யாழ்ப்பாணத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். “ பூநகரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை இன்னும் அகற்றப்படவில்லை எனவும் ஆகவே, இன்றிலிருந்து இன்னும் 2 வாரங்களுக்குள் அந்தப் பண்ணையை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறினால், தாங்களும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் சட்டவிரோதமான பண்ணைகளை நிறுவுவோமெனவும் எச்சரித்தார்.
“அதன் பின்னர் வரும் விளைவுகளை சந்திக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். மேலும் சீனா இதனூடாக கடலை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது என்பதனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் சிவாயிலிங்கம் கூறினார்.