07.02.2021.... தமது சொந்தநாட்டில் (இலங்கைத்திருநாட்டினில்) தமிழர்கள்,இசுலாமியர்கள் உரிமைகள் பறிகப்பட்டு இரண்டாம் தரமக்களாக இலங்கையில் 73 ஆண்டுகளாக நடத்தப்பட்டுகின்றார்கள். சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம்(நாட்டுப்பண்) பாடப்பெற்றுள்ளது! இதுவே இனத்துவேசத்தின் அடையாளம் ஆகும். தமிழின அழிப்பின் செய்ற்பாடுகள் பல விதமாக நடக்கின்றது.
தொல்லியல் திணைக்களத்தினால். அரச நிர்வாகப்பொறி முறைகளால்,குடியேற்றங்களால், காணிகளை அபகரிப்பதால், இராணுவத்தை தமிழர் பகுதிகளில் நிலை நிறத்தவதால் இவற்றை இலகுவாக நடைமுறைப் படுத்த பயங்கரவாத தடைச்சட்டம் என்ற ஒன்றை அரசு நடைமுறையில் வைத்தள்ளது இது இலங்கை யில் தமிழர் அழிப்புச்சட்டம் என்றே சொல்லலாம். 04.02.2021 இலங்கையின் விடுதலை நாளுக்காக சனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில் 107 சிங்களக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர் இதில் இசுலாமியர்களோ,தமிழர்களோ இணைக்கப்படவில்லை (விடுதலையாக வில்லை) இத்தகைய இனத்துவேச அரசுகளின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அறவழிப்போராட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எழுச்சி யுடன் நாளை யாழப்பாணத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூட இருக்கும் நேரத்தில் சமூக இடைவெளி களையும்,மூச்சுமூடிகளையும் சரியாக பயன்படுத்தி தமிழர்கள் தமது கட்டொழுங்கை உலகிற்கு காட்டுவதுடன் எம்மை நாங்களே பாதுகாக்கும் பக்குவத்தையும் கொண்டிருக்க வேண்டும். இதனைத் தமிழ் ஊடகங்களும், சமூக ஊடகங்களும், முகநுால்களும், மக்களுக்கு இத்தகைய அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் என்று இந்த நேரத்தில் குமரிநாடு.கொம் இணையத்தளம் மிகவும் பணிவாக் கேட்டுக்கொள்கின்றது.
மலையகத்தலைவர்கள் குறிப்பாக மனோகணேசன் அவர்கள் ஆதரவாக அறீக்கை வெளியிட்டதுடன் இன்று நேரடியாக மன்னார்பகுதிப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். கொட்டபாய அரசு தமிழர்களை போராடத் துாண்டியுள்ளது என்றும் இலங்கைநாடு சிங்களவர்களுக்கு மட்டும் உரியது என்ற இந்த அரசின் கொள்கையை தமிழர்கள் ஏற்கப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெளிவாக அறிவித்துள்ளார். தமிழர்கள் நாங்கள் போராடத்தான்வேண்டும் என்றும் இந்தப்போராட்டத்தை நேரடியாக ஆதரிக்கின்றேன் என்றும் எழுச்சியடன் கூறியுள்ளார். இது கொழும்புக்கும், இந்தியாவிற்கும் ,வெளியுலகத்திற்கும். தமிழினம் சார்பில் பயங்கரவாதம் என்ற முத்திரைக்குள் அகப்படாத தமிழ்த் தலைவரின் கூற்று என்பது இங்கு கவனிக்கத்தக் கதாகும்.
இதேபோன்று கிழக்கு மாகாண இசுலாமியர்கள் ,மன்னார்,வவுனியா இசுலாமியர்கள் பெருந்திரளாக சில இடங்களில் நான்காயிரத்திற்குமதிக மானவர்கள் கலந்துகொண்டமையானது பெரிய கவனத்திற்குரிய கனதியான நிகழ்வு என்றும்,பெரியமாற்றம் என்றும் அரசியல் ஆய்வாளர் மதிப்பிற்குரிய திரு நிலாந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இது கட்சிகளின் ஏற்பாடக அன்றி வடக்கு கிழக்கு பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் மதத்தலைவர்களும் ,அரசியல் தலைவர்களும் இணைந்து நடத்திய போராட்டமாகும். மக்கள் எழுச்சி இவ்வாறே கருக்கொள்ளல் சிறப்பாகும்.
சிலகட்சியினர் இந்த பேர்ராட்டம் தமது ஏற்பாட்டில் நடப்பதாக வெளிக்காட்ட முற்பட்டமையும் நிகழந்துள்ளது இதனை உடனடியாகவே தடுத்து நிறுத்தியமை நல்ல அரசியல்போக்கினை தமிழர்கள் மேற்கொள்கின்றார்கள் என்ற நலம்சார்நிலையையம் இங்குகாணலாம். கட்சிகள் தேர்தல்களில் தனித்துப்போட்டி இடலாம் மக்கள் பிரச்சனைகளில் இணைந்து செயற்படவேண்டிய நிற்பந்தத்தில் உள்ளோம் என்பதை நாம் உணரவேண்டும். பயனற்ற கட்சியை வளர்ப்பதிலும், வெற்றிகொள்ளவைப்பதிலும் என்ன பயன் அத்துடன், கட்சித்தலைவர் களையும், கட்சிகளையும் பிரித்து தாமும் தமது கட்சியும் மட்டும் பயனடையும் குறுகிய நோக்கங்களுக்கும் மக்கள் இடங்கொடுக்காது இருக்கவேண்டும்.
இந்தப்பேர்ராட்டம் இத்தடன் நின்றுவிடக்கூடாது இதுநல்ல ஆரம்பம் ,தொடக்கம் என்ற எண்ணத்தடன் தொடர்ந்து போராடப்பக்குவப்பட வேண்டும். போராடாத இனம் தமது உரிமைகளுடன் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.தமிழர்கள் மொழியடிப்படையில் ஒன்றாகித்தலைவர்களும் இணந்து போராடியே ஓரணியாகவும் பெரும்பான்மையாகவும் ஒரே கொள்கையை வெளிப்படையாகவும்,நரித்தனமாகவும் நகர்த்தும் அரசுகளுடன் தொடர்ந்து போராடியே உரிமைகளைப் பெற்று சிறந்து வாழமுடியும் என்ற நடைமுறையை உணர்வோம். அரசதரப்பை ஆதரிக்கும் தமிழ் மக்கள் தமது உறவுகளின் காணிகளை கபடமாக கைப்ற்றும் நோக்கம் கொண்டவர்களாவே இருக்கின்றார்கள் இவர்களின் காணிகளையும், பொருளாதாரத்தையும் அபகரிக்கும் நோக்குடனே பெரும்பான்மை அரசுகள் செயற்படுகின்றன என்பதை தமிழர்கள் உணரவேண்டும். அன்று அரசுடன் இணைந்து அதுதாறன்,இது தாறன் என்றவர்கள் இருப்பதையும் அரசு பறிப்பதைப்பற்றி மெளனித்திருக் கவேண்டிய நிற்பந்தத்திற்குள்ளாகியிருப்பதை உணருங்கள் நீங்கள் எமாற்றப்பட்டிருப்பதை விளங்கிக் கொள்ளுங்கள். தேர்தலுக்குப்பின் யாழ் குடாநாட்டில் எத்தனை ஆயிரம்பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது? என்ன நிர்வாகச்சிறப்பு இருக்கின்றது அதிகாரிகள் தன்னிச்சையாகச்செயற்பட முடிகிறதா? எனவே போராடு மக்கள் எழுச்சி நிகழவேண்டும் எனபதே உண்மை!