குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 9 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேசுவரன்(அறிவின்) அவர்களின் கனதியான அறிவிப்பு!

23.06.2020...க்கள் அரசியலுக்கு மக்களிடம் பணம் கோருவதில் தவறில்லை; செல்வந்தர்களிடம் இரகசியமாக பணம் வாங்கி, அவர்களின் கைப்பொம்மையாக தயாரில்லை….கிழக்கு சனாதிபதி செயலணி சர்வாதி காரத்திற்கான முதலாவது படி!!!!மக்கள் அரசியல் செய்வதற்கு மக்களிடம் பணம் கோருவதில் தவறில்லை. அது மக்களிற்கு சேவை செய்யும் பொறுப்புணர்வை வேட்பாளர்களிடம் அதிகரிக்க செய்யும். வெளிநாட்டுக்கு சென்று அங்குள்ளவர்களிடமும், உள்ளூரில் பெரும் பணக்காரர்களிடமும் பணம் சேர்த்து அவர்கள் கைப்பொம்மையாக செயற்கட தயாரில்லையென தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேசுவரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில். எமாகாணசபை காலத்தில் எங்களிற்கு அனுப்பிய பணம் எதுவும் திருப்பினுப்பப்படவில்லை. ஆனால் அவர்களின் அமைச்சர்களிற்கு அனுப்பிய பணத்தை செலவிடாமல் எமது தலையில் கட்டுகிறாரோ தெரியவில்லை.

இவ்வாறான விமர்சனங்கள் வைக்கப்படுவதற்கு உள்ள காரணம் அச்சம். மக்களிற்கு சேவை செய்ய, மக்களிடம் பணம் கோருவதில் என்ன தவறு? பின்வாசல் வழயாக பணத்தை பெற்று, அவர்களின் சொற்படி நடக்கும

மக்களிடம் பணம் பெறும்போது, அவர்களிற்கு சேவை செய்யும் தார்மீக கடப்பாடு வேட்பாளர்களிற்கு அதிகரிக்கும். மக்களால் முடிந்த- சிறிய, பெரிய அளவிலான உதவியை கோருகிறோம். அதற்கான பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படும். பணத்தை வழங்கிய மக்களே நாளை உரிமையுடன் எமது குறைகளை சுட்டிக்காட்டுவார்கள். மக்களிற்காக சேவை செய்ய மக்களிடம் பணம் கேட்பதில் தவறில்லையென்பதே எமது நிலைப்பாடு.

சிலர் வெளிநாடுகளிற்கு சென்று தமிழ் மக்களிடம் பணம் திரட்டி, இங்குள்ள பெரும் பணக்காரர்களிடம் பணம் வாங்கி, அவர்களின் சொற்படி நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. மக்களை நாம் நம்பிக்கைக்கு பொறுப்பாக்கி, அவர்களின் நம்பிக்கைக்கு நாம் பொறுப்பாக செயற்படுவோம்.

எமது கட்சி வேட்பாளர்களின் சொத்து விபரங்களை இந்த மாத இறுதிக்குள் வெளியிடவதென்பதுதான் தீர்மானம். கொஞ்சம் முன்னர், பின்னர் மாறினாலும், விரைவில் அனைவரது சொத்து விபரத்தையும் வெளியிடுவோம்.

நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை குறைகூறும் அரசியல் செய்யவில்லை. நாம் என்ன செய்வோம், என்ன செய்ய வேண்டுமென்பதைதான் சொல்லி வருகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பெரிய ஆட்களாக கருதி, அவர்களை பற்றி நாம் விமர்சித்து, எமது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

அவர்கள் கல்லெறிந்தால் நாமும் கல்லெறிவோம் அது வழக்கம். எம்மிடம் மாற்று வழிகள் உள்ளன. மக்களால் தெரிவு செய்யப்படபவர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்டுவதும் முக்கியமானது.

எமது உரிமைகளை வென்றெடுக்க நாம் என்னென்ன செய்ய வேண்டுமென எமது புரிந்துணர்வு உணடன்படிக்கையில் தெரிவித்துள்ளோம். தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு என்ற மூன்று சொற்களில் பல அர்த்தங்கள் உள்ளன. அரசியல் ரீதியாக தன்னாட்சிக்காக போராடவுள்ளொம். மக்களை ஒன்றிணைத்து, தமது கால்களில் தம்மைத்தாமே பரிபாலிக்க தற்சார்பு பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். வடகிழக்கு மாகாணங்களை பொருத்தவரை தன்னிறைவை எதிர்பார்க்கிறோம்.

நான் வடக்கு முதலமைச்சராக இருந்தபோது, உலக வங்கி அதிகாரியொருவர் கேட்டார். அதிக விலையில் நெல் விதைத்து, அறுவடை செய்கிறீர்கள், குறைந்த விலையில் தாய்லாந்திலிருந்து பெறலாமே என்றார். உலகளவில் நெருக்கடி ஏற்பட்டால், எமது உணவை நாமே தயாரிக்காமல் இருந்தால், நெருக்கடியை சந்திப்போம் என்றேன். கொரோனா வந்த பின்னர் அதுதான் நடந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் மக்களிற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. 15 உறுப்பினர்களை கூட்டமைப்பு வைத்திருந்தது. அரசு முக்கிய முடிவுகளை எடுத்தபோது, கூட்டமைப்பின் வாக்கு அவசியமாக இருந்தது. ஆனால் அப்போது எதுவும் செய்யவில்லை. இப்பொழுது தமக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என அவர்கள் மீளவும் கேட்பது மூடத்தனமானது. இதுவரை இரணிலுக்கு பின்னால் ஓடினார்கள். இப்பொழுது மற்றவர்களி்கு பின்னால் ஓடலாமென நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்கள் அல்ல. சரிசரி பின்னால் ஓடிவாருங்கள் என அவர்கள் தம்பாட்டில் செல்வார்கள். அவர்கள் எதையும் கொடுக்கப் போவதில்லை.

மக்களிற்கு இப்பொழுது உண்மை தெரியும். யார் தமது சில்லறை நன்மைகளிற்காக மக்களை காட்டிக் கொடுப்பவர்கள், யார் தமது பையை நிரப்புபவர்கள், யார் உண்மையானவர்கள் என்பது தெரிந்துள்ளது.

கிழக்கு சனாதிபதி செயலணி சர்வாதிகாரத்திற்கான முதலாவது சிங்கள பௌத்த மனநிலையுடன், வடக்கு கிழக்கு மாகாணத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். அந்த குழுவில், தமிழ் பேசும் ஒருவருமில்லை. பௌத்த பிக்குகளையும், இராணுவத்தினரையும் குழுவில் இணைத்து, செயற்படுவது தமிழ் மக்களிற்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

தம்பி பிரபாகரன் என அரசியலுக்கு வர முன்னரே நான் சொல்லியுள்ளேன். அண்ணன் பிரபாகரன் என்று என்னால் சொல்ல முடியாது. நான் மாவீரர் துயிலுமில்லங்களிற்கு சென்றுள்ளேன். அரசியல் என்று வந்ததும், வாயில் வந்ததையெல்லாம் சொல்கிறார்கள்.

இந்த நாட்டு சனாதிபதி அமெரிக்க பிரயை. அமெரிக்க பிரயை சனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. சனாதிபதி தேர்தலின் பின்னர்தான் அவரது பெயர், அமெரிக்க குடியுரிமையிலிருந்து நீக்கப்பட்ட விபரம் வெளியானது. அமெரிக்காவிற்கும், அவருக்குமுள்ள உடன்படிக்கை எமக்கு தெரியாது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.