13.மேளம்(04).திருவள்ளுவர் ஆண்டு 2052 ......27.04.2021 கடந்த 19.04.2021 முதல் 23.04.2021 வரை மாலை 6.30 மணி முதல் 9.00 மணிவரை இணையவழிக் குவியம் மூலம் பன்னாடடு தமிழர்களும் பங்கேற்ற நிகழ்வாக சென்னை திசென் அகாடமி நிறுவனத்தின் (ஆளுமைசார் பயிற்சிப் பயிலகத்தின்) ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. இவ்நிறுவனத்தின் பணிப்பாளர் கவிதா அம்மா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
இதில் மறைந்த தமிழினப் பற்றாளர், தமிழ்மொழிப் பற்றாளர் அமரர் விவேக் அவர்கள் மீது அதிக அக்கறையுடைய அன்பர்களும் இணைந்து செற்பட்டு ஒத்துழைப்பு வழங்கி இந்த இரங்கல் நிகழ்வினை உலக அரங்க விவேக் நினைவேந்தல் நிகழ்வாக உயர்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது கனடா தமிழாழி தொலைக்காட்சியில் இறுதி இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.உள்நாட்டு ஒருங்கிணைப்பாளர் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என்று இணைந்து செயற்பட்டனர்! உள்நாட்டு ஒருங்கிணைப்பாளர் விவேக் அவர்களுடைய பிறந்தநாளிற் பிறந்திருந்தமையால் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்டார் என்று நிகழச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றி பாராட்டினர். அதே போன்று இளையவர் மிகவும் தமிழ் மீது தீராத பற்றுறுதி உடையவர் த. தினேச் அவர்கள் வெளிநாட்டு அன்பர்களை இணைத்து சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வரவேற்புரையினை பா.கிறிசோலைட் மிராக்ளின் அவர்கள் வழங்கினார். (இளமகவி, இளமபேச்சாளர், அரக்கோணம்) தலைமையுரை முனைவர் பேரா இரா.கவிதா செந்தில்நாதன்-இயக்குனர்,தி சென் அகாடமி,புதுச்சேரி. இணைப்புரை இளமுனைவர் யோ.கேத்ரின்,மெட்டில்டா- முதன்மை ஒருங்கிணைப்பாளர். வாழ்த்துரை கவிஞர் தாழை. இரா.உதயநேசன்.-பொறுப்பாளர்,தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி, சிறப்புரை சரித்திரநாயகர்.பூநகரிதிரு.பொன்னம்பலம்.முருகவேள் தமிழாசிரியர்,முதல்வர் சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை. பன்னாட்டு சொற்பொழிவுகள்.நன்றியுரை யெ.அர்ச்சனா,சொற்பொழிவு ஒருங்கிணைப்பாளர் அத்துடன் நிர்வாக மேலாளர், ,அர்ச்சனா கலைத்திறன் பயிலகம், நிகழ்வுத்தொகுப்புரை மாணவன் த.தினேச்- டாக்டர் எம். யீ.ஆர். கல்விஇணைந்து ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை.
இவர்களுடன் சொற்பொழிவாளர்களாக திரு. அருந்தவராசா - சுவிற்சர்லாந்து,யெனீவாகலை இலக்கியப்பேரவைத்தலைவர்,இயக்குனர். திரு.முதலியார் செந்துார்ச்செல்வன் சுவிற்சர்லாந்து. திரு.யோ.புரட்சி முல்லைத்தீவு இலங்கை, திரு.சோலைராயா ஆசிரியர்முதுகுளத்துார், இராமநாதபுரம்.செல்வன் திரு.ர.குரு வணிகவியல் மாணவன்,திரு வெண்ணாமலை. செல்வன் திரு.சி.பிரவீன்குமார். எந்திரவியல்(பொறியியல்) மாணவன் சேலம். செல்வன் மறைமொழியான் யபிர்,தரமணி,சென்னை. ஆகியோர் உரையாற்றிய போது உரையாளர்களிற்கு தலைவராக தலைமைதாங்கியதோடு கனடா தமிழாழி தொலைக்காட்சி வழியாக இந்த நிகழ்வை நேரலை செய்தவர் மதிப்பிற்குரிய தமிழ்மணி உயிரவன் அவர்கள். அவர்களின் உரையும் அருமையாக அமைந்திருந்தது உரையாளர்களைத்திறம்பட நெறியாளுகை செய்தார்.
இதே போன்று ஏனைய நாட்களில் இன்னும் பலர் உரையாற்றினர், நிகழ்வுகள் வழங்கினர்,முத்துச்செல்வி அவர்கள் நிகழச்சி நிரலினை தொகுத்து வழங்கினார். அவர்களுக்கெல்லாம் உரிய முறையில் மதிப்பளிப்புதனை சென்னை தி சென் அகடாமி நிர்வாகம் சிறப்பாகச்செய்திருந்தது.
எல்லாருடைய உரையிலும் மரம் நடுகை,பிறருக்கு அவர் உதவிய விதங்கள், விழிப்புணர்வுக்கருத்துகளை அவர் கலையில் கையாண்ட திறமைகள் என்பன சிறப்பிடம் பிடித்திருந்தது.
இம்நிகழ்வில் விவேக் அவர்களின் திறமைகள்,நல்லெண்ணங்களை எடுத்து அலசி ஆராயும்வகையில் பல வகையான நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. கவியரங்கம்,பட்டிமன்றங்கள்,கருத்தாடல்கள்,போட்டி நிகழ்ச்சி யொன்றும் இடம் பெற்றிருந்தது, எல்லா நிகழ்வுகளும் திட்டமிட்டபடிசிறப்பாக நடைபெற்றது இறுதநாள் நிககழ்வில் உலகநாடுளிலிருந்து பலர் கருத்தரை நிகழ்த்தினர். அமெரிக்கா,கனடா,சுவிற்சர்லாந்து,டுபாய்,யேர்மனி போன்ற நாடுகளிலிருந்து கலந்துகொண்டனர். இவ்வாறு தமிழுக்காகவும்,உலகிற்காகவும் செயற்பட்ட பொதுமகன் விவேக் அவர்களுக்கு தமிழகம் சென்னையில் தி சென் அகாடமி நிறவனம் மட்டுமே இத்தகைய பெரும் புகழ் விவேக் அவர்களுக்கு நடத்தியுள்ளது பல ஊடகங்களில் இச்செய்தி வெளியாகியுள்ளது என்பதனை சுவிற்சர்லாந்து குமரிநாடு.கொம் இணையம் வாசகர்களுக்கு அறியத்தருகின்றது.