குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, கார்த்திகை(நளி) 25 ம் திகதி புதன் கிழமை .

வடக்கில் கம்பளமாகப்போகும் நான்கு சாலைகள்! பூநகரி பிரதேச சபைக்குள் ஏதுமில்லை இடமாற்றம்மட்டுமா?

06.11.2020....இலங்கையில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு வீதிகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைகள் அமைச்சர் யோன்சு(ஸ்)டன் பெர்னாண்டோ நாளையதினம் (6) ஆரம்பித்து வைக்கிறார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் மூன்று வீதிகளையும் கிளிநொச்சியில் ஒரு வீதியையும் கம்மளச் சாலைகளாக மாற்றுவதற்கான சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த வீதிகளின் விபரம்,

1.60 கிலோ மீற்றர் தூரமுடைய யாழ்ப்பாணம் – கடற்கரை வீதி 488.4 மில்லியன் ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது.

5.503 கிலோ மீற்றர் நீளமுடைய வல்லை- உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை வீதி 507.50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.

இந்த இரண்டு வீதிகளுக்குமான முன்மொழிவை யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற பிரதிக் குழுக்களின் தவிசாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் முன்வைத்திருந்தார்.

1.23 கிலோ மீற்றர் நீளமுடைய அரியாலை நெடுங்குளம் பிள்ளையார் கோவில் வீதி 54.443 மில்லியன் ரூபாய் செலவிலும் இதனை கடற்தொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான டக்ளசு தேவானந்தாவினால் முன்மொழியப்பட்டது.

2.05 கிலோ மீற்றர் நீளமுடைய கிளிநொச்சி செல்வபுரம் – கிருசுணபுரம் வீதி 74.40 மில்லியன் ரூபாய் செலவிலும் சீரமைக்கப்படவுள்ளன. இதுவும் டக்ளசு தேவானந்தாவினால் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.