குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிசில் கொறோனாத் தடுப்பு நடவடிக்கைகள் நீடிக்கப்படுகின்றது

09.04.2020...கொறோனா பெருந்தொற்றினைத் தவிர்ப்பதற்காக பேரிடர் நடவடிக்கையினை கடந்த 13. 03. 2020 முதல் அமுல்படுத்தியிருந்தது. 21. 03. 2020 முதல் வாழ்வாதரத்திற்கு தேவையான கடைகள் மற்றும் தொற்றுத் தவிர்க்க கூடிய தொழில்கள் தவிர ஏனைய அனைத்து செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்டுசுதந்திரமாக மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதற்கு எதிராக தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந் நடவடிக்கைகள் 19. 04. 2020 வரை செல்லும் படியாகும் என முன்னர் சுவிற்சர்லாந்தின் நடுவன் அரசு அறிவித்திருந்தது. சுவிற்சர்லா ந்தின் நடுவனரசு 08. 04. 2020 புதன்கிழமை மாலை ஊடகசந்திப்பில் தாம் முன்னர் அமுல்படுத்திய நடவடிக்கையினை எதிர்வரும் 26. 04. 2020 வரைநீடிப்பதாகத் தெரிவித்தது.

இருந்தபோதும் ஏப்பிரல் 2020 இற்குள் சில முடக்க நடவடிக்கைகளைத் தாம் இளக்க வாய்ப்புள்ளது எனவும் நடுவனரசு அறிவத்தது. நோய்த்தொற்று மற்றும் பாதுகாப்பு செயல் நடவடிக்கைகள் அதுபோல் மக்களிடையில் இடைவெளிபேணும் நலன் பேணும் நடைமுறை தொடர்ந்து பேணப்படும் எனவும் சுகாதராஅமைச்சர் திரு. அலான் பேர்சே தெரிவித்தார். மேலும் அவர் இப்போது உள்ள அனைத்து நடைமுறைகளும் உடனடியாக தளர்த்தப்படாதபோதும் மெதுமெதுவாக ஒவ்வொரு நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள முடக்கம் இறுக்கங்கள் தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்விற்கு சுவிற்சர்லாந்து படிப்படியாக திரும்பும் என நம்பிக்கைதெரிவித்தார்.

வழி சரி, இலக்கு அடையவில்லை!

சுவிற்சர்லாந்தின் அதிபர் திருமதி. சிமோனெற்ரா சமறுக்கா கருத்து தெரிவிக்கையில் «நாம் இப்போது தொடரும் வழி சரியாக உள்ளது, ஆனால் எமது அடைவு இலக்கினை இன்னும் நாம் அடையவில்லை» என்று உரைத்தார். ஆகவே கொறோனா நோய்த் தொற்றினை முடக்கும் சுவிற்சர்லாந்தின் நடவடிக்கைகள் 26. 04. 2020 வரை நீடிக்க அரசு ஆணைபிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை சுவிசு நடுவனரசு 16. 04. 2020 கூடும்போது நோய்த்தொற்றினை கட்டுப்படுத்திக்கொண்டு, மக்கள் உடல் நலனைப் பேணிக்கொண்டு இயல்பு வாழ்வு நோக்கி சுவிற்சர்லாந்து செல்லக்கூடிய வழிகளை ஆய்ந்து, இப்போது நிலவும் இறுக்கத்திலிருந்துதளர்த்துவதற்கு வழியினைத் தேடும் எனவும்சுவிசு அதிபர் தெரிவித்தார்.

சிறு ஒளி தெரிகிறது

நீண்ட குகையின் முடிவில் ஒரு ஒளி தெரிகிறது என்று பேசத் தொடங்கிய சுவிற்சர்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சரான திரு. அலான் பேர்சே தொடர்ந்து பேசுகையில் «நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலன் இன்று நான்கு வாரங்களுக்குப் பின்னர் உடையக்கூடிய ஒரு சமன்பாட்டினை அளித்துள்ளது» இக்காலத்தில் நாம் மக்களிடையில் இடைவெளிகளைப் பேணவேண்டும் அதுபோல் நோய்த்தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தொடரவும் வேண்டும் என்றார்.

இப்போது நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளை தளர்த்துவதற்கான அளவுகோளோ நோக்கப்படுவது இவை ஆகும்:

• புதிதாக தொற்றுக்கு உட்பட் நோயாளின் தொகை

• மருத்துவமனையின் வழிமுறை அறிவித்தல்கள்

• நோயால் இறந்தவர்களின் தொகை

மேலே குறிப்பிட்ட அளவுகோளைக்கொண்டு எந்த நிரல் அடிப்படையில் நடவடிக்கைகளை தளர்த்தலாம் என ஆயப்படும். இவ்வேளை நோய்த் தொற்றிற்கு ஆளாகக்கூடிய அபாயம் உள்ள மக்கள் குழு மற்றும் சுவிசு அரசின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களின் மனநிலை என்பனவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்என்றார்.

ஒவ்வொரு கட்டங்களையும் நாம் கடக்க குறைந்தது நான்கு வாரங்கள் ஆகலாம். ஆனால் எமது செயல் விசையினை தீர்மானிப்பதும் ஆணையிடுவதும் தொற்றுநோய் பரவலின் வேகத்தில்தான் தங்கியுள்ளது. «நாம் அனைவரும் இணைந்து பல் இலக்குகளை இன்று அடைந்துள்ளோம்». ஆனால் நாம் இப்போது இப்பந்தினைத்தவறவிடாமல் தொடர்ந்து கையாள வேண்டும் என்று அலான் பேர்சே தெரிவித்தார்.

தொகுப்பு: சிவமகிழி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.