குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, தை(சுறவம்) 21 ம் திகதி வியாழக் கிழமை .

ஆதி மனிதனே நல்மாந்தன்! இன்றைய மனிதனோவேடன்!!

ஆதி மனிதனே நல்மாந்தன்!

இன்றைய மனிதனோவேடன்!!

அன்று அவன் மானத்திற்காய் தரித்தான்

இன்று இவனோ வேடத்திற்காய் அணிகின்றான்.

அன்றோ உணவுக்காய் மட்டுமே உயிர்களைக்கொன்றான்

இன்றோ பணத்திற்காய் உலகையே அழிக்கின்றான்.

 

பன்றிகளை மாடுகளை

கோழிகளை வளர்ப்பதுபோல்

உலகமக்களை வளர்த்து

தம்பணத்திற்காய் பலியிடுகின்றான்

வல்லரசு தாம் என்கின்றான்

வளர்ந்தநாடுகளாம் தாமென்கின்றான்

மற்றவை எல்லாம் இவனுக்கு

பண்ணை விலங்ககள் என்றே எண்ணுகின்றான்.


இரண்டாயிரத்தி இருபது வந்தது

இவனையும் பதறவைத்தது!

தீயநுண்ணி பெருகியது

வல்லரசு நாடுகளையே நடுங்கவைத்தது!!

வேகமாய் ஒராண்டுக்குள் தடுப்பூசிமருந்து என்றான்!!!

தடுப்பூசிபோடமுனே மிடுக்குடன்

வேறொருதீயநுண்ணி விழிபிதுங்கிநிற்கின்றான்.


மாந்தனின் அறந்தான் மருந்தாகும் என்பதை

பணந்தான் உலகமென்றலையும் மனிதன்

உணரும்வரை தடுப்புசியேதும் வராது

உண்மைய உணர்தலே மருந்தாகும்.


பூநகரி ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேள் சுவிற்சர்லாந்து 28.12.2020

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.