குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, ஆனி(இரட்டை) 14 ம் திகதி திங்கட் கிழமை .

முடிவுக்கு வருகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வரலாறு.

தோல்வி பயத்தில் கூட்டமைப்பு தடுமாறும் தலைமைகள்..

இந்தத் தேர்தல்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் இறுதி தேர்தல்.அது மறுக்க முடியாத உண்மை.முதிர்ந்த வயதில் போட்டியிட்டு தோல்வியடைந்த வரலாற்றுடன் அரசியலில் இருந்து விடை பெறப் போகிறார் ஒரு கட்சியின் தலைவர்..

இந்தத் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கப்போகும் தோல்வியின் பின்னர் கூட்டமைப்புக்குள் இருக்கும் உட்பூசல் பூதாகரமாக வெடிக்கும் நிச்சயம். சம்பந்தனின் மறைவிற்காக மக்கள் காத்திருப்பதை விட கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது உண்மை.அவரின் மறைவில் கலந்து கொள்வதற்காக அல்ல அவர் வைத்திருக்கும் பதவிக்காக.இப்பொழுதே தலைவர் பதவிக்கு யார் வருவது என்ற போட்டி உள்ளுக்குள் நடைபெறுகிறது கூட்டமைப்புக்குள்.கிழக்கைப் பொறுத்தவரை கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவி கிடைத்தால் காணும் என்று பயணிப்பவர்கள்.ஆனால் வடக்கில் கூட்டமைப்பு சக்கரவர்த்திகள் தலைமைப் பதவிக்கு காத்திருக்கும் எண்ணம் கொண்டவர்கள்...

மாவை சேனாதிராயா வெற்றி அடைய வேண்டும் என்று அதிக விருப்பு கொண்டவர் சி வி கே சிவஞானம்.காரணம் மாவை சேனாதிராயா பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக வந்துவிடுவார் அவர் வந்தால் தனது கனவு என்னவாவது என்ற கடும் கவலை அவருக்கு.ஆனால் மாவை சேனாதிராயா அவர்கள் வெற்றி அடைய போவதில்லை.அவரின் தோல்வியும் கூட்டமைப்புக்குள் ஒரு விரிசலை கொண்டு வரும்.....

அதிகத் தேசியப்பட்டியல் கனவில் மிதக்கும் கூட்டமைப்புக்கு இந்தத் தடவை அதிக சறுக்கலை சந்திக்கும் அந்த சறுக்கலும் கூட்டமைப்புக்குள் அதிக விரிசல்களை கொண்டு வரும்.கிழக்கைப் பொறுத்தவரை கூட்டமைப்பு ஒரு ஆசனம் பெறுவதற்கே போராட வேண்டிய நிலைமையில் இருக்கிறது தற்போது.ஆகவே கிழக்கிலும் கூட்டமைப்பின் வரலாறு முடிவுக்கு வருகிறது...

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் இந்த தடவை அரைவாசி பெறுவதே கேள்விக்குறியான விடயம் தான்.இதுவும் கூட்டமைப்பின் அரசியல் முடிவுக்கான காரணம்.இப்பொழுது இருக்கும் தேர்தல் கள நிலவரப்படி வடக்கு-கிழக்கு ஒட்டு மொத்தமாக 6 ஆசனங்களுக்கு மேல் பெறுவதே கூட்டமைப்புக்கு சவாலான விடயம் தான்.அனைத்துக்குமான பதில் வரும் எட்டாம் மாதம் ஐந்தாம் திகதி கிடைக்கும்...

இந்தத் தேர்தலில் எனது பங்களிப்பு என்ன.எத்தனை வாக்குகளை என்னால் கூட்டமைப்புக்கு எதிராக எதிராக சேகரித்து வைத்துள்ளேன் சேகரித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒரு பதிவின் ஊடாக தெரியப்படுத்துகிறேன்....

கிளிநொச்சி யாழ் தேர்தல் தொகுதியில் மட்டும் இதுவரை தனியார் அமைப்புகள் அறக்கட்டளைகள் கல்வி சமூகம் சார்ந்த அமைப்புகள் முக்கியமாக இளையோர் சார்ந்த அமைப்புகள் மேலும் மக்கள் நலன் சார்ந்த அமைப்புகள் தொழில் சார்ந்த நிறுவன அமைப்புகள் கிராமங்கள் சார்ந்த அமைப்புகள் மகளிர் மட்டும் மாதர் சங்கங்கள் சார்ந்த அமைப்புகள் இப்படி அதிக அமைப்புகளை இதுவரை ஒன்றுதிரட்டி உள்ளேன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிப்பதற்கு. அதற்கான ஒன்றுகூடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஒரு உணவகத்தில் ஒவ்வொரு அமைப்பையும் நிர்வாகித்து செல்லும் அதன் தலைமைகள் 47 பேர் மதிய உணவுடன் நிறைவான ஒரு சந்திப்பை செய்து முடித்துள்ளார்கள்.. இன்னும் சந்திப்புகள் இருக்கின்றன வன்னி தேர்தல் தொகுதி சம்பந்தமாகவும்.சரியான நேரத்தில் அனைத்து சந்திப்புகளும் நிறைவு பெற்றபின் புகைப்படங்களுடன் சில பதிவுகளை பதிவு செய்கிறேன்..

குறிப்பு அனைவரும் மக்களின் நலன்சார்ந்து ஒன்று கூடியவர்கள்.எனது அன்பான வேண்டுகோளை ஏற்று மதிய உணவு மட்டும் எனது செலவில் நடைபெற்றது.தனிநபர் எதிர்பார்ப்பில்லாத மாற்றத்திற்கான உண்மையான மனிதர்கள் அத்தனை பேரும்.எனது அழைப்பை ஏற்று

பங்கு கொண்ட அத்தனை பேருக்கும் எனது மன நிறைவான வாழ்த்துக்கள்.இந்த செயல் திட்டம் சரி என்றால் நீங்களும் வாழ்த்தலாம்.

கூட்டமைப்பால் மட்டுமா ஒன்றுகூட முடியும் உங்களை நிராகரிப்பதற்கு எங்களாலும் ஒன்று கூட முடியும்.நீங்கள் ஒன்று கூடுவது உங்களை பதவிக்காக நாங்கள் ஒன்று கூடுவது எமது மக்களின் தேவைக்காக மாற்றத்திற்காக...

நான் எதிர்பார்த்ததைவிட மக்கள் எதிர்பார்க்கிறார்கள் கூட்டமைப்பை நிராகரிப்பதற்கு நிச்சயம் இந்த பயணம் வெற்றியில் முடியும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.இது காலத்திற்கான மாற்றமல்ல மக்களுக்கான மாற்றம் என்றும் உங்களில் ஒருவனாக...

எனது பதிவு சரி என்று பட்டால் பகிர்ந்துகொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்...

அன்புடன்

அரசியல் சாணக்கியன்...

Manikam Sinnathambi அவர்களின் பதிவு

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.