடைய கருத்தாகும - முற்றும்