குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

குருதியில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணுமா?

11.08.2020...அப்படியானால் அடிக்கடி உங்க உணவில் இதை சேத்துக்கொள்ளலாம் உடலில் குருதி மிகவும் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றை குருதி கையாளுகிறது. ஊட்டச்சத்துக்கள் முதல் ஒக்சிசன், கார்மோன் கள் வரை அனைத்திற்கும் கேரியர் என்றால் அது குருதிதான். சிறப்பான உடல் ஆரோக்கியத்திற்கு, நமது குருதி நச்சுக் களின்றி சுத்தமாக இருக்க வேண்டும். உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் செல்லும் குருதிநச்சுத் தன்மையற்றதாக இருந்தால் தான், அந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட முடியும். ஆகவே உடல் நலமாக இருக்க வேண்டுமென்றால், குருதியை அடிக்கடிதுாய்மை செய்ய வேண்டியது முக்கியம். நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் உடலில் சுத்திகரிப்பு செயல்முறையை நடத்துகின்றன. ஆனால் சில சமயங்களில் அவற்றால் சரியாக சுத்திகரிப்பு செய்ய முடியாமல் போகலாம். எனவே அவ்வப்போது நாம் நமது இரத்தத்தை சுத்திகரித்து வந்தால், நமது உடலில் உள்ள இரத்தம் எப்போதுமே சுத்தமாக இருக்கும். இந்த கட்டுரையில் ஒருவரது குருதியை எப்படி இயற்கையாக சுத்திகரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏன் இரத்தத்தை சுத்திகரிப்பது என்பது முக்கியம் என்பது குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.  இரத்த சுத்திகரிப்பு ஏன் மிகவும் முக்கியம்? முதலில் இரத்தத்தை சுத்திகரிக்கும் வழிகளை தெரிந்து கொள்ளும் முன், ஏன் குருதியை சுத்திகரிப்பது முக்கியம் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். * இரத்த சுத்திகரிப்பு சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. குருதியில்ல் நச்சுக்கள் இருப்பதால் தான் பருக்கள் மற்றும் பிற சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கெட்ட குருதியால் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற வற்றை உண் டாக்கும். * உடலில் சுத்தமான இரத்த ஓட்டம் இருந்தால், அது முக்கிய உறுப்புக்களின் செயல் பாட்டை அதிகரி க்கும். * உடலின் ஒவ்வொகுருதி வெள்ளை யணுக்கள் தான், நலமான பிளேட்லெட்டு களின் எண்ணிக்கையை நிர்வகிக்கின்றன. இப்போது குருதியை சுத்திகரிக்க உதவும் சில உணவுகளைக் காண்போம். இந்த உணவுகளில் குருதியில் உள்ள நச்சுக்களை அகற்றி, உடலினுள் மாயங்களை உண்டாக்கும். சரி, வாருங்கள் அந்த உணவு களை எவையென்று காண்போம். எலுமிச்சை  சாறு  எலுமிச்சை உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, குருதியில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் உள்ள அசிட்டிக் பண்பு கள், pH அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் நச்சுக்களை அகற்றும். இது பாக்டீரியா, வைரசுகள் மற்றும் பிற நச்சுக்களை கார சூழலில் இறக்க செய்கிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்தத்தை சுத்தி கரிக்கவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சைசாறு குடியுங்கள். பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை பேக்கிங் சோடாவுடன் சேர்த்து உட் கொள்ளும் போது, அது குருதியை சுத்திகரிக்கின்றன. முக்கியமாக இந்த கலவை pH அளவை சமநிலைப்படுத்தி, நச்சுத்தன்மைக்கு காரணமான யூரிக் அமிலத்தை குருதியில் இருந்து வெளியேற்றுகின்றன. அதற்கு ஒரு குவளை யில், 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் 3 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, உடனடியாக குடிக்க வேண்டும். பீட்ரூட் பீட்ரூட் சாப்பிட்டால், கீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் என்று பெரியவர்கள்சொல் வதைக் கேட்டிருப்போம். பீட்ரூட்டில் ஆன்டி-ஒக்சிடன்ட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் உள்ளன. இவை குருதியை சுத்திகரிக்கும் நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. அதோடு கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க, ஒக்சியனேற்ற சேதம் மற்றும் வீக்கத்தை பீட்ரூட் குறைக்கும். வெல்லம் வெல்லம் குருதியை சுத்திகரிக்கும் ஒரு பொருள் என்பது தெரியுமா? வெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் ஆரோக்கியமான குருதி ஓட்டத் திற்கு வழிவகுக்கிறது. மேலும் இது சுத்திகரிக்கும் போது குருதியில் கட்டிகளையும் நீக்குகிறது. கூடுதலாக, வெல்லம் கீமோகுளோபின் அளவை மீட்டெடுக்கிறது மற்றும் செரிமானத்திற்கும் நல்லது. துளசி துளசியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த புனிதமான செடிக்கு இரத்தம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் என ஒட்டுமொத்த உடலையும் சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது. அனைத்து நச்சுக்களும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. துளசியின் முழு பலனையும் பெற, நாளும் துளசி டீ அல்லது 7-8 துளசி இலைகளை சாப்பிடுங்கள். மஞ்சள் மஞ்சள் மருத்துவ குணம் வாய்ந்த மிகச் சிறப்பான மசாலா பொருள் என்பது தெரியும். இத்தகைய மஞ்சளை இரவு தூங்கும் முன் பாலுடன் சேர்த்து குடிக்கலாம் அல்லது அன்றாட உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இது குருதியில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவி புரியும். மஞ்சளில் உள்ள குர்குமின், உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் குருதியின் சிவப்பணுக்களின் மீளுருவாக்கத்தை அனுமதிக்கிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.