குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆண்டு 2012 இன் தொகுப்பு கீழே, மறைத்தது மறைந்தது வன்னிப்பரணி- 4

ஆண்டு 2012 இன் தொகுப்பு கீழே

இந்த நாளில்

8 ஆண்டுகளுக்கு முன்பு

Murugaverl Poonagari Ponnampalam

28 டிசம்பர், 2012  ·

எனக்கு மட்டும் உடன் பகிர்ந்தது

மறைத்தது மறைந்தது வன்னிப்பரணி- 4

பயங்கரவாதிகளின் புலிகளின் ஆயுதங்களைக்

களைவதாக கதையளந்தவர்கள்

தமிழர்களின் ஆடைகளைந்து காமந்தீர்த்ததேன்.

அவர்களின் உயிர்களைப்பறித்ததேன்?.

பெற்றோர் இல்லாத பிள்ளைகள் 30 ஆயிரம்

தாண்டுமாயின் 15 ஆயிரம் குடும்பம் ஆயினும்

அழிக்கப்பட்டது என்பதா உண்மை?

அந்தப்பிள்ளைகளுக்கு அரசுகொடுக்கும் ஆதரவுஎன்ன?

போரில் பெரிய ஆயுதம் பாவிக்கவில்லை என்று

அறிவித்தகாலத்தில் தானே அதிகம் பேர் இறந்தனர்.

அப்படியாயின் அப்படியாயின் சிறயஆயுதங்களால்

சுட்டவர்கள் யார் எத்தனைபேர் சுட்டனர்.

அழைத்துச்சென்று சுட்டனர் கட்டிவைத்துச்சுட்டனர் என்று

இங்கிலாந்து அலவரிசை 4காட்டுவது உண்மையா?

இலங்கைப்படைகள் மட்களைமீட்டது எனின்

எப்படிமீட்டது என்று விடையொன்று பிறக்கிறது அல்லவா!

புலிகளை அழித்ததாய் நாட்டின் ஒருமைப்பாட்டைக்காத்ததாய்

நம்பியநாடுகள் தமிழர்களைக் கொன்றாய் என்று கேட்பதேன்?

நலன்புரிநிலையமெனப் பெயரிட்டு அங்குநடந்ததை மக்களறிவர்.

குளிக்கவைத்து ஈரத்துணியில் திரைப்படம் பார்த்து இரசித்தனர்.

வெள்ளைக்கொடியுடன் வாருங்கள் சரனடையலாம் என்றார்கள்.

போரிடாதபேச்சாளர்களும் சென்றார்கள்நடந்தது என்ன?

இதுவரை இவற்றுக்குபதில்வராததேன்? பயமில்லையாயின்

பதட்டம் ஏன் பதில்கொடுப்பது நியாயமே!காலம்தாழ்த்துவதேன்?

பாதிக்கப்பட்ட வன்னிமக்களுக்கு உழவுஇயந்திரம் வழங்கிய

செஞ்சிலுவைச் சங்கபணியாளர் வெள்ளைக்காரப் பெண் அழுததேன்?

தட்டிப்பறித்தது நல்லிணக்கத்தை ஏற்படுத்தவா? இவற்றை

உணராதவர்களாக உலகத்தவர் இருப்பார்கள் என்று எண்ணுவது சரியா?

அடம்பிடித்தவர் பட்டஅனுபவத்தை அறிந்தும் அறியாதது போல்

அடம்பிடிப்பதுசரியா? விடைஎதுவாகம் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

பில்லாடனுக்குநடந்தகதை உலகறியும் எந்தசபை அனுமதிகொடுத்தது.

தவறானவர் என்பது எடுத்துரைகப்பட்டது காரியம்முடிக்கப்பட்டது!

பூநகரி ஞானிமடம் அ.த.க. பாடசாலையின் புனரமைப்புக்கும் அபிவிருத்திக்கும் என 60 மில்லியன் ரூபாய் நிதியை யுனிசெவ் வழங்கியுள்ளது. அவுசுரேலியா

01.08.கி.ஆ2012தமிழாண்டு2043 அரசும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் இணைந்தே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இந்த நிதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள கட்டிடங்களுக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைபெற்றது. கல்வித்திணைக்கள அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் உத்தியோகத்தர்கள், ஊர்ப்பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நகரிப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடசாலையில் இப்போது 64 பிள்ளைகள் மட்டுமே கல்விகற்கின்றனர். பாடசாலை அமைந்திருக்கும் மேற்படி பிரதேசத்தில் 84 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன.

மிகக் குறைந்தளவு பிள்ளைகளைக் கொண்டுள்ள இந்தப் பாடசாலைக்கு எதற்காக இவ்வளவு பெருந்தொகை நிதியை யுனிசெவ் ஒதுக்கியுள்ளது? என்று வலயக் கல்விப் பணிமனையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தெரிவித்ததாவது,

போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பல பாடசாலைகளைப் பட்டியலிட்டு யுனிசெவ்விடம் வழங்கியிருந்தபோதும் பாடசாலைகளின் தேர்வின்போதே அல்லது நிதி ஒதுக்கீட்டின்போதோ தம்முடன் யுனிசெவ் அமைப்பினர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக அறிந்தபோது இந்த நிதி குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்கு அதிகளவில் மேலதிகமாக உள்ளது எனவும் அதைப் பகிர்ந்து வேறு பாடசாலைகளுக்கு வழங்கலாம் எனத் தாம் தெரிவித்த கருத்துகளை யுனிசெவ் ஏற்க மறுத்துள்ளதாகவும் என்று கூறியுள்ளனர்.

ஒதுக்கப்பட்ட நிதியில் இந்தப் பாடசாலைக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுமாயின் அது சிறிதளவு பயனைக்கூடத் தராது என கல்வித் திணைக்களத்தினரும் மாவட்டக் கல்வி அபிவிருத்திக் குழுவினரும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், குறித்த பாடசாலையின் நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை இந்தப் பாடசாலைக்கு மிக அண்மித்ததாக உள்ள புநகரி மகா வித்தியாலயம் 70 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

குமரிநாடுமூட்டிவைத்த தீ மூழ்க மூழ்கவே! தமிழருக்கான தீமைகள் அதில் எரிக எரிகவே தமிழரின் மடமைகளும் அதில் எரிக எரிகவே!பூநகரி.பொமுருகவேள் ஆசிரியர்

இலங்கையில் இனவாத ஆட்சி அகலவே  அதற்காக  தமிழர்கள் உலகுடன் போராடவே!

அதைத்  தொடங்குவது  தொடர்நது கொண்டு செல்வது  சரியானதாக வேண்டுமே!

தமிழீழம் பேசி ஈழத்தமிழர் மூச்சைநிறுத்துவோர் தற்கால மூடர் உலகைவிளங்காத தற்காலவேடர்.

வெளிநாடுகளில்  கோட்டுமாட்டி  ஊடகங்களுக்கு  முகங்காட்டும்  மூடர்களின் மாயை அகன்று

மதிகொண்டு நுணுக்கவிழியுடன் திறனாகப் பேசி தமிழன் அறம்வாழ வழிவிடுங்கள் என்று கேழுங்கள்.

இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் வாழ்ந்துள்ளான்: கலாநிதி நிமால் பெரேரா --கற்கால மனிதன் வாழ்ந்த காலம் அக்காலத்தில் இலங்கை தீவாக இல்லை

குமரிநாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.20.06.கி.ஆ2012 தமிழ்ஆண்டு2043-இலங்கையில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கோமோசபியன்சு மனிதன் வாழ்ந்தான் என்பதை களுத்துறை, புளத்சிங்களப் பகுதியில் உள்ள பகியங்கல வளைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள

வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புக்கூடு உறுதி செய்துள்ளதாக தொல்பொருள் திணைக்கள பிரதி பணிப்பாளர் கலாநிதி நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.சில நாட்களுக்கு முன்னர் இந்தப் பிரதேசத்தில் வரலாற்றுக்கு முந்திய கால மனிதனின் முழுமையான எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், ஆதிமனிதனின் மேலும் பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவனது உணவுப் பொருட்கள், சடங்குகள் தொடர்பான பொருட்கள், கல்லினால் ஆன கருவிகள் குறித்த சான்றுகளும் கிடைத்துள்ளன. மணிகளால் செய்யப்பட்ட நகைகள், மிருக எலும்பில் செய்யப்பட்ட ஆயுதங்களும் ஆகழ்வாய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கலாநிதி நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்லுண்டாய் பிரதேசத்தில் அமையவுள்ள சுத்திகரிப்பு ஆலைப் பிரதேசத்தை ஆசிய அபிவிருத்தி வங்கிக் குழுவினரும் ஏனைய நிபுணர்களும் பார்வையிட்டு முதல் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தேசிய நீர்வழங்கல் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலட்சங்கள் வந்தன இலட்சியங்கள் போயின எச்சங்கள் மிஞ்சின தமிழன் கெஞ்சிவாழல் அண்டிவாழல் வால்பிடித்துவாழல் நல்வாழ்வென்றானது.தமிழுக்கு முள்ளிவாய்கால்போர் மூன்றாம்

உலகப்போர் யப்பான்போல் மீளவேண்டும்

பணம்சேர்ந்தது பிணங்கள் குவிந்தது மனங்கள் மாறின தமிழனின் இழப்பு வீட்டில் இறம்செற் இசையானது

பறை-பேரிகை இல்லாது போனது போல் தமிழனிடம் எதுவுமே இல்லாது போனதுவே மிச்சம்.

வெளிநாட்டுப்பணத்தில் வந்தமிச்சம் இவைதான் தன்னடைகள்போய் பொய்நடைகள் தமிழேஇவர்களைச்சபி

உண்டும்உறங்கியும் பசியாறியும்கழித்தும் பணத்திற்காய் உழண்டும் எல்லாம் இழந்தான் தமிழன்.

கற்றான் விற்றான் எல்லாவற்றையும் பணத்திற்காய் உற்பத்தியல் அக்கறையில்லை இயற்கையில் அக்கறையில்லை

மருத்துவம்கற்றதும் பறக்கவேண்டும் வெளிநாடுகளிற்கு  அல்லதுதனியார்மருந்தகம் தொடங்கவேண்டும்.

பறந்துவரும்பணங்களால் மறந்துவிட்ட சிறந்தவை எத்தனைகள் மனம்திறந்துபார்!திரும்பிப்பார்!தமிழினம் சீர்கெட்டழிவதை

கறந்தபால் முலைக்கேறாது வந்துபுகுந்த கெட்டபுதியவை எம்மிமைவிட்டுப்போகாது விழுங்கி அழிக்கும்

அதற்கும் சிங்களம் பொறுப்பல்ல கொண்டாட்டங்களில் கொழும்பு அழுக்குப்பண்பாடுகள்

அதையே உயர்வென்றும் வெளிநாட்டு முறையென்றும் முறைதவறும் பாமரஉறவுகளே பரிதவிக்கப் போகின்றீர்.

சிதறிவிட்ட சிந்தனைகளால் தறிகெட்டுவிட்ட தலைமுறையாய் தொடர்நாடக மோகங்களானோம்.

இரண்டாம் உலகப்போர் உலகைப் பிரட்டிப்போட்டது ஆனாலும் அந்தந்த இனமும்தனியினம்கண்டு

தமக்கென்று நாடுகண்டு கொண்டது தம்மைவளர்த்துக்கொண்டது மகிழந்துவளர்ந்தது.

தமிழுக்கு முள்ளிவாய்கால்போர் மூன்றாம்உலகப்போர் யப்பான்போல் மீளவேண்டும்  போல் வியட்நாமாகாது

அடுத்தவனைச்சாடுவதும் சாய்வதும் தமிழுக்கடுக்காது மெல்ல நடக்கவேண்டும் சொந்தக்காலில்

போர்கள்கண்டு அழிந்த சேர்மனைப்பார் கில்லர்அடித்த அத்தனைநாடுகளையும்பார் எழுந்து சிறந்து

சிறப்பாய் யீ எட்டு நாடுகளுடன் இணைந்து முன்னோடிகளாய் நிற்பதைக்காண் தமிழே!

பூநகரி.பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து.27.05.கி.ஆ2012தமிழாண்டு2043.

இலங்கையில் மே ...மே...மே ஆடுகள்தான் காத்துகின்றன!.உழைப்பவர்களுக்கே மேதினம்.உலகவங்கியின் திட்டத்தில் வாழ்வோருக்கேன் மே நாள்.

அரசியல் மூலம் பணக்காரக வாழும் வர்க்கம் இலங்கையில் கூடும்கூட்டம் மேதினம்.

ஆருடன் ஆர்கூடுவது அதில்கூட உறுதியில்லாதவர்கள் உருப்படியில்லாதவர்கள்

உழைக்கும் வர்க்கத்தின் குறைகளைத் கேட்குமா?தீர்க்குமா தீருமா? சிவப்புநாள் ஏன்?

வியர்வைக்கு குளிர்ஊட்டி பூட்டி அறைகளில் இருந்தவர்கள் காற்றில் உலாவ

மேதின ஊர்வலம் போவோம் வாருங்கள் வாருங்கள் என்கின்றார்கள் பச்சைக்கட்சிக்காரர்.

முகமாலை மூடியிருந்தபோது ஏ 9 பாதை துறவாதபோது பறந்தென்றாலும் வந்தார்களா?

தங்கவிடுதிகள் வசதிகள்வந்தபின்தான் போராடவருகிறார்கள் தேவையில்லாத குழப்பம்

உருவாக்ககாரணமாய் ஊர்வலம் செய்வதோ! அமெரிக்காவோ நல்லெண்ணத்தை

அமுல்படுத்ததீர்மானம் அதைஎதிர்க்கவும் நாடுகள்வரிசையில் நிற்கின்றன தமிழனுக்கு

வந்தபயன் ஒன்றுமில்லை. யானைக்குப்பின்னால் யாரும்போகமாட்டாரகள்

என்பதால் இவர்கள்தான் இதற்குஏற்றவர்கள் அழைத்து மூட்டிவிட்டு மாறும் தந்திரத்தில்

இரணிலார் தத்தளிக்கும் கூட்டமைப்பு எத்திசையில் போகும் கூடயார்போவார்.

நாளையுடன் முடியுமா? போராட்டம் நாளையுடன் தொடருமா? போராட்டம்.

மொரீசியசில் தமிழர் - பாகம் - 1- இவர்கள் போல்தான் இலங்கைத்தமிழர்களின் பிள்ளைகள் மாறவேண்டுமா?பெயர்மட்டும் தமிழரென எண்ணி இந்தியராகினார்கள் தமிழர்கள் உடையாலே

30.04.கி.ஆ2012தமிழாண்டு2043-புடவை வியாபாரிகளால் மராட்டியர்களாகும் தமிழர்கள் சர்வாணி ஆண்கள். பெண்கள் பஞ்சாவி. கோவில்களிலே ஐயர்மார்களால் இந்தியர்கள் ஆக்கப்பட்டு விடுவார்கள். திருமணங்கள் சினிமாக்காட்சிகளாகும். மொரீசியசு(ஸ்) தீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. 2100 ச.கி.மீ பரப்புடையது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன.

மொரீசியசு' என்ற பெயர் மொரீசியஸ் தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்ஸ், அகலேகா, புனித பிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்ஸ், மொரீசியஸ் தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது. அகலேகா, மொரீசியஸ’ன் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச் சிறிய தீவு. இது மொரீசியஸ் தீவின் தென் மேற்கே 400 கி.மீ தொலைவில் இருக்கிறது.

மொரீசியஸ் 9 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10,00,432 பேர் வாழ்கின்றனர். இச்சிறிய தீவுக்கு 370 ஆண்டு குடியேற்ற வரலாறு உண்டு. டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் இத்தீவை ஆண்டிருக்கின்றனர். 1968-ஆம் ஆண்டு மொரீசியஸ் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது.

மொரீசியஸ் ஒரு விவசாய நாடு. இந்நாட்டின் தேசிய வரவு செலவு திட்டம் முக்கியமான விளைபொருள்களான கரும்பையும், தேயிலையையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது.

மொரீசியஸ் பல இனங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்களடங்கிய ஒருபன்மைச் சமுதாயம். வரலாற்றுக் காலந்தொட்டு மொரீசியசிலே பிறந்த மொரீசியர்களோடு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இங்கு இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஐரோப்பியர்கள், இந்தியர்கள், கிரியோல்கள், žனர்கள், ஆப்ரிக்க அடிமைகள் எனப் பிரிக்கலாம். 1983-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 84 சமயங்களைச் சேர்ந்தவர்களும் 66 மொழிகளைப் பேசுகிறவர்களும் உள்ளனர். 'கிரியோல்' என்பது ஆப்ரிக்கர் மற்றும் இந்தியர், ஐரோப்பிய வமிசாவழியினரோடு கலந்ததால் உருவான கலப்பின மொரீசியஸ் மக்களைக் குறிக்கிறது. பிரெஞ்சு இலக்கண அமைப்பு உடையதும் பெரும்பாலான ஆப்ரிக்க மொழிச் சொற்களையுமுடைய 'மொரீசியன் கிரியோல்' என்ற கலப்பு மொழி இவர்களது தாய்மொழியாகும்.

தமிழர் குடிபெயர்வுக்கான காரணங்கள் :உலக நாடுகளில் தமிழர் இரண்டு விதங்களில் குடியேறினர்.

1. வாணிகத்தின் பொருட்டு கிறிசுது பிறப்பதற்கு முன்னரே குடியேறி, 15-ஆம் நூற்றாண்டு வரை வாணிபத்தின் பொருட்டு நடந்த குடியேற்றம்.

2. 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் பிரஞ்சு, ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளில் தோட்ட வேலைகளுக்குக் கூலி அடிமைகளாய் கொண்டு செல்லப்பட்ட இரண்டாம் கட்ட குடியேற்றம். இந்த இரண்டாம் கட்ட குடியேற்றம் நடந்த நாடுகளில் ஒன்றுதான் மொரீசியஸ் தீவு.

17-ஆம் நூற்றாண்டில் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், ஆர்காட்டு நவாபு முதலியோர் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிறுவ தென் தமிழ் நாட்டில் இருந்த 72 பாளையப்பட்டுக்காரர்களுடன் ஓயாத போரினைச் செய்து வந்தனர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தாம். தொடர்ந்து நிலவிய பஞ்சம், வறுமை, சாதிக் கொடுமை, கிராமப்புரங்களில் போதிய தொழில் வளர்ச்சியின்மை, நிலப்பிரபுக்களின் கொடுமை, வட்டிக் கடைக்காரர்களின் பொருளாதாரச் சுரண்டல், கொத்தடிமைத்தனம், அடிமை முறை போன்றவற்றைத் தாங்கமுடியாமல், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, இராமநாதபுரம் ஆகிய தமிழக மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் நாடு விட்டு ஓடிப் பிற நாடுகளில் குடியேறினர்.

தமிழர் குடியேற்றம் மொரீசியசில் தமிழர் குடியேற்றத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1. முதலாவது கட்டம் : மொரீசியசின் கட்டட வளர்ச்சிக்காகவும் பிற கைவினை நுட்ப வேலைக்காகவும் கைவினைத் திறம் பெற்ற தமிழர்களைக் குடியேற்றியது.

2. இரண்டாவது கட்டம் : ஒப்பந்தக் கூலி முறையில் தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழர்களைக் குடியேற்றியது.

3. மூன்றாவது கட்டம் : ஒப்பந்தக் கூலி முறையோ அல்லது வேறெந்த நிபந்தனையோ இன்றி வாணிகத்தின் பொருட்டுத் தமிழர்கள் குடியேறியது.

1. முதலாவது கட்டம் :

1728-ஆம் ஆண்டு பெநுவா தூய்மா என்பவர் மொரீசியசின் ஆளுனராகப் பதவியேற்றார். இவர் முன்பே புதுச்சேரியில், பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவலராக இருந்தார். இவரால், முதன் முதலாக 275 தமிழர்கள் மொரீசியசில் குடியேற்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 108 பேர் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட இளைஞர்கள். 95 பேர் கைவினைத் திறம் பெற்ற தொழிலாளர்கள். இவ்வரலாற்றுக் குறிப்பின்படி ஆப்ரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீசியசுக்கு வந்த முதலாவது பிற இனத்தவர் தமிழர்களேயாவர்.

1735-ஆம் ஆண்டு மயே தெ லபோர் தொன்னே புதுச்சேரியிலிருந்து கப்பல் கட்டுவதற்காகவும் கட்டங்கள் கட்டுவதற்காகவும் தமிழர்களை அழைத்துச் சென்றார். இத்தமிழர்கள் போர்ட்லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் ஆப்ரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. பிரான்ஸ் தீவை (மொரீசியஸ்) ஒரு நாடாக உருவாக்கியவர் லபோர் தொன்னே. இவரது žரிய பணிகளுக்கு உதவியாக நின்றவர்கள் தமிழர்கள். "இத்தமிழர்கள் கைவினைத் திறமும் சிறந்த தொழில் நுட்பமும் உடையவர்கள் என்றும் மொரீசியஸ் வளர்ச்சியில் இவர்களது பங்கு கணிசமானது" என்று வரலாற்றாய்வாளர் முனிந்திரநாத் வர்மா குறிப்பிடுகிறார். லபோர்

தொன்னேயின் நண்பரும், 'பாலுவும் வர்ஜினியாவும்' என்ற காதல் காவியத்தின் ஆசிரியருமான பெர்னார்தென் தென் சென் பியே "புதுச்சேரியிலிருந்து வந்த தமிழர்கள் சாதுவானவர்களாகவும், பண்புடையவர்களாகவும் இருந்தனர்" என்று குறிப்பிடுகிறார். பல தமிழர்கள் இக்காலத்தில் அலுவலங்களில் பணிபுரிந்ததை நபால் குறிப்பிடுகிறார்.

பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் போர்ட் லூயிஸ் நகரம் மூன்று பிரிவுகளாக இருந்தது. கிழக்குப் பகுதியில் 'மலபாரிகள்' என்றழைக்கப்பட்ட தமிழர்களும் பிற தென்னிந்தியரும் வாழ்ந்தனர். இப்பகுதியை பிரஞ்சுக்காரர்கள் 'மலபாரிகள் முகாம்' (Camp des Malabars) என்றழைத்தனர்.

1810-ஆம் ஆண்டு பிரஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில் இருவர் பக்கமும் நின்று தமிழர்கள் போராடியுள்ளனர். ஆங்கிலேயர் தம் படைக்கு 'உச்சமுடி' என்ற தமிழரை தளபதியாக்க எண்ணி இருந்ததை அறிய முடிகிறது.

1829 முதல் 1830 வரை நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சென்னை துறைமுகம் வாயிலாக மொரீசியசில் குடியேற ஃபர்குவார் என்ற ஆங்கிலேயர் ஏற்பாடு செய்தார். 1833-ஆம் ஆண்டு அடிமைமுறை ஒழிப்பு மொரீசியசில் அமுலாக்கப்பட்டது.

2-ஆம் கட்டம் :

தமிழர்களின் இரண்டாவது கட்டக் குடியேற்றம் 1835-ஆம் ஆண்டிலிருந்து தொடக்கம் பெற்றது. 1843-ஆம் ஆண்டு மட்டும் 14,634 பேர் குடியேறினர். 1845 முதல் 49 வரை சென்னைத் துறைமுகம் வாயிலாக குடிபெயர்வு நடைபெறவில்லை. 1843-ல் இருந்து 52 வரை 30,334 பேர் குடிபெயர்ந்ததாக அறிகிறோம். குடிபெயர்ந்த தமிழர்களில் பறையரும், வன்னியரும் அதிகமிருந் தனர் என்று பினியோ குறிப்பிடுகிறார். ஒப்பந்த முறையில் குடியேறிய தமிழர்கள் அனைவரும் கரும்புத் தோட்டத்தில் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். முகவர்கள் (Agents) குடியேறுபவர்களுக்கு ஆசைகாட்டி அழைத்து வந்து ஏமாற்றியதை உணர ஆரம்பித்து, அதன் விளைவாக பிற்காலத்தில் பல்வேறு தொழில்களும் செய்பவர்களாக இவர்கள் மாறினர். தோட்டத்தில் இவர்கள் பட்ட பாட்டை 'கரும்புத் தோட்டத்தில்' என்ற பாரதியின் பாடல்கள் மூலம் உணரலாம்.

"......அவர் விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! -துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? -அவர் விம்மியழவும் திறங்கெட்டுப் போயினர்" "1810-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மொரீசியஸ் தீவைக் கைப்பற்றியதும் மொரீசியஸ் குடிமக்கள் கையொப்பமிட்ட விசுவாசப் பத்திரம் சவரிமுத்து, சின்னத் தம்பி, துரைச்சாமி என்று பலர் தமிழிலேயே கையொப்பமிட்டிருப்பதைக் கண்டேன். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பீகார், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென குடியேறினர். மொரீசியஸ் தீவில் தமிழ் மக்கள் தம்முடைய பண்டை நிலையையும் செல்வாக்கையும் ஒருவாறு இழந்து விட்டனர் என்றே கூறவேண்டும்" என்கிறார் தனிநாயகம் அடிகளார்.

3-ஆம் கட்டம் :

மொரீசியசின் தலைநகரமாக போர்ட் லூயியின் மத்திய சந்தையிலேயே ஏராளமான தமிழ் வணிகர்கள் வாணிகம் செய்து வந்தனர். இச்சந்தை 1845-இல் திறக்கப்பட்டது. 1853-இல் காப்ரீசி என்ற கப்பலிலும், 1854-இல் ஆஸ்திரேலியா என்ற கப்பலிலும் 1855-இல் ஆர்லிகென் என்ற கப்பலிலும் தமிழ் வணிகர்கள் மொரீசியஸ் வந்தனர். 1862-66 குள் 749 வணிகர்கள் வந்ததாக குறிப்புண்டு. சிறந்த வணிகர்களாக இராம சூரியமூர்த்தி குறிப்பிடுபவர்கள் : எம். கைலாசம் பிள்ளை நல்லசாமி மருதை படையாச்சி, ஏ. சிவராமன், பரிமணம், ஜி.பொன்னுசாமி, டி. வேலாயுதம் பிள்ளை, முதலியோர்.

1860-ஆம் ஆண்டு மொரீசியசிலிருந்து இந்தியத் தொழிலாளர்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்த போது, பல தமிழ் வணிகர்களும் குடிபெயர்ந்தனர் அவர்களில் ஏ.எஸ்.அய்யாசாமி, ஏ.ஆர். நல்லதம்பி, எம். பொன்னுசாமி, ஆறுமுகம் செட்டி அண்ட் கோ, வையாபுரி செட்டி கம்பெனி, ஐ.வேலாயுதன் அண்ட் கோ, இருளப் பிள்ளை அண்ட் கோ ஆகியோர், தென்னாப்பிரிக்காவுக்கும், புதுச்சேரி, ரீயூனியன், மடகாஸ்கர் போன்ற இடங்களுக்கும் சென்றனர்.

தமிழரின் இன்றைய நிலை

சமயம் :தமிழர்கள் மொழியை மறந்து விட்டாலும் இன்றும் தங்களைத் தமிழர்கள் என்று உணர்வது சமயத்தால்தான். மொரீசியஸ் முழுவதும் சுமார் 125 கோயில்கள் இருக்கின்றன. முருகன், சிவன், விநாயகர், மாரியம்மன், கிருஷ்ணன், துர்க்கை, இராமன், வீரமாகாளி அம்மன்,  முனீஸ்வரர், மதுரை வீரன், கன்னியாகுமரி முதலிய தெய்வங்களுக்கு உருவங்கள் உண்டு.

தலைநகரிலுள்ள சொக்கலிங்கம் - மீனாட்சியம்மன் கோயில் பெரியது. தைப்பூசத்தில் காவடி எடுப்பது உண்டு. தைபூசமே மிகப்பெரிய திருவிழாவாகும். இந்நாள் பொது விடுமுறை ஆகும். கொடியேற்றம் தொடங்கி, விரதம் எடுத்து, காவடி எடுப்பார்கள். முருகனுக்குப் பூக்காவடி, இளநீர்க்காவடி, பால்காவடிகள் எடுக்கப்படுகின்றன. காவடியோடு மாவிளக்கு, பால் குடம் எடுப்போரும் உண்டு. பெண்கள் மஞ்சள் ஆடையும், ஆண்கள் காவிநிற ஆடையும் அணிகின்றனர். பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் அலகு குத்திக் கொள்கின்றனர். இதை 'நாக்குக் குத்துதல்' என்று சொல்கின்றனர்.

'தீ மிதித்தல்' என்பது மாரியம்மன் கோயில்களில் பெருமளவில் நடத்தப்படுகிறது. திரௌபதையம்மனுக்கும் தீ மிதி நிகழ்த்துவதுண்டு. பாடி, நோன்பிருந்து விழா நடத்துவார்கள். தாலாட்டு, அரிச்சுவடி பாடி, கும்மி கோலாட்டம் அடித்து கரகாட்டம் ஆடிக்களிப்பார்களாம்.  அம்மன் கோயில்களில் தீமிதி, கஞ்சி, கத்தி பூசை முதலிய சடங்குகள் செய்யப்படுகின்றன. மற்றொரு முக்கிய விழா கோவிந்தன் விழாவாகும். (புரட்டாசி விரதம்) புரட்டாசித் திங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழர்கள் விரதமிருப்பதுண்டு. ஆடித்திங்களில் 18-ஆம் நாளன்று திருமணம் ஆன மகளிர் தங்கள் தாலிக்கயிற்றைப் புதுப்பித்துக் கொள்ளும் விழா நடைபெறுகிறது.

தமிழ்ப் புத்தாண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தெய்வாலயங்களுக்குத் தமிழர்கள் அனைவரும் செல்கின்றனர். சிறப்பு பூசையுடன் முத்தமிழ் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காமண்டி (காமன்பண்டிகை) கதையாட்ட மாடி, இலாவணிபாடி, பொங்கல் கொண்டாடுகின்றனர். தீபாவளி, சிவராத்திரி ஆகிய திருவிழாக்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

உணவு :தமிழ்ச் சமையலுக்கு இத்தீவில் தனிச் சிறப்புண்டு. சமையலில் தமிழர் பயன்படுத்தும் பல பொருள்களுக்கும், தமிழ்ப் பெயர்களே இங்கு வழங்கப்படுகின்றன. இந்நாட்டில் 'விரதச் சாப்பாடு' சிறப்பானது. புலால் உணவை விரும்பும் இந்நாட்டு தமிழ் மக்கள் விரதச் சாப்பாட்டில் மிகவும் கட்டுப்பாடு உடையவர்கள். சோறுடன் சாம்பார், ரசம், பல்வகைக்காய்கறிகள், பச்சடி, அப்பளம், வடை, பாயாசம் அனைத்தும் வாழை இலையில் வைத்து சாப்பிடுகின்றனர். பெரும்பாலான விரதங்களில் இச்சாப்பாடு அல்லது சைவ பிரியாணி சமைக்கப்படும். சமையல் தொடர்பான அனைத்து சொற்களும் அதே பெயரில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

உடை-அணிகலன்கள் :அன்றாட வாழ்க்கையில் பெண்கள் கவுனிலும், ஆண்கள் பேண்ட், மேல்சட்டையுடன் உள்ளனர். பெண்கள் கும்மி, கோலாட்டம் ஆடும் நாட்களில் கால்பாதம் வரை பாவாடை, மேல்யாக்கெட், தாவணி அணிகின்றனர். கை நிறைய வளையல், காதில் தோடு, ஜிமிக்கி, மாட்டல், நெற்றிச் சுட்டி, நீண்ட பின்னல் அதில் குஞ்சம், மூக்குத்தி இவை அணிந்து தலைநிறையப் பூச்சூடுகின்றனர். ஆனால் அப்பூ காதிதப்பூ! திருமணத்தன்று ஒட்டியாணம் முதல் காசுமாலை வரை அவள் அணியாத அணிகலன்களே இல்லை. பட்டுப் புடவை கட்டுகிறாள். ஆண் பட்டுவேட்டி, சட்டை, துண்டுடன் காட்சியளிப்பான். கடவுள் வழிபாட்டில் பெண்கள் புடவையையே கட்டியிருப்பார்கள்.

குடும்ப உறவு முறை :தமிழர்கள் "கிரியோல் மொழி" பேசினாலும் உறவுப் பெயர்களை அழைக்கும் போது தமிழிலேயே அழைக்கின்றனர். சிற்றப்பா, அண்ணன், மாமாவை மட்டும் சற்றே மாற்றி 'மாமே' என்றும் மற்றும் அத்தான், அத்தை, அப்பாயி, அம்மாயி என்றும் கூப்பிடுகின்றனர்.

பெயர்கள் :சுப்பையா, சந்நியாசி, சங்கிலி முதலிய பழைய பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. நம்பி, வெள்ளி வீதி, நக்கீரன், மங்கையற்கரசி, மணிமேகலை, கண்ணகி, மாதவி, சிவகாமி, மீனாட்சி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. சில பெயர்களை மாற்றி அழைக்கின்றனர். முத்தையா-மூச்சியா, முருகன்-மூர்கன், வீரப்பன்-வீர்லப்பென், திருவேங்கடம்-திருவேங்கடும் என நல்ல தமிழ் பெயர்களும் பிரஞ்சு தொடர்பினால் திரிந்து வழங்குவதைக் காணலாம்.

பழக்கவழக்கங்கள் :குழந்தை பிறந்தால் 30 நாள் வரை அந்த வீட்டிற்குச் சென்று வந்தால் தலை முழுகுகின்றனர். காது குத்தும் சடங்கு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. திருமணத்தில் நிச்சயம் செய்தல், மஞ்சள் பூசுதல் (நலுங்கு வைத்தல், பரிசம் போடுதல், தாரை வார்த்தல், கன்னி காதானம் செய்து கொடுத்தல், மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் மரபு, பாதபூசை செய்தல், žர்வரிசை வைத்தல், நாத்தனார் மிஞ்சி அணிவித்தல், மாலை மாற்றல் போன்ற அனைத்துச் சடங்குகளும் தமிழ் மரபை ஒத்துள்ளன. இறப்பில் கோடி போடுதல், எட்டுப் படைத்தல், கரு மாதி, சோறு ஆக்கிப் போடுதல், மகன் மொட்டை அடித்தல் முதலிய யாவும் ஒன்றும் குறைவின்றி மொரீசியசு தமிழர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

தொழில் :பெரும்பாலான தமிழர்கள் கரும்புத் தோட்டம், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். மற்றவர்கள் நகரம் சார்ந்த தொழில்களைச் செய்து வருகின்றனர். பலர் அரசு அலுவலங்களில் பணியாற்றி வருகின்றனர்.

"பலர் செல்வம் படைத்த வணிகராகவும் கரும்புத் தோட்டங்களுக்கு உரிமையாளராகவும் இருந்தார்கள். தஞ்சாவூர் வீதி, திருச்சிராபள்ளி வீதி என்று போர்ட் லூயிசில் இருக்கும்வீதிகளில் ஒரு காலத்தில் தமிழ் பேசும் மக்களே வாழ்ந்தனர். ஆனால் இன்று தமிழர் பலர் அந்த இடங்களை இழந்து விட்டனர்" எனத் தனி நாயகம் அடிகள் கூறுகிறார்.

இசைக்குயில் முதலாம்நாள் போட்டிகள் இனிதே நிறைவெதின சினிமாவிற்கே கையொலியெழுப்பாத தமிழர்கள் பிள்ளைகளின் தமிழிசைப்பாடல்களுக்கு கையொலியெழுப்பி ஆரவாரித்துக் கொண்டனர்.

07.04கி.ஆ2012 தமிழாண்டு2042-தனிப்பாடல் போட்டிகள் குழுப்பாடல் போட்டிகள் தில்லான போட்டிகள் எனப்பல பிரிவினருக்கும் போட்டிகள் நிகழ்ந்தன. சிறுவர்கள் இளவயதினர் பொரியோர்கள் என மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஒவ்வோரு குழுவின் இலக்கங்கள் காண்பிக்கப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின. மாணவர்களின் மேல்சாய் உச்சுசாய் இறுதிநிறைவு நேரங்களில் மாணவர்கள் இரசனையுடன் ஆரவாரித்தனர். பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகள் பங்குகொண்டனர். நேரம் தாமதித்தே போட்டிகள் நிகழ்ந்ததால் பெற்றோர்களும் பிள்ளைகளும் பெரும் இடர்களை எதிர்கொண்டனர். மீண்டும் இன்று காலை போட்டிகள் 9.00 மணிமுதல் ஆரம்பமாகி நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்கு கொள்ளும் போட்டியாளர்கள் திங்கட்கிழமை வரை குரல்வளத்தை பேணுவது கடினமாகவிருக்கிறது. காரணம் வெப்பமாக இருந்தகாலநிலை திடீரென குளிராக மாறியதால் சிறுவர்களின் குரல்களில் கரகரப்புத் தோன்றுகிறது. இலேசான சுட்டாறிய நீரை அடிக்கடிபருகி கவனமாக நடந்துகொள்வது நலம்பயக்கும். தயிர் எண்ணெய்ச்சாப்பாடுகளைக் குறைத்து உண்பது நன்று

இதுதான் 21ஆம் நுாற்றாண்டின் மனிதநாகரீக வளர்ச்சியா? தமிழனின் மனதில் எழும் கேள்வி? பூநகரி.பொ.முருகவேள் ஆசிரியர் சுவிசு

இலங்கை கொடுத்தது வாக்குறுதி மட்டுந்தான். உலகநாடுகள்கொடுத்ததோ....... தமிழர் உயிர்களைப் பறிக்க அனுமதியும் நச்சு ஆயுதங்களையும் .! இதுதான் 21 ஆம் நுாற்றாண்டின் மனிதநாகரீகவளர்ச்சியா தமிழனின் மனதில் எழும் கேள்வி?

வெள்ளப்பெருக்கென்றால் கூடபெரும் உதவிகள் குடும்பமே அழிந்த குழந்தைக்கே உதவாத அரக்கத்தனம்.

போருக்கு போட்ட பெரியதிட்டதில் சிறிதளவேனும் உதவித்திட்டங்களுக்கில்லை. சிலகூட

ஊடகக்காட்சிக்குநடந்ததே ஒழிய உண்மைக்கு நடக்கவில்லை. கூடாரங்களை வழங்கிய நாடுகள்

கூடவே நின்று அவதானித்து உதவிசெய்யவில்லை. அல்லது இலங்கை விடவில்லை

காட்டிற்கிடையில் மரங்கள் வெட்டி தட்டந்தரையில் படுக்கவைத்து வதைத்தனர் பலர் சுறுண்டனர்

கதிர்காமர் முகாம் நலன்புரிமுகாம் மெனிக்பாம் என்று எத்தைனை பட்டியல் பட்டிணி போட

கம்பிவேலி போட்டு கன்னியரையும் அடைத்து வைத்து காமவேலி இல்லாத காமுகர்கள் காவலர்கள்

அமைச்சர்கள் அதிகாரிகளின் பசியும் அங்கே! உணவுப் பசியும் தண்ணித்தாகமும்

பெண்களுக்கு பெண்களே சொல்லாத மாதமொருமுறைவரும் தேவைகளுக்கே அங்கே ஏதுமில்லை.

குழந்தைகளுக்கு பால்மாவில்லை. முள்ளிவாய்காலில் உயிர்களைப் போக்கி அழித்தனர் இங்கோ

உயிரோடு அழித்தனர்.அதற்காக அசமாந்துத்தனமாக நடந்தனர்.கைதுகள் செய்தனர்

ஒப்படைத்தவர்களுக்கு ஒருபதிலும் இல்லை. அழகானவர்கள் பயங்கரவாதிகளாயினர் நீதியும்செத்தது

தமிழ்தத்தளித்தது இரத்தம் கொப்பிளிக்க கொப்பிளிக்க காமுகர்கள் வதைத்தனர்

உணவுதாறன் வா என்றனர்.இப்படிஎத்தனை கீழ்மைகள் செய்தனர் குளிக்கவைத்து பல்லிழித்தனர்.

இப்பொழுது பேசும்நல்லிணக்கம் அப்போஎங்கே போனது? அதரிதாகவே காணப்பட்டது.

தென்பகுதி மக்களைக் கொண்டு தொண்டுகள் செய்திருந்தால் நல்லிணக்கம் தானாக வந்திருக்கும்

தமிழரை நடைப்பிணங்களாகவும் தமிழர்தேசத்தை சவக்காடுகளாகவும் ஆக்குவதா அபிவிருத்தி?

போரில் ஒன்றில் வென்றாய் மற்றவை அத்தனையிலும் தோற்றுக்கொண்டு வெற்றிகள் கொண்டாடினாய்

அடைபட்டிருந்தாருக்கு அடுத்தவழிசெய்யாது பழிசெய்து கொண்டு வெற்றிவிழா கொண்டாடினாய்

இது பௌத்ததர்மமா? உலகநீதியா? இவற்றுக்கெல்லாம் உலகம் அனுமதித்ததை இப்போ அனுபவிக்கிறது.

வெளிகளில் நடந்ததைத் தெரியாதது போல் இருந்துவிட்டு இருட்டறையில் படங்காட்டும் மேற்குலகு!

பாக்கீன் மூன்வந்தார் வானத்தில் பறந்தபடியே பார்த்தார் சென்றார் உலகஉதவிகள் கூடப்பெருகவில்லை.

காடத்தவந்தவர் போல் வந்து மூடிமறைக்க உதவியதைத்தவிர அவர்செய்த அற்புதம்தானென்ன?

ஐ.நா.சபை அறிக்கைவெளியிட்டார் அதைமறைக்க நல்லிணக்க ஆணைக்குழுப்பரிந்துரையை வழிமொழிந்தார்

மகிந்தவைத்தட்டிக் கொடுப் போர் இவர்களே! யெனீவாத்தீர்மானம் மூலம் தீவிரமாக்கியிருக்கிறார்கள்.

அவர்செய்வதை எல்லாம் அனுமதிக்கிறார்கள் ஆண்டுகள் கடந்தபின் விசாரித்து அறிக்கை விடவேண்டுமா! ஐ.நா.சபை?

இலங்கை கொடுத்தது வாக்குறுதி மட்டுந்தான் உலகம்கொடுத்ததோ உலகம்கொடுததோ.......

தமிழர் உயிகளைப் பறிக்க அனுமதியும்! நச்சு ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்த உலகநாடுகள்.இதுதான் இருபதாம் நுாற்றாண்டின் மனிதநாகரீகவளர்ச்சியா? தமிழனின் மனதில் எழும் கேள்வி?

குமரிநாடு ஏற்கனவே எழுதியது இந்தியா இதையே செய்யும் என்று பிள்ளையாராக இலங்கை முருகனாக தமிழர்கள் மாம்பழம் யெனிவாத்தீர்மானம் நாரதர் அமெரிக்கா!

14.03.கி.ஆ2012 தமிழாண்டு2043-கருணாநிதியைக் கையாண்ட பிரணாமுகர்யீ பிராமணியத்தன்மையில் இறக்கும்வரை இருப்பார். இவர்கருணாநிதியை மட்டுமல்ல தமிழர்களையே கவுட்டார் இனிசோனியாவையும் கவுப்பார் இந்தியாவே இவர்கள் போன்றவர்களால் பல இடர்களை எதிர்கொள்ளும் அதுவரை தமிழர்கள் ?

யாழ்ப்பாண உள்ஊர்ஆட்சி தேர்தல்காலம் போல் யெனிவா நிலவரங்கள் உள்ளது. யாழ்அமைச்சர் ஒருவரின்நிலையில் இந்தியாவா?தொப்பிள் கொடிஉறவு என்போரை தட்டி எழுப்பு!

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012 08:17  மின்னஞ்சல்

22.02.கி.ஆ.2012தமிழாண்டு2043- யாழ்ப்பாணத்தில் நடந்த உள்ஊர்ஆட்சித்தேர்தலில்  மக்களின் மனம் உறுதியாக இருந்தது. பணம்பறந்தது அமைச்சர்கள் விடுதிகளில் தங்கி என்னென்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்தார்கள்.இலங்கை விவகாரத்தில் எல்லாரையும் விரத்திநிலைக்கு கொண்டுசென்று இறுதியில் தான் இலங்கையைக் கையாழ்வதே இந்தியாவின் நோக்கம்.

எனவே இலங்கைத்தமிழர்கள் உலகம் சுற்றிப்பறந்த மயில் முருகன் கதைதான்.

இலங்கை அம்மை அப்பனைச் சுற்றிய பிள்ளையார்தான்.

ஆட்டங்கள் பாட்டங்கள் மேடைகளில் அன்றி வீதிகளிலம் நடந்தது மக்கள் வேடிக்கை பார்த்ததும் உண்மைதான்.  பணம்பத்தையும் செய்யும் என்பார்கள் என்று தமிழ் நியாவாதிகள் அச்சப்பட்டுக் கொணடிரு ந்தார்கள். தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டிருக்கையில்

பணத்தின் பலவீனம் தெரியவந்தது. மனத்தின் உண்மைப் பெறுமதி தெளிவானது. மனம் என்பது எப்பவும் மனிதனுள் இயங்கிக்கொண்டிருப்பது மனிதனை உலகை இயக்குவது. மனத்தால் எல்ல நன்மைகளும் தீமைகளும் நிகழ்வதாக வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி வைத்துள்ளார்.

எனவே யெனிவாவை இன்று அன்றைய யாழப்பாணம் ஆக்கியிருக்கின்றது அரசு. அவர்களுடைய இலக்கு தமது விடயங்கள் சர்வதே மயப்படக்கூடாது என்பதாகும்.

இதை எப்போதும் சீனா இசுசியா தமது விடயங்களிலும் கடைப்பிடித்து வந்திருக்கின்றன. இந்தியா சற்று வித்தியாச மாக நடந்து கொள்ளும்.

அவர்களும் தமது விடயங்களை சர்வதேசத்திடம் விடுவதில்லை. எனவே இலங்கையின் இத்தகைய துணிவிற்குக் பின்னால் நிற்பவர்கள் யார் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

பெரியபரபரப்பு நிகழ்ந்தாலும் இந்தியாவின் சுட்டுவிரல் இதில் முக்கியம்.  அது இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என்பதே குமரிநாட்டின் நிலை.

இலங்கை விவகாரத்தில் எல்லாரையும் விரத்திநிலைக்கு கொண்டுசென்று இறுதியில் தான் இலங்கையைக் கையாழ்வதே இந்தியாவின் நோக்கம்.

எனவே இலங்கைத்தமிழர்கள் உலகம் சுற்றிப்பறந்த மயில் முருகன் கதைதான்.

இலங்கை அம்மை அப்பனைச் சுற்றிய பிள்ளையார்தான்.

இருந்தாலும் இலங்கையின் சில ஏமாற்றுக்கள் இந்தியாவிற்கும் பிடிக்காமல் இருப்பது. மறைமுகமாக கூடுதலாக இந்தியாவை விடவும் இலங்கை சீனாவை முன்னிலைப்படுத்துவதாலும் இந்தியா மதில்மேல் மியாமியா வாக இருந்து இலங்கையைக் காப்பாற்றிய நாடகத்தை நிட்சயம் நடத்தியே தீரும்.

உலகநாடுகளில் உள்ள தமிழர்கள் யெனிவாச் சுற்றுலாவில் மட்டும் மகிழ்ந்திருக்க மற்றதெல்லாம் நடந்து முடியும்.

தமிழர்கள் தமது வெள்ளை நண்பர்கள் மற்றும்நாட்டு நண்பர்களின் கனதிமிக்கவர்களை்ப் பயன்படுத்தவேண்டும்.

இந்தியாவிற்கு துாதரகங்கள் ஊடாக அழுத்தங்கள் ஆரம்பிக்கவேண்டும் இந்தியாவிற்கு எந்த அழுத்தமும் நிகழவில்லை என்பது தெரிகிறது

எனவே இலங்கைத்தமிழர்கள் தமிழ்நாட்டுத்தமிழர்கள் யெயலலிதாவிற்கும் இந்தியாவிற்கும் நெருக்கடி கொடுக்காது இதைக்கையாழ்வது தந்திரமாகாது

மகிந்தவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவேன் என்று போர்க்கொடி எழுப்புிய யெயலலிதா இன்று கூண்டுக் கிளியாக அமைதியாக இருப்பது ஏன் என்று தமிழக மக்கள் போராடவேண்டும்.

வைக்கோவும் நெடுமாறனும் வியயகாந்தும் கற்சித்து நடக்கப்போவது ஒன்றுமில்லை அது பத்திரிகைக்கும் இணையங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படும்.

தேர்தல்காலத்தில் ஈழத்தமிழர்பற்றி தொப்பிள் கொடி உறவு கொண்டாடும் சொந்தங்களைத் தட்டி எழுப்புங்கள்.

சிறிய நாடு சீறும் பெரிய நாடுகளைத் சீண்டும் திறன் ஒன்றையும் காணப் போகின்றீர்கள். இத்தீர்மானம் கொண்டுவரும் அவையை கேள்விக் குறிக்குள்ளாக்கும் நோக்கும் இலங்கையைப் பயன்படுத்தி சீனா இரசுசியா கியுபா பாக்கிசுதான் போன்ற நாடுகள் வேறு திட்டம் தீட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இலங்கையில்நடந்தது அழுவதற்கும் அவமானத்திற்குமுரியது யெனிவாவில் நடப்பதுசிரிப்பிற்கும் வெட்கத்திற்குமுரியது. பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து

28.02.கி.ஆ2012தமிழாண்டு2043-எனவே நடப்பதெல்லாம் வல்லமை இல்லாதவர்களுக்கு வல்லமையானவர்களால் இழைக்கப்படும் அநீதி.

இதை இப்படியும் பார்க்கலாமோ!  உயிர்களைக் கொல்வது பாவம் என்று தாவரஉணவை உட்கொள்ளுவதும் விஞ்ஞானப்படிபாவம்.

ஓதிவெட்டினால் இனுமொரு மதப்படிபாவமில்லை. அப்ப ஐ.நா.சபையில ஓதிவெட்டினா பாவமில்லை என்பதும் நடந்திருக்கு இன்னும் நடக்கவும் இருக்கு.

இலங்கையில் நடந்தபோருக்கு ஆயுதம்விற்றவர்கள் வாங்கியவர்கள் கடத்தியவர்கள்(கே.பீ) போன்றவர்கள் சில்வாபோன்று போரை நடத்தியவர்கள் ஐ.நா.சபைக்குள்.  நலன்புரி முகாமென்று உலகிற்காக அழகான பெயர் இட்டாலும்.எதிர்மறையான நடைமுறைகள் முகாங்களில்.

தாம்விரும்பியவர்களைக் கடத்தியவர்கள். பெண்களை அனுபவித்தவர்கள் அல்லாவின் புனிதத்தைக் கெடுத்தவர்கள் யாழ்ப்பாணத்தைில் இன்றும் சட்டவிரோத ஆயுத்தை ஐ.நா .சபைக்குள் அனுமதித்து இருப்பதை மனிதஉலகின் கேவலத்தின் அடையாளம் எனலாம்.

இதைப்பார்கும் போது இச்சபைகளே போர் கார்களின் சபை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

உறைப்புக்கூட்டில் எடுத்து கழுவிச் சாப்பிட்டகுழந்தையின் கதையா இது!

சரியான நீதியென்றால் இவற்றிற்கு தனியான சபை தேவை.

இது இலக்கியமில்லை பெரியகாப்பியத்தில் ஒருபகுதியை போர்க்காண்டம் என்று கற்பனை பண்ணி வகுக்க.

இவைஉண்மையாக நடந்தவை இவைபோன்று நடப்பதை விசாரிக்க அணுகுமுறைகச்ளை சரிசெய்ய  தொடர்நடவடிக்கைச்சபை தேவை.

அதைவிடத்து சுட்டிபுரம் திருவிழாவிற்கு சீர்காழிவந்து பாடிய விளையாட்டாக இருக்கிறது இது.

குற்றம்புரிந்தவர்கள் அதிகாரிகளாக வந்திருக்கிறார்கள் அமைச்சர்களாக வந்திருக்கிறார்கள். திட்டமிட்டு பேச்சைக்குழப்பியவரும் மந்திரியாகவந்திருக்கிறார்.

பல இராணுவங்களைக் கொன்ற புலிகளும் சாட்சியாகவந்திருக்கலாம். இவைஎல்லாம் நடக்கபயிற்ச்சி கொடுத்த இந்தியாவேறு தீர்ப்புவழங்க யாருக்கு ஆதரவு என்ற எதிர்பார்ப்பு!

இந்தியாவை ஏற்கும் உலகம் கே.பீயை ஏற்பது வேடிக்கை அல்ல என்று சிரிக்காமல் வெட்கப்பட்டுக் கொண்டுவாழவேண்டியது தான்

உண்மையில் தமிழர்களில் திருவள்ளுவருக்கும் கம்பருக்கும் இளங்கோவடிகளுக்கும்பின்னர் அவர்கள் தரத்தில் மொழி இலக்கியவாதிகள் பிறக்கவில்லை என்பதும் நிருபிக்கப்பட்டுவிட்டது.

அவர்கள் போன்றோர் இருந்தால் அதைவிடப் பெருங்காப்பியங்களும் சமூகநீதிகளும் அநீதிகளும் இன்றைய வரிவடிவ இலக்கியத்தில் அழகாகவந்திருக்கும் பதிவாகியிருக்கும் போர்ச்செய்திகள் பரணிகளாகி இயிருக்கும்.

அவரவர் விட்டதவறுகளும் தரக்கங்களாக காட்சிகளாகியிருக்கும். அல்லது எழுதிக்கொண்டடு இருக்கிறார்கள் கொப்பநிக்கசுபோல் இறக்கும் போது வெளியிட்டால் ஆபத்து இல்லை என்று இருக்கின்றாரகளோ !

எனவே நடப்பதெல்லாம் வல்லமை இல்லாதவர்களுக்கு வல்லமையானவர்களால் இழைக்கப்படும் அநீதி.

இதை இப்படியும் பார்க்கலாமோ!  உயிர்களைக் கொல்வது பாவம் என்று தாவரஉணவை உட்கொள்ளுவதும் விஞ்ஞானப்படிபாவம்.

ஓதிவெட்டினால் இனுமொரு மதப்படிபாவமில்லை. அப்ப ஐ.நா.சபையில ஓதிவெட்டினா பாவமில்லை என்பதும் நடந்திருக்கு இன்னும் நடக்கவும் இருக்கு.

வெட்கப்படுவோம் வேதனைப்படுவோம்.

இதற்கு சரியான வழி இவைதொடர்பான ஆராய்ட்சியே அன்றி இவைமூலம் தீர்வு இல்லை.என்கின்றது. குமரிநாடு நெற்

அடுத்து அங்கு தமிழர்கள் 3000 பேர்வரை கூடி தமிழர் களுக்கு நீதி வேண்டும் என்று போராடினார்கள்.  அங்கு தமிழர்களுடன் சுவிற்சர்லாந்தில் பலகாலம் பழகிவரும் பேணில் செஞ்சிலுவைச் சங்க உதவி்ப் பணியாற்றிய வருமான அனா அனோய்(பேர்ண்நகரில் பலதமிழர்களாலும் அறியப்பட்டவரும் பல தமிழர்களுக்கு பல வகையான உதவிகளையும் செய்தவரும் கூட) அவர் யெனிவாவில் தமிழர்களுக்கு கூறிய அறிவுரைகள் முக்கியமானவை.

ஐரோப்பிய நாடுகளில் நீங்கள் தனித்துப்போராடி எதுவும் நடக்காது அவர்களுடன் இணைந்து போராடுங்கள் பயனைஅடைவீர்கள் என்றார்.

இது செவிடன் காதில் ஊதியசங்காக இருந்தால் என்ன செய்வது.

இந்தியாவின் வகிபாகம் குறித்து உயர்மட்ட ஆலோசனை

27.02கி.ஆண்டு2012தமிழாண்டு2043-யெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பிலான இந்தியாவின் வகிபாகம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராயபக்ச, இந்திய உயர் ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் அவசர பேச்சுகளை நேற்று நடத்தியுள்ளார்.இதிலிருந்து அறியவேண்டியது. இந்தியாவின் இறுதித்தீர்மானமே முடிவு அதுவரை ஆர்ஆடடியும்   பயன்னில்லை இதுவே தென்கிழக்காசியநாடுகளின் நிலை.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

பிறப்பால் தமிழனாக முடியுமா? வாழ்வால் தமிழனாக முடியும்.!

தமிழ் வாழ்வு வாழ்பவன்.

தமிழப்பெயர்தாங்குபவன்

தமிழில்பேசுவான் எழுதுவான்

தமிழக்கல்விபேணுவான்

தமிழுக்கு தொண்டுசெய்வான்

தமிழ்நெறியான திருக்குறளைப்பின்பற்றுவான்

தமிழியநுால்களை நெஞ்சில் தாங்குவான்

தமிழியச்சான்றோர்களையும் அறிஞர்களையும் மதிப்பான்.

தமிழிய விழாக்களைக் கொண்டாடுவான்.

தன்னைத் தமிழன் என்றே அழைப்பான் குறிப்பான்.

மேடையில்  ஊடகத்தில் தமிழன் என்றுவிட்டு மாற்று இனத்தாரிடம் நான் இந்தின் என்று பெருமை கொள்ளான்.

இவன் தமிழ் நல்ல தமிழாக இருக்கம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.