குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆம்பூரின் புகழும் கூடவே தற்கால பூநகரியின் எல்லையடங்கா மறைக்கப்பட்ட புகழும் வெளிவரும் என்பதில் எவ்வித

ஐயப்பாடுமில்லை.28.03.2020 சிங்கைநகர் - சிவதாசன் எனப்படும் இராவணன் ஆண்ட காலப்பகுதியில் திருஈழநாட்டின் அல்லது இலங்கீசுவரத்தில் வண்டலார்குழலி என்று அழைக்கப்பட்ட சிவதாசனின் மனைவிக்காக உருவாக்கப்பட்டதே சிங்ககிரி நாடு / சிங்கையூர். பரந்து விரிந்து கிடந்த உத்தேசம் பின்னர் சமசு(ஸ்)கிருத்த்தின் வருகையால் உத்திரதேசம் / உத்திரகிரி என்றழைக்கப்பட்டது.

இங்கு இயக்கர் நாகர் எனும் மூத்த குடிமக்கள் வாழ்ந்தனர். சிங்கையூர் என்றழைக்கப்பட்ட இவ்வூரில் சிங்ககிரிக்கோட்டை அமைவுற்றதன் காரணம் இளவரசிகளும் அரசிகளும் பாதுகாப்பாக இருப்பதற்கே. இதுவே மருவி சீகிரியா என்றழைக்கப்பட்டது. வானத்து தேவதைகள் இங்கு ஓவியமாக்கப்பட்ட அரச குடும்பத்தினராகவும் இருக்கலாம் அல்லது வானத்து தேவதைகளாகவும் இறைவனின் பெண்களாகவும் இருக்கலாம் ஆயினும் பூநகரி எங்குவரை பரந்து இருந்திருக்கலாம் என்பதில் எல்லைக்குள் மட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்கு மூலகாரணம் பல இன ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டதே! இதில் ஆரியரும் அடங்குவர்.

தென் இந்தியாவும் இலங்கையைம் ஒன்றுசேர்ந்த தேசமாக இருத்த தட்சணபூமி, தட்சணாமூர்த்தி ஆசி பெற்ற தட்சண கைலாயமாகிய இலங்காபுரி வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர் ஆட்சியை கைப்பற்ற எண்ணியதன் காரணமாக இராமாயணம் நடந்தேறியது.

இயக்கர் நாகரின் ஆட்சிக்காலத்தில் திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர் (சிங்கையூர), பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு ஆட்சி செய்ததாக வரலாற்று உண்டு.

 

தமிழ் மன்னர்கள் நாகர் குடிவந்த மூத்தசிவன் வழிவந்த சயம்பன், யாளிமுகன், ஏதி, வித்துகேசன், சுகேசன், மாலியவான் பின் குபேரன் ( குபேரபூமி) அதன்பின்னர் இராவணன் என்றழைக்கப்பட்ட சிவதாசன். எல்லாளன் யார் என பல கருத்துக்கள் இருப்பினும், இத்தனை வரலாற்றையும் தமிழன் வழித்தோன்றல்களையும் மறைத்த ஆதிக்க வெறி பிடித்த பல குடியினரால் (ஆரிய வருகையிலிருந்த ஆரம்பித்த மூத்த குடி அழிப்பு) காரணமாக எல்லாளனின் தேசம் சிறுமைப்படுத்தப்பட்டு அவரது வரலாறு அழிக்கப்பட்டு இருக்கலாம்.

 

ஆயினும் சேர சோழ பாண்டிய காலத்திற்கு முன்பே 2500 ஆண்டுகால வரலாற்றை தொலைத்த இயக்கரும் நாகரும் யாராக இருக்கும்! இன்று திராவிடமென்று திணிக்கப்பட்ட பெயரை சுமந்து நிற்கும் எம்மினப் பெருமைகள், தலம, எல்லைகள், வரலாறு மறைக்கப்படுகிறது அல்லவா? இதைத்தான் பூநகரியிலும் திணித்து எல்லாளன் எல வாக்கி இன்று  இந்திய சாயம் பூசப்படுகிறது. எல்லைகள் கடந்து ஆண்ட மன்னன் என்பதன் பொருளை இந்த முகநூலிநுள் அடக்க முடியாது. ஆயினும், பூநகரிக்கும் வன்னியகுளத்திற்கும் தாமரைக்கும் சீகிரிய சுவரோவியத்தில் ஒளிந்திருக்கும் அழிக்கப்பட்ட வரலாற்றுக்கும் சற்றே முடிச்சுப் போட்டால் அடக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட வரலாறு புடம்பெறும். அப்பொழுது ஆம்பூரின் புகளும் கூடவே தற்கால பூநகரியின் எல்லையடங்கா மறைக்கப்பட்ட புகழும் வெளிவரும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.