குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஈழத் தமிழர் இசை ! கர்நாடக இசையா?

16.06.2020....எது ஈழத் தமிழர் இசை நம் மத்தியில் பரவலாக பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ,புலம் பெயர் தேசங்களில் பயிலப் படும் கொணாடப் படும் கர்நாடக இசையா?கர்நாடக இசை தமிழ் இசையா என்கிற சர்ச்சைக்கு இன்னமும் விடை காண முடியவில்லை . தமிழ் இசை என்பது ஒற்றைப் பரிமாணம் உடையதா தமிழ் இசையின் வேர்கள் எங்கே ஊறிக் கிடக்கிறது.சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரமும் அதன் பின் வந்த தேவார திருவாசக்ம் திருப்பாசுரங்கள் தமிழ் இசையின் பல்வேறு கூறுகளை பண் வழி பரவி நிற்கின்றன.

ஈழத் தமிழ் சமூகம் தனித்துவமான பண்பாட்டு மரபுகள் கொண்டது அந்த வகையில் ஈழத் தமிழர் தங்களுக்கான இசை மரபை மண்சார்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ஈழத்தில் உள்ள சிங்கள சமூகம் தங்களுக்கான இசை மரபை கிராமங்களில் தேடினர் அந்த வகையிலேயே அவர்கள் தங்களுக்கான் சாசு(ஸ்)திரிய இசையை கட்டமைத்தனர்.சுதந்திரத்துக்கு பின்னரான தேசிய எழுச்சி அரசியல் சமூகம் கலைகள் என எல்லா துறைகளிலும் புதிய தேடல்களுடன் பயணித்தது.அதனால் அவர்கள் தங்கள் மரபுகளை கண்டடைந்தனர் நம்மவர்களது அரசியல் வெறும் வெற்றுக் கோசமாய் இன்று வரை தொடர்கிறது.

எண்பதுகளில் பேராசிரியர் வித்தியானந்தன் ஈழத்து மண்சார்ந்த மரபிசைப் பாடல்களை அதன் தாள வாத்தியங்களை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தயாரிப்பாய் இறுவட்டாக வெளியிட்டு ஆவணப் படுத்தியிருந்தார்.

பிரான்சில் வாழும்,அரங்கியலாளர் புலவர் அரியநாயகம் வெளியிட்ட" கூத்திசப் பாடல்கள்"இசைப் பேழையும் இங்கு முக்கியம் பெறுகிறது.

திருமறைக் கலா மன்றத்தினரும் அதன் வழி வந்தவர்களும் யாழ்ப்பாண வசந்தன் பாடல்களையும் ,இசை நாடகப் பாடல்களையும் தொகுத்து இசைப் பேழையாய் வெளியிட்டு பெருமை சேர்த்தனர்.

இலங்கை வானொலியில் ஈழத்து மெல்லிசை எனும் வடிவம் பேராசிரியர் கைலாசபதி காலம் முதல் இன்று வரை தொடர்கிறது.

திருகோணமலை பரமேசு(ஸ்) கோணேசு(ஸ்) மெல்லிசை முயற்சிகள்,திருமலை பத்மநாதனின் மெல்லிசை மரபு,மட்டக்களப்பில் ஆதவன் இசைக்குழு,மூதூரில் சேவியரின் ரூபி இசைக்குழு ,மீன் மகள் பாடுகிறாள் தந்தயீவம் யோசப்இன்னும் இந்த பட்டியல் நீளும்

மெல்லிசை மரபில் வந்த பாடகர்கள் முத்தழகு,கலாவதி சின்னசாமி,கிருகூ(ஸ்)னன்,அம்பிகா செல்வராயா இன்னும் பலர்

நம் மண் சார்ந்த மரபிசைக்கு காட்சி வடிவம் கொடுத்து அதன் உயர் தனித்த மரபை கொண்டாடிய பெருமை கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறையை சாரும் .பேராசிரியர் சி .மெளனகுரு அவர்களின் பெரும் முன்னெடுப்பும் முயற்சிகளும் இங்கு விதந்துரைக்க தக்கது.அவர் வழிகாட்டலில் நாங்கள் இயங்கினோம்.

கண்ணகி குளிர்த்தி,கிழக்கிசை,லயம் ,மண்ணின் தாளங்கள் என அது அகலித்து செழுமை பெற்று நம் மரபிசையை உலகறியச் செய்தது.

நான் எழுதிய "ஈழத் தமிழர் இசையும் நடனமும்" என்ற நூலும் அதன் மொழி பெயர்ப்பான " Eezam Tamil's Dance and Music" நூல்கள் நம் இசை மரபை உலகுக்கு அறிமுகப் படுத்தி வெளிவந்துள்ளன.

நான் வெளியிட்டுள்ள "ஈழத் தமிழர் இசை மரபு" "கண்ணகி குளிர்த்தி" ஆகிய இறுவட்டுகளும் முயற்சிகள்,் இசை அதன் செல் நெறியை அறிமுகப் படுத்துயுள்ளன.