குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 27 ம் திகதி செவ்வாய் கிழமை .

ஆழ்கடலுக்குள் பரந்து கிடக்கும் ஆறு! மலைப்போல குவிந்து கிடக்கும் தங்கம்! அதிர்ச்சி மறைநிலைகள்கண்டு

பிடித்த விஞ்ஞானிகள்.... 07.10.2020 பூமிப்பந்தின் 70 சதவீத இடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது கடலில் எண்ணில் அடங்காத அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றது. கடல் குறித்து இதுவரை உங்களுக்குத் தெரியாத சில வியப்பான தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்.

 

கடலுக்குள் ஆறு

ஆழ்கடல் புகைப்படங்களைப் பார்த்தால் கடலுக்குள் ஆறு,குளம் ஆகிய பகுதிகள் தெரியும்.இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவரையில் பல பகுதிகளிலிருந்து வருகின்ற ஆறு இறுதியாக கடலில் கலக்கிறது என்று தானே படித்திருக்கிறோம்.

கடலுக்குள் எப்படி ஒரு ஆறு சாத்தியமாகும் என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் சொல்கிற பதில் என்ன தெரியுமா? கடலுக்கு அடியில் மிகவும் அடர்த்தியான லேயரில் உப்பு படிந்திருக்கிறது. அப்படி படிந்திருக்கும் உப்பு அதோடு அந்த பகுதியின் கடல் நீர் அதிக அடர்தியாக இருக்கும். இதனால் பார்க்கிற நமக்கு சாதரண நீருக்கும் அதிக அடர்த்தியான நீரும் வேறுபட்டு தெரிவதாக சொல்கிறார்கள்.

தங்கம்

கடலுக்கடியில் தங்கம் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 18 மில்லியன் மெட்ரிக் டன் தங்கம் வரையில் கலந்திருக்கிறதாம்.

கடலுக்கடியில் ஒரு மைல் அல்லது இரண்டு மைல் ஆழத்திலிருந்து இந்த தங்கத்தை எடுக்க வேண்டும்.

ஒரு வேளை அப்படி எடுக்கப்பட்டால் உலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு கிலோ தங்கம் வரையில் கொடுக்கலாம் அந்த அளவிற்கு தங்கம் கிடைக்கும் என்கிறார்கள்.

கண்ணுக்கு தெரியாது

கடலில் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள் கூட ஏராளமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மில்லிலிட்டர் கடல் நீரை குடிக்கிறீர்கள் என்றால் அதில் ஒரு மில்லியன் பாக்டீரியாக்களும்(நுண்ணுயிர்கள்) பத்து மில்லியன் (நுண்ணுயிர்கள்)வைரசுகளும் இருக்கின்றன.

கடற்கரை அருகில் இருக்கிற நீர் அல்லாது ஆழ்கடலில் நீரில் தான் இத்தனையும் இருக்கிறது.

இதற்காக எல்லாம் பயப்பட வேண்டாம். ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஒவ்வொரு முறையும் தண்ணீரை குடிக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அது எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

கடலில் வாழுகின்ற உயிரினனங்கள் மட்டுமல்ல கடலில் எழும் ஓசை கூட ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் அதிசயமாய்த்தான் இருக்கிறது.

கடலுக்கு அடியில் எண்ணற்ற ஓசைகள் எழுப்பப்படுகிறது ஆனால் இவற்றில் அதிக சத்தமாக ரெக்கார்ட் செய்யப்பட்டிருப்பது ‘ப்ளூப்’ என்ற சத்தம் தான்.

இதனை 1997 ஆம் ஆண்டு தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்தினர் ஹைட்ரோபோன் மூலமாக ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்.

கடல் இடிராகன்

இந்த பூமியில் வாழ்கிற 94 சதவீத உயிரினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் தான் அவற்றின் மூன்றில் இரண்டு பகுதி உயிரினங்களை நாம் இன்னும் அடையாளம் காணவே இல்லை.

தொடர்ந்து கடல் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடித்து அடையாளப்படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஆசுதிரேலியாவின் தெற்கு பகுதிக்கடலில் சிவப்பு நிற கடல் வாழ் டிராகனை கண்டுபிடித்திருந்தார்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.