குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சசிகலாவின் முறைப்பாடு: சம்பந்தனுடன் பேசி முடிவு – இப்படிக் கூறுகின்றார் மாவை

09.08.2020....“சசிகலா விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கலந் தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராயா தெரிவித்தார்.நேற்று மாவை சேனாதிராயாவின் இல்லத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகலா இரவிராச் சந்திப்பொன்றை மேற்கொண்டார். அதன்பின்னர் மாவை சேனாதிராயா கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேர்தல் இறுதி முடிவுகள் அறிவிக்கும் நேரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் கவலையளிக்கின்றன. சசிகலா இரவிராச் கூறுவது போன்ற நிகழ்சிகள் நடைபெற்றிருந்தால் அது கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடியவையாகும். இது தொடர்பில் என்ன முடிவை எடுப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கலந்தாலோசித்து தீர்மானிப்போம்.

தேசியப் பட்டியலில் சசிகலாவை உள்வாங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் இனிமேல்தான் ஆராய வேண்டும்.

தான் வெற்றிபெற்றுவிட்டதாக அங்கு கடைமையாற்றிய அலுவலகர்களே உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்து பாராட்டுக்களைத் தெரிவித்திருந்த நிலையில் முடிவுகள் நீண்ட இடைவெளியின் பின்னர் வெளியிடப்பட்டன. இதன் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் சசிகலா குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த விடயம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்கு வருவோம்” – என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.