குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 1 ம் திகதி வியாழக் கிழமை .

சிங்கள மக்களால் கடவுளாக போற்றப்படும் தமிழன்!

19.08.2020....யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் மலரவன் குறித்து சிங்கள ஊடகங்களில் வந்த செய்தியை கீழே தருகின்றோம்.தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் உள்ள மக்களின் மனதை வேறு எண்ணங்களினால் நிரம்பிய போதும் தெற்கில் உள்ள சிங்கள மக்களின் மனதில் உறுதியாக வேரூன்றிய தமிழ் மருத்துவர் ஒருவர் இருக்கின்றார் என்ற செய்தியை அநுராதபுர மாவட்டத்தின் மதவாச்சிய, கல்மில்லா வேவ என்ற பகுதிகளில் உள்ளவர்கள் வாயயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த மருத்துவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை நிபுணராக கடமையாற்றும் Dr.M. மலரவனின் சிறப்பான மருத்துவ சேவையினால் அநுராதபுரத்திலுள்ள சிங்கள கிராமங்களான மதவாச்சி, பதவிய, கெப்பட்டிகொலாவ போன்ற பிரதேசங்களின் ஏழை சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கின்றார்கள். அம் மக்கள் அவருடைய பணியையும் சேவையையும் நன்றியுடன் வணங்குகின்றார்கள்.

மதவாச்சிய கிராமத்தில் வசிக்கும் திரு. W.A.வியசசிறி என்ற நீரிழிவு நோயாளி தனது இரு கண்களின் பார்வையையும் இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் Dr.M.மலரவனிடம் வந்து சிகிச்சை பெற்று அவருடைய இடது கண்ணின் பார்வையை பெற்றார். இதற்காக அவர் செலவு செய்தது வெறும் பேருந்து கட்டணம் மாத்திரமே.

கெப்பட்டிகொலாவ மக்கள் இந்த வைத்தியரை புகழ்ந்து கூறுகையில் அவர் எங்கள் நேரத்தை ஒரு போதும் வீணாக்க மாட்டார். நாங்கள் ஏழைகள் என்று அறிந்து சிகிச்சை வழங்கி எங்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.

வீட்டிற்கு சென்ற எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரிக்கின்றார். எங்களின் வறுமை நிலையை உணர்ந்து மீண்டும் யாழ்ப்பாணம் பயணிக்க விடுவதில்லை மற்றும் சத்திரசிகிச்சைக்கு செய்ய வேண்டிய அனைத்து பரிசோதனைகளையும் வைத்தியசாலையிலேயே செய்விக்கின்றார்.

கண் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.M.மலரவனைப் பற்றி கதைக்கும் போது யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.T.சத்தியமூர்த்தி பற்றியும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இலங்கையில் சிறந்த அரச சேவையாளர்களுள் நேர்மைக்கான விருது பெற்றவர் என்றும் வவுனியா வைத்தியசாலையினை நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களை அமைக்க அடித்தளம் இட்டார் என்றும் கூறுகின்றனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.T..லசத்தியமூர்த்தியின் நிர்வாகத்திறன் மற்றும் கண் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.M. மலரவனின் மனிதாபிமான செயல்களால் தெற்கிலுள்ள சிங்கள மக்கள் அவர்களை வணங்குகின்றார்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.