குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பதினொரு ஆண்டுகளாகியும் இருள் மூடிக்கிடக்கின்றது கொழும்புக்கொழுப்பால் தமிழர்நலம்கெடுகின்றது!

வட்டுவாய்கால்  நீ அமைதியாய்

அழகாய்  இருக்கின்றாய்!

நீ மறந்தாயோ!!  நீ நினைவாய்

இருக்கி்ன்றாயோ?

ஆழ் மனது  ஏதோ தேடுகிறது

மேல்மனது அமைதியாய்  இருக்கிறது!

 

முள்ளிவாய்க்கால்  நினைவுகள்

கொரோனா போல் தொண்டையில்

முட்டுகிறது  நெஞ்சில்

உயிரைநெருடுகிறது.


உயிரிருந்தும் உயிரிழந்ததுபோல்

ஆண்டாண்டு ஆழிப்பேரலைகள்

வந்து மோதும் சில நிமிடங்கள்

மூச்சு அடக்கிப்போகும்.


மனமிழந்தோர்  நினைவு இழப்பார் !

மாங்கொண்டோர் நினைவிழக்கார்!!

வனிப்பரணிக் காட்சிகள்

தரணியில் தமிழர் உள்ளவரை

கல்லில்   எழுத்தாய்

என்றும் படிந்திருக்கும்.

எழுந்து நடக்க மனம்  துடித்து

உலகிருந்து யெனீவாவில்(சுவிசில்)

பிழையாய் கூடிக்கலைகின்றோம்!


அரைகுறை நிலைகள் தான்

தொடர்கின்றது  ஆண்டுகள்

பதினொன்று  ஆகியும்

ஒன்றும்  ஆனபடி முடியவில்லை!


அழிந்த முகங்கள்

ஏதோ தேடுகின்றது

இருக்கும் முகங்கள்

ஆண்டுக்கொருமுறை

விம்மி  வெடித்து விட்டு

துடிப்பின்றி உலக மயமாக்கலில்

உழன்று  சுழன்று வருகின்றது!


பூநகரி ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேள்  சுவிற்சர்லாந்து...... 16.05.2020

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.