குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உயிர்வளி எனும் இவ்வளிமம் 1774 இல்தான் கண்டறியப்பட்டது.

22.04.2021....யோசப்பு பிரிசுலி , காரல் வில்கம் கீல் (Joseph Priestley and Carl Wilhelm Scheele)  என்பவர் கண்டு பிடித்தார்.உயிர்வளி எனும் இவ்வளிமம் 1774 இல்தான் கண்டறியப்பட்டது. நம்மைச் சூழ்ந்து உயிர்வளி என்கின்ற தீயதை இருந்தாலும் மேலை நாட்டவர் இக்காலத்தில்தான் அறிவியல் முறைப்படி கண்டறிந்தனர்.  யோசப்பு பிரிசுலி , காரல் வில்கம் கீல் (Joseph Priestley and Carl Wilhelm Scheele) எனும் இருவரே இதனைக் கண்டறிந்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர். இதரத் தீயதையை (HgO) வெப்பமூட்டும் வேளையில்தான் இவ்வளிமத்தை இவர்கள் கண்டறிந்தனர். திரு  யோசப்பு பிரிசுலி இதற்கு எரிப்பாற்றல் வளி என்றும் திரு காரல் வில்கம் கீல் தீ வளி என்றும் பெயர் வைத்தனர்.   ஆனால் அந்தோனி இலவோசியர் (Antoine Lavoisier) என்பவர்தான் இதற்கு ஆக்சியன் oxygen எனப் பெயர்  சூட்டினார்.

இந்த உயிர்வளி அல்லது தீயதை என்கின்ற வளிமத் தனிமத்தின் அணு எண் 8. இதன் அணு எடை 15.9994 ஆகும். இதன் உருகு நிலை -218.79°C நூற்றியமாகும் . கொதி நிலை-182.95°C நூற்றியம். புற வெப்ப நிலையில் இது வளிம நிலையில்தான் இருக்கும். இது காற்றில் 21 விழுக்காடு நிறைந்துள்ளது.

உல்>அல்= கூர்மை / வெப்பப் பொருள் வேர்.

அல்>அள்>அடு= வெப்பம்.

அல்>அடு>அட்டு= வெப்பம்.

அட்டாலும் பால் சுவை குன்றாது.

உல்>அல்= கூர்மை.

அல்>அக்கு= கூர்மை, நுண்மை.

அக்கு>அஃகி= கூர்மை.

அஃகி அகன்ற அறிவு...~ குறள்.

அல்>அள்>அட்கு>அக்கு>அக்கி= வெப்பத்தால் உருவாகும் நோய்.

அக்கு>அக்கி>அக்கினி= தீ.

அக்கினி>>வடச்சொல் எனச் சொல்லப்பெற்றாலும் அதன் மூலம் தமிழே .

அல்>அக்கி> acid.

Acid>> ac = sharp.

gaseous chemical element, 1790, from French oxygène, coined in 1777 by French chemist Antoine-Laurent Lavoisier (1743-1794), from Greek oxys "sharp, acid" (from PIE root *ak- "be sharp, rise (out) to a point, pierce") + French -gène "something that produces" (from Greek -genes "formation, creation;" see -gen).

Intended to mean "acidifying (principle)," it was a Greeking of French principe acidifiant. So called because oxygen was then considered essential in the formation of acids (it is now known not to be). The element was isolated by Priestley (1774), who, using the old model of chemistry, called it dephlogisticated air. The downfall of the phlogiston theory required a new name, which Lavoisier provided. Oxygen-mask is attested from 1912.

என இணையத் தள ஆங்கில வேர்ச்சொல் அகரமுதலி விளக்கம் அமைந்துள்ளது.

இந்தோ ஐரோப்பிய வேர்ச்சொல் அகர முதலியின்  விளக்கம் :

ak- Sharp. (Oldest form *hzek-, colored to *hjak-) Suffixed form *ak-ya- a. EDGE; SELVAGE, from Old English ecg, sharp side, from Germanic *agjā; b. EGC2 from Old Norse eggja, to incite, goad, from German *agian. 2. Suffixed form *ak-u-. a. EAR?, from ou English æhher, ëar, spike, ear of grain, from German *ahuz-; b. ACICULA, ACUITY, ACULEATE, ACUMEN ACUPUNCTURE, ACUTE, AGLET, AGUE, EGLANTI from Latin acus, needle; C. ACEROSE, from Latin ac chaff. 3. Suffixed form *ak-i-. ACIDANTHERA, from Greek akis, needle. 4. Suffixed form *ak-men-, stone sharp stone used as a tool, with metathetic variant *ka-men-, with variants: a. *ka-mer-. (i) HAMMER from Old English hamor, hammer; (ii) HAMERKOP from Middle Dutch hamer, hammer. Both (i) and (ii) from Germanic *hamaraz, hammer. b. *ke-men. (probable variant). HEAVEN, from Old English heofon, hefn, heaven, from Germanic *hibin-, “the stony vault of heaven,” dissimilated form of *himin-. 5. Suffixed form *ak-onā-, independently created in: a. AWN, from Old Norse ögn, ear of grain, and Old English agen, ear of grain, from Germanic *aganā; and b. PARAGON, from Greek akonē, whetstone. 6. Perhaps suffixed form *ak-en-i- (although the details of the formation remain obscure). ANACONDA, from Sanskrit aśanih, missile, thunderbolt. 7. Suffixed lengthened form *āk-ri-, ACERATE, ACRID, ACRIMONY, EAGER'; CARVACROL, VINEGAR, from Latin ācer, sharp, bitter. 3. Suffixed form *ak-ri- (in further suffixed Prototalic form akritho-, although the details of the formaion are obscure): ACERBIC, EXACERBATE, from Latin cerbus, bitter, sharp, tart. 9. Suffixed (stative) form ak-e-. ACID, from Latin acēre, to be sharp. 10. Suf xed form *ak-ēto-. ACETABULUM, ACETIC, ACETUM; STER, from Latin acētum, vinegar. 11. Suffixed form ak-mä-. ACME, ACNE, from Greek akmē, point. 12. uffixed form *ak-ro-. ACRO-; ACROBAT, ACROMION, om Greek akros, topmost. 13. Perhaps suffixed form ik-t-in Greek aktīs (stem aktīn-), ray; see nekw-t-. 14. Suffixed o-grade form *ok-su- AMPHIOXUS, OXAS, OXYGEN, OXYTONE, OXYURIASIS, PAROXYSM, from Greek

oxus, sharp, sour. [Pokorny 2. ak- 18, 3. Kem 566]

இதில் தமிழின் கூர்மையைக் குறிக்கும் அக்கு எனும் சொல்லோடு இதனை நாம் பொருத்திப் பார்க்க முடியும்.

தமிழின் அல்> அக்கு இங்கு வேர் தொடர்பு கொண்டுள்ளது என்பதை வெளிப்படையாகவே அறிய முடிகின்றது.

கூரிய வெப்பம் குத்தும் குத்துவது எரிக்கும் .சூரியன் எனும் சொல்லும் சுல் எனும் குத்தல் பொருளில் வந்த வேர்ச்சொல்லாலானதே.எனவே, உல்>அல்>அள்>அட்டு= வெப்பம்,

அடு>அட்டில்

அடு>அடுப்பு

அல்>அக்கு>அக்கி= வெப்பம்

அல்>அஃகு= கூர்மை, நுண்மை

உல் > அல் எனும் தமிழ் வித்திலிருந்தே oxygen, acid முதலான ஆங்கிலச் சொற்கள் உருவானதாக நமக்குப் புலப்பட்டது.

Oxygen எனும் சொல்லுக்கு நாம் உயிர்வளி, தீயதை எனும் அருந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகின்றோம்.

உயிர்கள் உயிர்க்க இவ்வளி உயிர்ப்பானதாகையால் உயிர்வளி என்றும் தீய்க்கும் தன்மையதால் தீயதை என்றும் நாம் கூறினோம். தீயதை இன்றி தீ எரியாது. இத்தீயதை குறிப்பிட்ட மாழைகளையும்( உலோகங்களையும்) தீய்க்கும்.

FrO==> Ferum oxyde ==> இரும்புத்தீயதை ஆகும்.

உண்ணும் உணவு தீய்க்கப் பெற்றுதான் செரிக்கிறது. இக்கால் ஆற்றலும் வெளிப்படுகிறது. எனவே உயிர்வளி , தீயதை முதலான அருந்தமிழ்ச் சொற்கள் அறிவியல் அருந்திறல் வல்லரால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் இத்தகு இயல்பினை உணர்ந்தே பூதியல் அறிஞரான இல. க. இரத்தினவேல் அவர்கள் இதற்குத் தீயதை எனும் அருந்தமிழ்ப் பெயரைச் சூட்டினார். இச்சொல் இதனால் உயிர்கள் ஏன் உயிர்க்கின்றன எனும் அறிவியல் உண்மையையும் மாழைகளின் மீது இவ்வளிமத்தால் ஏற்படும் வினைப்பாட்டையும் தெளிவுறுத்துகின்றது.

தீய்க்கும் தன்மையதால் oxidation எனும் சொல்லைத் தீச்சலாதல் எனலாம். Oxidants தீச்சலிகள் ஆகும். Antioxidants தீச்சலன்றிகள் ஆகலாம். Anti என்பது அன்றி எனும் தமிழின் திரிபே. (அல் > அன் > அன்றி )

சமைக்கும் உணவு தீ கூடுதலாகிப் போனால் அடிபிடித்து விடும். அல்லது தீய்ந்து போய் விடும். தீய்தல், தீஞ்சல் முதலான சொற்கள் மக்கள் வழக்கிலேயே உள்ளன. உணவு தீய்க்கப்பெற்றதால் ஏற்பட்ட விளைவே தீய்ஞ்சல். இது oxidation தீய்த்தலின் விளைவேயாகும். இச்சொற்கள் வழி தீயதை சேர்ந்த மாழையின் சேர்மங்களுக்கும் தீயதை சார்ந்த வேதியியல் பொருள்களுக்கும்  நாம் சொல்லமைக்க முடியும். உயிர்வளி எனும் சொல்லின் வழி இத்தகு சொற்களுக்கு உயிர்  எனும் அடிச்சொல்லைச் சேர்ப்பதை விட தீய்த்தல் வினையால் அமைந்த தீயதை எனும் சொல்லின் வழி வந்த சொற்களை ஆள்வதே சிறப்பு.

உயிர்வளி உயிர்கள் உயிர்க்க இன்றியமையாதது. உயிர்வளியால் உயிர் இயக்கத்தைச் சுட்டுதற்கு உயிர்வளி இடம் நோக்கியே பொருந்துவதாகும்.  உயிர்வளியால் உயிர்ப்பு, உயிரியர் எனும் சொற்கள் நிகண்டுகளிலும் கழக இலக்கியங்களிலும் ஆளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திவாகர நிகண்டில்

“வாதம் கூதிர் வங்கூழ் கால் வளி உயிர்ப்பே காற்றின் பெயர்” ( 1:37 ) என நேரடியாகவே உயிர்வளி உயிர்ப்பு எனும் தனிச்சொல்லாகவே குறிப்பிடப்படுகின்றது.

நம் கழக இலக்கியங்களில் உயிர் மூச்சு உயிர் எனும் தனிச்சொல்லாலேயே பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றது.

“ ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர்” ( நற்றிணை : 236:3)

உயிர் வாழ காற்று இன்றியமையாதது. அக்காற்றிலும் உயிர் வளி மிகமிக முதன்மையானது.  இதன் நுட்பங்களை  இன்றைய அறிவியல் விரித்துரைக்கின்றது.

இது போன்ற சொற்களை மேலும் ஆய்வோம் அறிவியல் தமிழை உயிர்ப்பிப்போம்.

கலைசொற்கள் :

Antioxidants தீச்சலன்றிகள்

Oxidants தீச்சலிகள்

Anti  அன்றி

FrO==> Ferum oxyde ==> இரும்புத்தீயதை

Celsius   நூற்றியம்

Mercury oxide இதரத் தீயதை (HgO)

Atomic Weight அணு எடை

Boiling Point கொதி நிலை

Melting Point உருகு நிலை

இரா.திருமாவளவன்