குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்தளவு எழுதத்தெரிந்தவனை உருவாக்கியது அனலைதீவு பொது நுாலகமென்றால் அது பெரும் கல்வியகமே! 18.11.2020.

அனலைதீவு  அனலைதீவில்வாழ்ந்து தற்போது தமிழகத்தில் வசிப்பவரால் எழுதப்பட்டதா? என்று எண்ண வைகின்றது! 16.1.2021....03.01.2052......ஈழத்தின்  ஒவ்வொரு சிறு கிராமத்திலிருந்து ஒரு தமிழ் எழுத்தாளன் உருவாகவேண்டும்  என்று நான் மானசீகமாக கனவு காண்கிறேன். வெறுமனே பழம்பெருமை பேசித்திரியாது  பின்லாந்து, பிரான்சு(ஸ்) போன்ற மேலைதேசங்கள் போலவோ அல்லது நமக்கு அருகிலுள்ள  கேரளம் போன்ற மாநிலங்கள் போலவோ மொழிப்பற்றும் இலக்கியம் பற்றிய சரியான  புரிதலும், தெளிவும் உள்ள சமூகத்தை உருவாக்கினால் போதும். எமது பண்பாடு  அழிந்துவிடும் என்ற அச்சம் அத்தோடு ஒழிந்துவிடும். நூலக இயக்கத்தின்  பலாபலன்கள் ஒரு நீண்டகால கூட்டுவிளைவை (Long-run positive externality)  சமூகத்தில் உருவாக்குபவை. எனவே அதுபற்றிய சரியான அறிவும் நிதானமும்  எம்மிடையே தேவைப்படுகின்றன. எல்லாவற்றிலும் குறுகிய கால பண மதிப்பை  (Short-run Monetary value) எதிர்பார்க்கும் சாமான்ய ஈழத்தமிழர்களுடன்  எனக்கு உரையாடுவதற்கு எதுவுமில்லை.

அந்ததீவைச் சுற்றி நடக்க 2 மணித்தியாலம் கூட எடுக்காது. அனலைதீவு. அங்குள்ள ஆயிரம் பேருக்கு ஒரு நூலகம். குடா நாட்டிலேயே மிகச்சிறப்பான நூலகம் அதுதான். இன்றைக்கு 40 வயதாகிற அந்நூலக கதையை படிக்கமுதல் ஒரு இடை ஏழு(சப்த) கன்னிகள், ஏழு(சப்த ரிசிகள், ஏழு(சப்த) கடல்கள் இந்த முறையில ஏழு தீவுகள் எண்டு ஏழாவது தீவுக்கு எழுவை தீவு எண்டு கதைகட்ட மிச்சமிருந்த 9 சொச்சம் தீவுகளான கண்ணன் தீவு, பாறை தீவு, பாலை தீவு (பாலைதீவு வேறுபிரதேசசபைக்குரியது), சிறு தீவு, புளியந்தீவு, கச்ச தீவு முதலியவற்றை இரணியட்சன் பூமியை கடலுள் மறைத்தமாதிரி மறைத்தான்கள். என்ன சன்னதமும் ஆடுங்கோ தீவான்சு(ஸ்.) ஆனால் ஏழு தீவுக்கும் கன்னிப்பெயரா ரிசிப்பெயரா குடுக்கப்போறீங்க எண்டு கெதியா முடிவெடுங்கோ. கன்னிப்பெயரெண்டா நெடுந்தீவுக்கு மகேஸ்வரியெண்டும்(EPDP தேவா அண்ணையின் அம்மா) புங்குடுதீவ்க்கு சாமுண்டேஸ்வரி எண்டும்(புங்குடுதீவாள்ஸ் So Rough Ladies)  நைனா தீவுக்கு வைச்(ஷ்)ணவி எண்டும்(So Romantic)வையுங்கோ. சப்த ரிசிகளின் பெயரை வைக்கிறதெண்டால் ஒரே ஒரு கொண்டிசன். அனலைதீவுக்கு வசிட்டர் எண்டு பெயர் வச்சா அதோடு ஒட்டின புளியந்தீவுக்கு அருந்ததி எண்டு வையுங்கோ. இல்லாட்டி வேலணைத்தீவுக்கு வசிட்டர் எண்டு வச்சா மண்டைதீவுக்கு அருந்ததி எண்டு வையுங்கோ.  கடலில் நீங்கள்  மறைச்ச மிச்சமிருக்கிற தீவுகளுக்கு சிங்கள நாட்டில நீங்கள் வச்சிருந்த சிங்கள குட்டிகளின் பெயரை வையுங்கோ.

அனலைதீவான்_அலைமகனின்_பதிவு

யோசித்துப்பார்க்கும்போது, மின்சாரவசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் (அனலைதீவுக்கு மின்சாரம் 2000ம் ஆண்டுதான் வந்தது) வெறும் லாந்தர் விளக்கில் வாசித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு பிற்காலத்தில் உலக இலக்கியங்களை வாசிக்கும் பயிற்சியையும், வாசிப்பார்வத்தையும் இந்த நூலகம் அளித்தது என்பதை நன்றியுடன் நினைவுகூருகிறேன்.

அனலைதீவு பொது நூலகத்தின் சூழல் எப்போதும் என்னை தீராத மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற ஒன்று. மிகவும் அமைதியான, குளிர்மையான, கனவுலகங்களை திறக்கின்ற ஒரு இடம் அது. எனது பள்ளி நாட்களில் எவ்வளவோ குதூகலத்துடன் அங்கே சென்றிருக்கிறேன். ஒரு பசியுடன் இருக்கும் குழந்தைக்கு தாய்முலைப்பாலின் அருகாமை தரும் சுகத்தை ஒத்த தருணங்கள் அவை. ஆம், அனலைதீவு பொது நூலகம் எனக்கு இரண்டாவது அன்னை. இந்த வேளையில் அவள் நூறாண்டுகள் கடந்தும் அறிவுப்பசிதீர்க்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அனலைதீவு பொதுசன நூலகத்துக்கு இந்த ஆண்டுடன் 40 வயதுகள் ஆகின்றன. இதை ஒட்டி நான் எழுதிய கட்டுரை இது. ஆண்டுமலர் ஒன்றுக்காக எழுதப்பட்டுள்ளது. இதனை எழுத என்னை தூண்டிய அனலைதீவு பொதுசன நூலகத்தின் நூலகர் தர்மிளா அக்காவுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகூறுகிறேன்.

அனலைதீவு பொது நூலகத்துக்கு இந்த ஆண்டுடன் நாற்பது வயது நிறைவுபெறுகிறது எனும் செய்தியை அறிந்தேன். உண்மையில் இது மிகக்கூடிய காலம். அத்துடன் இது நாம் பெருமைப்படத்தக்க ஒரு செய்தியும் கூட. தீவுப்பகுதிகளிலேயே அனலைதீவுக்கு என்று பல தனித்துவமான சிறப்புகள் இருக்கின்றன. அவற்றுள் நாம் பெருமைப்படத்தக்க விடயங்களில் ஒன்றுதான் இந்த நூலகம். இந்த சந்தர்ப்பத்தில் நான் சில கருத்துக்களை நூலகங்கள் சார்ந்தும் நூலக இயக்கம் சார்ந்தும் சொல்ல விழைகிறேன்.

எனக்கு அனலைதீவு பொது நூலகத்துடன் தொடர்பு ஏற்பட்டது தரம் ஆறில் படிக்கும்போது என்று நினைவு. அத்துடன் எனது வீட்டில் தனியாக ஒரு சிறிய நூலகம் ஒன்றும் இருந்தது. அங்கே பெரும்பாலும் சமய நூல்கள், கல்கி, கலைமகள், தீபம் போன்ற புகழ்பெற்ற இந்திய இதழ்களின் தொகுப்பு போன்றவை இருந்தன. அப்போது நான் படித்த முக்கிய கதைகளை இப்போது நினைவு கூறுகிறேன். இந்திய ஆத்மீக வரலாற்றில் தடம் பதித்த சிறி(ஸ்ரீ) இராமகிருச்(ஷ்)ணர், அன்னை சாரதாதேவி போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் காஞ்சிபெரியவரின் உதவியாளராகவிருந்த ரா.கணபதி அவர்களால் எழுதப்பட்டிருந்தன. அவற்றை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அனுராதா இரமணன், கி.இராயேந்திரன், கசிற்பியன், வி.எஸ்.காண்டேகர், ஆர்.எஸ். நல்லபெருமாள் போன்றவர்கள் அப்போது அறிமுகமான எழுத்தாளர்கள்.

அனலைதீவு பொது நூலகம் எனது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியது. முதன்முதலில் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்று கல்கியின் வரலாற்று நாவல்களுடன் எனது வாசிப்பு தொடங்கியது.சாண்டில்யனின் நாவல்களுடன் எனக்கு தொடர்பு ஏற்படாவிட்டாலும், கல்கியின் இரு பெரும் சரித்திர நாவல்களை வாசிக்க நேர்ந்தது எனது பாக்கியம் என்றே கூறுவேன். ஏன் இந்த வகை நாவல்கள் முக்கியமானவை?

நமக்கு வாய்த்திருக்கிற உலகமும், வாய்ப்புக்களும் மிகவும் குறுகியவை. நாம் வாழும் காலத்தில் எமக்கு காணக்கிடைக்கும், காட்டப்படும் காட்சிகள், அனுபவிக்கும் சூழல்கள் எல்லாம் மிகவும் எல்லைக்குட்பட்டவை. அந்தவகையில் இந்த சரித்திர நாவல்கள் நமக்கு இளம் வயதில் மிக உயர்ந்த கற்பனை வளத்தையும், மொழி வளத்தையும் சாத்தியப்படுத்துகின்றன.

மன்னர்கள் எப்படி பவனி வருவார்கள், நாற்படைகள் எப்படி அணிவகுத்து செல்லும், போர் எப்பிடி நடைபெறும், மிகப்பிரமாண்டமான படையெடுப்புகள் எவ்வாறு திட்டமிடப்படும், ஒற்றர்கள் எப்பிடி இயங்குவார்கள், பெரும் கோயில்கள் எவ்வாறு உருவாக்கப்படும், தளபதிகள் எவ்வாறு உரையாடுவார்கள் என்பது போன்ற வரலாற்றுப்பதிவுகள் எல்லாவற்றையும் இந்த நாவல்கள் நமக்கு அகக்கண்ணில் உருவாக்குகின்றன. ஆறுகள், நகரங்கள், கோட்டைகள், இராயபாட்டைகள் போன்றவற்றின் பிரமாண்டமும், தோற்றமும் நமது மனக்கண்ணில் விரிவடையும். பெரும் சாம்ராச்யங்கள் என் மனதில் உருக்கொண்டன. இதன் மூலம் நமது மூளை அதீத கற்பனைகளை மிகவும் சுலபமாக உள்ளீர்ப்பதற்கு பயிற்சிபெறுகிறது.

ஆனால் இவை எல்லாம் மனோரதியமான எழுத்துக்கள் [Romanticized] என்பது விளங்குவதற்கு சற்று வயதாக வேண்டும். 2009ம் ஆண்டு இந்தியாவுக்கு நான் சென்றபோது, மாமல்லபுரம் போயிருந்தேன்.  அங்கே போகும்வரை எனக்கு கல்கியின் சிவகாமியின் சரிதமும், அதில் வந்த வர்ணனைகளும் மனதில் நிரம்பியிருந்தன. அங்கே சென்றடைந்ததும் எனக்கு சற்று ஏமாற்றமாகிவிட்டது. நான் எதிர்பார்த்த அதீத பிரமாண்டமான சிற்பங்கள் அல்ல அவை. ஒரு அளவான கற்சிற்பங்கள். கலை வேலைப்பாடுகளுக்கு ஒன்றும் குறைவில்லைதான். அழகான, இரைச்சலுடன் கூடிய, கடற்கரை இருந்தது. கற்சிற்பங்கள் இருந்தன. ஆனால் ராஜபாட்டைகளும் குதிரைகளும் இல்லை. இன்று மாமல்லபுரம் ஒரு சிற்றூர். அவ்வளவுதான். இந்த இடமா பல்லவர்களின் கேந்திர நிலையமாக இருந்தது என்று ஆச்சரியமாக இருந்தது. கல்கி சிலவற்றை அதீதமாக கூறிவிட்டாரோ என்ற எண்ணம் நெடுங்காலம் எனக்கிருந்தது.

பின்னர் உறையூரை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டேன். [பார்த்திபன் கனவில் வரும் சோழர்களின் தலைநகரம்--இன்றைய திருச்சிராப்பள்ளி]. காவேரி ஆறு பொங்கி பிரவாகித்து வருவதை மிக அழகாக கல்கி அந்நாவலில் சித்தரித்திருப்பார். ஆனால் மணற் கொள்ளையாலும், காடழிப்பாலும், மாநிலங்களுக்கிடையேயான அரசியலாலும் காவிரி பொங்கிவருவது தற்போது சாத்தியமாக இருக்காது. எனவே பார்த்திபன் கனவு காட்சிகள் மனதிலேயே இருப்பதுதான் நல்லது.

ஏமாற்றங்களை தவிர்க்கலாம். Ignorance is bliss எனும் Thomas Gray (1768) ன் பிரபலமான வாசகத்தை இங்கே நினைவுபடுத்திக்கொள்கிறேன். ஆனாலும் கல்கியின் வரலாற்று நூல்கள் இளம் வயதிலே எனக்கு வாசிப்பார்வத்தை உண்டாக்கியதை மறுக்கமுடியாது. அதனால்தான் இன்றும்கூட நான் தரம் ஆறு தொடக்கம் தரம் பதினொன்று வரையான மாணவர்களுக்கு கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சரித்திரப்புதினங்களையே முதன் முதலில் பரிந்துரைக்கிறேன்.

நல்வாய்ப்பாக, அனலைதீவு பொதுநூலகத்தில் இத்தகைய வரலாற்று நாவல்கள் மட்டும் இருக்கவில்லை. சீரிய வாசிப்பு நூல்களும் நிறைய இருந்தன. முதன் முதலில் மக்சீம் கார்க்கியின் “தாய்” நாவலை வீட்டுக்கு எடுத்துவந்து ஒருமாதம் வரை வைத்திருந்து வாசித்தது நினைவுக்கு வருகிறது. சோவியத் யூனியனின் தலைசிறந்த கதைசொல்லியான கார்க்கியின் "தாய்" நாவல் அக்காலத்தில் உலகின் முதன்மையான நாவல் என்ற புகழுடன் விளங்கியது. மிகவும் மெதுவான நடையுடன் நகரும், சீரிய உழைப்புமிகுந்த வாசிப்பைக்கோரும் “தாய்” நாவல் சீரிய இலக்கியங்களை வாசிப்பதற்கான ஆரம்பப்பயிற்சியை எனக்கு அளித்தது என்பதை இப்போது நினைவுகூருகிறேன்.

இத்தகைய சீரிய இலக்கியங்கள் நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்துச்செல்பவை. குதிரை வண்டிகளும், நிலக்கரி புகையிரதங்களும், பனி விழும் சென் பீட்டர்ஸ்பெர்க் (லெனின்கிராட்) நகரமும், மொசுகோ நகரின் அகன்ற சாலைகளும், தொழிற்சாலைகளின் நீண்ட புகைப்போக்கிகளும், சீருடை தரித்த ராணுவ வீரர்களும் எனது மனதில் விரிந்தன. அத்துடன் ராகுல் சங்கிருத்தியாயனின் கங்கை முதல் வோல்கா வரை என்ற புகழ்பெற்ற நூலும் என்னை மிகவும் கவர்ந்த, எனது பிற்கால அரசியல் மற்றும் பொருளாதாரக்கருத்துக்களை வடிவமைத்த நூல்களில் ஒன்று என்றே சொல்வேன். இவை தவிர டார்வினின் இயற்கைத் தேர்வு சம்பந்தமான நூல், விண்வெளிப்பயணகள் பற்றிய அறிவியல் நூல்கள் என்பனவும் மிகுந்த சுவாரசியம் அளித்தவை.

நூலக இயக்கம் இன்று பெரும் சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறது. இருந்தும் ஈழத்தமிழர்கள் இந்த கணனி யுகத்தின் வசதி வாய்ப்புகளைத்தாண்டியும் ஈழப்பெருவெளியெங்கும் நூலகங்களை அமைத்து வாசிப்பு இயக்கத்தை பலப்படுத்தவேண்டும். அதற்கான காரணங்கள் மிகத்தெளிவானவை.

நமது பண்பாடும் மொழியும் இந்தக்காலத்தில் மிகுந்த நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கின்றன என்பதை நிறுவுவதற்கு பெரிய ஆய்வு ஒன்றும் தேவையில்லை. அதற்கான காரணங்களும் தெளிவானவை.

இன்று வெளிநாடுகளில் பண்பாட்டின் கூறுகளை முக்கியமாக சமயத்தை இறுக்கமாக குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலம் நமது அடையாளத்தை பாதுகாக்கமுடியும் என்று புலம்பெயர்ந்தவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது நடைமுறையில் பெரிய பலனை அளிக்காது.

மொழியினை ஒருவருக்கு கற்பிக்கும்போது அது காவிச்செல்லும் கலாச்சாரக்கூறுகளையும் சேர்த்துக்கற்பிப்பது மொழியை இலகுவாக கற்றுக்கொள்ள உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நமது அடையாளத்தை பாதுகாப்பது என்பது அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதுதான். மாடு இருந்தால்தான் மாட்டு வண்டியை இழுக்கமுடியும். மாறாக மாட்டுவண்டியை மட்டும் வைத்திருந்தால் அது பயணப்படமுடியாது. ஆமாம் நண்பர்களே!  மொழியானது வண்டியை இழுக்கும் மாடு போன்றது. வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் சூழல் காரணமாக ஆங்கிலம் இயல்பாகவே முதன்மை பெறுகிறது. இதனால் அவர்கள் கடைபிடிக்கும் சொந்த பண்பாட்டுப் படிமங்களை, சமய சடங்குகளை தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.

இத்தகைய நிலைமைகள் ஈழத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டுவருகின்றது என்பதை மனவருத்தத்துடன் பதிவுசெய்யவேண்டியுள்ளது. எனவே இதனை மாற்றியமைத்து மொழிப்பயிற்சியும் ஆர்வமும் கொண்ட தலைமுறைகளை உருவாக்க நிச்சயம் வாசிப்பு இயக்கமும் நூலக இயக்கமும் தேவைப்படுகின்றன.

குழந்தைகளின் ஆரம்ப வயதுகளில் வரலாற்று நாவல்கள், சமய நூல்கள், இதிகாசங்கள், விஞ்ஞான புனைகதைகள், ஆயிரத்தோர் இரவுகள், றொபின்சன் குருசோ, Alice in Wonderland, கடலும் கிழவனும் போன்ற நாவல்கள் மிகுந்த பயனை அளிக்கும். பதின்ம வயது பருவங்களில், இலட்சிய வேட்கை மிகுந்த வயதுகளில் நல்வழிகாட்டும் அறநூல்களை வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்தப்படவேண்டும். பதின்ம வயதின் முடிவில் உலகின் சீரிய இலக்கியங்களை (உ.ம்: டாஸ்டாய், கார்க்கி, செக்கோவ், ஹெமிங்வே, சதாத் ஹசன் மாண்டோ, etc)   வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்தப்படவேண்டும். அதன் பின்னர் இளைஞனை வழிநடத்தத் தேவையே இல்லை. அவனே பார்த்துக்கொள்ளுவான்.

மிக அதிகமான சனரஞ்சகமான நாவல்களையும் (Pulp Fictions), பள்ளிக்கூட பரீட்சை வழிகாட்டி நூலகளையும்  சிறிய நூலகங்களில் வாங்கி வைக்கும் போக்கு இப்போது இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகிறது. அவை தவிர்க்கப்படவேண்டும். நூல்களை வாசிப்பதால் ஏற்படும் பயன் என்பது கண்ணுக்கு தெரியாத ஒன்று. சனரஞ்சகமான நூல்களுக்கும் சீரிய நூல்களுக்கும் இடையேயான நுட்பமான வேறுபாடு (Nuance) நூலகங்கள் மூலமே தெளிவுபடுத்தப்படமுடியும். அதற்காக தேர்ந்த வாசிப்பு இயக்கங்களை நாம் ஆண்டுதோறும் முறையாக ஒழுங்கமைக்கவேண்டியுள்ளது.

ஈழப்பெருவெளியெங்கும் நூலக இயக்கமொன்றை உருவாக்குவது பல வழிகளிலும் தமிழினத்துக்கு பயன் தருகின்ற ஒரு செயலாகும். போதைப்பொருள், அதீத கைபேசிப்பாவனை மற்றும் நாயக மைய சினிமா (Hero oriented Cinema) போன்ற தீங்குகளிலிலிருந்து மாணவர்களை இது காப்பாற்றுவதுடன் ஓரளவுக்கு விடயஞானமும் சிந்தனைத்தெளிவும் உள்ள சமூகத்தை இது உருவாக்க துணைபுரியும் என்றே நம்புகிறேன். அதிகளவு நூலக வாசிப்பு உள்ள ஒரு சமூகத்தில் அல்லது பிராந்தியத்தில் இருந்து நல்ல முற்போக்கான, தலைமைத்துவம் உள்ள இளைஞர்கள் வெளிப்படுவார்கள். அது நீண்ட கால நோக்கில் ஈழத்தமிழ் சமூகத்துக்கு மிகவும் தேவையான ஒன்று.

ஈழத்தின் ஒவ்வொரு சிறு கிராமத்திலிருந்து ஒரு தமிழ் எழுத்தாளன் உருவாகவேண்டும் என்று நான் மானசீகமாக கனவு காண்கிறேன். வெறுமனே பழம்பெருமை பேசித்திரியாது பின்லாந்து, பிரான்ஸ் போன்ற மேலைதேசங்கள் போலவோ அல்லது நமக்கு அருகிலுள்ள கேரளம் போன்ற மாநிலங்கள் போலவோ மொழிப்பற்றும் இலக்கியம் பற்றிய சரியான புரிதலும், தெளிவும் உள்ள சமூகத்தை உருவாக்கினால் போதும். எமது பண்பாடு அழிந்துவிடும் என்ற அச்சம் அத்தோடு ஒழிந்துவிடும். நூலக இயக்கத்தின் பலாபலன்கள் ஒரு நீண்டகால கூட்டுவிளைவை (Long-run positive externality) சமூகத்தில் உருவாக்குபவை. எனவே அதுபற்றிய சரியான அறிவும் நிதானமும் எம்மிடையே தேவைப்படுகின்றன. எல்லாவற்றிலும் குறுகிய கால பண மதிப்பை (Short-run Monetary value) எதிர்பார்க்கும் சாமான்ய ஈழத்தமிழர்களுடன் எனக்கு உரையாடுவதற்கு எதுவுமில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.