குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

கனிமொழிக்கு யாமீன் கிடைக்கும்.அதிமுக கூட்டணிக் கட்சிகள் இப்போது திமுக கூட்டணியில்.

12.10. 2011  கனி மொழியை யாமீனில் விட சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்காது எனத் தெரிய வந்துள்ளது.
கனிமொழியை யாமீனில் விட சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்காது எனத் தெரிய வந்துள்ளது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.கனிமொழி, கலைஞர் 'டிவி' நிர்வாகி சரத்குமார் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய பணத்தை, கலைஞர் 'டிவி' மூலமாக பெற்றதாக, கனிமொழி மீது ஊழல் தடுப்புக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கடந்த மே மாதம் 20ம் தேதியில் இருந்து, கனிமொழி சிறையில் உள்ளார்.சி.பி.ஐ. சிறப்பு கோர்ட், டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில், கனிமொழி ஏற்கனவே தாக்கல் செய்த யாமின் மனு, நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், கனிமொழி சார்பில், சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஜாமின் கோரி, மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த மனு, வரும் 17ம் தேதி, நீதிபதி ஒ.பி.சைனி முன்பாக விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: கனிமொழி யாமின் மனு விசாரணைக்கு வரும்போது, அதற்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவிக்காது.
 
கனிமொழி ஏற்கனவே தாக்கல் செய்துள்ள யாமின் மனுவில், தான் பெண் என்பதையும், தன் குழந்தையை கவனிக்க வேண்டியுள்ளது என்பதையும் காரணமாகத் தெரிவித்துள்ளார். அப்போது ஆண், பெண் என்று பாரபட்சம் கிடையாது என்று, சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டது. தற்போது, கனிமொழி எழுப்பிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அவரை யாமினில் விடுவதற்கு, சி.பி.ஐ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், உடல் நலத்தை காரணமாக வைத்து, சினியுக் பிலிம்ஸ் நிறுவனர் கரீம் மொரானி, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுரேந்திர பிபாரா ஆகியோரது யாமின் மனுவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் வருகிற 17-ஆம் தேதி கனிமொழிக்கு யாமீன் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் இப்போது திமுக கூட்டணியில்.

12.10. 2011  உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோ சிக்காமல் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்ததன் காரணமாக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டது.கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், மனித நேயக் கட்சி ஆகியவவை போட்டியிட்டன. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்ததன் காரணமாக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி தேமுதிகவிடம் கூட்டணி வைத்ததோடு, தேமுதிக திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையே இழந்தது.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துப் போட்டியிடும் நிலையில் திருச்சிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முக சுடாலினைச் சந்தித்து புதிய தமிழக தலைவர் கிருச்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். மனித மக்கள் கட்சியும் திமுகவை ஆதரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக யெயலலிதாவின் இந்தப் போக்கு தமிழக கட்சிகடையே கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. தேமுதிக கட்சியோ பிரச்சாரத்தில் அதிமுகவையும் யெயலலிதாவையும் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.