குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கோரோனாத்தீயநுண்மிப்பரிசோதனை!இது யாழ் கற்பித்தல் மருத்துவமனையின் ஒரு திருப்புமுனையாக அமையும்!!

10.04.2020 சீனா முதல் ஐரோப்பாஈறாக அமெரி்க்காவே கொரோனாத்தீயநுண்மியால் அவலப்பட்டுக்கொண்டி ருக்கையில் இலங்கையிலும் குறிப்பாக   என்னாகுமோ என்ற ஐயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஏங்கிக் கொண்டிருந்தோம்.

புலம்பெயர்ந்து வாழ்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் சென்றதால்  யாழப்பாணத்திலும் நோய்த்தொற்று பரவியபரபரப்பு எங்கள் எல்லோரையும் பெரும்பரபரப்பில் ஆழ்த்தியது,யாழ்ப்பாணமக்களுக்கு என்னாகுமோ நோய்  அதிமாகப்பரவினால் யாழ் கற்பித்தல் மருத்துவமனை  எப்படிச்சமாளிக்கப்போகின்றது என்றபயம் இருந்தது என்று வெளிப்படையாகச்சொல்லாம்.

இந்தச்சூழ்நிலையில் யாழ் கற்பித்தல் மருத்துவமனையின்  பணிப்பாளர் அவர்கள் விவேகமாகவும் வேகமாகவும் செய்பட்டு  யாழ் பல்கலைக்கழக  மாணவர்களின்  ஆய்வுகூடப்பகுதியொன்றினை  கொரோனா நோயாளிகைளக்கண்டறியும் ஆய்வுகூடநிலைக்கு மாற்றியமைத்து நிறைவுகண்டுள்ளார்.

மருத்துவம்,மற்றும் அதுசார்ந்த விஞ்ஞான தொழில்நுட்பக்குழுவினரை இணைத்து இது தொடர்பான விளக்கமளிக்கும் நேர்காணலை ஐ.பி.சி ஊடகத்திற்கு வழங்கியமையானது எமக்கிருந்த பயத்தைப்போக்கியிருப்பதுடன் இதுதொடர்பான அடிப்படை விளக்கத்தினையும் பெற்றிருக்கின்றோம்.

இதுவரையில் சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து நேற்று வியாழக்கிழமைவரை(09.04.2020) 89 பரிசோதனைகள் நடந்து முடிந்ததாக அறிவித்தனர்.

நேற்று இது தொடர்பான செயற்பாட்டு விளக்மளிக்கும் ஊடகமாநாட்டினை ஏற்பாடுசெய்திருந்தார்.இதில் இணைந்து பணியாற்றியவர்களின் பொறுப்பானவர்கள் தமது துறைகளை விளங்கவைக்கும் பொருட்டு தெளிவுபடுத்தல்களை  வழங்கி மக்களுக்கு இருந்த பயங்களை போக்கி உள்ளார்கள் என்று கூறலாம்.

இது தமிழ் மக்களிடையே சென்றடைந்து  விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனாவில் இருந்து தப்பிக்க வழிவகுக்கும். அத்துடன் மருத்துவத்துறையில்  தமிழர்கள் அதன் உட்பிரிவுகளில் எவற்றை எல்லாம் கற்கவேண்டிய நிலைகளில் உள்ளோம்  என்பதனையும்  விளக்கி நிற்கும் நேர்காணலாகவும் இது அமைந்துள்ளது.

ஒவ்வொருமாவட்டத்திலும் மருத்துவத்துறை தவிர இதற்கும் ஐந்து  மாணவர்களாதல் ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகவேண்டும்  இதற்கு அரசு புதிய கல்விக்குழுவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் உணரபப்படுகின்றது.

இந்தவேளையில் இறுதிப்போரிலும் பெரும் பங்களிப்புச்செய்தவர் வைத்தியக்கலாநிதி திரு.தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் அதேபோன்று  உலகளவிலான ஓரிடர்காலத்திலும்  தமிழ்மக்களுக்கு பெரும்பணியாற்றி, யாழில் குழுவாக இணைந்தசெய்பாட்டினை வெற்றிகரமாகச் செய்துள்ளார் இதன் மூலம் இன்னும் பல முன்னேற்றங்கள் நிகழவுள்ளதாகவே பார்க்கலாம்.

கொரோனா தீயநுண்மி பரிசோதனை பற்றிய மிகத்தெளிவான விளக்கம் ! குழுமுறையான செயற்பாடு எப்படி ஒருங்கிசைவாக இயங்குகின்றது என்றும் ஈகைமனப்பான்மை(தியாக) , சேவை மனப்பான்மைகள் இருக்கின்றமை விவேகம்,கவனம்,தெளிவு என்பன நாம் பெருமையோடு நம்பிக்கை கொள்ளக்கூடிய நிலையில் உள்ளோம்.

தீயநுண்மியை விடவும் இவர்கள் வேகமாக உள்ளார்கள் என்ற நம்பிக்கை கொள்தக்க நிலைக்கு யாழ் கற்பித்தல் மருத்துவமனை உயர்ந்து நிற்கின்றது அதற்கு உறுதுணையாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும், அதுசார்ந்த உயிரியல் துறையினரும், இணைந்து திறமையாக இயங்குவது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம் .

சுவிசு போன்ற நாடுகளிலும் வேகமான பரிசோதனைகளுக்கு திணறடிக்கப்படுகின்ற நிலையில் நாமும் வேகமான நிலைக்கு அல்லது சமாளிக்கக்கூடிய நிலைக்கு வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சிதனையும் பாராட்டுகளையும் குமரிநாடு.கொம் இணையம் பதிவு செய்து கொள்கின்றது.

இது யாழ் கற்பித்தல் மருத்துவமனையின் ஒரு திருப்புமுனையாக அமையும்,இதேபோன்று இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் வளர்சிசியடையவேண்டும் என்று விரும்புகின்றோம்.

பூநகரி.பொன்னம்பலலம் முருகவேள் சுவிற்சர்லாந்து 10.04.2020

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.