குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 2 ம் திகதி செவ்வாய் கிழமை .

இன்று இதற்கு நேர்மாறாகச்செயற்படுகின்றார்கள்

தாயக செய்திகள் >> தமிழ்வின்னிலும் வெளியானது

உலகத்தமிழர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள்.உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் சுவிசுக்கிளைத்தலைவர் பொ.முருகவேள் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோள்.

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010 10:00.....18.05.2020

மின்னஞ்சல்

இலங்கைத்தமிழர்கள் இலங்கைக்குள்ளேயும் வெளிநாடுகளிலும் மென்மையான சனநாயக செயற்பாடுகளுக்குத்தான் முன்னுரிமைகொடுக்க வேண்டும்.இன்றைய சூழலில்  தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் பொறுப்பை சனநாயக முறைமூலம் எவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் சுவிற்சர்லாந்துக்கிளைத்தலைவர் ஆசிரியர்பொ.முருகவேள் அவர்கள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவித்துக்கொள்கின்றார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை இப்பொழுது தெரிவுசெய்தால் தீவிரவாதிகள் சிபார்சில் வந்தவர்கள் என்று எவரும் சொல்லவோ நிறுவவோ முடியாது. இத்தேர்தலில்  அவர்களைத் தெரிவுசெய்தால் தமிழர்கள் சனநாயகவாதிகள் அதன்மேல்தான் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதுவெளிப்பட்டுநிற்கும். இதனையே இன்றைய சூழலில் தமிழர்கள் நாம் செய்யவேண்டும் இதனால் ஒவ்வொருதமிழரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என்பதை எமது கருத்தாக முன்வைக்கின்றோம்.  முடிவெடுக்கும் பொறுப்பை இடர்கள் மத்தியில் வாழும் தமிழ்மக்களிடம் விட்டுவிடுகின்றேன். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் சுயமாக எடுக்கும் முடிவே சனநாயகம்.வெள்ளையர்கள் நாட்டிலிருந்து இதை நாம் கற்றுக்கொள்ளாது.. வேறு எதைக்கற்று என்னபயன்? ஆகவே ஆரோக்கியமான தீர்க்கதரிசனமான கருத்துக்களை முன்வைப்போம்.

1.போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக உதவிபெறுவதற்கு வழிதேடல்.

2.தமிழ்மக்களின் அச்சவாழ்வை அகற்ற முயலல்.

3.மீள்குடியேறிய மக்களின் வாழ்வை எப்படி மேம்படுத்துவது.

4.முள்வேலி முகாம்களுக்குள் இருப்போரை உரியஇடங்களில் வாழவழிசெய்தல்

5.விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டு இடர்ப்படும் தமிழர்களை மீட்டல்.

6.முன்னாள் போராளிகள் என்று தண்டிக்கப்படுவோரை மன்னிப்பு பெற்றுக்கொடுத்தேனும் மீட்டல்.

7.இந்தியாவின் எதிர்நிலைப்பாடுகளையும் உடன்பாட்டு நிலைகளையும் ஓரளவு தமிழத்தேசியக்கூட்டமைப்பினர் கையாளவாய்ப்புண்டு.

8.தமிழர்களுக்கு உலகம் வழங்கும் நேரடி உதவிகளை பெறமுடியாதிருக்கும் தடைகளை அகற்றல்.

9.தமிழர் நிலங்கள் தமிழர் பண்பாட்டை இழந்து வருவதை நிறுத்தக்கோரல்.

10.கிளிநொச்சி முல்லைத்தீவு மக்கள் புதியவாழ்வே ஆரம்பிக்கின்றார்கள்.


அதேபோன்று ஏனைய மாவட்டமக்களும்மனதில் புதியவாழ்வை தமிழர் வாழ்வை ஆரம்பிக்கவேண்டும். இந்தியாவை வெறுக்கும் தமிழர்கள் ஏன் இந்தியாவின் (வடஇந்தியாவின்) பண்பாட்டை ஏற்றுவாழவேண்டும் சுயநலம் விடுபட்டு தமிழ்நலம் உள்வாங்கப்படவேண்டும்.மதங்களால் பிரதேசங்களால் வேறுபட்டாலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்படுகின்றோம். உண்மையான எதிரியை அறியாது எமக்குள் அல்லவா மோதுகின்றோம். இதை உணரவைப்பதும் இவர்களின் பொறுப்பாக இருக்கவேண்டும்.

இலங்கைக்குள் வடக்குகிழக்கின் சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம்  என்று இன்றைய நிலையில் தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதிமக்களின் வேண்டுதலின்படி தமிழ்த்தேசியத்தின் முற்போக்காளர்களினதும் வைத்தியஅதிகாரிகளினதும் பலதுறை வல்லுனர்களுடனும்இணைந்தே இன்றையசூழலுக்கு ஏற்ப வேட்பாளர்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.இதனாலும் தமிழ்தேசியக்கூட்டமைப்பை ஆரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

திரு.கயேந்திரன்கள் அமைதிப்படைகால யாழ்ப்பாணத்தை அன்றைய நிலையை அறியாத அரசியல் குழந்தைகள். அக்காலத்தை எப்படித்தாண்டினோம். யார்யார் எப்படிச்செயற்பட்டார்கள் அக்கால பிரபல பொருளியல் ஆசிரியர்களில்திரு.கிருசு(ஸ்)னாந்தன் ஆசிரியர் அவர்கள் ஆலோசனை வழங்கினார் என்பதற்காகவும் வாழைக்குள் குண்டு வைத்திருந்தார் என்று  கைதாகி விடுதலையானபின் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அப்போது முதலமைச்சராகயிருந்தது திரு வரதராயப்பெருமாள் அவர்களே. சுடப்பட்ட ஆசிரியரின் நிலையிலேதான் பொருளியல் வரதராசன் ஆசிரியரும் இருந்தார். ஏன் அவர் தப்பித்தார் இந்தியாவின் தயவு வரதராயப்பெருமாளின் தயவு இவருக்கு இருந்தது. இவர்தான் இன்று கயேந்திரங்களின் முதன்மை வேட்பாளர் வரதராசப்பெருமாள்களை வைத்துக்கொண்டு இந்தியாவை எதிர்ப்பதாக நடிக்கிறார்கள். வரதராயப்பெருமாள் நியமன பா.உறுப்பினராக உருவாக இருக்கிறார்.


ஏதோ இந்தியாவின் பொறியில் சிக்குகின்றார்கள் இதை மக்கள் புரிந்துகொள்வார்கள். நல்முடிவு எடுப்பார்கள்.

தமிழரின் சனநாயக அரசியலை  த.தே.கூ.அரசியலை தலைமைகளை கைப்பற்ற குறிவைத்து காத்திருந்த இலவுகாத்தகிளிகள் அரசியல் குழந்தைகள் மின்மினிப்பூச்சிகள் இன்று தியாகங்களையெல்லாம் விட்டுவிட்டு எப்படியும் பா.உ. ஆகவேண்டுமென்று  நிற்கிறார்கள்.

இந்தியாவின் தூதராகப்பார்க்கக்கூடிய வரதரை இணைத்து நிற்பது இவர்களின் அரசியல் சுழியம்(0) என்பது இற்போது தெளிவாகின்றது. தமிழர்கள் வாக்கை சிதறடிக்கக்கூடிய வேலையை எதிரியைவிட நன்றாக செய்பவர்களாக காந்தாக்கள் கயேந்திரங்கள் இலிங்கங்கள் சுயேட்சைகள் வீணைகள் நிற்கின்றன.சனாதிபதித் தேர்தலுக்குப்பின் வீணை சோகப்பண்(சோககீதம்) இசைத்தது இப்போ வெற்றிலையைப்போட்டு இரத்தமாகத் துப்பி நிற்கிறது.

இந்தியா இலங்கை எண்ணியபடி இலங்கைத்தமிழரின் தீவிரநிலைப்பாட்டைக் கட்டுப்படுத்தி அழித்தது போல் அடுத்த அரசியல் பலத்தையும் சிதைக்கவே இவர்கள் துணைபோகின்றார்கள். ஊர் உறவு பிரதேசவாதம் இதைப்பயன்படுத்தியேனும் மீண்டும் வரவேண்டும் என்றுதுடிக்கிறார்கள். தமிழ்த்தேசியத்தின் சிதைவிற்குதமிழ்த்தேசியக்காவடியெடுத்தோரே விரோதமாக நிற்கிறார்கள். இவர்கள் போன்ற இருகுழுக்களின் வேட்புமனுவை தேர்தல் நிர்வாகம் நிராகரித்திருக்கிறது. எனவே மேல்குறித்த நபர்களையும் அப்படியே  அரசுஅணுகுவது இலகு இதையும் மக்கள் அறிவுறுத்தியிருப்பர் இதனாலும் இவர்கள் வெளியில் விடப்பட்டிருக்கலாம்.

போர் முற்றுப்பெற்றாலும் இராணுவம் நிற்கிறது தமிழர்கள் நிற்க இடமில்லை எங்கும் வாதாடமுடியவில்லை புலிகளின் சிபார்சில் வந்தவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். அதை உடைத்து தடையின்றி வாதாட உரியமுறையில் கோர வாய்ப்பு வழங்கவேண்டும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு.


வெளிநாடுகளில் ஊடகங்கள்  உணர்ச்சிமிகு தமிழர்களைப் பயன்படுத்தி தம்மைப் பிரபல்யப்படுத்துகிறார்கள். இதற்காக தமிழ்தலைவர்களையும் மக்களையும் சீண்டி குழப்பங்களை உருவாக்கின்றார்கள். தமிழ்ஊடகங்களுக்கு தமிழ் உணர்வு இல்லை மக்களை வழிநடத்த அவர்களிடம் நல்லநோக்கம் இருக்கவேண்டும் இல்லையேல் தமிழர்கள் சண்டைக்குணம் கொண்டவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடும் தமிழர்கள் நாம் ஊடகங்களின் போட்டிக்குள் சிக்கி தவிக்கக்கூடாது.  இதுதொடர்பாக சென்றவாரங்களில் (www.kumarinadu.net) இணையத்தளத்தில் விரிவாக எழுதப்பட்டிருந்தது.

வெளிநாட்டு மக்கள் தமிழ்த்தலைவர்களை குழப்புகின்றார்கள். அவர்கள் அங்கிருக்கும் நிலையை வைத்தே முடிவெடுக்க முடியும். இலங்கைத்தமிழர்களுக்கு இழப்பின் வலியே பெரிதாகத் தெரியவேண்டும்.எதிரி அடித்து அழித்து நின்று சிரிக்கிறான்.அடைத்துவைத்து சிரிக்கின்றான். எமது சகோதரிகளை அடைத்துவைத்து வதைக்கின்றான். தேர்தல் மூலம் தமிழர்களைப் பிரித்துவைத்து சிரிக்கின்றான். நாமே எண்ணை ஊற்றி எரியவிடுவதா? சிதைவிற்கு துணைபோவதா?நாட்டிலும் புலத்திலும் சமாந்திர அரசியலையே மேற்கொள்ளவேண்டும்.இரண்டிலும் உலகம் ஏற்க்கும் சனநாயக முறைகளை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும். வெளிநாடுகளில் நடைபெறும் சனநாயகதேர்தல்களில் தமிழர்கள் பங்கு கொள்ள வேண்டும் தமிழர்களுக்கு ஆதரவான கட்சியினருக்கு வாக்களித்து வெளிநாடுகளிலும் பலமான தமிழர் அரசியலை உருவாக்கவேண்டும்.

தமிழர்களிடையே உண்மையான சனநாயகம் இன்னும் வளரவேண்டும். நேர்மையான நடவடிக்கைகள் இருக்கவேண்டும். இன்று உலகில் தமிழர்களை இரண்டு தலைப்பில் இனம்காண்கின்றார்கள்.

1.தீவிரநிலையை ஆதரிப்போர்.

2.மென்மையானசனநாயக முறைகளைவிரும்புவோர்.

இந்த ஆரவாரங்களே அண்மையில் நிகழ்ந்தன இவைமிகவும் தந்திரமாக நிகழ்கின்றது. கசு(ஸ்) பார் அடிகளாரிடம் கற்றதை தமிழர்கள் மீண்டுமொரு முறை கற்றுவிட முயலக்கூடாது. வேறுவேடத்தில் வந்து சாதிப்பார்கள். எனவே விழிப்பும் திறனும் கொண்டு தமிழர்கள் இருக்கவேண்டும். அங்கு தவிக்கும் மக்களுக்கு இங்கு இருக்கும் மக்கள் நேரடியாக உதவமுடியும்.அதைச் செய்யமுடியாத நாம் வேறுஎன்ன செய்யமுடியும் என்று இருந்துவிடண்டியதுதான்.

அங்குஇருக்கும் மக்களுக்கு சிறு உதவிகள் ஆவது செய்வோம்.வாக்களிக்கும்படி உற்சாகப்படுத்துவோம்.

எஸ்-எம்-எஸ் (sms) போதும் இப்படிஅங்குள்ள தமிழர்களும் செய்யலாம். செல்லலிட தொலைபேசியைப் பயன்படுத்தலாம்.

எதிரி தமிழர் பணத்திலே பலத்தோடு செயல்படுவதை நாமும் அறிந்து பணியாற்றவேண்டும். உங்கள் பகுதிக்கு ஆயினும் உதவுங்கள்.


ஒற்றுமைபேணி ஒரே பலமாக த.தே.கூட்டமைப்பைவெல்லவைப்போம்.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் இணையத்தளமொன்று திரு மாவைசேனாதிராசா அவர்களால் ஆரம்பிக்கபட இருக்கின்றது.

அதைப்பார்வையிட்டு அவர்களின் கொள்கைகள் செயல்களை அறிந்துகொள்ளுங்கள். அயல்நாட்டு பண்பாட்டை இயன்றளவு விடுத்து தமிழப்பண்பாட்டைமீட்டு தமிழர்வாழ்வை சிறக்கவைப்போம்.தமிழ்நெறியை வளர்த்து தமிழின அழிவைத்தடுப்போம். என்று சுவிற்சர்லாந்து உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கம் பணிவாகவேண்டுதல் விடுக்கின்றது.

உலகத்தமிழ்பண்பாட்டியக்கம் - சுவிசு கிளை

தலைவர்-பொ.முருகவேள் ஆசிரியர்.