குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

பதிவு - தெளிவு : இலங்கை கல்வி நிர்வாகசேவை அதிகாரி Aathavan Gnana

07.08.2020.....வாக்கெண்ணலைப் பற்றிய சில தெளிவுபடுத்தல்கள்.

நிபந்தனை: அரசியலின் அறத்தை பாடுகிற என் இதயத்துக்கும் - தேர்தல் கடமைகளில் பணியிலிருந்த மூளைக்கும் - இந்தப் பதிவினை பற்றி நிச்சயமாக நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன.)

முதலாவது - யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தினுள் ஏதாவது ஒரு வாசலால் உள்நுழைந்து - அங்குள்ள கொட்டகை ஒன்றின் கீழ் அமர்ந்து விட்டாலே போதும், அவர்களுக்கும் யாழ் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் இடையில் ஒரு மேசை இடைவெளி கூட இல்லை. அவர்கள் அனைவரதும் முநநுால் கணக்குகள் பேசிய இலக்கங்களையும் எழுத்துக்களையும் யாழ்ப்பாணம் நம்பியது, தவறு.

தவறே தான்!

* மொத்தமாக 73 + 16 = 89 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தனவாயின் - சுமாராக ஒவ்வொரு தொகுதிக்கு 7 முதல் 10 வரையான வாக்கெண்ணும் நிலையங்கள் தேவைப்பட்டன.

ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையத்திலும் மூன்றாம் கட்ட வாக்கெண்ணல் (விருப்பு வாக்கெண்ணல்) நடைபெறும் போது, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியாக நியமிக்கக் கூடிய வாக்கெண்ணும் நிலைய கட்சி முகவர்களின் உச்சபட்ச எண்ணிக்கை: 10

இது ஒரு வேட்பாளருக்கும் தனித்தனி முகவர் என்ற கணக்கு. ஆனால் இந்த அளவு மனித வலுவை பயன்படுத்த எந்த கட்சியும் தயாரில்லை. ஆதலால் அவ்வாறு நடைபெறவில்லை. விருப்பு வாக்கெண்ணும் போதும் 1 அல்லது 2 முகவர்களே சமூகமளித்திருந்தனர்.

** ஒவ்வொரு கட்சியின் விருப்பு வாக்கு எண்ணல் முடிவடைந்த பிறகும் வாக்கெண்ணல் மையத்தில் இருந்து - தெரிவத்தாட்சி அலுவலரின் அலுவலகத்திற்கு மூன்று படிவங்கள் அனுப்பப்படும். PR2, PR3, PE4.

வாக்குச்சீட்டுக்கள் வாக்கெண்ணல் மையத்திலேயே பொதி செய்யப்படும்.

இந்த படிவங்களில் PR3 இல், வாக்கெண்ணும் நிலையத்தில் சமூகமளித்திருக்கும் கட்சி முகவர்கள் 10 பேரும் கையெழுத்திட தனித்தனியான 10 இடங்கள் உண்டு. ஒரு முகவர் கையெழுத்திடும் போது, தான் பிரதிநிதித்துப் படுத்தும் வேட்பாளரின் விருப்பு வாக்கு எண்ணிக்கையை உத்தியோகபற்றற்ற முறையில் தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு கெட்டிக்கார கட்சி (வேட்பாளர்களுக்கிடையில் ஒற்றுமையிருக்கும் கட்சி) என்ன செய்திருக்க வேண்டும்.??

ஒரு தேர்தல் தொகுதிக்கு மக்ஸிமம் 10 வாக்கெண்ணல் மையம் என்றால், நிலையத்துக்கு ஒரு முகவரை விட்டு, எல்லா வேட்பாளரின் விருப்பு வாக்கு எண்ணிக்கையையும் தெரிந்து கூட்டினால், தொகுதியின் எல்லா வேட்பாளரின் விருப்பு வாக்கு எண்ணிக்கையும் விரல் நுனியில் இருந்திருக்கும்.

அஃது எங்கும் செய்யப்படவில்லை.

*** வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து தெரிவத்தாட்சி அலுவலருக்கு முடிவுகளை அறிவிக்கும் படிவம் PE4 இன் படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் உரிய விருப்பு இலக்கத்திற்கு நேரே அவர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையை இலக்கத்திலும் எழுத்திலும் தனித்தனியாக குறிப்பிடப்பட வேண்டும்.

இந்தப் படிவம் 4 இணை பிரதிகளில் தயாரிக்கப்பட்டு வாக்கு எண்ணும் நிலைய தலைமை வாக்கெண்ணும் உத்தியோகத்தரால் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு தெரிவத்தாட்சி அலுவலரின் அங்கீகாரம் கிடைத்த பின் மீளவும் வாக்கு எண்ணும் மையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு அங்கு சமூகமளித்திருந்த கட்சியின் முகவர்களுக்கு அதன் இணைப்பிரதிகள் கையளிக்கப்படும்.

ஆனால் பெரும்பாலான வாக்கு எண்ணும் மையங்களில் முடிவுகள் உத்தியோகபூர்வமாக கிடைக்கும்வரை முகவர்கள் தரித்திருக்க முயற்சிக்கவில்லை என்பதுடன் தரித்திருந்து உத்தியோகபூர்வ அறிவித்தலை பெற்றுக்கொண்ட முகவர்கள் சிலரே இருப்பதனால் அவர்களிடம் கிடைத்த முடிவுகளை வைத்துக் கொண்டு உத்தியோகப்பற்றற்ற அறிவித்தல்கள் வெளியிடப்பட்டது பெரும் குழப்பத்திற்கு காரணமாக அமைந்து இருக்கக் கூடும்?

**** மீள்வாக்கெண்ணல் கோரிக்கை என்பது வாக்கெண்ணும் நிலையங்களில் சமூகமளித்திருக்கும் முகவர்கள் PR3 படிவத்தில் கையொப்பம் இடுவதற்கு முன்பதாக விடுக்கப்படும் கோரிக்கைகளாக மாத்திரம் அமைந்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத ஒரு மீள் வாக்கெண்ணலுக்கான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தேர்தல் சட்டத்தில் இடமில்லை?

தெரிவத்தாட்சி அலுவலரின் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் வேட்பாளர் ஒருவர் மீள்வாக்கெண்ணலுக்கான கோரிக்கையை முன்வைப்பது சாத்தியம் இல்லை? அவ்வாறானதொரு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் ஆயின் அது புள்ளிவிவர பட்டியலை சரிபார்க்கும் செயற்பாடாக மட்டுமே அமைந்திருக்க முடியும்.

*****  ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்தும் நிலையங்களுக்கு பொறுப்பான தலைமை வாக்கெண்ணும் அலுவலர்களினால் தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து தன்னுடைய தேர்தல் மாவட்டத்தின் முடிவுகளை வெளியிடும் தெரிவத்தாட்சி அலுவலர் ஒருவரின் அறிவித்தல்களை கேள்விக்குட்படுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் மாத்திரமே சந்தர்ப்பம் கிடைக்கும்?

தயவுசெய்து தேர்தல் முடிவுகளின் போது வேட்பாளர்களை பார்த்து சத்தம் இடுவதை போல தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களை நோக்கி குறைகூற வேண்டாம் - மூன்று நாட்கள் தொடர்ந்து பகலிரவு பார்க்காமல் பணிகளில் ஈடுபட்ட உடல் உபாதைகளை விட - திருட்டுப்பட்டம் கட்டும் உள உபாதைகள் அதீத வலி தருகின்றன.

நாங்கள் "கள்ளர்கள்”  இல்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.