குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழகப் பண்டைய க் கோட்டைகள் -1

15.10.2020....உலகில் பழம் பெரும் பண்பாட்டுப் பெருமையைக் கொண்ட பகுதிகளில் நமது தமிழ்நாடும் ஒன்றாகும்:தமிழர்கள் சங்ககாலம் தொட்டே கோட்டைக்கட்டி வாழ்ந்திருக்கின்றனர் .சிந்துவெளியில் கூட கோட்டை கட்டி வாழ்ந்த தடயங்கள் உண்டு .பண்டைய காலத்து மனிதன் ஓரளவுக்கு தக்க இயற்க்கை சூழல் உள்ள இடங்களைத்தேர்வு செய்து அங்கே செயற்கை முறையில் பாதுகாப்பு அரண்களை  அமைத்து வாழ்ந்து வந்தனர்.

அத்தகைய அரண்கள் அவர்களுக்கு சாதகமாகவும் ,தக்கவரும் பகைவர்களுக்கு

பாதகமாகவும் அமைத்துக்கொண்டனர் .

பண்டைய அனைத்துமன்னர்களும் தங்கள் வசிக்கும் இடத்தில  இருக்கும் செல்வங்கள் ,மக்கள் ,கால்நடைகள் ,உணவுதான்யங்கள் ,படைக்கருவிகள் மற்றும்  தான் வாழுமிடம் இவைகளைப்பாதுகாக்க ஏற்படுத்திய வலிமையான அமைப்பையே கோட்டை என்கிறோம் .

இத்தகைய அரண்கள் அமைந்த  கோட்டைகளைச் சுற்றி நீரால் அமைந்த அகழிகளையும் அமைத்திருந்தனர்

.இத்தகைய அரண்களை இலக்கியங்கள்  காட்டரண் ,நீரரண் , நிலவரண் , மலையரண்

மதிலரண் என்று வகைப்படுத்துகின்றன .

அதன் நீட்சியே தமிழர்கள் இன்றளவும் சுற்றி வேலியமைத்து வாழ்தலைச்  சொல்லலாம்

அரணியல் எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.

படையெடுத்துப் போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்; படையெடுத்தவர்க்கு அஞ்சித் தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும். என்றும்    மற்றும்

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல்.

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர். என்கிறார் .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகத்தில் பல நகரங்கள் கோட்டை, கொத்தளங்கள், அகழிகள் சூழத் திகழ்ந்ததை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்கள் விளக்கமுற எடுத்துரைக்கின்றன.

உறையூர்,  நான்மாடக்கூடல் எனும் மதுரை, கரூவூர் வஞ்சி ஆகிய மூவேந்த~களின் தலை நகரங்களும், பல குறுநில மன்னர்களின் தலைமை ஊர்களும் அகழிகள் சூழப் பெற்ற கோட்டைகளுடன் திகழ்ந்தன என்பதை இலக்கியம் பகரும் எண்ணற்ற சான்றுகள் வழி அறியலாம்.

பிற்கால வரலாற்றிலும், தமிழகத்தில் அகழிகள் சூழ்ந்த பெரு நகரங்களாக காஞ்சி, தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், மதுரை ஆகிய நகரங்கள் விளங்கின.

ஆனால் அங்கு திகழ்ந்த அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து அமைந்த கோட்டை, அகழி ஆகியவைகளும் கால வௌ;ளத்தில் கரைந்து அவை இருந்த சுவடுகள் கூட இல்லாமல் மறைந்து விட்டன.

சிலப்பதிகார காலத்தில் இருந்த மதுரையிலும் சுற்று கோட்டையிருந்தது. மதுரை நகரம் தாமரைபூ வடிவத்தில் இருப்பதாகவும் அதற்கு உள்கோட்டை வெளிக்கோட்டை உண்டு என்று சாமிசிதம்பரானர் தன்

நூலில் குறிப்பிடுகிறா ர்

அதன் அழிவிற்குப்பிறகு விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மதுரையை சுற்றி கோட்டை கட்டப்படுகிறது இப்போது அதுவும் இல்லை .அதுபற்றிய செய்திகளை இறுதியில் பார்க்கலாம் .

மூவேந்தர்கள் மட்டுமில்லாமல் அவர்களின் கீழ்  இருந்த பல்வேறு  குறுநில மன்னர்களும் தங்கள் பாதுகாப்பிற்காக கோட்டை கட்டி வாழ்ந்திருக்கிறார்கள் .இதற்கான சான்றுகள் பல கிடைத்திரக்கிறது .

மூவேந்தர்களின் ஆளுமையில் எத்தனை குறுநில மன்னர்கள் இருந்தார்கள் என்ற சரியானக்

கண க்குத்தெரியவில்லை ஆனால் மதுரை  நாயக்கர்கள் ஆட்சியின்  போது தமிழகம் 72 பாளையங்களாக

மரபு முறையாகப்பிரிக்கப்பட்டிருந்தது .

ஆனால் 18 ஆம் நூற்றாண்டில்முதல் கர்நாடக நவாப்  சாதத் உல்லாக்கான் ஆட்சியின் போது தமிழகக்கோட்டைகள் 84 என்று வரையறுக்கப்பட்டிருந்தது

.அவற்றுள் ஏழு கொட்டைகள் செஞ்சியைச் சேர்ந்தவை .

இப்போது அந்தக்கோட்டைகள் எங்கும் இல்லை ஆனால் அதன் இடிபாடுகள் ,கோட்டை இருந்ததற்கான சான்றுகள் அங்கேக்கிடைக்கிறது .

அதே  சமயம் ஓர் சங்க கால கோட்டையின் இருப்பிடம் இப்போது தெரியவந்திருக்கிறது .

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைத்துள்ளது பொற்பனைக்கோட்டை எனும்   கோட்டை  சங்க கால கோட்டைகளுக்கான நிகழ்காலச் சான்று

சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட மாடமாளிகைகளும் கோட்டை கொத்தளங்களும் முழுவதும் அழிந்துவிட்டதாக கடந்த பத்தாண்டுகள் வரை அனைத்து ஆய்வாளர்களும் நம்பி வந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்றளவும் கோட்டைச்சுவர் அழியாமலும் , அதில் பயன்படுத்தப்பட்ட களிமண் சங்ககால செங்கல் கட்டுமானம் கோட்டைச்சுவரின் நான்கு அடி அகலமுள்ள சுற்று சுவர் மற்றும் கோட்டை கொத்தளத்தின் ப வடிவ கட்டுமானத்தின் அடிக்கட்டுமானம் இன்றளவும் சிதையாமலும் உள்ளது

வட்ட வடிவில் உள்ள கோட்டையின் சுற்றளவு 1.63 கிலோ மீட்டருடனும் , 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகவும் உள்ளது. கோட்டை நான்கு புற வாயில்கள் கொண்டதாகவும் தற்போதைய நிலையில் உள்ளது. கோட்டையின் வடக்குப்புற மண் சுவரின் அடிமானம் சுமார் 50 அடி அகலமுடனும் , 40 அடி உயரத்துடனும் சாய்வாக அமைந்திருந்தது தெரிகிறது ,

கோட்டையின் மேற்புறத்தில் பத்து அடி அகலத்துடன் மண் மற்றும் செம்புராங்கல் கொண்ட சுற்றுப்பாதை அமைப்பு உள்ளது. இதன் வெளிப்புறத்தில் நான்கு அடி கால அகலத்தில் சங்க செங் கல்கட்டுமானத்துடன் கூடிய கோட்டைச்சுவர் மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அம்பு எய்யும் அறைகள் (கொத்தளங்கள்) தொடர்ச்சியாக காணப்படுகிறது. இவை இது  கோட்டைதான் என்பதை தொல்லியல் ரீதியில் அடையாளப்படுத்த மிக முக்கியமான சான்றாகும்.

கோட்டையைச் சுற்றிலும் சுமார் 15 ஆழமான, சுமார் 40 அடி அகலத்துடன் அகண்ட அகழியும் ஒரு சில இடங்களில் முழுமையாக மண் மூடி விட்டாலும் மேற்கு மற்றும் வடக்குப்பகுதிகளில் முழுமையாக காண முடிகிறது

அத்துடன் இந்தக்கோட்டைப்பற்றிய இலக்கிய சான்றுகளையும் மற்றும் அதன் அருகில் இருந்த பொற்பனைக்கோட்டைப் இரும்பு உருக்காலைகள் - செந்நாக்குழி என்னும் இடத்தைப்பற்றியும் தொடர்ந்துப்பார்க்கலாம்

2012 ஆம் ஆண்டு இந்த கோட்டையில் உள்ள குளக்கரையில் முக்கோண வடிவிலான பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. . கோட்டைச் சுவருக்கு வெளியே சற்றுத் தொலைவிலுள்ள பாறைப் பகுதியில் வட்டமாகவும், நீளமாகவும் நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண் வார்ப்புக்குழாய்கள், உருக்கு கலன்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அக்காலத்தில் இரும்பை உருக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் இது 2500 ஆண்கடுளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது

இவைகளைப்பற்றியும்18 ஆம் நூற்றாண்டில்  முதல் கர்நாடக நவாப்  சாதத் உல்லாக்கான் ஆட்சியின் போது தமிழகக்கோட்டைகள் 84 இருந்த இடங்களையும்  இதன்  தொடர்ச்சியில் பார்க்கலாம் .

ஆனால் இதற்க்கு ஆதரவு அதிகம் இருந்தால் மட்டுமே இந்த உடல் நிலையில் எழுத ஊக்கம் வரும்

அண்ணாமலை சுகுமாரன்

15/10/2020

நன்றி http://pudukkottaihistory.blogspot.com/2019/05/   பொற்பனைக்கோட்டை பற்றிய செய்திகள் அதில் பெறப்பட்டது .

படம்    பொற்பனைக்கோட்டை மற்றும் செஞ்சி கோட்டை

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.