குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மயிலாடுதுறையில் தமிழ் இணையவழி உலகசாதனை! முனைவர் லதாசந்துரு அம்மா அவர்கள் நிகழ்த்தினார்.

06.மீனம்.தி.ஆ2052...19.03.கி.ஆ2021.......... உலகசாதனை நிகழ்வானது தேனமுதத் தமிழ் மக்கள் நல அறக்கட்டளை மயிலாடுதுறை அரசு தன்னாட்சி  பதிவு எண் 14-2020  நிறுவனத்தலைவர் சாதனைப்பெண்மணி முனைவர் லதா சந்துரு மயிலாடுதுறை 609001 0503. இம்முகவரியில்  மாலை 6மணிக்கு தொடங்கப்பெற்று 18.03.2021 காலை 7 மணி 23 நிமிடம் வரை மொத்தம் 301 மணி 23 நிமிடங்கள்  பன்னாட்டு உலகசாதனையானது தமிழ்நாடு மயிலாடுதுறையில்  நிகழ்ந்துள்ளது. லதா சந்துருஅம்மா அவர்களின் திறமையான ஏற்பாட்டில் கீழ்க்காணும் அமைப்புகளை யும் ஒருகிணைத்து அம்மா அவர்கள் இயக்குனராக இருந்து திறமையாக நெறிப் படுத்தி இந்த உலகசாதனையை நிகழ்த்தியுள்ளார். அன்று  பாரதிகண்ட புரட்சிப் பெண்ணாக  இன்று தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரை உலகத்தமிழர்கள் பாராட்டிய வண்ணம் உள்ளார்கள். இந்திய சாதனைக்குழுவும் அதனுடன்  யோகிபதிப்பகமும் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சாத னையானது தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தி முத்தமிழ் நிகழ்வாக இடம்பெற்றது.  சங்ககாலத்தில் மதுரையில் கடைச்சங்க நிகழ்வுகள் போன்று  இன்று கணினி வழியே  உலகத் தமிழர்களை  இணைத்து அருமையாக இத் தமிழ்மொழி பற்றிய நிகழ்வானது உலகசாதனையாக நிகழ்ந்துள்ளது.

உலகத்தமிழ் மாணவ மணிகளையும், இளைய தலை முறையினரையும் இணைத்து முனைவர்  லதா சந்துரு அம்மா அவர்கள்  தமிழ்த்தேசியம் உருவாகும் வண்ணம் உலகத்தமிழர்களை இணைத்து சாதனைபடைத்துள்ளார்!   இடையறாது பன்னிரெண்டு நாட் கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இங்கிலாந்து வாழ் ஈழத் தமிழர் திரு மதிப்பிற்குரிய முன்னாள் கணினித்துறைப் பேராசிரியர் சிவாபிள்ளை ஐயா முதன்மை வகித்து ஒருங்கிணைத்திருந்தார்.

தமிழ் பற்றி பலவிதமான உரை யாடல்கள் ,பல தலைப்பு களில் உரைகள் எனப்பயன் பாடுடைய முத்தமிழ் நிகழ்வு கள் இந்த உலகசாதனையில் இடம்பெற்றது. 5 கண்டங்களிலிருந்தும், பலநாடுகளிலிருந்தும் இணைந்து தமிழை உயர்த்தினர்.

நிகழ்வில் திரு.சரவணன், திரு.வெங்கடேசன் இணந்து இரட்டையர் போல் கணினித்தொழில் நுட்பத்திறனுடன் பணியாற்றினர்,இவற்றிற்கும் திரு.சிவாபிள்ளை ஐயா அவர்கள் தந்தைபோல் பணியாறறினார்.இவர்கள் இதற்கு முதலே பல உலகசாதனைகளை இந்திய  அளவிலான சாதனைகளைச் செய்திருந்தனர். உலகசாதனைகளையும் செய்திருந்தனர்.

அதேபோன்று கடந்த மாதம் திருக்குறள் மாநாடு நடத்தி உலக சாதனை நிகழ்த்திய சையிலாமேரி அவர்களும் இணைந்து பணியாற்றினார், கலாநிதி திரு. அசோகன் அவர்கள் பின்னுாட்ட வித்தகனாகவும் நயம்மிக்க விதத்தில் கொடுத்துக்கொட்டிருந்தார். அருமை.  இன்னும் பலரும் பின்னுாட்டாம் கொடுத்திருந்தனர். அசோகன் ஐயாவின் பின்னுாட்டத்தை எல்லோரும் விரும்பிக்களித்தனர். அவரின் இலக்கிய உரையில், தமிழர் வாழ்வின் பண்பாடுகள் என்ற தொடருரை மிகச்சிறப்பாக இருந்தது,யோதி மீனாட்சியம்மா, பூங்கொடியம்மாபோன்ற பலரின் கட்டுரைகள் பேச்சுகள் எல்லாம் அருமை.

கட்டுரைகள், பேருரைகள், இலக்கியத் தொடருரைகளென மதுரைக்கடைச்சங்கமோ! என்று எண்ணும் விதம் நிகழ்வுகள் நடந்தன. காவல்துறை அதிகாரி கோமளா அவர்களின் கருதுரைப்புகளும் கவிஞர் செல்வ சேதுராமன் அவர்களின் அருமையான கவியரங்கங்களும் தேனாக  ஊற்றெடுத்தன,  இலங்கையில் பல்கலைக் கழகங்களில் கற்றவர்கள், உயர்நிலை கற்றவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழியையும், கலைகளையும்  கற்ற மாணவர்களாய் இருந்தும் தமது கலைகளைத், திறமைகளை வெளிகொண்டுவர முயன்ற மாணவர்களும் கற்றவர் அவையான உலக அரங்கில் நிகழ்வுகளை நிகழ்த் தினார்கள்.

நாள்தோறும் பட்டிமன்றங்கள்.தேனைவிடக்,கரும்பைவிட இனித்தன கவியரங்கம்,கருத்தரங்கங்கள், கட்டுரைகள், கலந்துரையாடல்கள்  நிகழ்ச்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர் நிலை பற்றிய கருத்தரங்கம் இடம் பெற்றது. திருமுறை ஓதல்கள் என முத்தமிழ்  நிகழ்வுகளாகவே நடைபெற்றது. இறுதி நாள் நிறைவாக நேற்றைய நாள் கனடா உயிரவன் சுவிற்சர்லாந்து முதலியார் செந்துார்ச்செல்வன், சுவிற்சர்லாந்து ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேள் அவர்களும்  போன்றோர் கலந்து கொண்டு கலந்துரையாடி வாழ்த்துரைத்து கருத்துரைத்து இந்த 301 மணி 23 நிமிடநேர உலக சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து சிவாபிள்ளை ஐயாவின் ஒருங் கிணைப்பில் மாணவிகளின் கவிகள், பாடல்கள், திருக்குறளும், உரைகள் என்பனவும் சிவாபிள்ளை ஐயாவின் தொழில் நுட்பத்துடன் புதிய முறையில் தமிழ் கற்பிக்கலாம்  என்ற மாதிரிக்கற்பித்தல் முறையினை இணைய வழிக்காட்சியில் காணக்கூடியதாக இருந்தது, அது மிகவும் சிறப்பானதாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. சுவிற்சர்லாந்திலிருந்து  ஆசிரியர் பூநகரி பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் சுவிற்சர்லாந்தில் தமிழ்க்கல்வி என்ற தலைப்பில் ஐரோப்பிய தழுவலைத் தொட்டு தாய்மொழிக் கல்வி பற்றி 20 நிமிடங்களில் கணினிக்காட்சிகளுடன் கருத்துப்பதிவு செய்திருந்தார். புதுச்சேரிப் பேராசிரியர் கள், ஆசிரியர்கள் சிறப்பாக இருந்தது என்று பாராட்டி இருந்தார்கள்.

ஆசிரியர் திரு.பொ.முருகவேள் அவர்களின் ஏற்பாட்டில், கனடா நாட்டிலிருந்து ஆசிரியை ஞானேசுவரிபாசுகரன் அவர்கள்  பலரும் பாராட்டும் விதமாக மொழிபற்றி சிற்றுரையொன்றினையும், பாரதியார் பாப்பா பாட்டு மாதிரிக் கவிதையொன்றினையும் வழங்கிப் பாராட்டினைப் பெற்றிருந்தார்.அத்துடன் கனடா பல்கலைக் கழகத்தில் மொழியியல் கற்கும் சயந்தாபாசுகரன் அவர்கள் வல்லினமும்,மெல்லினமும் எப்படி உண்டியிலிருந்து எழுந்து வாயால் ஒலிக்கப்படும் என்பதனை  விளங்க வைத்து மிகுந்த பாராட்டினைப் பெற்றிருந்தார். இவ்வாறே பரிசிலிருந்தும், தமிழகத்திலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் மாணவிகள் சிறப்பான முத்தமிழ் நிகழ்சிகளை  வழங்கியிருந்தனர். சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவர்கள் கவியரங்கம் ஒன்றினை வழங்கி எலல்லோராலும் கவரப்பட்டனர். இக்கவி நிகழ்வின் தலைவியாக மு.அருளினி செயற்பட்டார், கவிகளை ம.மாதுளாவும், சி.இறம்மியா, மு.அம்பலன்  அவர்களும் கவியுரைத்தனர்.

சுவிற்சர்லாந்து திருமுதலியார் செந்துாரன் அவர்களும். கனடா உயிலவன் அவர்களும்,திரு.சிவாபிள்ளை ஐயா அவர்களும்,பொ.முருகவேள் அவர்களும் மற்றும் தமிழக மயிலாடுதுறை, பாண்டிச்சேரிக் கல்வியாளர்களுடன் எளியமுறையில் சிறப்பாகக் கலந்துரையாடினர். இதில் செந்துாரன் அவர்களின் பல்குரல் நிகழ்வுகளும் உரையாடலும் மக்களைகட்டிப் போட்டது. உயிலவன்  தமிழ்மொழிபற்றிய பல தகவல்களை தந்திருந்தார்.இவ்வாறே பல பெண்கள், ஆண்கள், மாணவிகள் நிகழச்சிகளைக் கொடுத்திருந்தனர் இதில் இளையவர்களான சென்னையில்  எம்.யீ.ஆர் மருத்து வக்கல்லுாரியில் கற்கும் இரா.தினேசு அவர்களும், மதுரை சேதுபதி அவர்களும் சிறப்பான உரைகளை வழங்கியிருந்தனர் இவர்கள் போன்று பலர் சிறப்பாக  உரைகளை வழங்கினர்.. இதில் தினேசு அவர்கள் தமிழின் சிறப்புகளை  அடுக்கினார் அது தனியழகாக இருந்தது. இறுதிக்கணம் வரை துடிப்பாக இருந்தார்.  நிறைவாக இறுதிநாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக பாராட்டுரைகள், வாழ்த்து உரைகளு டன்  பிரியமுடியாமல் அன்புதோய்த உள்ளங்களுடன் உணர்ச்சிகள் பொங்கிய நிலையில்விடை பெற்றுக் கொண்டார்கள். இதில் பெயர்குறிப்பிடாத இன்னும் பல கல்வியாளர்களின் உரைகள்இடம்பெற்றது 12நாள் நிகழ்வின் முழுபெயர்ப்பட்டியலையும் இடுவது கடினமானது. இதில் இணைந்து குழுமமாக செயற்ப்ட்ட எல்லோருக்கும் கனதிமிகு நன்றிகள் எல்லாம் தமிழின் உயர்வுக்கானதே.வாழ்க தமிழ்!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.