குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்திய ஐரோப்பிய மொழியினம்:

15.மீனம்.தி.ஆ.2052......8.03.2021...கிரேக்கம், செர்மனியம், உருசியன், செல்டிக் போன்ற மொழிகள் இவ்வினத்தின் கீழ் சொல்லப்படு கின்றன. இவை கி. மு. 3000ஆண்டுகளில் அப்பகுதியில் பேசப்பட்ட மொழிகளாகும். இம்மொழிக் குடும்பத்தில் இந்திய என்ற சொல் எவ்வாறு இனணக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்துள்ளார், இந்நிய மொழியின் தாக்கம் அம்மொழிகளில் உணரப்பட்டதாலேயே எனலாம்.

 

இந்திய மொழி என்று அவர்கள் கூறுவது தமிழ்மொழியையே என்பது தெளிவு.

இந்திய-- ஐரோப்பிய மொழிக்கு மூலமொழிஎது?

அது முற்காலத்து இந்திய ஐரோப்பிய மொழி(Proto-Indo -European)  என்று பொதுவாக  சொல்லிவைத்தனர்.

அந்த  Proto-Indo  மொழி என்பது தமிழே என்பதால், இந்திய-- ஐரோப்பிய மொழிச்சொற்களில் பெரும்பாலானவை தமிழ் மூலத்தையே கொண்டுள்ளன.

ஆனால், மூொழியியல் ஆய்வாளர்களோ, இந்திய மொழி சமஸ்கிருதமே என்றும், அதுவே இந்தியாவின் தொன்மையான  மொழி என்றும் தவறாக கருதினர் என்பதால் சமஸ்கிருதமும்--ஐரோப்பியமொழியும் கலந்ததே இந்திய-- ஐரோப்பிய மொழி கூறுவாராயினர்.

ஆதாரம் :1.Table of Nations:Dictionary Of Bible.

2.The Cambridge Encyclopedia.

சமற்கிருத மொழியிலுள்ள தமிழ்மொழியின் தாக்கம், 60சதவீததிற்கு மேலான தமிழ்ச்சொற்களை தன் வயப்படுத்திகொண்ட தன்மை, சிந்துவெளித்தமிழும் ஆரிய நாடோடி மொழியும் இனணந்ததே சமற்கிருதம் என்ற உண்மை மேலைநாட்டாருக்குத் தெரியவில்லை, சமற்கிருதமும் இந்தியாவின் தொன்மை மொழி என்றனர் ஆரியர்கள்.

சமற்கிருதம் என்பதற்கு செம்மைப்படுத்தப்பட்ட மொழி என்பதே பொருளாகும்.

குறி என்றதமிழ்ச்சொல்லுக்கு வரிவடிவம் என்ற சிறப்புப்பொருளும், மொழி என்ற பொதுப்பொருளும் உண்டு.

'குறி 'என்ற தமிழ்ச்சொல்லே 'க்ரு 'என்று வடமொழியிலும்,' கிரபோ' என்று கிரேக்கத்திலும், 'கிராஃப் என்று ஆங்கிலத்திலும் திரிந்தது.

செம்மைப்படுத்தப்பட்ட மொழி என்ற பொருளும், செம்மை +குறி எனும் தமிழ்ச்சொற்களே 'சமற்க்ருத 'என்று திரிபுபட்டது.

ஆரியன், வேதம், இரிக்கு போன்ற வடமொழிசொற்கள் யாவும் தமிழின் மூலத்தையும் வேரையும் கொண்டவைகளே.

ஓரினத்தின் பெயரைக் குறிக்கும் அடிப்படைச்சொல்லே (ஆரியன்) தமிழ்ச்சொல்லாக இருக்க,  ஆரியம் தமிழினும் மூத்தமொழி என்பது நகைப்பிற்குரியது.

பாவாணர், ஆரிய மொழியில் 40சதவீதம் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று கூறினார்.

இன்னும் உன்னி உள்ளே சென்று பார்க்குங்கால் 60சதவீதம் தமிழ்ச்சொற்களாகவேயுள்ளன.

ஆரியரது இந்திய நுழைவு கி. மு. 2000க்குப் பிறகே என வரையறை செய்யப்பட்ட நிலையில் ,இந்தியாவின் மூத்தமொழி சமற்கிருதமே என்று மேலை நாட்டு அகரமுதலிகள் கூறிவந்தனர், முழுப்பூசணியை எத்தனை நாளக்கு மறைக்கமுடியும் தற்போது வெளிவந்தது, அந்த அகரமுதலிகளின் அறியாமையையே காட்டுகின்றது.

ஆதாரம் :

தமிழர் வரலாறு :

ஞா. தேவநேயப் பாவாணர், முன்னுரை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.