குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மாசி(கும்பம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஒரு யானை காட்டில் 18 இலட்சம் மரங்களை நடுமாம்; அதிரவைக்கும் உண்மை!

23.01.2021 ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 இலட்சம் மரங்களை விதைத்தற்கு சமம் எனும் அடிப்படை யில் ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் என கணிப்பிடப்பட்டுள்லது.இந்த உண்மை பற்றி விளக்கமாக பார்க்கவேண்டுமாயின் யானையின் உணவு விடயத்தைப் பார்க்கவேண்டும்.

ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும். சராசரியா அதன் உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்த 250 கிலோ உணவில், 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். அதில் குறைந்தது 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணில் விதைக்கப்படும்.

ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குமாயின் சராசரியாக ஒரு யானை ஒரு நாளைக்கு 300 – 500 விதைகளை விதைக்கின்றது என்பதே அதன் பொருள்.

500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 இலட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது.

ஒரு யானையால ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். அதுவும் 4-5 மணி நேரத்தில். அப்படியென்றால் சராசரியாக மணிக்கு 15 லிருந்து 20 கிலோமீட்டர் வேகம். யானைகள் இவ்வளவு வேகமாக நடக்குமா என்பதற்கு வியப்பாக இன்னொரு தகவல்.

யானைகள் மிக வேகமாக ஓடும். யானைகள் துரத்தினால் மனிதர்களால் ஓடித் தப்பிக்க முடியாது. மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும்.

ஒரு நாளைக்கு 12 – 18 மணி நேரம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். யானைகள் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கும்.

இன்னொரு சுவாரசுயமான தகவல். எந்த பாலூட்டிகளைவிடவும் அதிகமான பேறு காலம் கொண்டவை யானைகள்தான். 22 மாசம் அதன் கர்ப்ப காலமாகும். காடுகளின் மூத்த தாய் யானைகள்தான். பழங்காலத்திற்கும் இன்றைய நவீன உலகுக்கும் உள்ள ஆதி உயிர்த் தொடர்புச் சங்கிலியின் எச்சமும் இந்த யானைகள்தான்.

பாலுாட்டும்போது தாய்யானை இறந்தால் இன்னுமொருதாய்யானை  தாயை இழந்த குட்டிக்கு பால்கொடுக்கும் மனிதரைவிட உயர்ந்த குணமெல்லா?

இப்பேர்ப்பட்ட யானைகளை மனித தன் சுய நலத்துக்காக அழிக்க நினைப்பதுஇயற்கைக்கு செய்யும் மாபெரும் தீங்காகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.