குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரி உதவி பிரதேச செயலாளர் கிரியா செய்யும் அலங்கோலம்! சங்குபிட்டி பாலத்தடியில் பெண் ஊழியர்களுக்கு

நடந்த கொடுமை..!! 23.04.2020கொரோனா தோற்றுக் காரணமாக நாடு முழுவதும் அச்சமான சூழல் நிலவும் இக் காலப்பகுதியில் 20..04.2020 அன்று அரசதிணைக்கள ங்களில் வேலைகள் ஆரம்பிக்கப்ட்டது.இதன் பொழுது அனைத்து திணைக்களங்களும் சனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைய தொழிற்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் சனாதிபதி சுற்றுநிரூபத்தில் குறிப்பிட்டதற்கு எதிராக அனைத்து உத்தியோகத்தர்களையும் 20.04.2020 அன்று வேலைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுத்தார் உதவி பிரதேச செயலாளர்.

மேலும் வேதனையான விடயம் என்னவென்றால் கர்பிணி ஊழியர்கள் சிலர் பூநகரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நிலையில் தற்பொழுது பேருந்தில்(பசு(ஸ்)) போக்குவரத்து பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ள பொழுதும் கர்ப்பிணி ஊழியர்களை வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். மேலும்  சனாதிபதி சுற்றுநிரூபத்தில் வேலைக்கு இடர்பாடு காரணமாக வேலைக்கு சமூகமளிக்க முடியாத ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஆவன செய்யுமாறு சனாதிபதியால் குறிப்பிட்ட பொழுதும் அவ் உத்தரவுக்கு எதிராக  பூநகரி உதவி பிரதேச செயலாளர் கிரியா செயற்படுகின்றார்.

மேலும் யாழ் மாவட்டத்தில் இருந்து பூநகரி பிரதேசத்திற்கு உள் நுழையும் ஊழியர்கள் சங்குபிட்டி பாலத்தடியில் இராணுவத்தினரிடம் பதிவை மேற் கொள்ள வேண்டும். இச் சோதனை சாவடியில் சில கர்பிணி மற்றும் பெண் ஊழியர்கள் 2 மணி நேரம்  பாதுகாப்பற்ற நிலையில் காத்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சில ஊழியர்கள் பாதுகாப்பற்ற பேருந்து சேவை காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து பூநகரி பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது இவ்வாறன ஊழியர்களுக்கு சம்பள மற்ற விடுமுறையாக கடமைக்கு சமூகமளிக்க முடியாத நாள் கருதப்படும் அல்லது குறித்த ஊழியர் மருத்துவச்சான்றிதழ் கடமை சமூகமளிக்காதநாளிற்கு  தர வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றார்.சனாதிபதி சுற்றுநிரூபத்தில் 50%மானவர்களே திணைக்களத்தின் கடமையாற்ற முடியும் எனவும் எனையவர்கள் வீட்டில் இருந்து கடமைகளை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிட பட்ப பொழுதும் உதவி பிரதேச செயலாளரின் செயற்பாடு ஊழியர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனாதிபதி சுற்றுநிரூபத்திற்கு அமைய 50% விதமான ஊழியர்களுக்கு கடமையை பிரித்து கொடுப்பது பிரதேச செயலகத்தின் கடமையாகும் இருப்பினும் பூநகரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிமாவட்ட  உத்தியோகத்தர்கள் சீராற்ற போக்குவரத்து வரத்து காரணமாக அலுவலகத்திற்கு சமூகமளிக்காததை காரணம் காட்டி சில கிளை உத்தியோகத்தர்களுக்கு வேலைகளை பிரித்து வழங்காது குறித்த கிளை  அனைத்து உத்தியோகத்தர்களையும் வேலைக்கு அழைத்திருக்கிறார் உதவி பிரதேச செயலாளர்.

இவ்வாறன பூநகரி பிரதேச செயலாளரின் செயற்பாடு  பூநகரி பிரதேச செயலக ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.