குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிற்சர்லாந்து புதிய தளர்வினை 19. 04. 2021 முதல் அறிவித்துள்ளது

14.04.2021....01.04.மேழம்  திருவள்ளுவராண்டு2052.... மேழத்திருநாள் கீழறை இந்து வருடம் பிறந்திருக்கும் இந்நாளில் (14.04.21) சுவிற்சர்லாந்து அரசு தனது புதிய மகுடநுண்ணி தளர்வினை அறிவித்துள்ளது.
இதன்படி 19. 04. 2021 முதல் இப்புதுத் தளர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ளன:மீண்டும் திறக்கப்படுகின்ற உணவகங்கள் மற்றும் மதுநிலையங்கள் வெளித்திடலில் மீண்டும் இயங்கலாம்.  பொழுது போக்கு- மற்றும் பண்பாட்டுநிறுவனங்கள் (உள்ளரங்கிலும்) திறக்கப்படும் விளையாட்டு அரங்குகளும் (உள்ளரங்கிலும்) திறக்கலாம்.
நிகழ்வுகள்
ஆகக்கூடியது 15 ஆட்கள் பங்கெடுக்கும் பொது நிகழ்வுகள் நடைபெறலாம்
பார்வையாளர்களுடன் நடைபெறும் நிகழ்வுகள் ஆகக்கூடியது 50 மக்களுடன் நடைபெறலாம், வழமையைவிடவும் இடத்தின் பரப்பளவு மூன்று மடங்கு அதிகமானதாக இருக்க வேண்டும்.
வெளியரங்கு நிகழ்வுகள் ஆகக்கூடியது 100 ஆட்களுடன் நடைபெறலாம் அதன் பரப்பளவும் 3மடங்கு பெரியதாக இருத்தல் வேண்டும்.
உயர்கல்லூரிகளில் மீண்டும் நேரடிவகுப்புக்கள் நடைபெறலாம். ஆகக்கூடியது 50 மாணவர்கள் பங்கெடுக்கலாம்.  இது வளர்ந்தவர்கள் கல்விக்கும் பொருந்தும்.
உடலைத் தீண்டாத விளையாட்டுப் போட்டி மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் ஆகக்கூடியது 15 ஆட்கள் பங்கெடுக்கும் வகையில் நடத்தப்படலாம்.
இம்முடக்கங்கள் தொடர்கின்றன:
தனிநபர்கள் உள்ளரங்கில் ஆகக்கூடியது 10 ஆட்களே ஒன்றுகூடலாம்
உணவகங்கள், மதுநிலையங்கள், நடனநிலையங்கள், குளியல்நிலையங்கள், நீச்சல்தடாகம் உள்ளரங்கில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
வீடுகளில் இருந்தபடி தொழில்செய்ய வாய்ப்புள்ளோர் அதனைத் தொடர வேண்டப்படுகின்றது.
தொடர்ந்தும் சுகாதார முகவுறை அணிதல் எனும் கட்டாயம் தொடரப்படுகின்றது.
நோய்த்தொற்றினை தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ள முன்மொழியப்படுகின்றது.
உணவகம்
வெளியரங்கில், வெளித்திடலில் உணவங்கள் இயங்க எதிர்வரும் 19.04.21 முதல் சுவிஸ் அரசு ஒப்புதல் அளிக்கின்றது. விருந்தினர் எழுந்து திரிதல் ஆகாது. இருக்கையில் இருத்தல் கட்டாயம் ஆகும். உணவு உண்பதற்கு மட்டுமே முகவுறையைக் கழற்றிக்கொள்ளலாம். அதுபோல் விருந்தினர் தமது தகவலை வருகைப்பதிவில் பதிவுசெய்வது கட்டாயம் ஆகும்.
ஒருமேசைக்கும் இன்னொரு மேசைக்கும் இடையில் 1.5மீற்ரர் இடைவெளி பேணப்படவேண்டும். நடனநிலையங்கள் திறக்கப்படலாகாது. வெறும் வெளியரங்கு வியாபாரம் தமது வரவினை ஈடுசெய்ய முடியாது என விருந்தோம்பல் நிறுவனங்கள் எண்ணினால் அவர்கள் தொடர்ந்தும் அரசு அளிக்கும் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பொதுநிகழ்வு
நிபந்தனையுடன் ஆகக்கூடியது 100 ஆட்கள் வெளியரங்கில் பங்கெடுக்கும் வகையில் நிகழ்வுகள் நடைபெறலாம். உள்ளரங்காயின் ஆகக்கூடியது 50 மக்கள் பங்கெடுக்கும் பொது நிகழ்வுகள் நடைபெறலாம். இவை விளையாட்டு அரங்கு, திரையரங்கு, மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். உள்ளரங்கில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுத் துறைசார் செயற்பாடுகளுக்கும்  போட்டிகளுக்கும் இது பொருந்தும்.  அரங்கின் மொத்த அளிவில் 3ல் ஒருபங்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம். அப்போதும் 1.5 மீற்ரர் இடைவெளிபேணப்படவேண்டும். அதுபோல் எப்போதும் முகவுறை அணிந்திருக்க வேண்டும். இடைவெளிகள் அறிவிக்கப்படலாகாது.
விளையாட்டும் பண்பாடும் வளர்ந்த வயதுடையோருக்கு
இம்முறை வளர்ந்த வயதுடையோர்களுக்கும் சிறு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக்கூடியது 15 ஆட்டுகள் குழுவாக ஒன்றாக அல்லது இடைவெளிபேணித் தனித்தனியாக பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதே நிபந்தனைகளுடன் விளையாட்டுப்போட்டிகளும் நடத்தப்படலாம். 1.5 மீற்ரர் இடைவெளி பேணவேண்டும். முகவுறை அணிய வேண்டும், அயர்வுப் பொறுதிறன்பயிற்சிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.
உயர்கல்லூரிகள்
தற்போது முதன்மை மற்றும் இரண்டாம் நிலைப்பாடசாலைகளில் மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வந்தது. புதிய தளர்வின்படி உயர்கல்விக்கூடங்களிலும் ஆகக்கூடியது 50 மாணவர்கள்வரை ஒன்றாக கற்கையினை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. அரங்கின் அளவு மும்மடங்கு பெரியதாக இருக்க வேண்டும். இடைவெளி பேணுவதுடன் முகவுறை அணியப்பட வேண்டும்.
சுவிற்சர்லாந்து அரசின் விளக்க உரை
சுவிற்சர்லாந்து அரசைப்பொறுத்தவரை தற்போது மகுடநுண்ணி (கோவிட்-19) தொற்றுச்சூழல் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது. இருந்தபோதும் மேற்காணும் தளர்வுகளை தாங்கிக்கொள்ளும் வலுவில் சுவிற்சர்லாந்து உள்ளதாக நோய்த்தொற்றுத்தடுப்புநிபுணர்கள் அளித்த முன்மொழவின் அடிப்படையில் அறிவிக்கின்றது. எப்போதும் அனைவரும் முகவுறை அணிவதுடன் போதியளவு இடைவெளியைப் பேணவும் சுவிஸ் அரசு வேண்டுகின்றது. தொடர்ந்தும் பரவலாக தடுப்பூசி இடுவது எமது இடரை விரைந்து போக்கும் எனவும் சுவிஸ் நம்புகின்றது. நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய ஆபத்து உள்ளவர்கள் விரைந்து தடுப்பூசி இட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இடர்நேர்வுக் கணிப்பு
சுவிற்சர்லாந்து அரசிற்கு நன்று தெரியும் தற்போது மகுடநுண்ணித் தொற்றின் நோயால் மருத்துவமனைகளில் வளர்ந்த வயது அடைந்தவர்கள் மட்டுமல்ல இளவயதினரும் மருத்துவம் பெற்று வருகின்றார்கள் என. தற்போதைய அறிவிப்புக்கள் தற்போது நிலவும் சூழலைக்கணக்கில்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் வழங்கள் இறுக்கடையும் அளவிற்கு தொற்று அதிகரித்தால் நாம் அதற்கேற்ப முடக்கத்தினையும் எதிர்கொள்ளவேண்டிய ஆபத்து உள்ளது. 'ஆகவே நாம் அனைத்து தரப்பு மக்களையும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், விரைந்து தடுப்பூசி இட்டுக்கொள்ளவும் வேண்டுகின்றோம்" என சுவிஸ் அரசின் சார்பில் வேண்டுகை முன்வைக்கப்பட்டது.
தொகுப்பு: சிவமகிழி
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.